நமது தளத்தின் நெடுநாள் வாசகரும் நமது தளத்தின் மீது பிரியம் கொண்டவருமான ஒரு அன்பர் வெளிநாட்டிலிருந்து தொடர்பு கொண்டிருந்தார்.அவர் சொன்ன சில விஷயங்களில் இந்தியர்களின் குறிப்பாக தென்னிந்தியர்களின் மனோபாவம் பற்றி அவரது கேள்விகள் சிந்திக்கக்கூடியதாக இருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவூ.
அவர் வசிக்கும் நாட்டில் உள்ளவர்களின் மனோபாவம் என்பது நம்மைப் போலவேதான் இருக்கிறது என்றாலும் அவர்கள் தனக்கு எது வேண்டும்.தன்னால் எது முடியூம் என்று தெரிந்து வைத்திருப்பதால் பெரிய தோல்வியை சந்திப்பதில்லை.ஆனால் இந்தியாவில் கணினி முறையிலான ஷேர் டிரேடிங் என்பது 2001ல் அறிமுகப்படுத்தப்பட்டு பதினைந்து வருடங்கள் ஆகி விட்டன.மொபைல் டிரேடிங் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்றாண்டுகள் ஆகி விட்டன.ஆனால் ஏன் பெரிய அளவில் சிறிய டிரேடர்கள் முன்னுக்கு வரவில்லை என்று கேட்டிருந்தார்.
ஷேர் டிரேடிங்கில் ஒரு டிரேடராகவூம் முதலீட்டாளராகவூம் வல்லுநராகவூம் எனது 34 வருட அனுபவத்தில் நான் எனக்காக உணர்ந்த விஷயங்கள் இவைதான்.
1.திட்டமிடல் அவசியம்.
2.நிதி மேலாண்மை மிக அவசியம்.
3.ரிஸ்க் எடுப்பது மிக மிக மிக அவசியம்.
4.எது சரியாக வரும் எது சரியாக வராது என்பதை உணர்ந்து கொண்டு செயல்படுவதுதான் இவை எல்லாவற்றையூம் விட அவசியம்.
இதைத்தான் நான் பல வருடங்களாக கடைபிடித்து வருகிறேன்.
சிறிய டிரேடர்கள் சிறிய முதலீட்டாளர்கள் ஏன் பெரிதாக பண்ம் சம்பாதிக்காமல் தோற்றுப் போகிறார்கள் என்று அவ்வப்போது யோசிப்பதுண்டு.அவர்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணத்தில்தான் இந்த தளமே இயங்குகிறது.
ஆனால் எனது நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் எதிலும் அவநம்பிக்கை கொண்ட சிறுமுதலீட்டாளர்களை பணக்காரர்களாக உயர்த்துவதை விட பணக்காரர்களை மேலும் பெரிய பணக்காரர்களாக மாற்றுவது மிக மிக எளிதானது.அதுதான் உனக்கும் பயன்படும் என்பார்கள்.
உண்மையைச் சொல்வதென்றால் இது மிக மிக சரி.
அண்மையில் முகப்புத்தகத்தில் நமது புல்ஸ்ஸ்ட்ரீட் பக்கத்தில் அவ்வப்போது நமது "கதவைத் திற காசு வரட்டும்" பக்கத்தில் நாம் தொடர்ந்து எழுதி வரும் கருத்துகளை போடுவது வழக்கம்.அதைப் பார்த்த ஒரு அன்பர் பின்வருமாறு கேட்டிருந்தார்.
"எனக்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும்.ஐடியா கொடுங்கள்"
இதைக் கேட்டதும் முதலில் ஆக்வர்டாகத் தோன்றினாலும் சரி ஆர்வமாக கேட்கிறாரே என்று இன்னின்ன காரியங்கள் இன்னின்ன முறையில் செய்யூங்கள் என்று சீரியசாக அவருக்கு பதில் அளித்தால் அடுத்து அவர் அளித்த பதில் இதுதான்:
'2016ல் ஒரு கோடி ரூபாய் வேண்டும்.அதற்கு ஐடியா தாருங்கள்" என்று கேட்டிருந்தார்.
இதற்கு முதலில் அவர் மீது கோபம் வந்திருக்க வேண்டும்.மாறாக பரிதாபம்தான் ஏற்பட்டது.
ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டுமென்றால் அதற்கு முதலில் பணம்; வேண்டாம்.முதலில் தேவைப்படுவது ஒரு திட்டம் மற்றும் அதற்கான செயல் வடிவம்.அதற்கு முன்னதாக யாருக்கு அந்த திட்டம் தேவைப்படுகிறதோ அவரைப் பற்றிய சுயவிபரக்குறிப்பு.அவர் யார்.அவருடைய வயது என்ன?இப்போது ஏதாவது தொழில் செய்கிறாரா? எவ்வளவூ மணி நேரத்தை ஒரு நாளைக்கு அர்ப்பணிப்புடன் அளிக்க முடியூம்.எந்த அளவிற்க ரிஸ்க் எடுக்க முடியூம்.அவரது பலவீனத்தை எப்படி மேலாண்மை செய்வது? போன்ற விபரங்கள் எதுவூமே எல்லாமல்-
"ஒரு கோடி ரூபாய் இந்த வருடத்திலேயே (நான்கு மாதம் 2016ல் முடிந்து விட்டது.மீதம் எட்டு மாதங்கள்தான் உள்ளன) வேண்டும்.அதற்கு ஐடியா தா" என்று கேட்பது எத்தனை அர்த்தமில்லாத கோரிக்கை என்பது நமக்கு புரிந்தது.
