இந்த மாதத்திலிருந்து எஃப்அன்ட்ஓவில் பங்குகளின் லாட் அளவூ அதிகமாக்கப்பட்டுள்ளதை அறிவீர்கள்.பொதுவாக ஒரு எஃப்அன்ட்ஓ கான்ட்ராக்ட்டின் வர்த்தக மதிப்பு ரூ 3 லட்சத்தில் இருந்தால் போதுமானது என்றுதான் இதுநாள் வரை செபி அமைப்பும் என்எஸ்இயூம் கருதி வந்தது.அதனால்தான் நிஃப்டியின் லாட் அளவூ 25 ஆக இருந்தது.ஆனால் இப்போது ஒரு எஃப்அன்ட்ஓ கான்ட்ராக்ட்டின் வர்த்தக மதிப்பு ரூ 5 லட்சமாக இருக்கட்டும் என்று செபி விதிகளை மாற்றியிருக்கிறது.அதன் பலனாகத்தான் இந்த லாட் அளவூ உயர்வூ வந்திருக்கிறது.
இதனால் சிறிய அளவில் பணத்தை வைத்துக் கொண்டு டிரேடிங் செய்பவர்கள் பாதிப்படையத்தான் நேரிடும்.எப்படி இவர்கள் பாதிப்படைய நேரிடும் என்று பார்ப்போம்.
உதாரணமாக டாடாமோட்டார்ஸின் பழைய லாட் அளவூ 500 மட்டுமே.இப்போது மும்மடங்காக 1500க்கு இதன் லாட் அளவூ வந்திருக்கிறது
ஒரு சிறிய டிரேடர் உதாரணமாக இதன் 440 கால் ஆஃப்ஷனை ரூ 4க்கு வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்.ரூ 4க்கு வாங்கியதை ரூ 5க்கு விற்கலாம் என்று நினைக்கும் அவர் ஒரு ரூபாயை நஷ்டமாக வந்தால் பரவாயில்லை என்று ரூ 3ஐ ஸ்டாப்லாஸாக வைத்துக் கொள்கிறார் என்று பார்ப்போம்.
இது லாட் அளவூ 500 ஆக இருக்கும்போது இவரது போதாத நேரம் ஸ்டாப் லாஸ் ட்ரிக்கர் ஆகி விட்டால் இவருக்கு நஷ்டமாக ரூ 500 மட்டும்தான் இருக்கும்.
இதுவே புதிய லாட் அளவான 1500 ஆக இருக்கிறபோது ஒரு ரூபாய் ஸ்டாப் லாஸாக வைக்கும்போது ஸ்டாப்லாஸ் ட்ரிக்கர் ஆகி விட்டால் இவருக்கு
ரூ 1500 ஒரு டிரேடிங்கில் நஷ்டமாக வந்து விடும்.
இதையோ இன்னும் சற்று அருகாமையில் போய் பார்ப்போமானால் லாட் அளவூ 500 ஆக இருக்கும்போது ரூ 4க்கு 440 கால் ஆஃப்ஷன் வாங்கும்போது இவரது முதலீடு ரூ 2000 ஆகிறது.இந்த ரூ 2000க்கு ரூ 500 என்பது ஸ்டாப்லாஸ் ட்ரிக்கர் ஆகும்போது வருகிறது.
இப்போது புதிய லாட் அளவில் இவருக்கான முதலீடு ரூ 6000 வரை தேவைப்படும்.இதில் ஸ்டாப்லாஸ் ட்ரிக்கர் ஆகி விடும்போது ரூ 1500 நஷ்டமாகி விடுகிறது.
இப்போது சிறிய டிரேடர்கள் என்ன நினைப்பார்கள் என்றால் ஒரு ரூபாய் லாபம் வந்தால் ரூ 1500 லாபமாக புதிய லாட் அளவில் கிடைக்குமே.பழைய லாட் அளவூ என்றால் வெறும் ரூ 500 மட்டும்தானே லாபமாக கிடைக்கும் என்பார்கள்.
பங்குச்சந்தையில் நிஜம் அப்படியில்லை.
கடந்த சில மாதங்களாக பங்குகள் பெரும்பாலும் அதிக நீட்சி கொண்டதாக உயரவோ குறையவோ இல்லை.சில ஸ்பெகுலேட்டிவ் பங்குகள் மட்டும்தான் ஜாக்பாட் லாபம் தருகின்றன.இது போன்ற ஜாக்பாட் லாபம் தரக்கூடிய பங்குகளில் டிரேடிங் செய்ய தனிப்பட்ட துணிச்சலும் பாசிட்டிவ்வான மனோபாவமும் வேண்டும்.ஒவ்வொரு சின்னச் சின்ன நஷ்டத்திற்கும் துடிப்பவர்களால் ஜாக்பாட் அடையவே முடியாது.
