Click here to get Discounts at Amazon
சட்டென்று சொல்ல வேண்டுமென்றால் ராமநாதனுக்கு(பெயர் மாற்றப்பட்டுள்ளது) எந்த சென்டிமென்டிலும் நம்பிக்கையில்லை.ஆனால் ஜாதகம் ஜோதிடம் குறித்த விஷயங்களில் மட்டும் என்னிடம் அவ்வப்போது கலந்து கொள்வார்.இப்போது அவர் மஸ்கட்டில் இருக்கிறார்.அவ்வப்போது வாட்ஸ்அப்பில் வருவார்.சில ஜோதிட ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு போய் விடுவார்.
இந்த பதிவூ ஜோதிடம் சம்பந்தமானது அல்ல.
ராமநாதனின் டிரேடிங் யூக்தியைப் பற்றியது.அப்பொழுதெல்லாம் டிரேடர்கள் இன்ட்ரா டே செய்வதற்கோ டெலிவரியாக செய்வதற்கோ நேரில் வந்து கொண்டிருந்த காலம்.மொபைல் டிரேடிங் அறிமுகப்படுத்தப்படாத காலம்.இப்போது எனது வாடிக்கையாளர்கள் மொபைல் டிரேடிங் செய்தாலும் அனைவரையூம் மெசெஞ்சர் வழியாக தொடர்பில் வைத்துக் கொண்டு வழி நடத்தி வருகிறேன் என்றாலும் அன்றைக்கு இந்த வசதி எல்லாம் கிடையாது.
ராமநாதன் வந்துமே திரையில் ஓடும் பங்குகளின் விலைகளைப் பார்ப்பார்.சிலநிமிடங்கள் யோசிப்பார்.பேக்ஆபீஸ் பக்கம் திரும்பி யாராவது ஒரு பெண்ணிடம் ஜோக் அடிப்பார்.சன்னமாக விசிலடிப்பார்.அப்படியானால் அவர் ஆர்டர் போட தயாராகி விட்டார் என்று அர்த்தம்.
"விஜய் சார்..உங்க டீலரை ஹிந்தால்கோ அம்பது பை ஆர்டர் போடச் சொல்லுங்கோ" என்பார்.
அக்கவூன்ட்டில் லட்சக்கணக்கில் பணம் வைத்திருப்பார்.அப்புறம் ஏன் வெறும் ஐம்பது ஷேர்கள் மட்டும் வாங்குகிறார் என்று மற்றவர்கள் முனகிக்கொள்வார்கள்.ராமநாதனுக்கு கானாடுகாத்தான் பக்கம் ஏதோ ஒரு அதை விட சிறிய கிராமம்தான் சொந்த ஊர்.எதைச் செய்தாலும் ஒரு முன்யோசனையோடுதான் செய்வார் என்பதால் எனக்கு அவரது மூவ் என்ன என்று தெரியூம் என்பதால் பேசாமல் இருப்பேன்.
"சொல்லுங்க.வெயிட் பண்ணலாமா?"
"பேஷா..ஆஷா"என்பார் பேக் ஆபீஸ் பெண்ணிடம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது).அப்புறம் ஐந்து நிமிட அரட்டையை முடித்துக் கொண்டு-
"போடுங்க இன்னொரு பை ஆர்டர்.ஹிந்தால்கோ இன்னொரு ஐம்பது"என்பார்.
அப்புறம் ஒரு பிரேக் விடுவார்.வெளியில் போய் நிற்பார்.யாரிடமாவது அரட்டையடிப்பார்.அப்போதெல்லாம் செல்போன்கள் செங்கற்கட்டி போல வெளி வந்து கொண்டிருந்த காலம்.சட்டைப்பையில் செல் இருந்தாலே எங்கு சென்றாலும் சல்யூட் அடிப்பார்கள்.செல் எடுத்து யாரையாவது கலாய்ப்பார்.
அப்புறம் ஓடி வருவார்.
"போடுங்க..."என்று அவர் ஆரம்பிக்கும்போதே டீலரின் அருகே அமர்ந்திருக்கிற டிரேடர்கள் கோரஸாக "சாருக்கு ஒரு அம்பது ஹிந்தால்கோ முருகலா ஸ்பெஷலா பார்சல்..."என்று கலாய்ப்பார்கள்.
