இன்றைக்கு மளமளவென்று சில தெய்வாம்சம் பொருந்திய நிகழ்வூகள் நடந்து விட்டன.இவற்றை நினைத்துப் பார்க்கவே சிலிர்ப்பாக இருக்கிறது.அதே சிலிர்ப்போடும்தான் இந்த பதிவை எழுதுகிறௌம்.
சில நாட்கள் முன்பாக நமது நமது தளத்தின் ப்ரியமான வாசகரும் தெய்வீக அன்பருமான ஒருவர் நம்மை தொடர்பு கொண்டு புல்ஸ்ஸ்ட்ரீட் தளத்தின் வாயிலாக நாம் செய்து வரும் சேவைகளை வாழ்த்தியதோடு திருச்செந்துரரிலிருந்து நமக்கு விசேஷமான பிரசாதத்தை அனுப்பி வைக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
தினமும் அந்த அருட்பிரசாதம் முருகனின் சந்நிதியிலிருந்து வரும் என்று காத்துக் கொண்டிருப்போம்.அந்த பிரசாரத்தை இன்னும் அனுப்பவில்லை என்றும் வேறொரு நாள் அனுப்பி இருப்பதாகவூம் அந்த அன்பர் அன்புடன் தெரிவிப்பார்.சரி முருகன் நம்மிடம் விளையாட்டை துவங்கி விட்டான் என்று நினைத்துக் கொண்டு வழக்கமான அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டோம்.இன்று அந்த அன்பர் நம்மை தொடர்பு கொண்டு நேற்றே பிரசாதத்தை கொரியரில் அனுப்பி வைத்து விட்டதாகவூம் இன்று கிடைக்கும் என்று சொல்லியிருந்தார்.நமது மதுரை விலாசத்திற்கு கொரியரில் அனுப்பி வைக்கும்படி தெரிவித்திருந்தோம்.அதன்படி இன்று பிரசாதம் வந்து விடும் என்று காத்துக் கொண்டிருந்தோம்.
ஆனால் வரவில்லை.
பொதுவாக கொரியர் பதினோரு மணிக்கெல்லாம் வந்து விடும்.
சரி இன்னொருநாள்தான் வரும்.அல்லது கொரியர் ஆட்கள் இன்று மட்டம் போட்டு விட்டால் திங்கட்கிழமைதான் கொண்டு வருவார்கள் என்று பதிவூகள் எழுதும் வேலையைப் பார்ப்போம் என்று சிஸ்டத்தில் உட்கார்ந்தால் நெட் வேலை செய்யவில்லை.
எம்டிஎஸ் கஸ்டமர் கேரை பலமுறை தொடர்பு கொண்டும் அவர்களும் தொலைபேசியை எடுக்கவில்லை.பல முயற்சிகளுக்குப் பின் தொடர்பு கொண்ட எம்டிஎஸ் கஸ்டமர்கேர் பெண் சற்று வருத்தத்துடன் சொன்னார்.இன்று அவர்களது செர்வர் டவூன் ஆகி விட்டதாம்.இது போன்று செர்வர் எம்டிஎஸ்ஸி;ல் இதுவரை டவூன் ஆனதே இல்லை என்றும்.பழுதுநீக்கம் செய்து கொண்டிருப்பதால் நான்கு மணி நேரத்திற்கு இணைப்பை சரி பாருங்கள் என்றார்.
சரி.
இதுவூம் முருகனின் விளையாட்டுதான் என்று எண்ணி டிவியையாவது பார்ப்போம் என்று ரிமோட்டை உருட்டிக் கொண்டே வந்தபோது வசந்த் டிவியில் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் நடிப்பில் பழைய பிரேமி சீரியலை பார்க்க நேர்ந்தது.
பாலச்சந்தரின் அருமையான நடிப்பு என்னைக் கட்டிப்போட தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தபோதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.
பிரேமி சீரியலின் அந்த எபிசோடில் வரும் பாலச்சந்தர் தன் மகன் அருணாசலத்தை அழைத்துக் கொண்டு பிரேமியின் வீட்டிற்கு வருகிறார்.பெண்பார்க்கும் படலம்.அப்போது ஸோபாவின் அருகே டீபாயில் வரிசையாக பிரசாதக்கூடைகளும் அத்துடன் பிள்ளையார்பட்டி கற்பக வினாயகரின் படத்தின் அருகே திருச்செந்துரர் முருகனின் படம் இருக்கின்றன.
இவற்றை உனக்காகத்தான் கொண்டு வந்தேன் என்று கேமராவைப் பார்த்து கே.பி சொல்கிறார்.
நான் முருகனையே உற்றுப் பார்க்கிறேன்.
இப்போதுதான் அந்த முதல் அதிசயம்.
கீழேயிருந்து கொரியர்காரப் பையனின் குரல்.
ஆகா..பிரசாதம் திருச்செந்துரரிலிருந்து வந்து விட்டது.இதனை நான் எழுதும்போது இங்கே பல்லி கத்துகிறது.
திருச்செந்துரர் பெரிய எஸ் அய்யா அனுப்பிய பிரசாதம்தான் அது.
வாங்கிக் கொண்டு வந்து பாபாவின் காலடியில் வைத்து விட்டு டிவியைத் திரும்பிப் பார்த்தால் சீரியலில் பிரேக் விட்டிருக்கிறார்கள்.
