இந்த வருடம் குருப்பெயர்ச்சி ஒரு தனித்தன்மையூடன் நகர்கிறது என்பதால் அது பங்குச்சந்தையில்; ஆர்வமாக இருக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் ஷேர் டிரேடர்களுக்கு எவ்வித நன்மைகள் மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை துல்லியமாக இங்கே குறிப்பிடுகிறௌம்.குறித்துக் கொள்ளுங்கள்.
மேஷராசிக்காரர்களுக்கு: தற்போது நீங்கள் டிரேடிங் செய்கிற செக்மன்ட்டுடன் புதிதாக ஒரு செக்மென்ட்டை எடுத்து டிரேடிங் செய்தால் அதில் பணம் நிறைய வர வாய்ப்பிருக்கிறது.அந்த பணம் அப்படியே அடுத்தடுத்த டிரேடிங்கில் முழுகிப் போகாமல் முழுவதுமாக வீட்டிற்கு வந்து சேரும்.வாழ்த்துக்கள்!
ரிஷபராசிக்காரர்களுக்கு: டிரேடிங்கில் சரியான முடிவூகள் எடுப்பதற்கு குலதெய்வ அனுகூலம் மற்றும் இஷ்டதெய்வ ஆசிகள் அவசியம்.நீண்ட கால முதலீட்டிற்கு பங்குகளை தேர்ந்தெடுக்க சரியான நேரம்.
மிதுனராசிக்காரர்களுக்கு: விரையங்கள் குறைவதற்கு லாங் போவதை விட ஷார்ட் அடித்துத் தள்ளுவதிலேயே குறியாக இருங்கள்.ஆஃப்ஷன் டிரேடிங்காக இருந்தால் கால் வாங்குவதைத் தவிர்த்து புட் வாங்கினால் லாபம் வரும்.ஆனால் ஜாக்பாட் லாபம் போன்ற அதிக லாபம் வந்து கொண்டே இருப்பதற்கு சூட்சுமப்பரிகாரங்கள் அவசியம் தேவை.
கடகராசிக்காரர்களுக்கு: பொசிஷனல் டிரேடிங்கும் பென்னி லெவல் டிரேடிங்கும் அதிக லாபம் தருவதாக அமையூம்.எனினும் இன்ட்ரா டிரேடிங்கைப் பொறுத்தவரை நிஃப்டி மற்றும் பாங்க்நிஃப்டி ஆஃப்ஷனே தங்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.
சிம்மராசிக்காரர்களுக்கு: எதிர்காலத்தில் பெரிய அளவில் வளர்ந்து பலன்தரக்கூடிய கோடீஸ்வரப் பங்குகளை இந்த வருடம் முழுக்க வாங்கிப் போட வேண்டிய தருணம் இது.இதனை மிஸ் செய்து விடாதீர்கள்.தங்கத்தை கமாடிட்டியிலும் தங்கம் தொடர்பான பங்குகளை எஃப்அன்ட்ஓவிலும் இந்த வருடம் முழுக்க நீங்கள் டிரேடிங் செய்து லாபம் சம்பாதிக்கலாம்.
கன்னிராசிக்காரர்களுக்கு: ஷேர்டிரேடிங்கையே முழுநேரமாக எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் உங்களது முடிவை நீங்களே அடிக்கடி மாற்றிக் கொண்டு நல்ல ஓப்பன் பொசிஷன்களை எல்லாம் நஷ்டத்தில் விழும்படி செய்து வருத்தப்படுவீர்கள்.சூட்சுமப் பரிகாரங்கள் செய்து கொள்வது நஷ்டத்தைக் குறைத்து லாபத்தை அதிகப்படுத்தும்.
துலாம்ராசிக்காரர்களுக்கு: சாதா குருப்பெயர்ச்சி பலன்கள் பயமுறுத்தினாலும் இந்த வருடம் அதை சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொள்ள எக்ஸ்போஷரில் ஷேர் டிரேடிங் செய்து லாபமாக மாற்றிக் கொள்ளலாம்.ரியல்எஸ்டேட் ஆட்டோமொபைல் பங்குகள் போன்றவற்றில் குதுரகலமாக டிரேடிங் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டே இருக்கலாம்;.டிரேடிங் சமயத்தில் உடல்நிலை ஒத்துழைக்காமல் போகும்.அதற்கு வேண்டுமானால் பரிகாரம் செய்து கொள்ளலாம்.