இப்படி ஒவ்வொரு ஐந்து நிமிட இடைவெளியிலும் அந்த பங்கை வாங்கிக் கொண்டே இருப்பார்.அவர் ஷார்ட் அடித்தாலும் அப்படியேதான் ஒவ்வொரு ஐந்து நிமிட இடைவெளியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஷார்ட் அடித்துக் கொண்டே இருப்பார்.
"அதென்ன ஐந்து.நியூமராலஜியா.சென்டிமன்ட்டா"என்பார் தேவசகாயம்.
"நியூமராலஜி ஷேர்அஸ்ட்ராலஜியெல்லாம் நம்ம விஜய் சாருக்குத்தான் அத்துப்படி.இது ச்சும்மா"என்பார்.
"சார் சொல்லுங்க சார்"என்று ஆஷா வந்ததும்தான் சொல்ல ஆரம்பிப்பார்.
"ஒரு ஷேரை ஒரே விலையில எப்பவூமே வாங்கவோ விற்கவோ கூடாது.ஆவரேஜ் ஆஃப் சக்ஸஸ் அப்படிங்கற ஒண்ணு எல்லா பிசினஸ்லயூம் ஏன் விளையாட்டிலயூம் கூட இருக்கு.அப்படி இடைவெளி விட்டு விட்டு விட்டு வாங்கினம்னா அந்த பங்கின் விலை ஏறி இறங்கி ஏறி மறுபடி இறங்கி வருவதைப் பார்த்தா நாம இந்த இறங்கின பாயின்ட்ல போய் மறுபடி மறுபடி வாங்கியிருந்திருப்பம்.அதனால ஒரே சீராக நல்ல விலை கிடைக்கும்.அந்த சராசரி விலைங்கறது ஒரே மொத்த ஆர்டரா போடற விலையை விட குறைவான விலைக்குத்தான் கிடைச்சதாக இருக்கும்."
"சரி விற்கறது?"
"விக்கறப்ப ஒரேடியா ஆர்டர் போடக்கூடாது.சில பயபுள்ளக மார்க்கெட் டெப்த்தை பார்த்துட்டு ஒக்காந்திருக்கும்க.அதுல நாமளே ஒரு பெரிய குவான்ட்டியை செல்லிங்ல போட்டா அவனவன் பெரிய பெரிய குவான்ட்டிட்யை செல்லிங்க போடறது பார்த்து விலை குறைஞ்சுரும்டா மாப்ளைன்னு எவனாவது ஷார்ட் அடிக்க ஆரம்பிச்சிட்டா நாம விக்கற அன்னிக்கு விலை குறைஞ்சு போயிரும்"
"அப்ப ஊருக்கு ஒரு ராமநாதன் இருக்கனுமே"
"இருப்பாகப்பு. நிச்சயமா இருப்பாக.சரி ஹிந்தால்கோவை இன்னொரு நாளைக்கு வித்துக்கலாம்.விஜய் சார் நம்ம போர்ட்ஃபோலியோவை துப்புறமா க்ளின் பண்ணிட்டேன்.தீபாவளி வருதுல்ல"என்பார்.
அப்போதுதான் நம்ம 'அஞ்சானின்" இன்னொரு முகம் தெரியூம்.அஞ்சான் என்ற பெயரை இப்போதுதான் திரைப்படத்திற்கு வைத்திருக்கிறார்கள்.அப்போதே ராமநாதன் அஞ்சான் என்று பெயர் வாங்கியவர்.
ஐந்து ஐந்தாக பங்குகளை வாங்கவோ விற்கவோ செய்வதால் அவருக்கு அஞ்சான் என்று பெயர் வந்தது.சந்தையின் சலசலப்புக்கெல்லாம் இந்த அஞ்சான் அஞ்சமாட்டார் என்று தேவசகாயம் கூட அவரை கலாய்ப்பார்.
