மந்திரத்தில் மாங்காய் விழும்.தந்திரத்தில் தேங்காய் விழும் என்றெல்லாம் நீங்கள் சொல்லக் கேட்டிருந்திருக்கலாம்.அப்படி விழுமென்றால் உழைப்பு என்ற எதுவூம் தேவையில்லை.மந்திரமோ தந்திரமோ செய்து கொண்டு மந்திரவாதியாகவோ தந்திரவாதியாகவே பிழைப்பை ஓட்டிக் கொண்டு சென்று விடலாமே.
ஆக உழைப்பு என்பது தேவைப்படுகிறது.
யாராக இருந்தாலும் உழைப்பு என்பது இல்லாமல் எதுவூம் இல்லை.கடவூளாகவே இருந்தாலும் இந்த உலகைப் படைக்கவூம் உங்களையூம் என்னையூம் படைக்கவூம் அவர் ஒரு சிறுதுரும்பை நகர்த்தி வைத்திருக்கிறார் என்றால் அதிலும் ஒரு சின்ன உழைப்பு இருந்திருக்கத்தான் செய்யூம்.
அப்படியானால் பாசிட்டிவ்வான எண்ணங்கள்.தன்னம்பிக்கை.சுயமுன்னேற்றம் போன்றவைகள் எல்லாம் எங்கே போயின.இவை எல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டாமா?
வேண்டும்.அவசியம் வேண்டும்.ஆனால் அவற்றை எங்கே எந்த அளவில் பொருத்திக் கொள்ளப் போகிறீர்கள் என்பதால்தான் இருக்கிறது சூட்சுமம்.
அப்படியானால் அதிர்ஷ்டம்?
அது வெற்றி பெற்ற உழைப்பின் இன்னொரு பெயர்.தானாக வந்தது என்று அதனைப் பற்றி அறியாதவர்களும் உழைக்க விரும்பாத பொறாமைக்காரர்களும் அதை அதிர்ஷ்டம் என்று அழைத்து வருகிறார்கள்.
சரி மெயின் மேட்டருக்குள் செல்லாம்.
பணம் சம்பாதிக்க மிக அதிக பணம் சம்பாதிக்க நம்பிக்கை வேண்டுமா?
காலையில் கண்விழிப்போம் என்ற நம்பிக்கையில்தான் இரவூ படுக்கையில் உறங்கச் செல்கிறௌம்.அப்படி இருக்கையில் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல வாழ்க்கையில் எதற்கும் ஒரு நம்பிக்கை வேண்டும்தான்.
என்ன ;மாதிரியான நம்பிக்கை வேண்டும்.
பணம் சம்பாதிக்கப் போகிறீர்கள்.
பணம் சம்பாதித்தே தீருவீர்கள்.
பணம் உங்களை வந்தடைந்தே தீரும்.
பணம் நிச்சயம் உங்களது கைகளில் ஒரு தேவதைப் போல புரளும்.
இப்படி எப்படி வேண்டுமனாலும் இருக்கலாம்.உங்கள் நம்பிக்கை என்ன விதத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆங்கில மனோதத்துவ புத்தகங்களில் ஒன்று சொல்வார்கள்.வெறும் பணம் சம்பாதிக்கப்போகிறேன் என்று சொல்லிக் கொள்ளாதீர்கள்.இத்தனை பணம் இந்த அளவிற்கான பணம் சம்பாதிக்கப் போகிறேன் என்று சொல்லிக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள்.
உதாரணமாக பத்து கோடி ரூபாய் சம்பாதிக்க விரும்புகிறீர்கள் என்றால் உங்களுக்குள் 'பத்து கோடி ரூபாய் சம்பாதிக்கப் போகிறேன்" என்று சொல்லிக் கொள்ளுங்கள் என்பார்கள்.அதாவது இத்தனை ரூபாய் சம்பாதிக்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டால் அதனை உங்களது உள் மனம் குறித்து வைத்துக் கொண்டு அதை நோக்கி உங்களது மனம் செலுத்தும் என்பது மேற்கத்திய தன்னம்பிக்கையாளர்களின் நம்பிக்கை.
