நேற்று வழக்கம் போல கோவிலில் வரிசையில் நின்றிருந்தபோது எனக்கு முன்னால் நின்றிருந்த இருவர் வேலைவாய்ப்புகளையூம் ஐடி துறையில் நிலவூம் நிகழ்வூகளையூம் பேசிக்கொண்டே இருந்தனர்.க்யூ மெதுவாகத்தான் நகர்ந்தது.அப்போது அவர்களில் ஒருவர் சொன்ன வார்த்தைகள்தான் "ஆனந்த விகடனா இல்லை அசட்டுத்தனமாக எழுதும் அட்டு விகடனா?" என்பது.
இது சத்தியமாக நமது வார்த்தைகள் இல்லை.
அந்த அன்பர்கள் எதற்காக அப்படி சொல்கிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தேன்.ஆனந்த விகடன் தனது கட்டுரைகளை பேஸ்புக்கில் அப்டேட் செய்வது வழக்கம்.அப்படி அப்டேட் செய்யூம்போது ஒரு கட்டுரையில் இன்ஜினியரிங் கல்லுரரிகளின் தரத்தைப் பற்றி மிக மிக தரக்குறைவாக எழுதியதோடு இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.வங்கிகளும் வாங்கிய கல்விக்கடனுக்காக நெருக்குகிறார்கள் என்று எழுதியிருந்ததாம்.இது சரியாகத்தானே இருக்கிறது.அப்படி என்ன விகடனார் எழுதி விட்டார் என்று கவனித்தால் அடுத்து அவர்கள் சொன்னதுதான் அதிர்ச்சி.
டிஎன்பிஎஸ்ஸியில் இப்போது அதிக அளவில் தேர்வூகளை எழுதி வருவது இன்ஜினியரிங் மாணவர்கள்தான் என்றும் டாப்டென் இடங்களைப் பிடித்தவர்களும் அவர்கள்தான் என்று சொல்லும் விகடன் சில பல பதவிகளுக்கு இன்ஜினியரிங் படித்ததவர்களை டிஎன்பிஎஸ்ஸி அனுமதிப்பதில்லை என்றும் அந்த பதவிகளுக்கான தேர்வூகளை எழுதவூம் இன்ஜினியரிங் படித்தவர்களை அனுமதிக்க வேண்டும் என்று ஆனந்த விகடன் கேட்டுக் கொள்வதாக எழுதியிருந்ததாக எனக்கு முன்னால் க்யூவில் இருந்தவர்கள் பேசிக்கொண்டிருந்ததைப் பற்றி திகைப்பாக இருந்தது.
முதலில் ஒரு இன்ஜினியரிங் கல்லுரரியில் படித்து வெளியே வந்து ஜர்னலிஸ்ட் ஆகியவர்கள் இந்த கட்டுரையை எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இன்ஜினியரிங் கல்வி என்பதன் பெயரே"புரொபஷனில் எஜூகேஷன்" என்பதாகும்.அதன் பொருள் என்னவென்றால் இந்த கல்வியானது வேலை தேடுவதற்கான கல்வி அல்ல.வேலை கொடுப்பதற்கான கல்வி என்பதுதான்.
இன்ஜினியரிங் படித்தவர்கள் வேலை கேட்டு அலைவதே மிகப்பெரிய தவறு.ஒரு தொழிற்கல்வி படித்தவர்கள் ஒரு தொழிற்சாலை அமைத்து மற்றவர்களுக்குப் பணி கொடுப்பதுதான் சரியாக இருக்கும்.
அதெப்படி இன்ஜினியரிங் படித்த ஒருவனால் தொழிற்சாலை அமைக்க முடியூம்.
ஒரு மாணவனால் அமைக்க முடியாதுதான்.
இரண்டு பேர் சேர்ந்தால்...
மூன்று பேர் சேர்ந்தால்...
நான்கு பேர் சேர்ந்தால்...
ஐந்து பேர் சேர்ந்தால்...
ஆறு பேர் சேர்ந்தால் ஒரு பதிவூ செய்த பிரைவேட் லிமிடட் நிறுவனத்தை அதாவது தொழிற்சாலையை அல்லது வணிகத்தை தொடங்க முடியூம்.அதற்கு ஒரு ஆறுபேர் சேர்ந்த ஒப்பந்தம் இருந்தால் போதுமானது.
ஒரு இன்ஜனியரிங் படித்த மாணவரின் டிகிரி சான்றிதழைப் பயன்படுத்தி பாரதபிரதமரின் சுயவேலைவாய்ப்புத் திட்டத்தில் இரண்டு லட்சத்திற்கு மேல் கடனாகப்பெறமுடியூம்.இதற்கு மாணியமும் உண்டு.ஆறு பேர் சேர்ந்தால் பனிரெண்டு லட்சத்திற்கு மேல் கிடைக்கும்.
சரி ஒரு கல்லுரரியில் ஒரு துறையில் பயின்ற மாணவர்கள் பத்து பத்து பேர்களாக ஒவ்வொரு கல்லுரரியிலும் இணைந்து அவரவர் இருக்கும் ஊரிலேயே சின்னச் சின்னதாக தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் ஏன் சிறு ஐடி பின்புல நிறுவனங்கள் அமைத்து விட்டால்... எதற்காக சென்னையிலேயே அனைவரும் குவிய வேண்டும்.சென்னையிலேயே அனைத்து தொழில்களும் அமைவது தலைபெருத்த உடல் நலிந்த மனிதனுக்கு ஒப்பாகும்.இதைப் பற்றி தனிப்பதிவாக எழுத வேண்டும்.
ஐடிதொழில்தான் என்றில்லை.மாணவர்கள் ஒரு சக்தியாக எழுந்தால் எந்த தொழிலிலும் ஜொலிக்கலாம்.
ஒரு காலத்தில் இன்ஜினியரிங் முடித்து விட்டு விபரம் தெரியாமல்(ஆம்.அந்த வயதில் விபரம் தெரியாமல்தான்) ஒரு கல்லுரியில் நான் பணியாற்றியபோது அப்புறம் நல்ல வேளையாக விலகி வந்து பங்குச்சந்தையில் வெற்றி பெற்றுவிட்டேன். அப்போது என்னிடம் பயின்ற மாணவர்கள்தான் தற்போது வெளியாகும் என்னை அறிந்தால் பட இயக்குநர் திரு.கௌதம்வாசுதேவ் மேனன்.அது போல படத்தயாரிப்பாளராக இருக்கும் எஸ்கேப்ஆர்ட்டிஸ்ட் பி.மதன்.இவர்கள் இன்ஜனியரிங் முடித்தபின் உடன்படித்த நண்பர்களுடன் இணைந்துதான் திரைப்படத் துiயை தேர்ந்தெடுத்தார்கள்.வென்றார்கள்.
எந்த துறையிலும் இன்ஜினியரிங் படித்தவர்களால் தொழிலதிபர்களாக முன்னேற முடியூம்.அவர்களைக்கொண்டு போய் டிஎன்பிஎஸ்ஸி தேர்வூ எழுத கெஞ்ச வைக்கப் பார்க்கும் ஆனந்த விகடனை என்னவென்று சொல்வீர்கள்.
ConversionConversion EmoticonEmoticon