இந்த கட்டுரைகளின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்களை பணத்திற்கு அருகே நகர்த்திக் கொண்டு போக வேண்டுமென்ற ஆர்வத்துடனும், தணியாத தாகத்துடனும்தான் ஒவ்வொரு அத்தியாயத்திலும் எழுதி வருகிறேன்.அண்மையில் கூட முகப்புத்தகத்தில் உள்ள நமது
'பணம் வரும் போகும் என்பார்கள்.பணம் வரும்.அந்த பணத்தை நீங்கள் நேசிக்க ஆரம்பித்து விட்டால்; வந்த பணம் உங்களை விட்டுப் போகாது.ஆக பணம் வரும்.ஆனால் போகாது" என்று எழுதியிருந்தேன்.
அப்புறம் இன்னொரு முறை எழுதியிருந்தேன்.
இத்தனை நாள் சாதாரணமாக இருந்த டிவிஎஸ்50 கூட இப்போது டிவிஎஸ்100 ஆக உயர்ந்து விட்டது.நீங்கள் அப்படியே அதே வேலை.அதே வீடு.அதே வசதிகள்.அதே பற்றாக்குறை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா.பணத்தை நேசிக்க ஆரம்பியூங்கள்.பதிலுக்கு உங்களை நேசிக்க ஆரம்பிக்கிற பணம் உங்களை உயர்த்தும் என்று எழுதியிருந்தேன்.
நம்ம ஊரு வண்டி என்று நேசிக்கப்படுகிற டிவிஎஸ்50 இப்போது 100 சிசி கொண்ட ஃபோர் ஸ்ட்ரோக் வண்டியாக அதாவது டிவிஎஸ்100 ஆக உயர்ந்து விட்டதைத்தான் இப்படி குறிப்பிட்டிருந்தேன்.
சரியாகச் சொன்னால் எதைப் பார்த்தாலும் எனக்கு பணத்தைப் பற்றியூம் அந்த பணத்தையூம், உங்களையூம் ஒன்று சேர்க்க வேண்டுமென்ற எண்ணமும், உங்களை மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக உயர்த்த வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படுவதால்தான் இப்படி எழுதி வருகிறேன்.
இப்போது ஒரு சிறிய கதை சொல்ல வேண்டும்.
கைலாஷ் -சஞ்சய் சகோதரர்கள்
கைலாஷ் என்ற இளைஞர் இருபத்திஐந்து வருடங்களுக்கு முன்னர் வெறும் 400 ரூபாய் சம்பளத்தில் ஒரு ரேடியோ மற்றும் கால்குலேட்டர் விற்கும் கடையில் வேலை பார்த்துக் கொண்டே சைடு பிசினஸாக ஸ்கிரீன் பிரின்ட்டிங், கணக்கு எழுதித் தருவது போன்ற வேலைகளில் ஜல்லியத்துக் கொண்டே மாதம் ரூ 2000 சம்பாதித்தும் வந்திருக்கிறார்.
அப்புறம் இவரது சகோதரர் சஞ்சய் வந்து சேர்ந்திருக்கிறார்.இவர் கம்ப்யூட்டரில் டிகிரி முடித்து விட்டு வந்ததும் இருவரும் சேர்ந்து கம்ப்யூட்டர்களை ரிப்பேர் பார்த்து தரும் ஹார்டுவேர் கடை வைத்து போராடியிருக்கிறார்கள்.அதன்பின் நியூஇந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் கம்ப்யூட்டர்களைப் பராமரிக்கும் ஏஎம்சி கான்ட்ராக்ட் எடுத்தபோது அவர்கள் எங்கு சென்றாலும் கம்ப்யூட்டர் துறையில் வைரஸ்நீக்கி ப்ரோக்ராம் என்னும் ஆன்ட்டி வைரஸ் ப்ரோக்ராம் (Anti virus) எங்கே நன்றாக கிடைக்கும் என்ற கேள்விதான்.
மைக்ககேல்ஆஞ்சலோ என்ற வைரஸ்தான் அப்போதைய குஷ்பு, ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ்!
அப்போதெல்லாம் விண்டோஸ் 95 இருந்தாலும் அதிகமானோர் ஃபாக்ஸ்ப்ரோ பவர்பில்டர் போன்றவற்றில்தான் கணக்குகளை வைத்து பராமரித்து வந்தார்கள் என்பதால் டாஸ் (MS Dos) வழியாக ஒரு வைரஸ் நீக்கி ப்ரோக்ராமை கைலாஷூம் சஞ்சய்யூம் எழுதி அதற்கு 'க்விக் ஹீல்" (Quick Heal) என்று பெயரிட்டிருந்தார்கள்.
வெறும் நானுரறு ரூபாய் மாத சம்பளத்தில் ஆரம்பித்த இவர்களின் பயணம்...எதற்கு கதையை வளர்த்துவானேன்.
நாளை இவர்களது நிறுவனமான 'க்விக் ஹீல் டெக்னாலஜிஸ்" நிறுவனத்திற்கு ஐபிஓ (IPO) பங்கு வெளியீட்டினை வெளியிடுவகிறார்கள்.
எவ்வளவூக்கு தெரியூமா?
ரூ 250 கோடி ரூபாய்களுக்கு!
நினைத்துப் பாருங்கள்.
வெறும் ரூ 400 வாங்கியவர்கள் இருபது ஆண்டுகளில் ரூ 250 கோடி ரூபாய்க்கு பங்கு வெளியீட்டிற்கு வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
நம்பத்தான் வேண்டும்.
இப்படித்தான் நடக்கிறது.
முன்னேற முடியூமென்று நம்பியவர்கள் உயர்கிறார்கள்.அவநம்பிக்கையூடனும் சலிப்புடனும் எதற்கெடுத்தாலும் குறை கூறிக்கொண்டு பேராசையை மட்டுமே தலைக்குள் திணித்துக் கொண்டிருப்பவர்கள் அப்படியேதான் வாழ்க்கையை தொடர்கிறார்கள்.
பாசிட்டிவ்வாக யோசிக்கவூம் பணத்தைப் புரிந்து கொள்ளவூம் முடிந்தவர்கள் மேலே மேலே உயர்ந்து கொண்டே போகிறார்கள்.
உங்களை மேன்மேலும் பணத்தளவில் உயர்த்த வேண்டுமென்றுதான் நானும் பாடுபட்டு வருகிறேன்.அதற்காகத்தான் இது போன்ற கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் பணத்தைப் பற்றியூம் அதனைப் புரிந்து கொள்ளும் முறைகளையூம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.
1995ல் மாதம் ரூ 400 மட்டுமே சம்பாதித்துக் கொண்டிருந்தவர்களால் கோடிக்கணக்கில் உயர முடியூம் என்றால் உங்களால் ஏன் முடியாது?
தொடர்ந்து நம்மிடம் தொடர்பில் இருங்கள்.
உங்களை உயர்த்துவது எனது லட்சியம்.
வாழ்க பணமுடன்.
1 comments:
Click here for commentsNice!!
ConversionConversion EmoticonEmoticon