பங்குச்சந்தை என்றாலே கொஞ்சம் பயமும் புரியாத தன்மையூம்தான் முதலீட்டாளர்கள் பலருக்கு இருக்கிறது.குஜராத் மும்பை போன்ற இடங்களில் எல்லாம் ஜோதிடத்தின் அடிப்படையில் பங்குச்சந்தை டிரேடிங் செய்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.நம் ஊரில் ஜோதிடம் ஜாதகம் என்றால் திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கவூம் வேலை கிடைக்குமா குழந்தை பிறக்குமா என்று தெரிந்து கொள்ளவூம் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் பங்குச்சந்தையில் ஜோதிடத்தைப் பயன்படுத்துவது ஒரு மூடநம்பிக்கை என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள்.விஷயமறிந்து கோள்களின் தன்மையறிந்து சுயஜாதகத்தையூம் தசாபுத்தி நிலையையூம் கோள்சார நிலையையூம் அறிந்து கொண்டு ஒருவர் பங்குச்சந்தையில் டிரேடிங் செய்தால் எப்போதுமே லாபகரமாக பணத்தைப் பெருக்கிக்கொண்டே போகலாம்.
ஈக்விட்டி சந்தையை விட கமாடிட்டி சந்தையில் ஜோதிடம் அதிகமாக உதவூம்.குறிப்பாக தங்கம் வெள்ளி குரூடாயில் போன்ற இனங்களில் டிரேடிங் செய்வதற்கு மிகவூம் சரியாக இருக்கிறது என்பதை அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.லாபமும் அடைந்திருக்கிறேன்.
இந்த பதிவூ நீசபங்கராஜ யோகத்திற்கும் ஜோதிடத்திற்குமான தொடர்பை தெரிவிப்பதற்காகத்தான்.நீசபங்கம் என்பது ஒரு கிரகம் தனக்கு ஆகாத ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டு நீசமாகி விடுவது.அதாவது அந்த கிரகம் தேறாத ஒரு நிலையில் இருக்கும்.உதாரணமாக துலாம்மில் சூரியன் நீசம் என்று சொல்லலாம்.அதே போன்று அந்த நீசகிரகம் இருக்கும் வீட்டில் ஒரு கிரகம் உச்சமாக இருந்தால் நீசமான அந்த கிரகம் நீசபங்கமாகி விடும்.இதே உதாரணத்தில் துலாம்மில் சூரியனுடன் சுக்கிரன்(அதிக நெருக்கமாக இல்லாமல் சற்று விலகிய பாகைகளில்) இருந்தால் சூரியனின் நீசமே பங்கமாகி விடுகிறது என்பதோடு அங்கே ஒரு ராஜயோகம் ஒளிந்து கொண்டிருக்கிறது.மேலும் ராசியில் நீசமான கிரகம் அம்சத்தில் நீசமில்லாமல் நல்ல வீட்டிலிருந்தால் இந்த நீசபங்கத்திற்கு அதிக பலனுண்டு.
நீசபங்க ராஜயோகத்தைப் பொறுத்தவரை முற்பாதியில் கஷ்டம்.பிற்பாதியில் இன்பம் அதாவது நல்லது என்ற நிலையை ஏற்படுத்தித் தரும்.
அதாவது ஒருவரின் ஜாதகத்தில் நீசபங்க ராஜயோகம் இருந்தால் அவரது ஆயூளின் முற்பாதியில் கஷ்டமான வாழ்க்கையையூம் அதன்பிறகு மீதியூள்ள வருடங்களில் ராஜயோகத்துடனான வாழ்க்கையையூம் அவர் அனுபவிப்பார் என்று பொருள்.
இதையே பங்குச்சந்தையில் பொருத்திப் பார்ப்போமானால் அவர் முற்பகுதி வாழ்நாளில் பங்குச்சந்தைக்கு வந்தால் பலத்த அடிவாங்குவார்.போட்ட பணம் நஷ்டமாகி விடும்.ஆனால் பிற்பகுதியில் அவர் போட்ட பணம் லாபமாகி பல்கிப் பெருகும்.
ஆனால் இதற்காக ஒரு மனுஷன் பாதி வாழ்நாளை கழித்தபிறகுதான் பங்குச்சந்தையில் லாபம் சம்பாதிக்க வேண்டுமென்றால் வெறுத்துப் போய் விடுவான்.
அதனால் கொஞ்சம் சமயோசிதமாகவூம் சாமர்த்தியமாகவூம் இந்த நீசபங்க ராஜயோகத்தை பங்குச்சந்தைக்கு அணுகலாம்.