அஞ்சானின் இன்னொரு முகம்:
எப்போது ஈக்விட்டியில் டெலிவரியாக எந்த பங்கை வாங்கி இவர் அக்கவூன்ட்டில் வைத்திருந்தாலும் அந்த பங்கை விற்கும்போது அதில் ஐந்து சதவீத பங்குகளை விற்காமல் ஆட்லாட்டாக(odd lot) அக்கவூன்ட்டிலேயே வைத்துக் கொள்வார்.அதாவது நுரறு பங்குகள் டிஎல்எஃப் வாங்கியிருந்தால் அதை விற்கும்போது 95 பங்குகளை மட்டும்தான் விற்பார்.
இது போல அவரிடம் ஐந்து ஐந்து என்று தங்கிப்போன பங்குகளே நிறைய கிடக்கும்.அவற்றை எல்லாம் சரியாக ஆயூதபுஜைக்கு முன்னர் விற்று விடுவார்.
"எதுக்காக சார் அந்த அஞ்சு ஃபார்முலா"
"தீபாவளிச் செலவூக்குன்னு தனியா பணம் ஒதுக்கறதில்லப்பு.இப்படி அஞ்சு அஞ்சா பிய்ச்சிப் போட்ட பங்குகளை வித்தா கிடைக்கற பணமே லட்சம் வரும்.அது போதாதா..அப்புறம் தீபாவளி களை கட்டிடாது"
இப்போது மஸ்கட்டில் இருக்கிற ராமநாதன் நமது தபால்வழிப்பயிற்சியில் சேர்ந்திருக்கிறார்.ஆஃப்ஷன் வேண்டவே வேண்டாம் என்று சொன்னவரை ஆஃப்ஷனுக்கு இழுப்பதற்கு நான் கடைபிடித்த ஒரே ஃபார்முலா-
அவூட் ஆஃப் மணியில் ஐந்து ஐந்து முறை வாங்கிப் போடுங்க ராமநாதன்.அது ஏறினதும் ஐந்து ஐந்து லாட்டாக வித்துக்கலாம்"
சொன்னவூடன் சேர்ந்து விட்டார்.
அஞ்சானின் "அஞ்சு" டெக்னிக்கை நீங்களும் கடைபிடித்துப் பாருங்கள்.
அடுத்த வருட தீபாவளி உங்கள் வீட்டிலும் கொண்டாட்டமாக கோலாகலமாக களை கட்டி விடும்.
வெளியே ள்களிதுத்ழைம லேசாக அசைந்து கொண்டிருப்பது கண்ணாடி சன்னல் வழியே தெரிந்தது.மதுமிதா இன்னொரு கப் காபி அருந்தலாமா என்று யோசித்...வெளியே காலிங் பெல் ஏதும் அடிக்கப்படாமல் கதவூ திறக்கப்பட லாப்டாப் திரையினின்று முகத்தை விலக்கினாள்.
லாப்டாப் திரையில் எண்பதுகளில் கமல்ஹாசனோ, ரஜினியோ ஏவிஎம் படங்களில் (உத்திரவாதமாக உடை உரிந்த மும்பை அழகியடன்)டான்ஸ் ஆடப்பயன்படுத்துவது போன்ற சிவப்பும் நீலமுமாக சின்னச் சின்னதாய் பட்டையான வண்ணங்கள் மொய்த்துக் கொண்டிருந்தன.உள்ளே வந்த அவன் வருண்.
இவன் எதற்காக இப்போது வருகிறான்.
அதுதான் ப்ரேக்அப் ஆகி அரைசெகன்ட் முத்தம் கொடுத்தவாறே கண்களில் மெகாசீரியல் அளவிற்கு வெறுப்பைக் காண்பித்துமனசை துப்புறவாகத்துடைத்துப் போட்டு விட்டு வந்து விட்டோமே.எதற்கு வரு..கிறான் வருண்.
"ஹாய் பேபி..."என்றான் ஃப்ரிட்ஜ் திறந்து கோக் (வெளிநாட்டு கு.பா. பிடிக்காதவர்களுக்கு காளிமார்க் அல்லது லவ்வோ!)எடுத்து கடித்துக் கொண்டு.
"நாமதான் எல்லாம்..."
