"ஜம்ப்பிங் அவே வித் தி பாக்ஸ்"
எப்போது எந்த திசையிலிருந்து அதிர்ஷ்டமோ நல்ல கருத்துக்களோ வரும் என்று சொல்ல முடியாது.இன்று பேஸ்புக்கில் மேய்ந்து கொண்டிருந்தபோது அன்பர் விஜய்சரவணன் ஒரு படத்தைப் போட்டு அதிலுள்ள எண்ணைக் கண்டுபிடிக்க முடியூமா என்று கேட்டிருந்ததுடன் அது உளவியலாளர்கள் அடிக்கடி குறிப்பிடும் "திங்க்கிங் அவூட் ஆஃப் தி பாக்ஸ்" என்பது போல என்று குறிப்பிட்டிருந்தார்.
பெட்டியைத் தாண்டிய யோசனை என்றால் என்ன என்பதை சுருக்கமாகவே இப்படி சொல்லி விடலாம்.நீங்கள் வேலை பார்க்கிறீர்கள் என்றால் உங்களது "வேலையைத் தாண்டி யோசிப்பது" என்று பொருள் கொள்ளலாம்.எல்லாருமே ஒரு பெரிய ஹாலில் பெட்டி பெட்டியாக தனித்தனி கேபினுக்குள் அடைப்பட்டிருக்கும் நிலையில் அந்த பெட்டியை தாண்டி யோசிப்பவர்களே ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிற்கு வர முடியூம்.
இது இருக்கட்டும்.
அந்த பேஸ்புக் அன்பரின் பதிவிற்கு பின்னுரட்டம் இடும்போது "இதையெல்லாம் இப்போது பிசினஸில் தாண்டியாகி விட்டது. ஜம்ப்பிங் அவே வித் தி பாக்ஸ் என்பதுதான் புதிது" என்று கமன்ட் போட்டு விட்டதுதான் தாமதம் ' ஜம்ப்பிங் அவே வித் தி பாக்ஸ்" ஐடியா புதிதாக இருக்கிறதே.அவசியம் அந்த கட்டுரையை நான் வாசிக்கிறேன் என்று அவர் பதில் கமன்ட் போட்டு விட " ஜம்ப்பிங் அவே வித் தி பாக்ஸ்" என்ற கட்டுரையை நான் எழுதியிருக்கவே இல்லை.அவர் கட்டுரையைத் தேடி நமது தளத்திற்கு வந்து விடுவாரோ என்ற பரபரப்புட்ன் இந்த பதிவை எழுத வேண்டிய அவசியம் நேரிட்டு விட்டது.
இப்போது ஜம்ப்பிங் அவே வித் தி பாக்ஸ் பற்றி.
இதை யாரும் எனக்கு சொல்லவில்லை.நானேதான் எழுதினேன் என்றாலும் இந்த ஜம்ப்பிங் அவே வித் தி பாக்ஸ் யூக்தியை முதன்முதலில் பயன்படுத்தியது பிள்ளையார்தான்.மாம்பழத்திற்காக உலகைச் சுற்றி வரும் போட்டியை வைத்தபோது விஜய் டிவி தமிழ்க்கடவூள் முருகன் போல முருகனார் மயில் மீதேறி பறந்து செல்ல பொத்தினாற் போல பெற்றௌரைச் சுற்றி வந்து அதாவது பெட்டியையே லபக்கிக் கொண்ட மாதிரி ஜெயித்து விட்டவர் பிள்ளையார்.
உங்களது வேலையைத் தாண்டி சிந்திப்பது மட்டுமல்ல.நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ எங்கே வேலை பார்க்கிறீர்களோ அங்கே இருக்கும் அத்தனை பேரையூம் ஓவியாத்தனம் பண்ணுவது.அதாவது வசீகரிப்பது.அந்த இடத்தில் ஸ்விட்ச் போட்டால் வெளிச்சம் பரவூவதற்கு முன்னர் உங்களது புன்னகை பரவ வேண்டும்.உங்களது கண்கள் அங்கே அனைவரையூம் கட்டிப் போட வேண்டும்.இது அந்த இடத்தில் உள்ள மனிதர்களை மட்டுமல்லாது அந்த அலுவலகத்தில் இருக்கிற ஜடப்பொருட்களையூம் டேபிள் சேர் கம்ப்யூட்டர் ஏசி இயந்திரம் மேசையில் கிடக்கிற வெற்றுத்தாள்கள் உட்பட அத்தனை பொருட்களையூம் நீங்கள் வசீகரிக்க வேண்டும்.