ஆனால் இத்தனை லட்சக்கணக்கான பிரதிகள் அவர்களின் புத்தங்கள் விற்றிருக்கிறதே.அதன் காரணமாக உலகெங்கிலும் லட்சக்கணக்கான புதுப்பணக்காரர்கள் உருவாகியிருந்திருக்க வேண்டுமல்லவா?
ஆனால் அப்படி ஏதும் பெரிய புதுப்பணக்காரர்கள் உருவாகியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
எங்கே தவறு?
எங்கேயோ தவறு இருக்கிறதல்லவா?
அதை நான் கண்டுபிடித்திருக்கிறேன்.அதன் பயனாகத்தான் இந்த புத்தகத்தை பிரத்யேகமாக உங்களுக்கென்று நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.எனது வழிமுறைகளில் தவறு கிடையாது.இதனை நீங்கள் உன்னிப்பாக கவனித்து சரியாகக் கடைபிடித்தால் போதும்.
ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்.
ஒரு கார் வைத்திருக்கிறீர்கள்.அதில் புதிதாக ஒரு டிரைவரை பணிக்கு அமர்த்துகிறீர்கள்.சென்னையிலிருந்து கிளம்பி கன்னியாகுமரிக்கு செல்ல வேண்டுமென்று சொல்கிறீர்கள்.அவர் அனுபவம் வாய்ந்த டிரைவராக இருந்தால் சரியான நேரத்தில் கிளம்பி சரியான அளவில் டீசலை நிரப்பி சரியான வேகத்தில் காரைச் செலுத்தி உங்களை சேர வேண்டிய இடத்திற்கு கொண்டு சென்று விடுவார்.
இதே அனுபவம் இல்லாத ஒரு புதுடிரைவர் என்றால்?
நீங்கள்தான் அனைத்தையூம் சொல்லித் தர வேண்டும்.எவ்வளவூ லிட்டர் டீசல் வேண்டும்.எந்தப் பாதையில் பயணிக்க வேண்டும்.எந்தெந்த நிறுத்தங்களில் நிறுத்தி இளைப்பாற வேண்டும்.காரிலுள்ள டயர்களில் காற்றழுத்தம் சரியாக உள்ளதா இன்ஜின் ஆயில் சரியாக உள்ளதா என்று நீங்கள்தான் அவரை சரிபார்க்கச் சொல்ல வேண்டும்.
இது போலத்தான்.
பணம் சம்பாதிக்கும் கலையில் நீங்கள் அனுபவம் இல்லாதவர் என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.அப்படியானால் எப்படி எந்த அளவில் என்ன மாதிரி செயல்கள் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று உங்களது உள் மனதிற்கு நீங்கள்தானே சொல்ல வேண்டும்.
அதை ஒரு செயல்திட்டம் என்ற வடிவில் நீங்கள்தானே வடிவமைத்துத் தர வேண்டும்.
இங்கேதான் அந்த மேற்கத்திய உளவியலாளர்கள் சொல்லாததை நான் சொல்ல வருகிறேன்.
நீங்கள் இருக்கிறீர்கள்.
உங்களுக்கு பணம் வேண்டும்.
கோடிக்கணக்கில் பணம் வேண்டும்.
அதனை சம்பாதிக்கப் போகிறீர்கள்.
அதனை சம்பாதிக்க ஒரு செயல்திட்டம் வேண்டுமல்லவா.
அதைத்தான் உங்களது 'உள்மனதிற்கு" சொல்லப்போகிறீர்கள்.
இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் -
நீங்கள்.
உங்களது மனம்.
இந்த இரண்டிற்கும் இடையே ஒரு பாலமாக ஒரு செயல்திட்டம்.
இந்த செயல்திட்டம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பிறகொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
இப்போதைக்கு இந்த செயல்திட்டம் பற்றி யோசித்துக் கொண்டிருங்கள்.
ConversionConversion EmoticonEmoticon