விருச்சிகராசிக்காரர்களுக்கு: செம லாபம் வரும் நேரம்.எஃப்அன்ட்ஓவில் இன்ட்ரா டே பிடிஎஸ்டி எஸ்டிபிடி என்று ஜமாய்த்துத் தள்ளலாம்.ஆனால் டெலிவரியாக பொசிஷன் எடுத்தால் கையைக் கடித்து விடும்.எனினும் ஷேரில் சம்பாதித்த பணம் வீணாகாமல் போகாமல் இருக்க சூட்சுமப்பரிகாரங்கள் அவசியம் தேவை.இல்லையென்றால் சம்பாதித்தது அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகி விடும்.
தனுசுராசிக்காரர்களுக்கு: கிரகங்கள் கடன் வாங்கி தொழிலை விரிவூபடுத்தத் துரண்டி விட்டு வேடிக்கைப் பார்க்கும் நேரமிது.தகுந்த பரிகாரம் அவசியம் தேவை.செய்யூம் தொழிலில் பாதிப்பு நேராமல் இருக்கவூம் பரிகாரம் அவசியம்.ஷேர் டிரேடிங்கைப் பொறுத்தவரை ஒரே இடத்தில் அமர்ந்து டிரேடிங் செய்யாமல்(வீட்டில் அலுவலகத்தில் ஒரே நாற்காலியில் அமர்வதை தவிர்க்கவூம்) இடத்தை மாற்றி மாற்றி உட்கார்ந்து ஆர்டர் போட்டால் கிரகத்தின் சூழ்ச்சியை வெல்லலாம்.
மகரராசிக்காரர்களுக்கு: குலதெய்வ வழிபாடு அவசியம்.நீண்ட நாட்களுக்கு டெலிவரியாக ஷேர் டிரேடிங் செய்யாதீர்கள்.ஆஃப்ஷன் டிரேடிங் போன்றவற்றில் இன்ட்ரா டே அல்லது பிடிஎஸ்டி மட்டுமே செய்ய வேண்டும்.ஃபாரெக்ஸ்; போன்ற வெளிநாட்டு டிரேடிங்கில் போய் மாட்டினால் தொiலைந்தீர்கள்.இயன்ற பரிகாரங்களை செய்து கொண்டால் பணம் வருவததை யாரும் தடுக்க முடியாது.
கும்பராசிக்காரர்களுக்கு: அஷ்டமகுரு என்று உள்ளுர் ஜோதிடர்கள் பயமுறுத்தினால் புறக்கணித்துத் தள்ளுங்கள்.இந்த வருடம் ஷேர் டிரேடிங்கிலேயே சம்பாதித்து நீங்கள் வீடு வாகனம் போன்றவற்றை அனாயாசமாக வாங்கித் தள்ளலாம்.எனினும் சூட்சுமப்பரிகாரங்கள் இந்த வரவூகளை விரைவூபடுத்தும்.
மீனராசிக்காரர்களுக்கு: ஷேர் புரோக்கர்கள் சப்புரோக்கர்கள் யாராவது இந்த ராசிக்காரர்களாக இருந்தால் அவர்களது தொழிலை நசித்துத் தள்ள கிரகங்கள் பாடுபடும்.அதனால் இடமாற்றம் செய்து கொள்ளுங்கள்.மீனராசி ஷேர் டிரேடர்கள் குறுகியகால முதலீடு இன்ட்ரா டே டிரேடிங் போன்றவற்றை தாராளமாக செய்யலாம்.குறிப்பாக தங்கம் வெள்ளி போன்றவற்றை கமாடிட்டியிலும் எஃப்அன்ட்ஓவில் பொதுத்துறை நிறுவனப் பங்குகளில் மட்டும் டிரேடிங் செய்தால் போதும்.செம லாபம் வரும்.எனினும் பணவரவிற்கும் அந்தஸ்து உயர்விற்கும் சூட்சுமப்பரிகாரங்கள் அவசியம்.
பொதுவான குறிப்பு: எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் இந்த வருடம் கமாடிட்டியில் தங்கத்தில் தாராளமாக டிரேடிங் செய்து பணம் சம்பாதிக்கலாம்.எஃப்அன்ட்ஓவில் பாங்க்நிஃப்டி மற்றும் தங்கம் தொடர்பான பங்குகளில் தொடர்ந்து டிரேடிங் செய்து கொள்ளலாம்.ஸ்டீல் நிறுவனப் பங்குகளை தவிர்க்கவூம்.எண்ணைய் மற்றும் எரிவாயூப் பங்குகளை சூழ்நிலைக்கேற்ப டிரேடிங் செய்து கொள்ளவூம்.மற்ற விபரங்களுக்கு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon