கதவைத் திற காசு வரட்டும் -7
மற்ற வணிகத்தை விட நகைக்கடை நடத்துவது என்பது மிகவூம் வேறுபட்டது.தங்கத்தின் விலை மற்ற பொருட்களின் எம்ஆர்பி போல ஒரே மாதிரியாக இருக்காது.தினம் தினம் மாறுபடக் கூடியது.உலகச் சந்தையில் டாலரின் மதிப்பிற்கேற்பவூம் மாறுபடக் கூடியது.
எனது ஒரு நாள் பங்குச்சந்தை மற்றும் பணம் பற்றிய பயிலரங்கத்திலும் எனது தபால்வழிப் பயிற்சியில் சேரும் அன்பர்களிடமும், டிரேடிங் டிப்ஸிற்கான சந்தா செலுத்தும் வாடிக்கையாளர்களிடமும் நான் சொல்லும் ஒரே வார்த்தை ஷேர் மார்க்கெட்டில் வெற்றி பெற வேண்டுமானால் "நகைக்கடை" உரிமையாளர்கள் போல நடந்து கொள்ளுங்கள் என்பதுதான்.
அதென்ன நகைக்கடை உரிமையாளர்கள் போல நடந்து கொள்வது.நான் முந்தைய பாராவில் சொன்னது போல அவர்களது பொருளின் விலை என்பது தினம் தினம் மாறுபடக் கூடியது.மேலும் செய்கூலி சேதாரம் என்பார்கள்.அதாவது ஒரு பொருளை தயார் செய்வதற்கு ஆகும் செலவையூம்(அதாவது கூலி) நகையை வாங்க வருபவர்களிடமே கேட்டுப் பெறும் நிலையில் இருக்கிறார்கள்.அதுவே மற்ற எந்த வியாபாரப் பொருட்களாக இருந்தாலும் அதை ஃபாக்டரியில் தயாரிக்கும்போதே அந்த தயாரிப்புச் செலவூ என்பது பொருளில் விலையோடு ஐக்கியமாகி விடும்.அடுத்து சேதாரம்.எல்லா தொழிற்சாலைகளிலும் எல்லா பொருட்களை தயாரிக்கும்போதும் சேதாரம் என்பது இருக்கத்தான் செய்கிறது.அந்த கழிவை அந்த தயாரிப்பு நிறுவனமே ஏற்றுக் கொண்டு விடும் என்று சொன்னாலும் மறைமுகமாக அந்த செலவினத்தை பொருளின் விலையில் வைக்கத்தான் செய்வார்கள்.இங்கே அது மாதிரி ஒரு தங்க நகைக்கு இதுதான் எம்ஆர்பி என்று வைக்க முடியாது.(Click here to get GOLD & commodity updates)காரணம் நகை என்பது தினம் தினம் மாறுபடக்கூடிய தங்கத்தின் விலையை அனைவரும் அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.ஒரு மாருதி காரையோ அல்லது ஒரு டிவிஎஸ் ஸ்கூட்டியின் டயரையோ அல்லது ஒரு லக்ஸ் சோப்பையோ வாங்கும்போது அந்த பொருட்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் செலவூ அதில் வரும் சேதாரம் போன்றவை யாருக்கும் தெரியாது.அதனால் அங்கே எல்லாம் சேதாரம் என்பதை வெளிப்படையாகக் குறிப்பிட மாட்டார்கள்.இங்கே மூலப்பொருளான தங்கத்தின் விலை வெளிப்படையாக இருப்பதால் சேதாரம் என்பதை குறிப்பிட்டு கஸ்டமர்களிடம் கேட்டுத்தான் வாங்க வேண்டியிருக்கிறது.இது மட்டுமல்லாமல் இலவச பரிசுகள் ஆஃபர்கள் என்று போட்டியாளர்கள் கொடுத்து வைப்பதும் இவர்களுக்கு ஒரு செலவினத்தை ஏற்படுத்தக் கூடியது.
ஒரு தெருவில் அதாவது நகைக்கடை பஜாருக்குச் சென்றால் சின்ன கடை, பெரிய கடை, பிரான்டட் கடை என்று பாகுபாடு இல்லாமல் கடைகள் கடல் போல பரவிக்கிடப்பதால் இந்த தொழிலில் போட்டிகளும் மிக மிக அதிகம்.
ஆனால் இவர்கள் அதாவது நகைக்கடை உரிமையாளர்கள் சோர்ந்து போகிறார்களா என்று பாருங்கள்.இதை இவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று கவனித்துப் பார்த்திருக்கிறேன்.இவர்களது வெற்றி ஃபார்முலா என்றால் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது.
புன்னகை!
எதையூம் மலர்ந்த முகத்தோடு சந்தோஷமாக அணுகுவது.
எந்த வாடிக்கையாளரையூம் உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பது.ஆனால் ஷேர் டிரேடிங் செய்யூம் நீங்கள் அப்படி இருக்கிறீர்களா? இருக்க முடியாது.காரணம் சந்தையில் இருக்கும் நிச்சயமற்றத் தன்மை.மனஅழுத்தம்.நஷ்டம் வந்தால் துவண்டு போய்விடும் நிலை.இன்ட்ரா டே செய்பவராக இருந்தால் இன்றைக்குள் கணக்கு முடித்து லாபம் பார்க்க வேண்டுமே என்ற பயம்.எஃப்அன்ட்ஓ செய்பவராக இருந்தால் இன்னும் அதிக பயம்.தினம் தினம் எம்டுஎம் கொடுக்க வேண்டுமே என்ற பயம்.கமாடிட்டி செய்பவராக இருந்தால் இன்னும் பதட்டம் என்று பயம் அழுத்தம் ஆசை என்ற காரணிகள் உங்களைப் போட்டு படுத்தி எடுக்கும்.
ஆனாலும் நீங்கள் ஷேர் டிரேடிங்கில் வெற்றி பெற்றாக வேண்டும்.(Click here to go main website for share ideas)இங்கே கவனித்துப் பாருங்கள்.உங்களது தோல்விக்கு தவறான முடிவோ அவசரமோ முதற் காரணமாக இருக்காது.உங்களது கனமான அழுத்தங்கள் நிறைந்த மனம்தான் காரணமாக இருக்கும்.
அதனால் மனதை லேசாக மலர்ச்சியாக வைத்துக் கொண்டு (இது மிகவூம் கஷ்டம்தான்.செய்து பார்த்தால் நாளடைவில் வந்து விடும்) சந்தோஷமாகவே வலம் வந்தால் போதும்.
எதைக் கண்டும் அயர்ச்சியடைய மாட்டீர்கள்.எதைக் கண்டும் பயப்பட மாட்டீர்கள்.மன அழுத்தமே இருக்காது.சந்தையே கண்ணெதிரே சரிந்து கொண்டிருந்தாலும் பொறுமையாக யோசித்து மாற்று ஏற்பாடுகளைச் செய்து மற்றவர்கள் எல்லாம் நஷ்டமடைந்து கொண்டிருக்க நீங்கள் மட்டும் லாபத்திலேயே இருப்பீர்கள்.
இதெல்லாம் நடக்க வேண்டுமென்றால் 'நகைக்கடை உரிமையாளர்கள்' போல நடந்து கொள்ள துவங்குங்கள்.
பங்குச் சந்தையில் பணம் தானே வந்து விழும்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்.பாக்யா வாரஇதழில் எழுதிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக
(10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to get FREE stock tips & news
ConversionConversion EmoticonEmoticon