ஒரு வங்கி மேனேஜர் என்னை வந்து சந்தித்தார்.அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் நான் சற்று எச்சரிக்கையாக தள்ளி அமர்ந்து கொண்டேன்.காரணம் வங்கி மேனேஜர்களுக்கும் எனக்கும் ஆகவே ஆகாது.அவர்கள் ஏதோ அவர்களது சொந்தப்பணத்தில் வங்கியை நடத்துவது போல வாடிக்கையாளர்களை மரியாதைக் குறைவாக நடத்துகிறார்கள் என்பதை பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். சரி நம்மிடம் ஒரு வாடிக்கையாளராகத்தானே இவர் வந்திருக்கிறார் என்று அவர் சொல்வதை கேட்க தயாரானேன்.
அவர் சொன்னது இதுதான்.என்னதான் வங்கியில் வேலை பார்த்தாலும் காசு பணம் பெரிதாக சேர்க்க முடியவில்லை என்றார்.இத்தனைக்கும் அவரது மனைவியூம் வேலை பார்ப்பவர்தான். சொந்த வீடு இருக்கிறது.ஒரு சிறிய ரக கார் இருக்கிறது.வேறெதும் இல்லை என்றார்.
பங்குச்சந்தையில் ஏழு வருடங்களாக இருக்கிறாராம்.ஆனால் பெரும் பணத்தை இவர் சந்தையில் இழந்ததுதான் அதிகம்.
அவரிடம் பத்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்ததில் அவரது மனஓட்டம் புரிந்து விட்டது.ஒரு காகிதத்தை அவரிடம் கொடுத்து உங்களது ஒரு மாத மளிகை சாமான்கள் லிஸ்ட்டை எழுதுங்கள் என்றேன்.
விழித்தார்.
சரி தெரிந்தவரை எழுதுங்கள் என்றேன்.
அரை மணி நேரத்திற்கும் மேலாக எழுதினார்.இடையே அவர் மனைவியை செல்லில் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டுக் கொண்டார்.
அதை வாங்கி வைத்துக் கொண்டேன்.
அடுத்த வாரம் அவர் மனைவியிடம் கலந்து பேசி அடுத்த மாதத்திற்கான மளிகை சாமான்கள் லிஸ்ட்டை கொண்டு வரச் சொன்னேன்.
பத்து நாட்கள் கழிந்து நான் நினைவூட்டியதும் வந்து கொடுத்தார்.வேலைப்பளு என்று ஏதேதோ காரணம் சொன்னார்.அவருக்கு நான் கொடுத்த அசைன்மன்ட் இதுதான்.
"இந்த லிஸ்ட்டுடன் உங்கள் மனைவியூடனோ இல்லை நீங்கள் தனியாகவோ டிபார்ட்மன்ட்டல் ஸ்டோருக்குச் செல்லுங்கள்.இந்த லிஸ்ட்டில் உள்ள பொருட்களை அங்கேயே எடிட் செய்து சிலவற்றை இப்போது தேவையில்லை என்று குறைவான சாமான்களை வாங்கினீர்களானால் நீங்கள் டிஸ்டிங்ஷனில் பாஸ்.சரி பரவாயில்லை.அட்லீஸ்ட் அங்குள்ள வேறு சாமான்களை எதுவூம் எடுக்காமல் லிஸ்ட்டில் உள்ளவற்றை மட்டும் வாங்கி வந்தீர்களானல் நீங்கள் முதல்வகுப்பில் பாஸ்"என்றேன்.
அவர் வந்தது பங்குச்சந்தையில் அவரது டிரேடிங்கில் ஏன் நஷ்டம் வருகிறது.அதை எப்படி சரி செய்ய வேண்டுமென்று கேட்பதற்காக வந்தார்.
நான் சொன்னதை கேட்டு கொஞ்சம் நொந்துதான் போனார்.
அப்புறம் டிபார்ட்மன்ட்டல் ஸ்டோரிலிருந்தே பேசினார்.
"சொன்ன மாதிரி செய்ய முடியலை சார்.லிஸ்ட்ல எல்லாமே தேவையா இருக்கு.இன்ஃபாக்ட் இன்னும் சிலது லிஸ்ட்ல எழுதலை.அதை இங்க எடுத்துக்கலாம்னு பார்க்கறேன்.சிலதுல டிஸ்கவூன்ட் இருக்குன்னு ஆஃபர் வேற போட்ருக்கான்.எடுத்துக்கலாமா அதையெல்லாம்"என்றார்.
நான் வேண்டாம் என்று சொன்னாலும் அவர் கேட்கப்போவதில்லை.
அதன்பின் அவரை நாலைந்து சிட்டிங்கிற்கு வரச் செய்து பேசிப்பேசி அவர் மனதை மாற்றினேன்.
அதாவது பங்குச்சந்தையைப் பொறுத்தவரை எடுத்த முடிவில் திடமாக இருக்க வேண்டும்.இவர் சொல்கிறார்.அவர் சொல்கிறார் என்று சகட்டு மேனிக்கு பங்குகளை வாங்கிக் குவிக்கக் கூடாது.அப்புறம் அவை பங்குப் பட்டியலாக இருக்காது.குப்பைத் தொட்டியாகத்தான் இருக்கும்.மேலும் டிரேடிங்கைப் பொறுத்தவரை இன்றைக்கு என்ன லாபம் வேண்டுமென்று எதிர்பார்க்கிறௌமோ அதற்கான வொர்க்கிங் ப்ளானுடன் அந்த அளவிற்கு மட்டும்தான் செய்ய வேண்டும்.
இவர் சகட்டுமேனிக்கு மளிகை சாமான்களை வாங்குவது போல சகட்டுமேனிக்கு புரோக்கர், டீலர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு 'ஓவர் டிரேடிங்" செய்திருக்கிறார்.அதனால்தான் நஷ்டம் வந்திருக்கிறது.
எனவே முதலில் அவரது மனோபாவத்தை மாற்றினேன்.அதன்பின் அவருக்கு பங்குச்சந்தை பற்றியூம் டிரேடிங்கில் லாபம் சம்பாதிக்கும் உத்திகளையூம் பற்றி சொல்லிக் கொடுத்தேன்.முதல் மாத டிரேடிங் லாபத்திலேயே மொபைலை மாற்றி ஐஃபோன் வாங்கி விட்டதாக கொண்டு வந்து காண்பித்தார்.
டிரேடிங்கில் அவரது மனோபாவத்தை மாற்றி பங்குச்சந்தையில் அவரை வெற்றி பெற வைத்தேன்.ஆனால் பொருட்களை வாங்கித் தள்ளுவது என்ற 'நுகர்வோர் பிணியை' அவரிடமிருந்து என்னால் மாற்ற முடியவில்லை.இதை எழுதும்போது கூட தொலைபேசியில் அவர்தான்.நன்றாக இருந்த டிவியை பைபேக்கில்(ஐநுரறு ருபாய்க்குதான் எடுப்பார்கள்) கொடுத்து விட்டு எண்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கு 3டி டிவி வாங்கியிருக்கிறாராம்-ஷேர் மார்க்கெட்டில் சம்பாதித்த லாபத்திலிருந்து.நன்றாக இருந்தால் சரி.
Prof.T.A.Vijey.,M.E.,(Ph.D)
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click this link to go to main website to see market news
ConversionConversion EmoticonEmoticon