"பணவிருப்பம்"
எதையாவது அடைய வேண்டுமென்றால் மிகவூம் தீவீரமான விருப்பம் அதாவது ஒரு பர்னிங் டிசையர் உங்கள் மனதில் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.இந்த 'தீவீரமான விருப்பம்" என்பது காலம் காலமாக பல நிபுணர்களாலும் ஆன்மிகவாதிகளாலும் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்திருக்கிறது.அப்படி தீவீரமான விருப்பம் என்கிற பர்னிங் டிசையர் இருந்தால் எந்த காரியமும் நடக்கும் என்றால் ஏன் இத்தனை நாளாக நீங்கள் விரும்பியது நடக்கவில்லை.உங்களை விடுங்கள்.உலகில் மற்றவர்கள் விரும்பியதும் நடக்கவில்லையே.வாழ்க்கை அது பாட்டுக்கு போய்க்கொண்டே இருக்கிறது.அதன் பின்னால் அல்லவா நீங்களும் எவ்வித குறிக்கோளும் இல்லாமல் இன்றைய பொழுதைக் கழித்தால் போதுமென்ற எண்ணத்துடன் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
வீட்டில் கூட நீங்கள் பார்க்கலாம்.
குழந்தைகள் யாரிடம் அதிகமாக விளையாட விரும்புகிறார்கள்.யாரிடம் வந்து ஒட்டிக் கொள்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.மிக தீவீரமாக அன்பு செலுத்தும் ஒருவரிடம் குழந்தைகள் போய் ஒட்டிக் கொள்வார்களா? மிக தீவீரமாக பிரியமாக இருக்கிறார் என்று ஒருவரைக் காட்டினால் அவரது முகபாவம் எப்படி இருக்கும்.கடுகடுவென்று இருக்குமல்லவா.அந்தக்காலத்து மிடில்கிளாஸ் அப்பாக்கள் இருப்பார்களே.வெள்ளை நிறத்தில் ஸ்லாக் சட்டை போட்டுக் கொண்டு காக்கி அல்லது கருப்பு நிறத்தில் பான்ட் போட்டுக் கொண்டு இதைச் செய்யாதே.அதைச் செய்யாதே.சொல்வதைக் கேள் என்ற டெம்ப்ளேட் கட்டளைகளுடன் வீட்டை ஆள்வார்களே.அந்த அப்பாக்களை உண்மையில் ஸ்கேன் செய்து பார்த்தால் அவர்கள் மிகவூம் பிரியமானவர்களாகவூம் அன்பானவர்களாகவூம் இருப்பார்கள்.ஆனால் கடுகடுவென்றே இருப்பார்கள்.அது போன்ற அப்பாக்கள் எல்லாம் தற்போது முதியோர் இல்லங்களுக்கு கடத்தப் பட்டு விட்டனர்.அது வேற விஷயம். என்ன சொல்ல வருகிறேன் என்றால் கண்டிப்பாகவூம் கறாராகவூம் தீவீரமாகவூம் யாராவது இருந்தால் அவர்களை யாருக்கும் பிடிக்காது.
பணவிஷயத்திலும் இப்படித்தான்.
நான் பணத்தை விரும்புகிறேன்.ஆனால் தீவீரமாக விரும்புகிறேன்.பணம் என்னிடம் கிடைத்தால் அதை 'பத்திரமாக" வைத்துக் கொள்வேன்.அதனை எங்கும் தவற விட்டு விட மாட்டேன்.என்னிடமே இருக்குமாறு பார்த்துப் பார்த்து வைத்துக் கொள்வேன்.
மேற்கண்ட வாக்கியங்களை கவனியூங்கள்.இது போல நீங்கள் நினைப்பவரா?பணத்தை பத்திரப்படுத்துகிறேன் என்ற பெயரில் அதை ஒரு பெட்டியில் போட்டு கூண்டுக்குள் கிளியை அடைத்து வைப்பது போல அடைத்து வைப்பீர்களானால் என்ன ஆகும்.கொஞ்ச காலம் அந்த பணம் அப்படியே கூண்டுக்குள் அதாவது பெட்டிக்குள் இருக்கும்.அப்புறம் இன்ஃப்ளேஷனில் தேய்ந்து போகும்.அப்புறம் ஒரு நாள் செத்துப் போகும். அதாவது நீங்கள் வாங்க விரும்பும் பொருளை வாங்குவதற்கான பணமாக அது இருக்காது.நீங்கள் வாங்க விரும்பும் பொருளை அப்போது வாங்குவதற்கு விலைவாசியின் காரணமாக மதிப்பு குறைந்து போன அந்த பணத்தால் இயலாமல் போகும்.