ஒரு வருடம் என்பது ஆங்கில வருடத்தை எடுத்துக் கொண்டால் ஜனவரி முதல் டிசம்பர் வரை என்று கொள்ளலாம்.இந்த முதலீட்டாளர் டெலிவரி எடுத்து நீண்டநாள் பங்குகளை கையில்(ஹோல்டிங்) வைத்திருக்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
ஒரு வருடத்தை இரண்டாகப் பிரித்துக் கொண்டால்-
இவருக்கு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை ஆகாது.இந்த காலகட்டங்களில் பங்குகளை இவர் வாங்கி வைத்திருந்தால் நஷ்டமாகும்.அதனால் இவர் ஜூலை முதல் டிசம்பர் வரை உள்ள காலகட்டத்தில் வாங்கி பங்குகளை வைத்திருந்தாரானால் லாபம் கிடைக்கும்.
இந்த அவசர காலத்தில் யாரால் ஆறுமாதம் சும்மா இருந்து அடுத்த ஆறுமாதம் மட்டும் டிரேடிங் செய்ய பொறுமை இருக்கும்.
அதனால் இந்த ஒரு முழு வருடத்தை நான்கு காலாண்டுகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.ஒவ்வொரு காலாண்டுமே ஒரு முழுமையான பீரியடாக உருவகித்துக் கொள்ளுங்கள்.
முதல் காலாண்டு:ஜனவரி முதல் மார்ச் வரை.
இதை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு முதல் பாதியாகிய ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை ஆகாத காலம் என்பதால் அப்போது பங்குகள் எதையூம் வாங்காமல் பிப்ரவரி 15க்கு பிறகு வாங்கும் பங்குகளை மார்ச் 31ம் தேதிக்குள் விற்று லாபத்துடன் பணமாக்கலாம்.இதே போலவே அடுத்தடுத்த காலாண்டுகளிலும் செய்யலாம்.
இதற்கும் பொறுமை இல்லை என்றால் ஒரு மாதத்தையே இரண்டாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு மாதமும் முதல் பாதியில்(1 முதல் 15ம் தேதிவரை) ஆகாத காலம் என்று வரையறுத்துக் கொண்டு இரண்டாம் பாதியில்(16 முதல் 31 அல்லது 30 தேதி வரை) பங்குகளை வாங்கி இரண்டு வார இடைவெளியில் விற்று லாபத்துடன் பணமாக்கலாம்.
அப்படியானால் தினவணிகம் செய்யூம் இன்ட்ரா டே டிரேடர்கள் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம்.
ஒரு நாளை இரண்டாகப் பிரியூங்கள்.
காலையில் என்ன செய்தாலும் நஷ்டம் வரும்.அதனால் காலையில் சந்தையை சும்மா கவனித்திருந்து விட்டு மதியத்திற்குமேல் பங்குகளை வாங்கி-விற்றௌ அல்லது விற்று-வாங்கியோ இன்ட்ரா டே டிரேடிங் செய்யலாம்.
இதில் ஒரு மாற்றி யோசி டெக்னிக்கையூம் கடைபிடிக்கலாம்.காலையில் டிரேடிங் செய்தால் நஷ்டம் வருமல்லவா?அதனால் நீங்களே ஒரு நஷ்டத்தை காலையில் வலியப்போய் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
உதாரணமாக xvz பங்குகள் ரூ 185 என்ற விலையில் 100 பங்குகளை வாங்கி விற்க விரும்பினால் அதன் முதலீட்டுத் தொகை மொத்தம் ரூ 18500 ஆகிறது.இந்த தொகையை காலையில் பயன்படுத்தினால் பெரிய நஷ்டம் வரும்.அதனால் காலையில் xyzன் ஒரே ஒரு பங்கை மட்டும் வாங்குங்கள்.முதலீட்டுத் தொகை ரூ 185.இந்த ஒரே ஒரு ரூ 180க்கு நீங்களாகவே வலியச் சென்று விற்று விடுங்கள்.இப்படி செய்வதால் உங்களுக்கு நீங்களே ஏற்படுத்திக்கொள்ளும் நஷ்டம் வெறும் ஐந்து ரூபாய்.இங்கே காலை நேரத்தில் (9.30 மணி முதல் 12.30 மணிவரை) நீசபங்கத்தை அனுபவித்து விடுகிறீர்கள்.அதன் அதே xyz பங்கை மதிய நேரத்தில் (12.30 மணிக்கு மேல் 3.30 மணிக்குள்) 50 அல்லது 100 அல்லது 500 அல்லது அதற்கும் மேற்பட்ட எந்த எண்ணிக்கையிலும் டிரேடிங் செய்து பாருங்கள் லாபம் வரும்.
ஆக எந்த கம்பெனி பங்கை டிரேடிங்கில் பயன்படுத்தப் போகிறீர்களோ அந்த கம்பெனி பங்கில் ஒரே ஒரு பங்கை மட்டும்(ஒரே ஒரு எண்ணிக்கையில் மட்டும்) காலையில் வலுவில் சென்று நஷ்டமடைந்து விட்டு மதியத்திற்கு மேல் நீசம் பங்கமாகி அதன்பின் ராஜயோகம் வந்து விடுவதால் லாபத்தை அனுபவிப்பீர்கள்.
ConversionConversion EmoticonEmoticon