"பணக்கேணி"
நல்ல எண்ணங்கள் நல்ல சிந்தனைகள் நல்ல செயல்கள் நல்ல குணங்கள் இவையெல்லாம் உங்களுக்கு எப்போதும் இருந்தால் நன்றாக இருக்கும்.நீங்கள் ஒரு நல்ல மனிதராக அறியப்படுவீர்கள்.ஒரு நல்ல ஆத்மாவாக உணரப்படுவீர்கள்.ஒரு நல்ல பிரஜையாக மதிக்கப்படுவீர்கள்.ஆனால் மெட்ரோ ரயிலுக்குச் சென்றாலோ அல்லது ஐபிஎல் பார்க்கச் சென்றாலோ திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றாலோ நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்பதற்காக யாரும் உங்களை உள்ளே விட மாட்டார்கள்.
இந்த 'நல்ல' என்ற பண்புகளை விட இங்கே அனைவருக்கும் தேவையானது பணம் என்ற ஒன்றுதான்.இந்த பணம் என்கிற ஒன்று உங்களிடம் இருந்தால் யாரும் உங்களை கேள்வி கேட்காமல் உள்ளே விடுவார்கள்.உங்களை பெரிதாகவூம் மதிப்பார்கள்.உங்களது பேச்சுக்கு எங்கேயூம் மதிப்பு இருக்கும்.எல்லாருக்கும் நீங்கள் ஒரு ஆதர்ச மனிதராகத் தெரிவீர்கள்.
ஆனால் இங்கே ஒரு விஷயத்தை கவனியூங்கள்.முதல் பாராவில் என்ன சொன்னேன்.உங்களிடம் நல்ல பண்புகள் இருந்தால் உங்களை அனைவரும் கொண்டாடுவார்கள் என்று.அதாவது நல்ல விஷயங்கள் உங்களிடம் இருந்தால் அனைவரும் உங்களை மதிப்பார்கள் என்று.அப்படியானால் கெட்ட விஷயங்கள் உங்களிடம் இருந்தால்?
விலகிச் சென்று விடுவார்கள்.துஷ்டனைக் கண்டால் துரர விலகு என்றுதானே பள்ளிக்கூடங்களில் கற்று வந்திருக்கிறீர்கள்.எதற்கு இவனிடம் வம்பு என்று விலகி விடுவார்கள்.
இதையே பணஉலகில் வைத்துப் பாருங்கள்.
உங்களிடம் 'நல்ல'ப் பணம் இருந்தாலும் உங்களை மதிப்பார்கள்.உங்களிடம் இருப்பது 'கெட்ட"பணமாக இருந்தாலும் உங்களை மதிப்பார்கள்.
கெட்ட பணம் என்றால் தப்பிதமான வழியில் சம்பாதித்த பணம் என்று வைத்துக் கொள்ளலாம்.அல்லது வரிஏய்ப்பு செய்த கருப்புப் பணம் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.
தப்பிதமான வழியில் சம்பாதிப்பதை நான் ஆதரிக்கவில்லை.அது பற்றி நாம் இங்கே பேசப்போவதும் இல்லை.
சொல்லவரும் பாயின்ட் இதுதான்.
நினைப்பில் மனதில் செயலில் நல்லதும் கெட்டதும் தனித்தனியாக இருக்கலாம்.ஆனால் பணத்தைப் பொறுத்தவரை நல்ல பணம் என்றும் கெட்ட பணம் என்றும் தனித்தனியாக கிடையாது.
எல்லாம் ஒரே பணம்தான்.
பணம் என்பது எப்போதும் ஒன்றுதான்.ஒன்றே ஒன்றுதான்.
ஆக உங்களிடம் பணம் எவ்வளவூக்கு எவ்வளவூ அதிகமாக இருக்குமோ அந்த அளவிற்று 'பணஉலகில்' நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.இங்கே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.நல்ல குணம் வேண்டாமா?நல்ல பண்புகள் வேண்டாமா? என்றெல்லாம் விவாதம் செய்ய வேண்டும்.அந்த டாபிக்கிற்றே வரவில்லை.பணக்காரர்களின் உலகில் ஒரு பெரும் பணக்காரராக நீங்களும் எப்படி நுழைவது என்பதை சொல்லித் தர விரும்புகிறேன்.அதனால் பணம் பற்றிய ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்வோம்.
பணம்.
நிறைய பணம்.
மிகப்பெரிய அளவில் பணம்.
இன்னும் இன்னும் என்று நிறைய நிறைய பணம்.
எண்ண முடியாத அளவிற்கு பணம்.
ஏன் சொல்லப் போனால் திகட்டத்திகட்ட பணம் வேண்டும் என விரும்புகிறீர்களா?அப்படி நீங்கள் விரும்பினால் அந்த அளவிற்கான பணம் உங்களுக்கு கிடைத்து விடும்.அதற்கு ஒரே ஒரு தந்திர டெக்னிக்கை மட்டும் செய்து கொண்டே வந்தால் போதும்.