"ந்நோ..நான் உன்னை தொந்தரவூ பண்ண வரலை மது..என்னதான் நமக்குள்ள பிரேக்அப் ஆகிருச்சின்னாலும் இனி நான் உன்னை ஒரு ஸ்ட்ரேஞ்சரா சந்திக்கலாமில்ல..அதான் வந்தேன்.ஏன் வந்தேன்னு கேளேன்"
ஸ்ட்ரேஞ்சர்ஸ் என்று முணுமுணுத்தான்.ஹால்ஸி அன்ட் லாரென்!
"எனக்கு வேலை இருக்கு" என்று பார்வையை நகர்த்திக் கொண்டாள்.
அருகே வந்து லாப்டாப் திரையை கேலியாகப் பார்த்தான்.
"சரி நானே சொல்லிர்றேன்.சன்னமா மழை உன்னை ஞாபகப்படுத்துச்சு.அப்ப எதேச்சையா மியூசிக் ப்ளேயர்ல லென்னன் வந்தான்.நீ கூட என்னை ஜான் லென்னன்னு கூப்பிடுவியே.தலையைக் கைகளால கலைச்சு கன்னத்தைக் கிள்ளி..ஐ அக்ரி..நான் இப்ப அந்த பழைய ஞாபகத்தை புதுப்பிக்க வரலை..நீ லென்னன்னு சொன்ன உன் முகம் ஞாபகம் வந்துச்சு..வந்திட்டேன்"
".........................."
"உன் முகம்னு சொன்னதும் உனக்கும் வந்திருக்கனுமே.நான் கூட அடிக்கடி சொல்வேனே உன்னை சில கோணங்கள்ல இருந்து காமரா வழியாக பார்த்தா நீ ஜெஸிக்கா ஆல்பா போல இருக்கேன்னு...பாடவா...உனக்குப் பிடிக்காத லென்னன் பாட்டு..." என்று
'இன்ஸ்டன்ட் கர்மா" என்று கைகளில் இல்லாத கிடாரை காற்றில் அசைத்தபடி பாட ஆரம்பித்தான்.
"ஜெலஸி பாய்"என்று அவள் உதடுகள் முணுமுணுக்க லாப்டாப் திரையில் ஒன்ற ஆரம்பித்தாள் மதுமிதா.
காலையிலிருந்து அல்லாடிக் கொண்டிருக்கிறாள்.முதலில் போட்ட இரண்டு ஆர்டரும் தப்பு.எஃப்அன்ட்ஓவில் இந்த ஆர்டர் சரியான வந்து விட்டால் இருபதாயிரம் சுளையாக வந்து விடும்.ஆனா என்னமோ கண்ணாமூச்சி ஆடுது.எந்தப் பக்கம் போனாலும் ஸ்டாப் லாஸ் ட்ரிக்கர் ஆகற மாதிரி இருக்கான்.எச்டிஎஃப்சி எடுத்தது தப்பு.பேசாம மதர்சுமி ஜஸ்ட் டயல்னு பேய்ப்பங்குகளை எடுத்திருந்திருக்கனும்"
"யெஸ் பேபி...என்ன ஏதாவது ஓப்பன் பொசிஷன் தலையை தின்னுதா? நான்ன என்னன்னு பார்க்கவா.முறைக்காத.நான் சார்ட்பேட்டர்ன் பார்க்க மாட்டேன்னு கங்கனா மேல சத்தியம் பண்ணியிருக்கேன்.இரு நான் பார்க்கறேன்" என்று அருகே அமர்ந்தான்.
வீடு நிசப்தமாக இருந்தது.சுவற்றின் ஒரு ஓரத்தில் அவனது ஃபோட்டோ இன்னும் அகற்றப்படாமல் இருந்தது.மேஜை மேல் மொபைல் போன் கிடந்தது.அத்துடன் பழங்கள் காய்கறிகளுடன் "ஃப்ரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ்" இருந்தது.எரிக்காஜாங்!. அந்த வீட்டில் மதுமிதா தனியாகத்தான் இருக்கிறாள் போலிருந்தது.டிவியில் அசட்டுத்தனமாக என்டிடிவி ஃப்ராஃபிட்டோ அல்லது சிஎன்பிசியோ ஓடிக்கொண்டிருக்கவில்லை.டீபாயின் மீது பிரிக்கப்படாமல் ஃபினான்ஷியல் எக்ஸ்பிரஸூம் பிசினஸ் லைனும் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தன.நீல நிற மெல்லிய புடவையில் வழக்கம் போல வானவில்லை தோற்கடித்துக் கொண்டிருந்தாள் மதுமிதா.நீல நிற புடவைக்கு மாட்ச்சாக நகங்களில் பிங்க் நிறத்தை குடியமர்த்தியிருந்தாள்.
