நேற்றய சந்தை அடித்து துவைத்து காயப்போட்ட மாதிரி தடவிக்கொண்டே இருந்து கொண்டிருந்து விட்டு அப்புறம் முடியூம் நேரத்திற்கு முன்னதாக ஒரு சிலுப்பு சிலுப்பிக்கொண்டு எழுந்ததே பார்த்தீர்களா?
காரணம் நமது பெரியண்ணன் அமெரிக்காவில் சந்தை துவங்கியதும் விர்ரென்று அங்கே டவ் நாஸ்டாக்கில் ஏற்பட்ட ஏற்றம்தான் இங்கே இப்படி கில்லியடித்தது.
அதென்ன 5..5..5..
சொல்கிறேன்.
சந்தை எப்படி இருக்கிறது.நிஃப்டி ஆண்டவர் எப்படி இருக்கிறார் சென்செக்ஸ் மச்சான் எப்படி இருக்கிறான் என்று எதையூமே பார்க்காமல் எந்த சார்ட்டையூம் எட்டிப் பார்க்காமல் டிரேடிங் செய்வது எப்படி என்று ஒரு முறை எனது பங்குச் சந்தை பயிலரங்கத்தில் ஒருத்தர் கேட்டார்.
இப்படி கேட்டால் கோபம்தானே வரவேண்டும்.
அதற்கும் ஒரு ஸ்ட்ராட்டஜி(strategy) சொல்லிக்கொடுத்தேன்.ஆனால் இந்த உத்தியை கையாள்வதற்கு கொஞ்சம் 'முரட்டுத்தனமாக குருட்டுத்தனமும் புத்திசாலித்தனமான அசட்டுத்தனமும்" தாஸ்தனமாக அவசியம் தேவை.
முதல் ஐந்து.
என்எஸ்சி(NSE) பங்குகள் இதற்கு தோதுப்படாது.பிஎஸ்சியில்(BSE) உள்ள பென்னிக்குட்டிகளில்(penny stocks) ஏதாவது நல்ல குட்டிகளை ச்சே..குட்டியான பங்குகளை தேர்வூ செய்து கொள்ளுங்கள்.அதன் விலை ஐந்து ரூபாய்க்குள்தான் இருக்க வேண்டும்.
முதல் ஐந்து என்பது அதன் விலை.அது ஐந்து ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
இரண்டாவது ஐந்து.
ஒரு நாளில் அதாவது இன்ட்ரா டேயில் அந்த பங்கு சுமார் பத்து பைசா வரைக்கும்தான் ஏறி இறங்க வேண்டும்.அந்த பத்து பைசாவில் நாம் கிட்நாப் செய்யப்போவது(ச்சே.இனி அட்டு தமிழ் படங்களைப் பார்க்கப்போவதில்லை என்று தீபிகாபடுகோன் மீது சத்தியம் செய்யப்போகிறேன்!) அதாவது சுருட்டப்போவது ஐந்து பைசா மட்டுமே.
அதாவது இரண்டாவது ஐந்து பைசா என்பது நமது லாபத்தொகையான ஐந்து பைசா என்றறிக.
மூன்றாவது ஐந்து.
நாம் அந்த நிறுவனப்பங்கில் ஐந்தாயிரம் ஷேர்களை இன்ட்ரா டேயில் வாங்கி விற்றௌ அல்லது விற்று வாங்கியோ துவம்சம் (Long or short) செய்யப்போகிறௌம்.
ஆக மூன்றாவது ஐந்து என்பது பங்குகளின் எண்ணிக்கை.அதாவது 5ஆயிரம்.
இப்போது கணக்கு போடுங்கள் பார்ப்போம்.
