"பெட்டியைப் பயன்படுத்துங்கள்"
அண்மையில் செய்தித்தாளில் வந்த அந்த செய்தியை நீங்களும் வாசித்திருந்திருப்பீர்கள்.ஒரு தொழிலதிபர் தன்னிடமிருந்த கோடிக்கணக்கான பணத்தை சாக்கு மூட்டைகளில் கட்டி குடோனில் வைத்திருந்தார் என்பதுதான் அந்த செய்தி.இதில் நமக்கான செய்தி என்னவென்றால் பணம் என்பதை அந்த தொழிலதிபர் அவரது சேஃப்டி லாக்கரில் வைத்தது போக இன்னமும் பணம் ஏராளமாக இருந்திருக்கிறது.அந்த பணத்தை அவர் பாதுகாப்பான இடங்களில் எல்லாம் வைத்தது போக மீதம் ஏராளமாக பணம் இருந்திருக்கிறது.மேலும் பணம் இருந்து கொண்டே இருந்ததால் அதனை அவர் சாக்கு மூட்டைகளில் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்.
இதில் இரண்டு சேதிகள் இருக்கிறது.
ஒன்று: பணம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவிற்குதான் சேரவேண்டுமென்பதில்லை.ஏராளமாக எண்ணற்ற எண்ணிக்கையில் பணத்தை மூட்டை மூட்டையாக சம்பாதிக்க முடியூம்.உங்களாலும் முடியூம் என்பதுதான் நான் உங்களுக்கு சொல்ல நினைக்கும் உப சேதி.
இரண்டு:பணத்தை வைப்பதற்கு ஒரு பணப்பெட்டி என்ற ஒன்று அவசியம் இருந்தாக வேண்டும்.அந்த பணப்பெட்டியை விடவூம் பெரிய அளவில் பணம் சேரும் போதுதான் சாக்குமூட்டை போன்ற இன்ன பிற சாதனங்கள் தேவைப்படுகின்றன.
இப்போது மெயின் விஷயத்திற்கு வருவோம்.
பணத்தைப் போட்டு வைப்பதற்கு உங்களிடம் பணப்பெட்டி இருக்கிறதா? அதாவது சாதாரண இரும்பு பீரோவில் உள்ள சேஃப்டி லாக்கர் கூட போதுமானதுதான்.இதைத்தான் பணப்பெட்டி என்கிறேன்.இது போன்ற ஒரு பணப்பெட்டியில் உங்களது பணத்தை வைக்கிறீர்களா அல்லது சட்டை பான்ட் பாக்கெட்டில் கப்போர்டில் மேசை மேல் டிவியின் அருகில் ஃப்ரிட்ஜின் மேல் என்று கண்ட கண்ட இடங்களில் வைத்து விடுகிறீர்களா?
அந்தக் காலத்து முதலாளிகள் எல்லாம் பணத்தை வைப்பதற்கென்றே வீட்டிலும் கடையிலும் இரும்பாலான திண்டுக்கல் பூட்டு போடப்பட்ட பணப்பெட்டியை வைத்திருப்பார்கள்.அதன் உள்ளே பட்டுத்துணியில் பணத்தை அடுக்கி வைத்திருப்பார்கள்.அந்த பணப்பெட்டிக்கு கற்பூர தீப ஆரத்தி காண்பித்து சாம்பிராணி போன்ற தீபதுரபமெல்லாம் போட்டு வணங்கி வருவார்கள்.அவர்களைப் பொறுத்தவரை பணம் என்பது பெரும் செல்வம்.அது கடவூளுக்குச் சமமானது.
இந்தக்காலத்தில் கிடைக்கிற தீப்பெட்டி சைஸ் அபார்ட்மன்ட்டில் இரும்பாலான லாக்கரை வாங்கி வைத்து அதிலுள்ள சொற்ப பணத்திற்கு தீபதுரபங்கள் எல்லாம் காட்ட ஆரம்பித்தால் அபார்ட்மன்ட் அசோசியேஷனில் காண்டாகி விடுவார்கள்.அதெல்லாம் வேண்டாம்.இன்னொரு புதிய முறையிலான பணத்தைப் பெருக்கும் முறையை இப்போது உங்களுக்காகச் சொல்லித் தருகிறேன்.
