பணம் என்பதைப் பற்றியூம் அந்த பணத்தை எப்படி பன்மடங்காகப் பெருக்குவது என்பதைப் பற்றியூம்தான் உங்களுக்கு சொல்லி வருகிறேன்.பணம் என்பது வெறும் காகிதம்தானே.அதற்கு உணர்விருக்குமா?அது காற்றில் பறந்து போகிற காகிதம்.கிழித்தால் கசக்கி எறிந்தால் கிழிந்து போகிற வெற்றுத்தாள் என்றுதான் உங்களில் பலரும் நினைத்திருக்கிறார்கள்.எனது 'பணம் விரும்புதே உன்னை" (a book on share market trading) புத்தகத்தில் கூட இது போல நினைக்கிற ஒரு அன்பரைப் பற்றி எழுதியிருக்கிறேன்.அந்த வயதான மனிதர் பணத்தை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை.தற்பெருமைக்காகவூம் தன்னை ஒரு பெரிய ஆள் என்று மற்றவர்கள் நினைத்துக் கொள்வதற்காகவூம் மற்றவர்களுக்கு கடன் கொடுத்துக் கொண்டே வந்தார்.அவரிடம் பணம் பெற்றவர்கள் அத்தனை பேரும் அவருடன் ஒன்றாக அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள்தான்.ஆனால் யாரும் பணத்தைத் திருப்பித் தரவில்லை.ஆனாலும் மற்றவர்கள் அவரிடம் கடன் கேட்டு வந்தார்கள்.இந்த மனிதர் குடியிருந்த ஊரில் அவருக்கு சொந்தக்காரர்கள் என்று யாரும் கிடையாது.அதனால் ஊள்ளுர ஒரு பயம் என நினைக்கிறேன்.அதன்பொருட்டாகவே அவர் மற்றவர்களுக்கு கடன் கொடுத்து தன்னைச் சுற்றிலும் ஆட்களை உட்கார வைத்துக் கொண்டு தான் பலம் மிக்கவராக தன்னை போலியாக நினைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்.அவரிடமிருந்த பணம் எல்லாம் தீர்ந்து போயிற்று.அப்போதும் அவர் தன் மனைவியின் நகைகளை விற்றும் தானே கடன் வாங்கியூம் 'நண்பர்களுக்கு" கடன் கொடுத்து வந்தார்.இப்போது இவரது முறை.இவருக்கு கடன் கொடுத்தவரகள் பணத்தைத் திருப்பிக் கேட்டு இவரை நெருக்க ஆரம்பித்தார்கள்.இவரிடம் பணம் பெற்றுக் கொண்டு 'அண்ணே அண்ணே' என்று அல்லக்கைகளாக இருந்த நண்பர்கள் ஒதுங்க ஆரம்பித்தார்கள்.கடைசியான இவர் அரும்பாடு பட்டு கட்டிய சொந்த வீட்டை விற்று கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை செட்டில் செய்தார்.
அப்போது இந்த மனிதர் சொல்லும் ஒரு வாக்கியம் என் மனதில் ஆழப்பதிந்திருக்கிறது.அதை உங்களது நலனுக்காக சொல்ல வேண்டுமென நினைக்கிறேன்.
அவர் அடிக்கடி சொல்லும் அந்த வாக்கியம் இதுதான்.
'முதல்ல அவன் மூஞ்சியில பணத்தை விட்டெறிஞ்சுடனும்.முதல் வேலையா பணத்தை துரக்கி வீசிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்"
இதில் உள்ள கீவேர்ட்ஸ் என்ற குறிச்சொற்களை கவனியூங்கள்.
பணத்தை எறிதல்.
துரக்கி வீசுதல்.
ஆக பணத்தை ஒரு பொருளாக அதாவது தேவையற்ற பொருளாக எண்ணி எறிதல்.
இந்த குணம் அவரிடம் இருப்பதை அவரது மனமும் அவரிடம் உள்ள பணமும் மிகச் சரியாகப் புரிந்து விட்டன.நீ என்ன என்னை துரக்கி விட்டெறிவது.நான் உன்னை எறிகிறேன் பார் என்று அவரிடம் இருந்த பணம் நினைத்திருக்க வேண்டும்.
இப்போது அந்த மனிதர் எங்கே இருக்கிறார் தெரியூமா?
ஒரு முதியோர் இல்லத்தில் யாருடைய ஆதரவூமின்றி கிடக்கிறார்.மனைவி சில ஆண்டுகள் முன்பே இறந்து விட்டார்.அவர் பெற்ற மகன்களே அவரது ரிட்டயர்டுமென்ட் பணத்தை அவரது வீட்டிலிருந்து திருடிக்கொண்டு ஓடி விட்டார்கள்.அவரது 'நண்பர்கள்' யாரும் வந்து பார்ப்பதில்லை.எந்த முதியோர் இல்லத்திற்கு போனாலும் அங்கே நான்கு மாதங்கள்தான் அதிகபட்சமாக அவரால் தாக்குப்பிடிக்க முடிகிறது.அங்கேயிருந்து அவர் மற்றறவர்களிடம் வாக்குவாதம் செய்து கொண்டு தன்னை ஒரு பெரிய ஆள் என்று நிரூபித்துக் கொள்ள முடியாமல் ஒவ்வொரு முதியோர் இல்லமாக நாடோடியாகத் திரிந்து கொண்டிருக்கிறார்.
இவர் மட்டும் பணத்தைப் புரிந்து கொண்டு பணத்தை போற்றி மதித்து ஒழுங்காக பணத்திடம் நடந்து கொண்டிருந்தால் பதிலுக்கு பணமும் இவரிடம் அன்பு செலுத்தியிருந்திருக்கும்.நல்ல மனம் கொண்ட உண்மையான நண்பர்கள் மட்டுமே இவரிடம் இருப்பவர்களாக இருந்திருப்பார்கள்.கஷ்டப்பட்டு கட்டிய வீடும் இவர் கையை விட்டுப் போயிருக்காது.இவர் ஒவ்வொரு முதியோர் இல்லமாக அலைந்து கொண்டிருக்கவூம் வேண்டியிருக்காது.
ஆக பணம் என்பது ஒரு ஜடப்பொருள் அல்ல.உணர்வூம் ரோஷமும் கொண்ட ஒரு 'உயிருள்ள'(அறிவியில்படி உயிரில்லாத காகிதம்தான்) பொருள் என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் இந்த அற்ப மனிதரைப் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டியதாயிற்று.
உங்களிடம் வங்கியிலும் வீட்டிலும் சட்டை அல்லது பான்ட் பாக்கெட்டிலும் எவ்வளவூ பணம் இப்போது இருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியூமா? சொல்ல முடியாவிட்டாலும் பரவாயில்லை.
உங்களிடம் உள்ள பணம் வளர்கிறதா? தேய்கிறதா?
இந்த கேள்வி அபத்தமாக இருக்கிறதா?
டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா என்று காஜலும் பிரியங்காவூம் வந்து கேட்பது போல தி அல்லது ந.தா வந்து உங்களிடம் உள்ள பணம் வளர்கிறதா என்று கேட்டால் நீங்கள் ஒரு வேளை முகம் மலரக்கூடும்.
சட்டைப்பையில் உள்ள பணம் வளருமா?
அதை வளர வைக்க முடியூமா?
அதை எப்படி வளர வைப்பது என்று அடுத்த அத்தியாயத்தில் சொல்லித் தருகிறேன்.அதுவரை காத்திருங்கள்.
ConversionConversion EmoticonEmoticon