பணம் எப்படி வளரும்.ஒரு தொழிலில் ஒரு வியாபாரத்தில் முதலீடாகப் போடப்படும் பணம் வேண்டுமானால் பிறகொரு காலத்தில் மெல்ல மெல்ல படிப்படியாக பல்வேறு தடைகளைச் சந்தித்து வியாபாரமோ தொழிலோ வளரும்போது தானும் சேர்ந்து வளரும்.வெறும் சட்டைப் பையிலோ அல்லது பான்ட் பாக்கெட்டிலோ வைத்திருக்கிற பணம் எப்படி வளரும்.
வளரும் என்பதுதான் எனது கண்டுபிடிப்பு.
சட்டைப்பையில் வைத்திருக்கிற பணம் வளருமா என்பதை தெரிந்து கொள்வதற்குள் சட்டைப்பையில் வைத்திருக்கிற பணம் எப்படி இருக்க வேண்டுமென்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு பத்திரிக்கையாளரும் கட்டுரையாசிரியருமான ஒரு அன்பர் அவரது இளவயதில் ஒரு பிரபலமான பத்திரிகையில் ஆசிரியரானார்.இவரிடம் ஒரு வினோதமான பழக்கம் இருப்பதை அறிந்திருக்கிறேன்.அப்போதெல்லாம் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த காலம்.இவர் என்ன செய்வார் தெரியூமா? பின்வருமாறு புத்தம் புதிய சலவை நோட்டுக்களை பின்வருமாறு எடுத்துக் கொள்வார்.
ஒரு ரூபாய் நோட்டு
இரண்டு ரூபாய் நோட்டு
ஐந்து ரூபாய் நோட்டு
பத்து ரூபாய் நோட்டு
இருபது ரூபாய் நோட்டு
ஐம்பது ரூபாய் நோட்டு
நுரறு ரூபாய் நோட்டு
ஐநுரறு ரூபாய் நோட்டு
ஆயிரம் ரூபாய் நோட்டு
மேற்கண்ட ரூபாய் நோட்டுகள் ஒவ்வொன்றிலும் ஒரு நோட்டு என்ற கணக்கில் இவற்றை தனது பர்ஸில் தினமும் காலையில் எடுத்து வைத்துக் கொண்டு அலுவலகத்திற்குப் புறப்படுவார்.அதன்பின் அவர் அன்றைய தினம் அவர் எங்கே சென்றாலும் அந்த ரூபாய் நோட்டுகள் அவரது பர்ஸில் பத்திரமாக இருக்கும்.ஏனென்றால் இவர் அந்த ரூபாய் நோட்டுக்களை செலவே செய்ய மாட்டார்.பத்திரமாக வைத்துக் கொள்வதோடு சரி.
இப்படி ரூபாய் நோட்டுக்களை ரகத்திற்கு ஒன்றாக எடுத்து பர்ஸில் வைத்துக் கொள்வது புத்துணர்ச்சியூம் தன்னம்பிக்கையூம் தருகிறது என்று அவரை சந்திக்கும்போதெல்லாம் சொல்வார்.
இதுவரை சரிதான்.
முப்பது வருடங்களுக்கும் மேலாக அவரை நான் அறிவேன்.சில சமயங்களில் நேரிலும் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.அதற்கு மேல் பழக்கமில்லை.ஆனால் இந்த முப்பது வருடத்தில் அவரது வளர்ச்சி அதாவது பணரீதியிலான வளர்ச்சி மிக மிக பிரம்மாண்டமானதான இருந்திருக்க வேண்டும்.ஒரு பத்திரிகையில் அவர் ஆசிரியாக இருந்திருக்கிறார் என்றால் அதன் அடுத்த கட்டமாக நாலைந்து பத்திரிகைகளை அவர் தொடங்கியிருந்திருக்க வேண்டும்.நாலைந்து டிவி சானல்களை அவர் தொடங்கியிருந்திருக்க வேண்டும்.நாட்டின் மிக உயர்ந்த பணக்காரர்களின் பட்டியலில் அவரது பெயர் வந்திருக்க வேண்டும்.
ஆனால் வரவில்லை.
ஓய்வூ பெற்று விட்டார்.அவர் எழுத்து ஓய்வூபெறவில்லை.அருமையான கட்டுரைகளை இன்னமும் எழுதிக் கொண்டிருக்கும் அவர் மிகப்பெரிய அளவில் வராமல் போனதற்கு காரணமாக நான் கருதுவது அவர் எப்போதும் ஒரே அளவிலான பணத்தை அதாவது அவர் வைத்துக் கொண்டிருக்கிற பணத்தின் மொத்த அளவூ அதாவது மொத்தப்பணத்தின் மதிப்பு எப்போதும் கூடவோ குறையவோ செய்யாமல் ஒரே அளவாக இருந்து விட்டது.
