"பர்னிங் டிசையர் உதவூமா பணம் சம்பாதிக்க..."
ஒவ்வொரு சுயமுன்னேற்ற புத்தகங்களும் வெவ்வேறு விதமாக இதைச் செய்யூங்கள்.அதைச் செய்யூங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன.நான் கூட எனது புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெவ்வேறு முறைகளை எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன்.
முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏன் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று ஒரு சர்வே எடுத்துப் பார்த்தால் அவர்களிடம் பணமோ அந்தஸ்தோ இல்லை.அதனால் முன்னுக்கு வரவிரும்புகிறேன் என்ற காரணத்தை சொல்பவர்கள் குறைவானவர்களாகத்தான் இருப்பார்கள்.அடுத்த வீட்டுக்காரரிடமும் நெருங்கிய சொந்தக்காரர்களிடமும் காரும் பங்களாவூம் பகட்டான வாழ்க்கை இருக்கிறது.தங்களிடம் அது போன்ற சொசுகு வாழ்க்கை இல்லை.அதனால் முன்னேற விரும்புகிறேன் என்று சொல்பவர்களும் குறைவானவர்களாகத்தான் இருப்பார்கள்.
இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு முறையூம் வெவ்வேறு இடத்திலும் வெவ்வேறு மனிதர்களால் நான் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறேன்.அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன்.என்னையா அவமானப்படுத்துகிறாய்.பார் ஒரு நாள் நான் மேலே வருவேன்.
'அஷோக் இந்த நாளை உன் டைரியில குறிச்சு வைச்சுக்கோ" என்று தொடை தட்டி சவால் விடும் அண்ணாமலை ரஜினியின் மனநிலையில் உள்ளவர்கள்தான் முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் அதே நினைப்பில் உள்ளவர்களாக இருப்பார்கள்.இவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள்.
ஆனால் தொடை தட்டி சவால் விட்டது போல இவர்கள் முன்னேறி விட்டார்களா? தன்னை அவமானப்படுத்தியவர்களின் முன்னால் எஸ்கலேட்டரில் ஏறியிருக்கிறார்களா(பிஜிஎம்மில் தேவா மியூசிக்கை போட்டுக் கொண்டு கற்பனை செய்யூங்கள்) என்று சர்வே எடுத்துப் பார்த்தால் முன்னேறி இருக்க மாட்டார்கள்.
இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று: அடித்துப் போடும் விலைவாசியூம் தினசரி வாழ்க்கை என்ற சக்கரத்தின் அடியில் சிக்கிக் கொண்டு விட்ட வாழ்க்கைப் போராட்டம் முதல் காரணமாக இருக்கும்.
இரண்டு: பர்னிங் டிசையர் என்று சொல்வார்களே அது என்ஹேன்ஸ்(enhance) ஆகியிருந்திருக்காது.
சார் என்னிடம் பர்னிங் டிசையர்.அடிவயிற்று நெருப்பு இருக்கத்தான் செய்கிறது.அதனை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியவில்லையே என்பார்கள் சிலர்.ஒரு பயிற்சி வகுப்பில் அப்படித்தான் ஒரு பெண் கேட்டார்.
அவருக்கு சொன்ன பதிலையே இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.
முன்னேற வேண்டும்.
பணம் சம்பாதிக்க வேண்டும்.
பெரும் செல்வந்தராக வேண்டும்.
அட்டகாசமான லக்ஸரி வாழ்க்கை வாழ வேண்டும்.
இப்படியெல்லாம் நினைத்தால் அதற்கான பர்னிங் டிசையரை வைத்திருந்தால் அந்த பர்னிங் டிசையர் எங்கே இருக்கும் என்று லேசாக உங்களை நீங்களே தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
அந்த பர்னிங் டிசையர் அடிவயிற்றில் இருக்கும்.
அது அங்கேயே ஒரு பாம்பு போல சுருண்டு கொண்டு கிடப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை.அந்த பர்னிங் டிசையரை பணம் சம்பாதிக்கப் பயன்படுத்த வேண்டுமென்றால் அதை மேலே கிளப்ப வேண்டும்.
யோகா ஆசாமிகள் குண்டலினியை மேலே கிளப்புகிறார்கள் அல்லவா.அதே போல கிளப்ப வேண்டும்.அதற்கான யோகா எல்லாம் செய்ய வேண்டாம்.மெல்ல மெல்ல அந்த பர்னிங் டிசையரை மேலே கொண்டு வந்து உங்களது புருவ மத்தியில் வைத்துக் கொண்டு விட்டால் போதும்.
அதெப்படி?
இது ஒரு கற்பனைதான்.அப்படியெல்லாம் மேலே கொண்டு வர முடியாது.இப்படி உங்களது பர்னிங் டிசையரை உங்களது புருவமத்தியில் வைத்திருப்பது போல உணர்ந்தால் உங்களது பார்வை மாறி விடும்.
பார்வை மாறி விடுமா?
ஆம்.
ஒரு ஆடு பார்க்கும் பார்வையையூம் ஒரு சிங்கம் பார்க்கும் பார்வையையூம் தனித்தனியாக பாருங்கள்.சிங்கத்தின் கம்பீரம் அதன் பிடரியிலும் கேசத்திலும் மட்டுமில்லை.அதன் பார்வையிலும் இருக்கிறது.
ஆக கம்பீரமான பார்வை எல்லாம் எனதே.எல்லா நாளும் எனதே.இந்த நிமிடமும் எனதே என்ற உடல்மொழியை தானாக உருவாக்கி விடும்.அதன்பிறகு உங்களைப் பார்க்கிறவர்கள் தானாக மரியாதையாகப் பார்ப்பதோடு விஷ் செய்யவூம் ஆரம்பிப்பார்கள்.அப்படி விஷ் செய்ய ஆரம்பித்துத விட்டார்கள் என்றால் வெற்றிப்படியின் முதல்படியில் நீங்கள் ஏறி விட்டீர்கள் என்று அர்த்தம்.
அப்புறம் எதற்காகவூம் காத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
இந்த நாள் மட்டுமல்ல.இந்த நிமிடம் மட்டுமல்ல.இந்த வினாடி கூட உங்களுக்கான புரொடக்டிவ் டைம் (productive time) என்பதை உணர்ந்து செயல்பட ஆரம்பித்து விடுவீர்கள்.
ஆக பணம் சம்பாதிக்க பர்னிங் டிசையரைப் பயன்படுத்துங்கள்.
ConversionConversion EmoticonEmoticon