இன்னொரு அன்பர்.
அன்பானவர்.நல்ல மனிதர்.பத்தாயிரம் ரூபாய்தான் இவரது வொர்க்கிங் கேபிடல்.ஆனால் தினம் தினம் ரூ 1000 முதல் ரூ 1500 வரை வேண்டும் என்று எதிர்பார்க்கிறாராம்.
பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு நாளைய லாபமாக 15 சதவீதம் என்றால் அதனை அடைவதற்கு எத்தனை ரூபாய்க்கு ரிஸ்க் எடுக்க வேண்டும்.இதில் ஏதாவது ரிஸ்க் மேனேஜ்மன்ட் ப்ளான் வைத்திருக்கிறாரா என்றால் அதெல்லாம் தெரியவில்லை.
பத்தாயிரம் ரூபாய்க்கு 15 சதவீதம் ஒரு நாளைய லாபமாக வர வேண்டும்.ஆனால் ரொம்பவூம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பங்குச்சந்தையை படைத்த ஆண்டவனே வந்து உட்கார்ந்து ஆர்டர் போட்டாலும் தினம் தினம் 15 சதவீதம் என்பது வராது.அப்படி வர வேண்டுமென்றால் பத்தாயிரம் ரூபாயை இழக்கத் தயாராக இருக்கும் அளவிற்கான ரிஸ்க் எடுக்க வேண்டும்.
ஆனால் நமது முந்தைய பதிவூகளில் (சில ஆண்டுகளுக்கு முந்தைய பதிவூ) பத்தாயிரம் ரூபாயை ஒரு வருடத்தில் "தியரிட்டிக்கலாக" ஒரு கோடியாக மாற்றும் வித்தை என்று கற்பனையான ஒரு பதிவை எழுதியிருக்கிறௌம்.
அதாவது ஒரு நாளைக்கு 3 சதவீத லாபம் போதும்.
15 சதவீத தடாலடி லாபம் தேவையில்லை.
இந்த 3 சதவீத லாபத்தையூம் 6 டிரேடிங்கில் ஒவ்வொரு டிரேடிங்கிலும்
அரை சதவீத லாபமே போதும்.
ஆனால் ஒவ்வொரு நாளும் அடைகிற லாபத்தை மறுநாளைய டிரேடிங்கின்போது இணைத்து காம்பவூன்டட் கேபிடலாக வைத்துக் கொண்டு இதே போல செய்து கொண்டே வந்தால்.....
கணக்குப் போட்டுப் பாருங்கள் அந்த கோடி ரூபாய் வந்து விடும்.
ஆனால் ஏன் செய்வதில்லை?
ஏன் சிறுமுதலீட்டாளர்கள் தோற்றுப் போகிறார்கள்?
இவைதான் அவர்கள் தோற்றுப் போவதற்கான காரணங்கள்.
1.சரியான வொர்க்கிங் கேபிடல் வைத்துக் கொள்ளாதது.
2.ஏராளமாக எதிர்பார்ப்பை வைத்துக் கொள்வது.
3.தகவல் தொடர்பில் அலட்சியமாக இருப்பது.
4.பொறுமை என்பதே இல்லாமலிருப்பது.
5.இலவசங்களுக்கு ஆசைப்படுவது.
6.பேராசைக்கே பேராசை பிடித்த மாதிரி பெரிய்ய்ய்ய அளவில் ஆசைப்படுவது.
7.எங்கே இலவச டிப்ஸ் மற்றும் ஃப்ரீட் ட்ரயல் மற்றும் இலவச வாட்ஸ்அப் க்ருப் கிடைத்தாலும் ஓடிப்போய் செல்நம்பரைக் கொடுத்து சின்னாபின்னமாவது.
8.டிரேடிங்கை முறையாகக் கற்றுக் கொள்ளாதது.
9.டிரேடிங் குறித்த பயிற்சியை பெற பணம் செலவழிக்க மனமில்லாமல் இருப்பது.
10.நிபுணர்களை நம்பாமல் சீப்பாகக் கிடைக்கும் போலிகளை நம்புவது.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒரு வருடத்தில் ஒரு கோடி சம்பாதிப்பது என்பது தியரிட்டிக்கலாக சாத்தியம்தான்.ஆனால் அதனை ப்ராக்டிக்கலாக சாதிப்பதற்கு சில செயல்திட்டங்கள் அவசியம்.
அதைத்தான் காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங்கில் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறௌம்.இந்த தொடர் முயற்சி என்பது வருடக்கணக்கில் ஒரே சீராக ஒரே நம்பிக்கையூடன் சரியான தகவல் தொடர்பு மற்றும் நம்பிக்கையூடன் தொடரும்போதுதான் என்றாவது ஒரு நாள் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையூடன் இந்த பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தலைப்பிற்கு வருவோம்.
வெற்றி பெறுவதற்கு சிங்கமாக இருக்கத் தேவையில்லை.சிறுத்தையாகவூம் இருக்கத் தேவையில்லை.சிறு நரியாகவூம் இருக்கத் தேவையில்லை.
ஒரு ஸ்மார்ட் பூனையாக இருந்தாலே போதுமானது.
காலம் என்பது எப்போதுமே முடிவூ பெறாத ஒரு தொடர் ஓட்டம் என்பதால் தொடர்ந்து ஓடுபவர்களுக்கே வெற்றிக்கோடு கண்ணில் படும்.
எனவே வாருங்கள்.
முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம்.
ConversionConversion EmoticonEmoticon