மணியைப் பார்த்தால் சுமார் நாலரை ஆகிறது.பதினோரு மணிக்கு வரவேண்டிய கொரியர் நாலரை மணிக்கு அதுவூம் பிரதோஷ வேளையில் அதுவூம் சனிப்பிரதோஷ நாளன்று வருகிறது.
என்னாச்சர்யம்!
சீரியலில் பிரேக் முடிந்து சீரியல் விட்ட இடத்திலிருந்து துவங்கும்போது அதேகாட்சி.ஆனால் அந்த இடத்தில் டிவி சீரியலில் வினாயகர் மட்டும் இருக்கிறார்.
திருச்செந்துரர் முருகனை அங்கே காணவில்லை.
சீரியல் எடுத்திருந்தபோது கன்டினியூடி மிஸ் ஆகியிருந்திருக்கும்.இது பல வருடங்கள் முன்பாக எடுக்கப்பட்ட சீரியல்.மறுஒளிபரப்பாக இப்போது வருகிறது.இப்போது அம்மா வேடங்களில் வரும் ரேணுகா அதில் ஹீரோயின்.அத்தனை பழைய சீரியல்.
ஆனால் பிரேக் விட்டு தொடரும்போது திருச்செந்துரர் முருகனைக் காணவில்லை.
நான் வந்த வேலை முடிந்தது.உனக்காக பிரசாதத்தை திருச்செந்துரரிலிருந்து நானே கொண்டு வந்திருக்கிறேன் என்று என் இஷ்ட தெய்வமான முருகன் சொல்லாமல் சொன்னது போலிருந்தது.
இப்போது அடுத்த அதிசயத்திற்கு வருகிறேன்.
மதுரை என்பதால் இன்று மாலை பிரதோஷத்திற்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லலாம் என்று அவசர அவசரமாக கிளம்பி டிராஃபிக் நெரிசலில் ஊர்ந்து கோவிலுக்குச் சென்றால் பிரதோஷம் துவங்கியிருந்தது.சிவபெருமான் பிரகாரத்தில் உலா வந்து கொண்டிருந்தார்.அவரைப் பின் தொடர்ந்து நமது தளத்தின் வாசகர்களுக்காகவூம் நமது காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுவினருக்கும் வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டே நடந்தோம்.பிரதோஷ வழிபாடு முழுக்க நல்ல விதமாக நடந்து முடிந்தது.அங்கே உள்ள பிரகாரத்தில் சில சூட்சுமங்கள் உள்ளன.அங்கே செல்லும்போது நெய்விளக்கேற்றி விட்டு வருவது வழக்கம்.அப்படி ஏற்றிக் கொண்டு வந்தபோது கோவிலில் இருந்த ஒரு பணியாளர் அங்கே இருந்த ஒரு சிறிய சந்நிதியை மடாரென்ற சப்தத்துடன் கதவை திறந்து விட்டு என்னை ஒரு பார்வைப் பார்த்து விட்டு செல்ல எதேச்சையாக பார்வையை அங்கே திருப்பினால்...
வள்ளி தெய்வானையூடன் கையில் வேலுடன் அங்கே வீற்றிருந்தது என் ப்ரியமான முருகன்.
அது முருகன் சந்நிதி.
வந்தது நான்தான்.பிரசாதத்தை அனுப்பியதும் நான்தான்.திருச்செந்துரரிலிருந்து அதை அனுப்பியதும் நான்தான் என்று முருகன் சொல்லாமல் சொன்னது போலிருந்தது.
முருகனை மனதார வணங்கி விட்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தோம்.
அதன்பின் பிரார்த்தனைகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்ததும் செல்பேசியில் ஓர் அழைப்பு.
யார் அழைத்தது என்று எடுத்துப் பார்த்தால் நமது புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழ் வாசகர்களில் ஒருவரான கோவில்பட்டி பாலமுருகன்.
பெயரை கவனித்தீர்களா?
பாலமுருகன்!
இன்னுமா நம்பவில்லை.நான் இருக்கிறேன் உனக்கு.உனது தளமும் உனது ஆஃப்ஷன் டீம் குழுக்களும் உனது தபால்வழிப் பயிற்சிகளும் மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்ற உன் எண்ணமும் தொழிலும் லட்சியமும் நிறைவேற நான் இருக்கிறேன் என்று முருகப்பெருமான் சொல்லாமல் சொன்னது போலிருந்தது.
இந்த ஆன்மிகச் சிலிர்ப்பு இன்னமும் அடங்கவில்லை.மனமெங்கும் பிரமிப்பாக இருக்கிறது.
இந்த தெய்வாம்சம் பொருந்திய ஆட்டத்தை முருகனின் சார்பாக துவக்கி வைத்த திருச்செந்துரர் பெரிய எஸ் அன்பருக்கு நமது தளத்தின் சார்பாக மனமார்ந்த நன்றி.
நமது தளமும் நமது வாசகர்களும் நமது டிரேடிங் டீம் குழுவில் இணைந்தவர்களும் நமது தபால்வழிப் பயிற்சியில் இணைந்த அன்பர்களும் உயர்ந்த உன்னதமான நிலையை அடைவார்கள் என்பது நன்றாகவே புரிகிறது.
ஓம் சரவணபவ!
ConversionConversion EmoticonEmoticon