சரி புதிய லாட் அளவால் வேறென்ன பிரச்சனை வரும்.
பங்குகள் சிறிய அளவில் துடித்துக் கொண்டிருக்கும்போது இதே உதாரணத்தை மறுபடியூம் வேறொரு பங்கில் எடுத்துக் கொண்டால் உதாரணமாக ரூ 2.80க்கு கிடைக்கிற எஸ்பிஐ வங்கியின் 260 கால் ஆஃப்ஷனில் பழைய லாட் அளவூ 1000 இப்போது புதிய லாட் அளவூ 2000 என்பதால் ஒரு வேளை ரூ 2.80 வாங்கியவூடன் ஒரு சிறிய டிரேடர் இதனை ரூ 3.80க்கு விற்றால் இரண்டாயிரம் ரூபாய் லாபமாக கிடைக்குமென்று நினைக்கலாம்.ஆனால் ரூ 2.80 வாங்கியவூடன் ரூ 3.00க்கு சென்று விட்டு மேலே போக முடியாமல் பின்னடையத் தொடங்கும்.இவர் வாங்கிய விலை ரூ 2.80 ஆனால் இது ரூ 2.60க்கு வந்து விட்டால் அப்போதைக்கு உள்ள நஷ்டம் ரூ 400 ஆக இருக்கும்.இன்னும் இறங்கி ரூ 2.40க்கு வந்து விட்டால் நஷ்டம்
ரூ 800க்கு வந்து விடுவதால் ஒரு பானிக் சிச்சுவேஷன் வந்து இந்த டிரேடரை பயமுறுத்தும்.
சரி இதில் எவ்வளவூ ஸ்டாப் லாஸ்; வைத்துக் கொள்வது?
வந்தால் ஆயிரம் போனால் ஆயிரம் என்று வைக்க முடியாது.
ஏனெனில் ஐம்பது பைசா வித்தியாசத்தில்தான் இந்த ஆயிரம் ரூபாய் லாபமோ அல்லது நஷ்டமோ இந்த பங்கில் வருகிறது.
அப்படியானால் என்ன செய்வது?
அதிகரிக்கப்பட்டுள்ள லாட் அளவூகள் சிறிய டிரேடர்களுக்கு எதிரானதா?
பேசாமல் கமாட்டி பக்கம் திரும்பி விடலாமா?
கமாட்டியில் நிலைமை இதை விட மோசம்.அங்கும் லாட் அளவூகள் எகிறுகின்றன.
அப்படியானால் என்ன செய்வது?
ஆயிரம் ரூபாய் நஷ்டம் பரவாயில்லை என்று ஸ்டாப் லாஸ் போட்டு டிரேடிங் செய்து கொண்டே வந்தால் இருபது அதிர்ஷ்டமில்லாத டிரேடிங்கில் சுளையாக இருபதாயிரம் காணாமல் போய் விடும்.
வேறென்ன வழி?
ஆஃப்ஷன் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு டிரேடிங் செய்வதுதான் ஒரே வழி.அதற்காகத்தான் நாம் தபால்வழிப் பயிற்சிகளை நடத்தி வருகிறௌம்.விபரங்கள் நமது தளத்தின் இடது மேற்புறம் உள்ளன.
மேலும் தற்போதைய சூழ்நிலையில் பொறுத்திருந்து டிரேடிங் செய்வதை விட "பபுள் டிரேடிங்" என்றொரு முறையை 'ரிஸ்க் எடுக்க தயார்" என்று சொல்லும் டிரேடர்களுக்கு மட்டும் பின்பற்றுகிறௌம்.அதுதான் தற்போதைய லாட் அளவிற்கும் பக்கவாட்டில் நகரும் சந்தைக்கும் பொருத்தமானதாக இருக்கிறது.
இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் ஈக்விட்டித்தனமாக ஆஃப்ஷனில் டிரேடிங் செய்தால் கையைச் சுட்டுக் கொள்வீர்கள்.
எனவே தபால்வழிப் பயிற்சிக்கு வாருங்கள்.
அப்புறம் உங்கள் இஷ்டம்.


ConversionConversion EmoticonEmoticon