இந்த தலைப்பை இன்னொரு முறை வாசித்துப் பாருங்கள்.இது ஏதோ ஏமாற்று வேலை போல தோன்றுகிறதா?அதெப்படி முடியூம்.கையில் இருபதாயிரம் ரூபாய் இருந்தால் அதை இருபத்தோராயிரமாக வேண்டுமானால் மாற்றலாம்.ஆனால் அதை இரட்டிப்பாக மாற்றுவதென்றால் இது ஏதும் மோடி மஸ்தான் வேலையா என்றெல்லாம் சந்தேகம் வருகிறதா?
இதில் ஏமாற்றுத்தனம் ஏதுமில்லை.
ஆப்ஷன் டிரேடிங்கில்தான்(Option trading) இது போல செய்வது சாத்தியம்.அதிலும் குறைந்த அளவூ முதலீடு போதும்.
இது சாத்தியம் என்று சொல்லும்போதே இன்னொன்றையூம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இருபதாயிரம் ரூபாயை முதலீடு செய்யப்போவதில்லை.இருபதாயிரம் ரூபாயை பணயம்தான் வைக்கப் போகிறௌம்.அதனால் வந்தால் நாற்பதாயிரம்.போனால் இருபதாயிரமும் போச்சு என்பதுதான் இதிலுள்ள சவால்.
ஆப்ஷன் டிரேடிங் என்பதே ஊக வணிகத்தின் சூதாட்ட முறையிலான டிரேடிங்தான்.ஒரு நிறுவனத்தின் பங்கை லாட் கணக்கில் ஃப்யூச்சரில்(Futures.Derivatives trading) வாங்குவதற்கு அதிக அளவூ பணம் தேவைப்படும்.ரிஸ்க்கும் அதிகம்.வாங்கியபின்னர் விலை குறைந்து போனால் தினமும் எம்டுஎம் கட்டிக்கொண்டிருக்க வேண்டியிருக்கும்.ஆனால் ஆப்ஷனில் எம்டுஎம்(MtoM:Mark to market) கிடையாது.முதலில் கட்டுகிற பிரியமியம்தான்(Premium) நமது முதலீட்டுத் தொகை.ஒரே ஒரு மிகப்பெரிய ரிஸ்க் நாம் சரியான திசையில் இருக்க வேண்டும்.திசை மாறிப்போய் விட்டதென்றால் முதலீடு அரிக்கப்பட்டு(Capital erosion) விடும்.கடைசியில் கான்ட்ராக்ட் முடியூம்போது ரோல்ஓவர்(Rollover) செய்ய இயலாது.அதனால் ஆப்ஷன் டிரேடிங்கை பொறுத்தவரை அன்றைய தினமே கணக்கு முடித்துக் கொள்வது நல்லது.நன்றாக டிரேடிங் தெரிந்திருந்தால் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் தாக்குப் பிடிக்கலாம்.
ஒரு உதாரணம் சொல்கிறேன் பாருங்கள்.இது நமது இணையதளத்தில் கொடுத்திருந்த இலவச டிப்ஸிலிருந்தே உதாரணம்(நாம் வாங்கச் சொன்ன விலை:ரூ 30/-for 700 CALL) காட்டுகிறேன்.
