நமது தளத்தில் அவ்வப்போது சில முதலீட்டு ஐடியாக்களை எழுதுவதுண்டு.அவற்றை பேஸ்புக்கிலும் பதிவதுண்டு.சில நாட்களாக பேஸ்புக்கில் பதிவூகள் எதுவூம் போட இயலாதபடி வேலைபளு அதிகமாக இருந்து வந்தது.நமது தளத்தின் வாசகரும் வாடிக்கையாளரும் நம் மீது மிகுந்த அன்பு கொண்டவருமான ஒருவர் இன்று பேஸ்புக்கில் பதிவூகள் ஏதும் போடவில்லையே என்று கேட்டிருந்தார்.அதனால்தான் இந்த முதலீட்டுப் பதிவூ.
டிவியைப்போட்டாலே இப்போதெல்லாம் முன்னாள் கதாநாயகிகள் வந்து தங்கத்தை விற்று பணமாக்குங்கள் என்பது போன்ற ஹூக்கர் விளம்பரங்களை தந்து வருவதைப் பார்க்கும்போதுதான் இந்த தங்கமான ஐடியா இதோ உங்களுக்காக.
இது நடந்த கதையூம் கூட.
லாக்கரில் சும்மா உறங்கிக் கொண்டிருக்கும் தங்கத்தை(இப்போதுதான் லாக்கரிலும் கை வைத்து விடுகிறார்களே என்பதால்) வெளியே எடுங்கள்.அதனை அதே வங்கியிலேயே அடமானமாக வைத்து பணத்தை முதலீட்டிற்கு கொண்டு செல்லுங்கள்.
உதாரணமாக உங்களது தங்க நகையை அடமானமாக வங்கியில் வைத்து ஒரு லட்ச ரூபாய் பெறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.அதனை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்.ஒரே ஒரு நிபந்தனை அந்த பணத்திற்கு ஏதாவது ஒரு தங்கநகைப் பங்கைத்தான்(பார்த்து கவனம்.கீதாஞ்சலி ஜெம்ஸ் போல எதிலாவது மாட்டிக் கொள்ள வேண்டாம்) வாங்க வேண்டும்.
நமது வாடிக்கையாளர் இதே போல ஒரு லட்ச ரூபாய்க்கு மூன்று வருடத்திற்கு முன்பாக தங்கமயில் ஜூவல்லரி பங்கை ஒரு பங்கின் விலை சுமார் ரூ 180க்கு வாங்குகிறார்.ஒரு லட்ச ரூபாய்க்கு 555 பங்குகள்(இது நமது பிரியத்திற்குரிய எண்.அதாவது 55 என்பது சீரடிசாய்பாபாவின் எண்.எப்படி இஸ்லாமியர் 786 என்பதைப் புனிதமான எண்ணாகக் கருதுகிறார்களோ அது போல நாம் 5555 என்பதை அன்புடன் நேசத்ததுடன் ஆராதிப்பது வழக்கம்.அதனால்தான் நமது ஆஃபர் கட்டணங்கள் அனைத்தும் 5555 என்பதாகவே இருக்கும்)
இதனை ஒரு உதாரணமாக வைத்துக் கொள்வோம்.
ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கிய நகைக்கடனுக்கான வட்டி விகிதம் ஓர் ஆண்டிற்கு சுமார் 11.50 சதவீதமாக வைத்துக் கொள்வோம்.இது ஒரு வருடத்திற்கு ரூ 11500 ஆக இருக்கும்.இதனை 12ஆல் வகுத்தால் ஒரு மாதத்திற்கான வட்டி ரூ 958.33 அதாவது ரூ 960 ஆக வைத்துக் கொள்வோம்.இப்போது கைக்காசைப் பயன்படுத்தி மாதாமாதம் ரூ 960ஐ நகைக்கடனுக்கு செலுத்தி வருவதோடு ஓர் ஆண்டு முடிவதற்குள்(இதற்கு கிடைக்கும் 3 சதவீத சலுகையை இங்கே சேர்த்துக் கொள்ளவில்லை) நகைக்கடனை திருப்பி அதே வங்கியில் மறுஅடகு வைத்து மாதாமாதம் அதே போல வட்டியைக் கட்டிக் கொண்டே வர வேண்டும்.
இது போல ஒரு வருடம் வரைக்கும் செய்யலாம்.அல்லது இரண்டு மூன்று வருடம் வரைக்கும் கூட செய்யலாம்.
உதாரணத்தல் சொன்ன நமது வாடிக்கையாளர் அந்த ரூ 180க்கு வாங்கிய 555 தங்கமயில் பங்கை மூன்று வருடம் கழித்து நேற்று விற்கிறார்.அவர் விற்கும்போது அதன் விலை ரூ 545 ஆக இருக்கிறது.
இப்போது 555 பங்குகளை விற்ற வகையில் ரூ 3.0275 லட்சமாக உயர்ந்திருக்கிறது.அதாவது முதலீடாகப்போட்ட ஒரு லட்சம் இப்போது மூன்று லட்சமாக உயர்ந்திருக்கிறது.
இப்போது லாபநஷ்டக்கணக்கிற்கு வரலாம்.
1.நகைக்கடனுக்கு 36 மாதங்களுக்கு ரூ 960 வட்டி கட்டிய வகையில்: ரூ 34560 ஆகிறது.
2.வருடத்திற்கு ஒரு தரம் நகைக்கடனுக்கு வங்கியில் மதிப்பீட்டாளர் கட்டணம் ரூ 500 என்ற வகையில் மூன்று தரம் செலுத்திய வகையில்:ரூ 1500 ஆகிறது.
3. லாபமாக வந்திருக்கும் தொகை இரண்டு லட்ச ரூபாய்க்கு 10 சதவீத வரியாக வந்த வகையில்:ரூ 20000 ஆகிறது.
4.இப்போது நிகர லாபமான சுமார் இரண்டு லட்சத்தில் கழிவூகளைத் கழித்து விட்டால் நிகர லாபமாக ரூ 1.439 லட்ச ரூபாய் கிடைக்கிறது.
இப்போது நகைக்கடனை அடைத்து மறுபடி நகையை அன்புடன் லாக்கருக்கு அழைத்து வந்து விடலாம்.நகைலாக்கரிலிருந்து அடமானமாகச் சென்றதில் ஒரு லட்ச ரூபாய் இன்னொரு 1.439 லட்ச ரூபாயை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.
ஈக்விட்டியில் முதலீட்டை எப்படி மேற்கொள்வது.எந்த பங்கை எப்படி எப்போது வாங்குவது என்ற ஆலோசனையை டிரேடிங் டிப்ஸூடன் ஒரு வருட காலத்திற்கு நீங்கள் பெற விரும்பினால் அதற்கான கட்டணமாக ரூ 15555 மட்டும் செலுத்தினால் போதுமானது.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Click here to remit subscription by ATM card or IMPS or NEFT or 12 months EMI byCredit card
ConversionConversion EmoticonEmoticon