அப்படியானால் பணத்தை பெட்டியில் போட்டு வைப்பதும் வங்கியில் சேமிப்புக் கணக்கில் போட்டு வைப்பதும் தவறா?
தவறு என்பது என் அபிப்ராயம்.குறிப்பிட்ட அளவிற்கு எதிர்பாராத செலவூகளை சந்திப்பதற்கு வேண்டிய பணத்திற்கு மேல் ஒரு பைசா கூட உபரியாக சும்மா போட்டு வைத்திருப்பது என்பது முட்டாள்தனம் என்பது என் எண்ணம்.இது பற்றி அப்புறம் பேசலாம்.
இப்போது சொல்லவந்ததை சொல்லி விடுகிறேன்.
தீவீரமாக எதையூம் நம்புவது.தீவீரமாக எதையூம் விரும்புவது.தீவீரமாக எதையூம் செய்வது. என்பதெல்லாம் வெற்றிகளைக் கூடாது.சிலர் விளையாட்டில் கூட தீவீரமாக ஈடுபடுவார்கள்- எதற்காக என்கிறீர்கள்? வெற்றிகரமாக தோல்வியை தழுவூவதற்கு!
அப்படியானால் என்ன செய்ய வேண்டும்.எப்படி செய்ய வேண்டும்.
எதையூம் பெரிதாக திட்டமிட வேண்டாம்.
இயல்பாக இருந்தாலே போதும்.விருப்பமாக இருந்தாலே போதும்.அன்பாக இருந்தாலே போதும்.தயாராக இருந்தாலே போதும்.கொஞ்சம் விளையாட்டுத்தனமாக இருந்தால் இன்னும் நல்லது.
இப்போது அதே குழந்தைகள் விஷயத்திற்கு வருவோம்.வீட்டில் யாரிடம் நல்ல ஹ்யூமர் சென்ஸ் இருக்கிறதோ யார் சிரித்த முகத்தோடு இருக்கிறார்களோ யார் விளையாட்டுத்தனமாக எல்லாவற்றையூம் எடுத்துக் கொள்கிறார்களோ யார் எதையூம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் அன்பாக இருக்கிறார்களோ அவர்களிடம்தானே குழந்தைகள் விளையாட வருவார்கள்.
ஆக இயல்பாக இருப்பதும் விளையாட்டாக இருப்பதும் அவசியம்.
பணத்தைப் பொறுத்தவரை கறாராக இறுக்கிப் பிடிக்காமல் நசுக்கிச் சிதைக்காமல் இருப்பது நல்லது.பழைய படங்களில் மாயாபஜார் படத்தில் வரும் ஒரு வசனம் எனக்குப் பிடிக்கும்.அது இதுதான்.
'வற்றாத செல்வமே.வாழ்க நீ வாழ்க"
இந்த வசனத்தை சொல்லும் அந்த கதாபாத்திரம் மிக மகிழ்வோடு அதனைச் சொல்லும்.நீங்களும் ஒரு முறை சொல்லிப் பாருங்கள்.மனதிற்கு இதமாக இருக்கும்.
பணம் என்பதை விளையாட்டாக சம்பாதிக்க விரும்புங்கள்.விளையாட்டாக பணம் சம்பாதிப்பது எளிது.அப்படிப்பட்ட முயற்சியில் தோல்விகள் ஏற்பட்டால் விiளாயாட்டாக எடுத்துக் கொள்வதால் அது மனதையோ அடுத்தடுத்த முயற்சிகளையோ பாதிக்காது.
விளையாட்டாக எந்த காரியத்தை செய்தாலும் அது சோர்வை ஏற்படுத்தாது.பணம் சம்பாதிப்பதும் ஒரு விளையாட்டுதான்.ஆடிப்பாருங்கள் தெரியூம்.
பணமும் உங்களைத் தேடி விளையாட்டாக வந்து கொண்டே இருக்கும்.
ConversionConversion EmoticonEmoticon