லாங் போனாலோ ஷார்ட் அடித்தாலோ 5x5000- ரூ25000 /-என்பது முதலீட்டுத் தொகை.பங்குச் சந்தை ஆபீசிற்கு சென்றால் பேக்ஆபீஸ் பெண்களிடம் உட்கார்ந்து பேசி கரெக்ட் செய்து ரூ25000/-க்கு எக்ஸ்போஷர் வாங்கிக்கொள்ளுங்கள்.பொதுவாக மும்பை பென்னி ஸ்டாக்கிற்கு எக்ஸ்போஷர் தரமாட்டார்கள்.ஆனால் இப்போது ஷேர் ஆபீஸ்கள் எல்லாம் காற்றாடிக்கொண்டிருப்பதால் கறாக பேசிவிட்டு தருவார்கள்.
ஐந்தாயிரம் ரூபாயை உங்களது முதலீடாகப் போட்டு விட்டு டிரேட் செய்யூங்கள்.
இதில் சொல்லாத இன்னொரு ஐந்து இருக்கிறது.ஒரு டிரேடிங்கை ஐந்தே நிமிடத்தில் முடித்துக்கொண்டு வெளியே வந்து விட வேண்டுமென்பதுதான் அது.அதற்குள் டார்கெட் எட்டாவிட்டால் கட்செய்து வெளியே வந்து வேறு பங்கில் நுழையூங்கள்.
அப்படியானால் புரோக்கரேஜ்? இம்மாதிரி டிரேடிங்கிற்கெல்லாம் புரோக்கரேஜ் கொடுத்தால் கட்டுப்படியாகாது.மாதாமாதம் குறிப்பிட்ட தொகை கட்டி விட்டால் புரோக்கரேஜ் இல்லாமல் டிரேடு செய்ய அனுமதிப்பார்கள்.அது மாதிரி ஏதாவது டகல்பாஜி ப்ளானுக்கு மாறி விடுங்கள்.
சரி நமது லாபம் எவ்வளவூ?
0.05x 5000=ரூ 250
இது போல ஒரு நாளைக்கு பத்து முறை ஒன்றன்பின் ஒன்றாக டிரேடு செய்யூங்கள்.
நிகர லாபமாக ரூ 2500 கிடைக்கும்.ஒரு மாதத்திற்கு 20 நாட்கள் என்றால் மாதம் அரைலட்சரூபாய் கிடைக்கும்.எவ்வளது முதலீடு செய்திருக்கிறீர்கள்.
ரூபாய் ஐந்தாயிரம் முதலீடு செய்து மாதம் ஐம்பதாயிரம் என்றால் சற்று சூப்பராக இருக்கிறதென்று தோன்றுகிறதுதானே?
நஷ்டம் வந்தால்?
ஸ்டாப்லாஸ் ட்ரிக்கர் ஆகி விட்டால்?
அதிர்ஷ்டம் இல்லாது போய் விட்டால்?
ஏற்கனவே ஏஞ்சலினா ஜூலி செய்து வைத்திருக்கிற காரியத்திற்கு அவனவன் அழுது கொண்டிருக்கிறான்.இப்போது போய் இப்படி நெகட்டிவ்வாகக் கேட்டால்?
அதற்கும் பதில் இருக்கிறது.டிரேடிங்கின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுங்கள்.நிகரலாபமாக சராசரியாக பத்து டிரேடிங்கில் எல்லா கழிவூம் போக ஒரு நாளைக்கு ரூ2500/- கிடைக்கிற மாதிரி வொர்க்கிங் ஸ்டைலை மாற்றிக்கொள்ளுங்கள்.அப்புறம் பேக் ஆபீஸ்(back office) பெண்கள் உங்களை அருகில் அழைத்து உட்கார வைத்துக் கொண்டு தங்கள் கைவிரல் நகத்தைப் பார்த்தபடியே பேசிக்கொண்டிருக்க ஆரம்பித்து விடுவார்கள்.
-டி.ஏ.விஜய்,M.E.,(Ph.D)
National Stock Exchange of India certified Trainer
NSE certified Market Professional
ConversionConversion EmoticonEmoticon