ஷேர் டிரேடிங்கில் நஷ்டங்கள் வருவது குறைந்து லாபம்அதிகரிப்பதற்காக நாம் வழங்கி வரும் பரிகாரங்கள் நன்றாக இருப்பதாக பலரும்தெரிவித்து வருகிறார்கள்.திருமணம் மற்றும் உத்யோகரீதியிலான பிரச்சனைகளுக்கும் இப்போது நம்மிடம் ஜாதகபலன் மற்றும் பரிகாரங்கள் கேட்டு நிறைய பேர் வர ஆரம்பித்து விட்டார்கள் என்பதால் நேரப்பற்றாக்குறையால் திணறிக்கொண்டிருக்கிறேன்.
இப்போது ஒரு பொதுப்பரிகாரமாக ஒன்றை சொல்கிறேன்.
யாருடைய ஜாதகத்தில் எல்லாம் பூர்வபுண்ணிய ஸ்தானம் பாதிக்கப்பட்டுள்ளதோ யாருடைய ஜாதகத்திலெல்லாம் லக்கினத்தில் அல்லது ஐந்தாம் வீட்டில் கேது அமர்ந்திருக்கிறதோ யாருடைய ஜாதகத்தில் எல்லாம் மாந்தி சரியில்லாத இடத்தில் அமர்ந்திருக்கிறதோ அவர்களுக்கு இந்த பரிகாரம் பொருத்தமானதாக இருக்கும்.மற்றவர்களும் இதை செய்யலாம்.
சரியா வேலை கிடைக்கவில்லை.நல்ல நல்ல வாய்ப்புகள் கடைசி நேரத்தில் கைவிட்டுப் போய் விடுகிறது.வீடு கட்டி குடியேற முடியவில்லை.திருமணத்தடை இருக்கிறது.குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறது என்பவர்களும் இதை செய்து பார்க்கலாம்.
பரிகாரம் இதுதான்.
நீங்கள் அனைவரும் தீபாவளி பொங்கல்(மற்ற மதத்தவராக இருந்தால் அவர்களது பண்டிகை) இவற்றை அடுத்து கொண்டாட விரும்புவது உங்களது பிறந்தநாளாகத்தான் இருக்கும்.
பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடுங்கள்.வேண்டாமென்று சொல்லவில்லை.நீங்கள் பிறந்தநாளைக்கொண்டாடும் போது நீங்கள் பிறந்த தினத்தை நினைத்துப் பாருங்கள்.அன்றைக்கு நீங்கள் ஒரு குழந்தையாக உருவாகி வெளியில் வந்திருப்பீர்கள்.
ஆனால்-
அந்த பிறந்தநாளுக்கு ஒரு வருடம்-ஒரு நாள் முன்பாக என்னவாக இருந்திருந்திருப்பீர்கள்?
நினைத்துப் பார்க்கவே திகைப்பாக இருக்கும்.
பொதுவாக போனஜென்மத்தில் இருந்திருப்பீர்கள் என்றே வைத்துக் கொள்வோம்.அதெப்படி ஒருவர் போன ஜென்மத்தில் ஆயூளை முடித்துக் கொண்டு ஸ்ட்ரைட்டாக அடுத்தநாளே அடுத்த ஜென்மத்திற்குள் வந்து விடுவாரா என்றெல்லாம் கேட்கக் கூடாது.சிலர் ஜென்மம் முடிந்து வேறொரு இடத்தில் கூட இருந்திருக்க வேண்டும்.அந்த ஆராய்ச்சியெல்லாம் இப்போது வேண்டாம்.
நமக்குத் தேவை ஒரு நாள்.
அந்த நாள் உங்களது பிறந்த நாளுக்கு முந்தைய நாளாக இருக்க வேண்டும்.அந்த நாளில் கோவிலுக்குச் செல்லுங்கள்.இப்போதைய குலதெய்வ கோவிலுக்குச் செல்ல வேண்டாம்.எந்த கோவிலுக்குச் சென்றால் மனம் உருகி உங்களையூமறியாமல் அந்த தெய்வத்தின் மீது லயிப்பாக இருக்கிறதோ(ஒவ்வொருவருக்கும்அப்படி ஒரு கோவில் கண்டிப்பாக இருக்கும்) அந்த கோவிலுக்குச் செல்லுங்கள்.