ஆப்ஷனின்(720 Call option) இதன் லாட் அளவூ:500
வாங்கிய விலையூம் தேதியூம்:ரூ 40 (25.04.2013)
பணயம் வைத்த முதலீடு: ரூ 40 x 500 = ரூ 20,000
விற்றிருந்திருக்க வேண்டிய விலையூம் தேதியூம்: ரூ 80 (09.05.2013)
கிடைத்திருந்த விற்றுவிலை: ரூ 80 x 500 = ரூ 40,000
கிடைத்திருக்கக் கூடிய லாபம்: ரூ 20,000
Date | Open | High | Low | Close | Settle Price | Contracts | Turnover (in lacs) | OI |
---|---|---|---|---|---|---|---|---|
0.00 | 0.00 | 0.00 | 75.70 | 79.00 | 0 | 0.00 | 21500 | |
0.00 | 0.00 | 0.00 | 75.70 | 81.80 | 0 | 0.00 | 21500 | |
74.90 | 80.50 | 74.90 | 75.70 | 75.70 | 6 | 23.30 | 21500 | |
60.25 | 60.25 | 58.65 | 58.65 | 58.65 | 2 | 7.59 | 22000 | |
54.00 | 59.90 | 50.00 | 59.45 | 59.45 | 7 | 26.42 | 23000 | |
65.00 | 65.00 | 56.00 | 57.00 | 57.00 | 5 | 18.96 | 25000 | |
58.00 | 58.00 | 49.05 | 53.85 | 53.85 | 27 | 101.78 | 26000 | |
37.05 | 45.50 | 34.00 | 43.50 | 43.50 | 60 | 222.24 | 29000 | |
27.05 | 36.85 | 27.05 | 35.30 | 35.30 | 172 | 629.08 | 45000 | |
16.50 | 28.50 | 16.00 | 26.85 | 26.85 | 389 | 1410.59 | 73000 | |
29.05 | 30.50 | 18.50 | 20.25 | 20.25 | 285 | 1030.14 | 84500 | |
40.00 | 40.00 | 40.00 | 40.00 | 40.00 | 4 | 14.80 | 2000 | |
அதாவது ரூபாய் இருபதாயிரம் பத்தே நாட்களில் இங்கே இரட்டிப்பாகி விட்டிருக்கிறது.இது போல் எப்போதும் நடக்குமா?எல்லா பங்குகளிலும் நடக்குமா என்றால் உறுதியான பதில் சொல்ல இயலாது.சந்தையை கூர்ந்து கவனித்து வரவேண்டும்.குறிப்பிட்ட ஒரு பங்கில் மட்டும் திரும்பத் திரும்ப டிரேடிங் செய்து அந்த பங்கின் விலை உயர்வூ தாழ்வூ ரகசியத்தை கற்றறிந்து கொள்ள வேண்டும்.அப்படி செய்தால்தான் ஆப்ஷன் டிரேடிங்கில் லாபம் பார்க்க முடியூம்.லாபம் என்றால் சும்மா இல்லை.
கொள்ளை லாபம் பார்க்க முடியூம்.
இதையே ஆப்ஷனில் செய்யாமல் ஃப்யூச்சரில் செய்திருந்தால் எவ்வளவூ முதலீடு தேவைப்பட்டிருக்கும் என்று பாருங்கள்.
லாட் அளவூ:அதே 500
எனவே முதலீட்டுத் தொகை:ரூ736 x 500 = ரூ 3,68,000
அதாவது ரூபாய் 3.68 லட்சம்.இவ்வளவூ தொகை எக்சேஞ்சில் கேட்க மாட்டார்கள்.இதற்கு மார்ஜின் தொகையாக 15.72% கேட்பார்கள். அதாவது 57,849 என்ற தொகையை நாம் கட்டினால்தான் ஃப்யூச்சரில்(futures) இந்த பங்கை வாங்க முடியூம்.சுமாராக அறுபதாயிரம் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் என்ன செய்கிறௌம்.ஆப்ஷன் டிரேடிங்கில் வெறும் இருபதாயிரத்தை கொடுத்து விட்டு இந்த பங்கின் கால் ஆப்ஷனை வாங்கிக் கொண்டு விடுகிறௌம்.பத்து நாட்களில் இது (அதன் பங்கு விலை கேஷ் மார்க்கெட் மற்றும் ஃப்யூச்சரில் ஏறியதால் இதன் பிரிமியமும் ஏறிக்கொண்டே இருக்க) வாங்கியதை விற்று விட்டு கணக்கை நேர் செய்து கொண்ட வகையில் சுளையாக பணம் இரட்டிப்பாகி விடுகிறது.
இது போன்ற டெக்னிக்குகளை அறிய நமது இணையதளத்தை அவ்வப்போது பார்வையிட்டுக் கொண்டு வாருங்கள்.விரும்பினால் நமது ஆன்லைன் பயிற்சி வகுப்பிலும் சேர்ந்து பயன்பெறுங்கள்.
-டி.ஏ.விஜய்,M.E.(Ph.D)
National Stock Exchange of India certified Trainer
NSE certified Market Professional
ConversionConversion EmoticonEmoticon