"பணமுட்டை"
இதென்ன தலைப்பு.கோழி போடும் முட்டை குஞ்சு பொறித்து கோழிக்குஞ்சு வெளியே வரும்.அது போல பணம் முட்டையிட்டு குஞ்சு பொறித்து பணக்குஞ்சு வருமா என்று யோசித்தால் அது அபத்தம்.
ஆனால் வரும்.
பணம் ஓரிடத்தில் அடைகாக்க வைக்கப்படும்போது முட்டையிட்டு குஞ்சு பொறிப்பது போல வெளியிடுவதுதான் வட்டி என்று அழைக்கப்படுகிறது.இந்த வட்டி என்பது எத்தனை சதவீதம் கிடைக்கிறது என்பதைப் பொறுத்துதான் பணத்தின் வளர்ச்சி மதிப்பிடப்படுகிறது.
தபால்நிலையங்களிலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் பணத்திற்கான முட்டை அதாவது வட்டி கிடைக்கும்.ஆனால் அது வீணாகிப் போகாது.பத்திரமானது.பாதுகாப்பானது.எப்போது வேண்டுமானாலும் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள முடியூம்.
சற்று ரிஸ்க் எடுத்து தனியார் வங்கிகளில் போட்டால் சிறிய அளவில்தான் ரிஸ்க் இருக்கும்.இங்கு போடப்படும் பணமும் ஆர்பிஐயின் கெடுபிடிக்குள் இருப்பதால் பத்திரமாகத்தான் இருக்கும்.முந்தைய முறையை விட மிகச் சிறிய கூடுதல் வட்டி கிடைக்கும்.
சின்னச் சின்னதாக நீங்களே மேற்கொள்ளப் போகும் தொழில் போட்டால்?
மிக மிக அதிக ரிஸ்க்.
ஆனால் மிக மிக அதிக வட்டி போன்ற பணம்.இங்கே கிடைப்பது சாதாரண பணமுட்டை கிடையாது.பொன்முட்டை என்றே சொல்லலாம்.ஆனால் இந்த முறையிலான முதலீடு என்பதை பலரும் விருப்பமாட்டார்கள்.அப்படியே விரும்பினாலும் அருகில் உள்ளவர்கள் தடுத்து விடுவார்கள்.
காரணம் ரிஸ்க்.
போட்ட பணம் முழுமையூம் காணாமல் போக வாய்ப்புள்ளது.
போட்ட பணத்தை விட அதிகமாகக் கூட சில தொழில்களில் நடைமுறை சிக்கல்கள் காரணமாக நஷ்டம் வர வாய்ப்பிருக்கிறது.
என்ன செய்யலாம்?
இந்த சென்னை வெள்ளம் உங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் என்ன?
எத்தனை தண்ணீர் அடித்துக் கொண்டு வந்தாலும் உடைமைகளும் பாடுபட்டு சேர்த்த பொருட்களும் பணமும் அடித்துக் கொண்டு போய் விட்டாலும் ஒன்றே ஒன்று மிச்சமிருந்ததை கவனித்தீர்களா?
அதுதான் நீங்கள்.
உங்களது உயிர்.நீங்கள் மீண்டு எழுவோம் என்ற நம்பிக்கை.இதனை எந்த வெள்ளத்தாலும் அழிக்க முடியவில்லை அல்லவா?
நீங்கள் ஈடுபடப்போகிற தொழிலில் பணத்தைப் போட்டால் பணம் போய் விடும் என்ற பயம் இருக்கிறதா?
புயலோ வெள்ளமோ பூகம்பமோ வந்து உங்களது சேமிப்பை அழித்துக் கொண்டு போய் விடும் வாய்ப்பிருக்கிறபோது உங்களது வீட்டை சூறையாடி விட்டுச் சென்று விடுகிற வாய்ப்பிருக்கிறபோது நீங்களே ஒரு குட்டிப் புயலை சின்ன வெள்ளத்தை மிகச் சிறிய பூகம்பத்தை கற்பனையாக ஏற்படுத்துங்களேன்.