இது வெகு சுலபமான முறை.செய்வது மிக மிக எளிது.
அதை விட முக்கியமானது இது பைசா செலவில்லாத புதிய முறை.
என்ன இந்த புதிய முறையைப் பயன்படுத்தி பெரிய அளவிலான பணத்தை அதாவது மூட்டை மூட்டையாக ஒரு தொழிலதிபர் சாக்குமூட்டைகளில் போட்டு வைத்திருந்தாரே அதை விட அதிக அளவிலான பணத்தை சம்பாதிக்க சேர்த்து வைக்க நீங்கள் ரெடியா?பின்வரும் அந்த புதிய முறையை இன்றே செய்து பார்க்க ஆரம்பித்திருங்கள்.இதை செய்வதற்கு நாள் நட்சத்திரமெல்லாம் பார்க்க வேண்டாம்.உடனே செய்தால்தான் இது பலனளிக்கும்.அதாவது உங்களது சிந்தனையில் உதித்த ஒன்றை சிறிதளவூம் இடைவெளியின்றி உடனே செயல்வடிவமாக மாற்றி விட்டால் அந்த மைக்ரோ வினாடியில் எந்த நெகட்டிவ் எண்ணங்களும் வந்து சேர்ந்து கொள்ள வாய்ப்பில்லது போகும்.
இதே அந்த பணம் சேர்க்கும் புதிய முறை.
உங்களுக்கு இப்போது ஒரு அழகான பெரிய வடிவிலான மனதைக் கவரக்கூடிய ஒரு பணப்பெட்டி வேண்டும்.
இதை வைப்பதற்கு தக்கினியூண்டு அபார்ட்மன்ட் ப்ளாட்டில் இடம் இல்லையே என்று எண்ண வேண்டாம்.ஏனென்றால் இந்த புதிய பணப்பெட்டி என்பதே ஒரு கற்பனையில் உருவான பெட்டிதான்.
பணப்பெட்டி.
அதாவது மனதால் உருவான 'மனப்பெட்டி'
இந்த கற்பனையான மனப்பெட்டியில் நீங்கள் போடப்போகும் பணமும் கற்பனையான பணம்தான்.அதனால் எவ்வளவூ வேண்டுமானாலும் போடலாம்.4ஜி விளம்பரப் பெண் சொல்வது போல எல்லாமே இந்த மனப்பெட்டியில் அன்லிமிடட்தான்.அதனால் தாராளமாக இந்த மனப்பெட்டியில் பணத்தை போட்டுக் கொண்டே வாருங்கள்.
காலையில் எழுந்தரிக்கிறீர்கள்.
உடனே மனப்பெட்டியை திறந்து அதில் சில லட்சங்களை (ஏன் கோடிகளைக் கூட போடலாம்.அதெல்லாம் உங்களது மனோபாவத்தைப் பொறுத்தது) போட்டு விட்டு அடுத்த வேலையைப் பாருங்கள்.காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு எழுந்தரிக்கிறீர்கள்.உடனே மனப்பெட்டியைத் திறந்து சிறிதளவூ பணத்தைப் போடுங்கள்.போடப்படுவதெல்லாம் கற்பனையான பணம்தான் என்பதால் கவலையில்லாமல் போட்டுக் கொண்டே இருங்கள்.
எப்போதெல்லாம் முடியூமோ அப்போதெல்லாம் பணத்தை உங்களது மனப்பெட்டியில் போட்டுக் கொண்டே இருங்கள்.
தினந்தோறும் இது போல பணத்தை உங்களது மனப்பெட்டியில் போட்டுக் கொண்டே வர வர அந்த மனப்பெட்டியில் உள்ள பணத்தின் அளவூம் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக நம்புங்கள்.
உங்களது பணம் உங்களது மனப்பெட்டியில் வளர்ந்து கொண்டே இருப்பதை மனக்கண்ணால் பாருங்கள்.
சில காலம் கழித்து உங்களது நிஜமான பணப்பெட்டியிலும் பணம் வளர்ந்திருப்பதை காண்பீர்கள்.
ConversionConversion EmoticonEmoticon