அங்கே அமைதியாக கண்கள் மூடி நின்றௌ அமர்ந்தோ தியானம் செய்வது போலவோ உட்கார்ந்து சென்ற ஜென்மத்தில் நீங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேளுங்கள்.யார் யாரெல்லாம் சென்ற ஜென்மத்தில் உங்களுக்கு உதவியிருக்கக் கூடுமோ அவர்களுக்கெல்லாம் மானசீகமாக நன்றி கூறுங்கள்.சென்ற ஜென்மத்தில் யாரோ ஒருவர் உங்களுக்கு ஆசிரியராக இருந்து வழிநடத்தியிருக்கலாம்.அவருக்கு மானசீகமாக நன்றி தெரிவித்து அவரது வாரிசுகள் அவரது குடும்பமே நன்றாக இருக்கட்டும் என்று வேண்டிக்கொண்டு ஒரு தீபத்தை அந்த கோவிலில் ஏற்றி வைத்து விட்டு நேராக வீட்டுக்கு வந்து விடுங்கள்.
இந்த பரிகாரம் பலனளிக்கிறது.
மிக மிக கஷ்டம் என்று என்னிடம் வருபவர்களுக்குத்தான் இந்த பரிகாரத்தை சொல்லியிருக்கிறேன்.இப்போது நமது தளத்தில்இங்கே தெரிவித்திருக்கிறேன்.செய்து பாருங்கள்.இதனை ஆங்கில தேதியிலும் நட்சத்திரத்தின்படி உங்களது ஜென்மநட்சத்திரம் வரும் நாளுக்கு முந்தைய நாளிலும் செய்யலாம்.
செய்து பார்த்து விட்டு பதில் எழுதுங்கள்.
எஃப்அன்ட்ஓ கமாடிட்டி ஃபாரெக்ஸ் என்று எதைத் தொட்டாலும் நஷ்டம்தான் வருகிறதா? உங்களது ஜாதகம்
மோசமானதாக இருந்தாலும் தசாபுத்திகள் ஒத்துழைக்காவிட்டாலும் உங்களை ஷேர் டிரேடிங்கில் சம்பாதிக்க
வைக்க முடியூம்.ஜாதகபலனுடன் பரிகாரங்களும்(செலவில்லாத எளிய சூட்சும பரிகாரங்கள்) பெற கட்டணம்
ரூ 3555ஐ பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு மின்னஞ்சலில்(படத்தில் விபரம் உள்ளது) ஸ்கேன்
செய்த ஜாதக நகலை அனுப்பி வையூங்கள்.
Our Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 3,555/-
இதை செய்ய வேண்டாமென்றுதான் இத்தனை நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன்.ஷேர் டிரேடிங்கான ஜாதகபலனும்
பரிகாரங்களும் மட்டும் செய்தால் போதுமென்று நினைத்திருந்த வேளையில் ஷேர் டிரேடிங் செய்பவர்களிடமிருந்தே
இவற்றிற்கான வேண்டுகோள்கள் வந்து குவிந்து விட்டன.அதனால் திருமணத் தடை, திருமணவாழ்வில் உள்ள பிரச்சனைகள்
மற்றும் படித்திருந்தும் வேலை கிடைப்பதில் உள்ள தடைகள் வேலை கிடைத்தபின்பும் உத்யோகத்திலுள்ள பிரச்சனைகளுக்கான
ஜாதகபலன் மற்றும் சூட்சுமப்பரிகாரங்களைப் பெற இதற்கான எளிய கட்டணமாக ரூ 5555/-ஐ பின்வரும் வங்கிக் கணக்கில்
செலுத்தி விட்டு பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் மற்றும் தற்போது வசிக்கின்ற ஊர் போன்ற விபரங்கள் அல்லது
ஸ்கேன் செய்த ஜாதக நகலுடன் மின்னஞ்சல் செய்து விட்டால் போதும்.ஜாதகபலனுடன் பரிகாரங்களை தெரிவித்து
மின்னஞ்சலில் அனுப்பி விடுகிறௌம்.
Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 5,555/-
ConversionConversion EmoticonEmoticon