இப்படி நான் சொல்லும்போது சென்னை வெள்ளத்தில் தண்ணீரில் தத்தளித்திருந்தால்தான் தெரியூம் என்று நீங்கள் சொல்லாம்.சென்னை வெள்ளத்தில் ஐந்து நாட்கள்தான் மின்சாரம் இல்லாது போனது.என்போன்ற தொழில் முனைவோருக்கு சில பல ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய கடுமையான மின்வெட்டின்போது ஒரு நாளைக்கு பதினெட்டு மணிநேர மின்வெட்டு வருடக்கணக்கில் இருந்தது.அப்போது அத்தனை கம்ப்யூட்டர்களும் இன்வர்ட்டர்களும் முழுக்க சேதமடைந்து போயின.பல ஆண்டுகாலம் ஆசையாக வளர்த்து வைத்திருந்த வாஸ்து மீன்கள் செத்து மிதந்தன.தொழிலை நடத்த முடியாமல் நிறுத்தி விடும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.ஆனால் அதிலிருந்து மீண்டோம்.இந்த அவலத்தை திருப்பூர் அன்பர்கள் அனுபவித்திருந்திருப்பார்கள்.அது போல சென்னை வெள்ள அவலத்திலிருந்தும் மீண்டு வரலாம்.
அதனால்தான் சொல்கிறேன்.
ஒரு சிறிய புயல்வெள்ள பூகம்ப பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வர முடியூம்போது ஏன் ஒரு சிறிய தொகையைப் போட்டு ஒரு சிறிய தொழிலை நீங்கள் வேலை பார்த்துக் கொண்டே சைடு பிசினஸாகத் துவங்கக்கூடாது.ஏற்கனவே பிசினஸ் செய்பவராக இருந்தால் கூடுதலாக ஏன் இன்னொரு பிசினஸை செய்யக் கூடாது.இதைப் பற்றி நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன்.சின்னதாக எதையாவது செய்து கொண்டே இருங்கள்.இன்றைக்கு மல்டி மில்லியன் டாலர் பிசினஸாக இருக்கின்ற அத்தனை தொழில்களும் ஒரு காலத்தில் கார் ஷெட்டிலோ அல்லது வீட்டின் ஒரு சின்ன அறையிலோ வைத்து சொற்ப முதலீட்டைக் கொண்டு துவங்கப்பட்டதுதான்.காரணம் அங்கே பணம் என்பது ஒரு முட்டை அளவிற்குத்தான் இருந்தது.அந்த தொழிலை தொடங்கியவர்களின் மனம்தான் மிகப் பெரிய அளவில் இருந்தது.அதனால்தான் அந்த தொழில்கள் வளர்ந்தன.
உடனே வளர்ந்து விட முடியூமா?
முடியூம் என்பதுதான் இப்போதைய வரலாறு.முன்பெல்லாம் ஒரு தொழிலில் வெற்றி பெற்று மேலே வருவதற்கு பத்தாண்டுகளாவது குறைந்தது வேண்டும் என்பார்கள்.ஆனால் இப்போது தொலைதொடர்பும் சமூகவலைத்தளங்களும் இருக்கிற வசதியில் உட்கார்ந்த இடத்திலிருந்தே ஒரு தொழிலை இயக்க முடியூம்.ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே ஒரு கார்ப்பரேட் அளவிற்கு உங்களது தொழிலை உயர்த்தவூம் முடியூம்.
இது எப்படி முடியூம்.
மறுபடியூம் கோழியை கவனியூங்கள்.
மறுபடியூம் முட்டை உதாரணம்தான்.
எந்த ஒரு கோழியூம் 9 டு 5 மட்டுமே அடைகாப்பேன்.மற்ற நேரங்களில் டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருப்பேன் என்று உட்கார்ந்திருப்பதில்லை.இரை தேடும் சொற்ப நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் அது முட்டையை தனக்கடியில் வைத்து அடை காத்துக் கொண்டே இருக்கிறது.
அது போல துரங்கும் நேரம் தவிர மற்ற நேரம் எல்லாம் உங்களது தொழிலை உங்களது பிசினஸை உங்களால் "அடை காக்க" முடியூமென்றால்
நீங்களும் அம்பானிதான்.அதானிதான்.
செய்து பாருங்கள்.
ConversionConversion EmoticonEmoticon