அதெப்படி முடியூம் உயிரற்ற பொருட்களை எப்படி வசீகரிக்க முடியூம் என்று கேட்பதற்கு பதிலாக உயிரற்ற எந்த பொருளையூம் அன்பாக நட்பாக பரிவாக அக்கறையோடு பாருங்கள்.எந்த பொருளைத் தொட்டாலும் அன்பாக தொடுங்கள்.உங்கள் ஸ்பரிசம் அந்த பொருட்களின் மீது ஒரு ஆளுமையைக் கொண்டு வரட்டும்.எந்த பொருட்களைப் பார்த்தHலும் அதனையூம் அன்பாகப் பாருங்கள்.பார்ப்பது போல நடித்தால் கூட போதும்.அங்கேயூள்ள காற்றையூம் அன்பாகவே நடத்துங்கள்.இப்போது அந்த அலுவலகத்தில் உள்ள அத்தனை பொருட்களுக்கும் ஆட்களுக்கும் உங்களுக்கும் ஒரு இதமான இணைக்கம் ஏற்பட்டு விடும்.அதன்பின் அந்த அலுவலகத்தில் உங்களை செல்லமாய் வைத்துக் கொள்ளவே விரும்புவார்கள்.நீங்கள் கேட்கிற சம்பள உயர்வை பதவி உயர்வை தரவே விரும்புவார்கள்.இது செய்வதற்கு கஷ்டமாக கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாகவே தோன்றும்.ஆனால் செய்து பாருங்கள்.
இப்போது நம்முடைய மெயின் டாபிக்கிற்கு வருவோம்.
இதுவரை எல்லா தன்னம்பிக்கை மற்றும் பணம் சம்பாதிக்க கற்றுத் தரும் மேனாட்டு நிபுணர்களும் உங்கள் சட்டைப் பையில் உள்ள ரூபாய் நோட்டுக்களை எடுத்து அன்போடு தடவிப் பாருங்கள் என்றுதான் சொல்வார்கள்.நான் கொஞ்சம் அட்வான்ஸாக வேறு மாதிரி சொல்கிறேன்.
நீங்கள் எந்த ஊரில் வசிக்கிறீர்களோ அந்த ஊரில் உள்ள அத்தனை பணத்தையூம் (அதாவது அத்தனை பேரிடமும் இருக்கிற அத்தனை பணத்தையூம்) நீங்கள் அன்பாகவூம் மானசீகமாகவூம் பாருங்கள்.'இந்த ஊரில் உள்ள அத்தனை பணத்தையூம் நான் நேசிக்கிறேன்' என்று சொல்லிப் பாருங்கள்.எப்போதெல்லாம் ஏடிஎம் சென்டரை கடந்து போகிறீர்களோ அப்போதெல்லாம் அந்த ஏடிஎம் மெஷினில் உள்ள பணத்தை அன்பாக நீங்கள் நேசி;ப்பதாக அந்த ஏடிஎம் மெஷினில் உள்ள பணத்திடம் மனதால் தெரிவித்து விட்டே அந்த இடத்தை விட்டு அகலுங்கள்.உங்கள் கண்ணில் படுகிற யார் பணத்தை கையில் எடுத்தாலும் எண்ணினாலும் அந்த பணத்தை அன்பாகப் பார்த்து அந்த பணத்தை நீங்கள் நேசிப்பதாக மனதார சொல்லுங்கள்.
சொன்னால்?
ஓரு ஆட்டுக் குட்டியை ஒரு முயல்குட்டியை ஒரு நாய்க்குட்டியை யார் அன்பாக மதித்து நேசிக்கிறார்களோ அவர்களிடம்தானே போய் மடியில் உட்கார்ந்து கொள்ளும்.அது போல ஊரிலுள்ள அத்தனை பணமும் உங்களது தொழில் வியாபாரம் வழியாக வேகமாக உங்களை வந்தடைய ஆரம்பிக்கும்.
இதுதான் ஒட்டுமொத்தமாக துரக்குவது.அதாவது ஜம்ப்பிங் அவே வித் தி பாக்ஸ்!
ConversionConversion EmoticonEmoticon