நல்லாத்தானே போய்க்கொண்டிருந்தது.இடையில் எப்படி பிரேக்அப் வந்தது.இருவரின் ஈகோவிற்கும் தீனி போட முடியவில்லை.இழைந்து இழைந்து உருகி உருகி பேசுவான்.கிடார் வாசிப்பான்.மார்போடு சாய்த்துக் கொண்டு கூந்தலை மெல்ல வருடிக் கொண்டு வானத்தை பார்த்துக் கொண்டே பேசுவான்.அப்புறம் சுனாமி போல கோபத்தில் சீறுவான்.
ச்சே.நினைக்காதே.யோசிக்காதே.
"என்னை நினைச்சா வெறுப்புதான் வரும் மது.ஸ்க்ரீன்ல பாரு.என்னன்னு நான் கண்டுபிடிச்சிட்டேன்"
"என்ன கண்டுபிடிச்ச"
ஸ்டான்ட் பை மீ என்று விசிலடித்தான்.ஃப்ரிட்ஜ் திறந்து மதுமிதா எடுத்திருந்த ப்ளாக் ஃபாரெஸ்ட் கேக்கை விரலால் அபகரித்து ஒரு கடி கடித்து விட்டு தொடர்ந்தான்.
"நீ ஃப்யூச்சர்ல இந்த ஷேரோட டெப்த்தை பார்த்துட்டிருக்கே.ஃப்யூச்சர்ல ரெண்டு பக்கமும் டிராவல் பண்றான்.ஆனால கேஷ்ல பாரு.செல்லர்ஸ் அதிகமா இருக்காங்க.பையர்ஸ் பக்கம் துடிப்பான வால்யூம் வந்து விழல"
"அப்படின்னா"
"கேஷ்மார்க்கெட்தான் எதுக்கும் அடித்தளம்.ஃப்யூச்சர்ல சும்மா ரஜினி சிவகார்த்திகேயன் டைப் பஞ்ச்டயலாக் பேசலாம்.ஆனா கேஷ்தான் நம்பியார் எம்ஜிஆர் மாதிரி ஸ்ட்ராங்க்.தைரியமா நீ ஷார்ட் அடி.ஷார்ட்லதான இருக்க"
"இல்லை லாங்" என்றாள் மெலிதான திகைப்புடன்.
"பரவாயில்லை.அந்த பொசிஷனை லாஸ் புக் பண்ணிட்டு இப்ப நாலைஞ்சு லாட் ஷார்ட் அடி.கீழே வந்துருவான் பாரு"
ஷார்ட் அடித்து விட்டு காத்திருந்ததில் மேலே போவது போல ஃப்யூச்சரில் பயம் காட்டிக்கொண்டிருந்த அந்த பங்கு கீழே வந்து விட்டது.
நினைத்ததை விட லாபம்.
எழுந்து கொண்டான்.
"அப்புறம்..."என்றாள் மதுமிதா.
"பை மது.அதான் சொன்னேனே.கார்ல போறச்ச நீ லென்னன் பாட்டு.நீ என்னை லென்னன் படவான்னு சொன்னது ஞாபகம் வந்தது.உன் முகத்தைப் பார்க்கலாமேன்னு வந்தேன்.நீ என்னை விரட்டியிருந்தா கூட சன்னல் வழியா உன் முகத்தைப் பார்த்துட்டுப் போயிருப்பேன்.வர்றேன்..பை மழைப்பெண்ணே"
கதை இன்னும் முடியவில்லை.காரில் வந்து கொண்டிருந்த வருண் காரை நிறுத்தினான்.ஏன் மதுமிதாவை திரும்பப் போய் பார்க்கக் கூடாது.அவளிடம் மன்னிப்பு கேட்டு மனதை லேசாக வருடி விட்டு கொஞ்சமே கொஞ்சம் போல கண்ணுக்குள் உற்றுப் பார்த்து பிரேக்அப்பிற்கு ஒரு பிரேக்அப் கொடுத்து விட்டால் என்ன.