அதாவது அவரிடம் அவரது பர்ஸில் உள்ள பணம் பூரிதமடைந்து(saturated) விட்டது.அவரிடம் உள்ள பணம் வளராமல் அப்படியே நின்று விட்டது.வளர்ச்சி என்பது அங்Nகு சங்கித்தொடராக தொடர்வினையாக நடைபெறவில்லை.எனவேதான் இதிலிருந்து மாறுபட்டு நான் இந்த "பணமேஜிக்கை" கண்டுபிடித்திருக்கிறேன்.இந்த அன்பர் செய்தது போன்ற செயல்தான்.இதனை நான் சற்று ட்ரிக்கர் செய்திருக்கிறேன்.அதனால் இது சட்டென்று பலன் தரக் கூடிய மாஜிக்காக மாறிவிட்டது.
நீங்கள் இது போல ஒவ்வொரு நோட்டிலும் ஒரு நோட்டாக எடுத்து வைக்க வேண்டுமென்று அவசியமில்லை.சின்னதாக ஒரு பர்ஸை புதிதாக வாங்கிக் கொள்ளுங்கள்.அந்த பர்ஸினுள் முதல் நாள் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்துப் போட்டு உங்கள் பான்ட் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.அதனை செலவிட வேண்டாம்.அது பாட்டுக்கு உங்களிடம் இருக்கட்டும்.இதனை நேரம் கிடைக்கிற போதெல்லாம் திறந்து பாருங்கள்.முடிந்தால் அதனை லேசாக தடவிக் கொடுங்கள்.
பாண்டிச்சேரி அரவிந்தஅன்னை ஒருமுறை சொல்லியிருக்கிறார்.வியாபாரத்தில் இருப்பவர்கள் அவர்களிடம் உள்ள பொருட்கள் விற்பனையாகாமல் தேங்கியிருந்தால் அந்த பொருட்களை பரிவோடு தடவிக் கொடுத்தால் அவை உடனே விற்பனையாகி விடுமென்று.அதாவது எந்தப் பொருளுக்கும் இந்த பிரபஞ்சத்தில் உணர்வூகள் உண்டு என்பதுதான் இதன் பொருள்.
அதனால்தான் சொல்கிறேன்.உங்கள் பர்ஸில் உள்ள பணத்தை பரிவோடு தடவிக்கொடுங்கள்.முதல் நாள் ஒரு ரூபாய்.மறுநாள் கூடுதலாக இன்னொரு ரூபாய் என்று ஒவ்வொரு நாளும் ஒரு ரூபாய் வீதம் அதிகரித்துக் கொண்டே இருங்கள்.பத்து நாட்கள் ஆனதும் ஒரு பத்து ரூபாய் நோட்டை வைத்து விட்டு அந்த பத்து நாணயங்களை வெளியில் எடுத்து விடுங்கள்.மறுநாள் பத்து இருக்கிறதல்லவா அத்துடன் மறுபடி ஒவ்வொரு நாளும் ஒரு ரூபாய் என்று உள்ளே வைப்பது தொடரட்டும்.
எதற்கா பத்து நாணயங்களை எடுத்து விட்டு அதற்கு பதிலாக பத்து ரூபாய் வைக்கச் சொல்கிறேன் என்றால் வெறும் நாணயங்களாகச் சேர்ந்து கொண்டே வந்தால் பர்ஸின் கனம் அதிகமாகி அதுவே ஒரு சுமையாகி விடும்.இது போல இருபது ரூபாய் ஐம்பது ரூபாய் என்று மாற்றிக் கொண்டே வாருங்கள்.நுரறு ரூபாய் சேர்ந்ததும் அவற்றை எடுத்து விட்டு ஒரு நுரறு ரூபாய் நோட்டாக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.ஐநுரறு ரூபாய் சேர்ந்ததும் அவற்றை ஒரு ஐநுரறு ரூபாய் நோட்டாக மாற்றி விடுங்கள்.அப்புறம் ஆயிரம் ரூபாய் சேர்ந்ததும் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டாக மாற்றி விடுங்கள்.
இப்படியே போய்க்கொண்டே இருக்கட்டும்.
பத்தாயிரம் ரூபாய் சேர்ந்ததும் என்று நீங்கள் கேட்க விரும்புகிறீர்களா?
தேவையில்லை.
அதற்குள் உங்களிடம் உள்ள 'பணசக்தி" வளர்ந்திருக்கும்.
ஒவ்வொரு ரூபாயாக உங்களிடம் உள்ள பணம் வளர்வதை அதாவது நீங்கள் உங்கள் பர்ஸில் உள்ள மனத்தை தினமும் எடுத்து கண்களால் நீங்கள் பார்க்கும்போதே உங்களது உள் மனமும் ஆழ்மனமும் அதை பார்த்துக் கொண்டே இருப்பதால் 'இங்கே பணம் வளர்கிறது'என்று உங்கள் மனம் நம்பத்தொடங்கி விடும்.
இதன் பக்கவிளைவால் உங்களிடம் உள்ள மற்ற பணம் அனைத்தும் வளரத் தொடங்குவதோடு நீங்களும் ஒரு உன்னதமான பணஉலகிற்குள் அடியெடுத்து வைக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
செய்து பாருங்கள்.அப்போதுதான் புரியூம்.
ConversionConversion EmoticonEmoticon