அதென்ன டெக்னிக்?
இது என் அனுபவத்தில் நானே கண்டுபிடித்த டெக்னிக்.எந்த ஆங்கில புத்தகங்களிலும் கண்டு எடுத்ததில்லை.இதை நான் செய்து பார்த்திருக்கிறேன்.இப்படி செய்யூம்போது பணம் என்னிடம் பல்கிப் பெருகுகிறது.அதனால் நீங்களும் அது போல செய்து உங்களிடம் பணத்தைப் பன்மடங்காகப் பெருக்கிக் கொள்ளலாம்.
இப்போது அந்த டெக்னிக்கிற்கு வருகிறேன்.
திருக்குறளில் கூட இது இருக்கிறது.
'தொட்டனைத்து ஊறும் மணற்கேணி" என்ற குறள்தான் அது.
எடுக்க எடுக்க தண்ணீர் கேணியில் அதாவது மணலில் உள்ள கிணற்றில்(கிணறு போன்ற இடத்தில்) தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்குமாம்.எடுக்க எடுக்கத்தான் தண்ணீர் அந்த இடத்தில் ஊறுமாம்.இல்லையென்றால் வற்றிப்போய் விடுமாம்.
இது எல்லா இடத்திலும் பொருந்தும்.
உங்களிடம் சிறிதளவூ பணம் பையில் இருந்தாலும் அதனை வெளியே எடுத்து செலவூ செய்தால்தான் உங்களிடம் உள்ள பணமும் வளரும்.சிலர் இருக்கிறார்கள்.பணத்தைக் கழுத்தைப் பிடித்து நெறிப்பது போல இறுக்கிப் பிடிப்பார்கள்.சிக்கனமாக இருக்கிறேன் என்று கடுகடுவென்று கடுப்போடு செலவூ செய்வார்கள்.பணமும் அவர்களிடம் பதிலுக்கு சிக்கனமாகத்தான் இருக்கும்.அதுவூம் அவர்களிடம் குறைவாகத்தான் ஊறும்.அதாவது சேரும்.
அவசியமான செலவூகளை சந்தோஷமாக முகமலர்ச்சியோடு செய்யூங்கள்.உங்களது அடுத்தடுத்த அவசியமான செலவூகளுக்கான பணம் தானாக உங்களிடம் சேர ஆரம்பிக்கும்.
அப்படியானால் -
ஆடம்பரமான செலவூகளுக்கு?
டாம்பீகமான செலவூகளுக்கு?
கையில் பணம் கொஞ்சமாகத்தானே இருக்கிறது.இதற்கான பணத்தை எப்படி ஊற வைப்பது?
அதற்கு தண்டச் செலவூகளை செய்யூங்கள்.வீண் ஆடம்பரச்செலவூகளைச் செய்யூங்கள்.தினமும் செய்ய வேண்டாம்.எப்போதாவது செய்யூங்கள்.வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை கூட செய்யூங்கள் போதும்.ஆனால் அந்த செலவூகள் "ஆடம்பரச் செலவாக" இருக்க வேண்டும்.
இதென்ன கிறுக்குத்தனமாக இருக்கிறதே.தண்டச் செலவூ செய்தால் மறுபடி தண்டச் செலவூ செய்வதற்கான பணம் வந்து விடுமா?ஆடம்பரச் செலவூ செய்தால் மறுபடி ஆடம்பரச் செலவூ செய்வதற்கான பணம் வந்து விடுமா?
வந்து விடும்.
அதுதான் 'பணத்தின்" தன்மை.
ஐந்து ரூபாய்க்கு சிறிய சாக்லேட் பட்டை வாங்கி சாப்பிட விரும்பினால் அதற்கு பதிலாக நுரறு ரூபாய்க்கு மாதம் ஒரே ஒரு தடவை ஒரு பெரிய விலை உயர்ந்த சாக்லேட் பட்டை வாங்கிச் சாப்பிடுங்கள்.தீபாவளி போன்ற பண்டிகைகளில் நான்கு சாதாரண உடைகளை ஐந்தாயிரம் ரூபாய்க்கு எடுப்பதற்கு பதிலாக அந்த பணத்திற்கு ஒரே ஒரு சிறிய ஆடம்பர ஆடையை வாங்கி அணியூங்கள்.
ஆக ஒரு முறை ஆடம்பரச் செலவை நீங்கள் மேற்கொள்ளும் போது ஏற்கனவே பணத்துடன் "குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கும்" உங்களது உள் மனம் ஓஹோ அடுத்து இது போன்ற செலவூகளை இந்தாள் செய்வான் போலிருக்கு.அதற்கான பணத்தை இவனுக்கு சம்பாதித்துத் தரனும் என்று தனக்குத்தானே ஒரு ஆட்டோமேடிக் ப்ரோக்ராமை உங்களது மனம் எழுதிக்கொண்டு விடும்.
அதனால் ஆடம்பரச் செலவூகளை அளவோடு செய்யலாம் தப்பில்லை.
ConversionConversion EmoticonEmoticon