காரை திருப்பினான்.
அவள் வீடு அதே மழையில் மங்கலான வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தது.உள்ளே மின்சாரம் இல்லை போல மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்திருப்பாள் போல சன்னமான வெளிச்சத்தை சன்னல் வழியே துப்பியது.
காரை நிறுத்தி விட்டு உள்ளே வந்தான்.
பழைய கால படங்களில் எல்லாம் வருவது போல பியானில் முதுகு காட்டிக் கொண்டு மதுமிதா உட்கார்ந்திருக்கவில்லை.ஒரு பூனை சுவரோரம் பதுங்கியபடி அரைக்கண்ணால் பார்த்தது.
திரும்பினாள்.
உள்ளே வந்த வருண் தயக்கத்துடன் பார்த்தான்.அவளை அப்படியே ஆவேசம் வந்த மாதிரி அணைத்துக் கொள்ள ஆசை வந்தது.
நடந்தான்.
அப்போது மதுமிதா எழுந்தாள்.
அவள் முகம் சாம்பல் பூத்தமாதிரி இருந்தது.ச்சே.லைட் ரிஃப்ராக்ஷன்.
இன்னும் கிட்ட வந்தான்.
அவள் ஏதும் பேசவில்லை.
அப்போது அவள் அவனை அணைத்து கன்னத்தை கைகளால் பிடித்து அவன் கழுத்தை கடித்து 'ஸாரி வருண்.நான் செத்து நாலு நாளாச்சு.ஷேர் டிரேடிங்கில் நான் அடிக்ட் ஆகிட்டதால என்னால டிரேடிங் செய்யாமத இருக்க முடியலை.உன்னை ஒரு கடி கடிச்சு மொஜிட்டோ போல இரத்தத்தை உறிஞ்சிரவா..." என்று சொல்லி விடுவாளோ என்ற நினைப்பு வர ச்சே..கட் இட்.ஷார்ட்ஃபிலிம்தனமா யோசிக்காத என்று சொல்லிக் கொண்டே அவள் கைகளைப் பற்றினான்.
சட்டென்று விலகினாள்.
"வருண்..என்னாச்சு உனக்கு வெளியில சரக்குனு கத்தியில குத்தின மாதிரி மின்னல் பேய்த்தனமா மின்னிச்சே...ஏன் நிழலாட்டம் ஆடற..." என்று மதுமிதா தயங்க அப்போதுதான் உணர்ந்தான்.
தான் காரிலிருந்து இறங்கியபோது தன்னை ஒரு மின்னல் தாக்கி-
சன்னல் வழியே பார்த்தான்.
தன் உடல் போர்ட்டிகோ அருகே மழையில் கிடந்தது.
மதுமிதா அதிர்ச்சி விலகாமல் நின்று கொண்டிருந்தாள்.
"மாந்திரீக முறையிலான ஷேர்டிரேடிங்" புத்தகம் ரெடியாகி விட்டது. மே முதல் தேதியிலிருந்து புத்தகம் கிடைக்கும்.நுணுக்கமான தந்திரங்கள் அடங்கிய பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த புத்தகம் ரூ 5555க்கு தரவிரும்புகிறௌம்.
புத்தகம் வேண்டுவோர் ரூ 5555ஐ பின்வரும் முறையில் செலுத்தி விட்டு பணம் செலுத்திய விபரத்துடன் உங்களது பெயர் முகவரி மொபைல் எண் ஆகியவற்றை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்தால் புத்தகம் கொரியரில் வந்து சேரும்.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
amount:Rs 5555/-only
Remit by IMPS or NEFT from any bank a/c
Click here to get Discounts at Amazon
ConversionConversion EmoticonEmoticon