"ஜாக் நிக்கல்ஸன்"
இந்த ஹாலிவூட் ஆக்டரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சென்ற தலைமுறை ஆட்களிடம் கேட்டால் சொல்வார்கள்.நம்ம ஊர் ஜெமினி கணேசன் ராஜேஷ் கன்னா கமல்ஹாசன் போன்றவர்களை எல்லாம் சாப்பிட்டு விடுவார்.அந்த அளவிற்கு ஒரு ரொமான்டிக்கான ஹீரோ.
ஆனால் அதே ஹீரோவைத்தான் ஒரு பேட்மேன் படவரிசையில் கோமாளித்தனமான ஆனால் பயங்கரமான சைக்கோ வில்லானாக்கியிருந்தார்கள்.அந்த படத்தில் கூட பேட்மேன் ஹீரோவை விட ஜாக்தான் ஸ்கோர் பண்ணியிருந்தார்.
அந்த படத்தில் ஜாக்நிக்கல்ஸன் செய்த பயமுறுத்தல்களுக்கு முன்வரிசையிலிருந்த வாண்டுகளும் பெண்களும் பயப்படுவதை பார்த்திருக்கிறேன்.
ஜாக்நிக்கல்ஸன் ஒரு பயமுறுத்தலான கோமாளி வில்லன்.சற்று சைக்கோவூம் கூட.
இதற்கும் பங்குச்சந்தைக்கும் என்ன சம்பந்தம் என்றுதானே யோசிக்கிறீர்கள்.
அப்போதெல்லாம் நேரில் வந்து டீலரிடம்அமர்ந்து ஆர்டர் போடும் காலம்.ஆன்லைன் டிரேடிங் வந்த புதிது.இப்போது போல ஆன்ராய்டு செல்போன்கள் எல்லாம் கிடையாது.அதனால் ஷேர் டிரேடிங் அலுவலகங்களில் கூட்டம் நெருக்கியடிக்கும்.அந்த கூட்டத்தில் பாதிப்பேர் பணத்தை துரத்திக் கொண்டு லாங் போய்க்கொண்டிருக்கும்போதுதான் உள்ளே வருவார் நம்ம சங்கரன்.வயதானவர்தான்.ஆனால் எத்தனை வயது என்று கண்டுபிடிக்க முடியாது.சங்கரனின் செய்கைகள், மானரிஸம் எல்லாம் பேட்மேன் படத்தில் வரும் ஜாக்நிக்கல்ஸன் மாதிரியே இருக்கும்.வரும்போதே ஏதாவது ஒரு கர்நாடகப் பாடலை ஜதி போட்டுக் கொண்டுதான் வருவார்.பன்னீர் புகையிலை வாசம் அவருக்கு முன்னதாக வந்து கொண்டிருக்கும்.
பேக் ஆபீஸ் பெண்கள் வட்டமாக உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கும்போது அவர்கள் பின்னால் போய் "ப்ஹா...." என்பார் சப்தமாக.அவர்கள் அரண்டு போய் எழுந்து விடுவார்கள்.
"எப்ப வந்தாலும் சும்மா சும்மா பயங்காட்டாதிங்க சங்கரன் சார்"என்று சிணுங்கியபடி அவரைப் பற்றி என்னிடம் புகார் செய்வார்கள்.நான் கண்டுகொள்ள மாட்டேன்.காரணம் அவரது ஒவ்வொரு செய்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.அது எனக்குத்தான் புரியூம்.
சந்தை அது பாட்டுக்கு சென்று கொண்டிருக்கும்.சிஎன்பிசியில் உதயன் முகர்ஜியோ லதாவெங்கடேஷோ யாரையாவது கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும்போது சட்டென்று என் சட்டைக்காலரைப் பற்றி"ஹ்ஹா..."என்று அலறுவார்.கிரிக்கெட் ஒன்டே மாட்ச்சில் முக்கியமான கட்டத்தில் ஏதோ விக்கெட் விழுந்து விட்டதைப் போல.
"சும்மா பயம் காட்டாதிங்க சார்.இதோ என் பக்கத்துல உட்கார்ந்திருக்காரே ராகவன்..பயந்திரப்போறாரு.எஃப்அன்ட்ஓவில அதுவூம் டாடாஸ்டீல்ல சிக்கிட்டிருக்காரு"
"அடப்பாவமே டாடா ஸ்டீல் ஏமாத்துவானே.ஷார்ட்டா போனிங்க.சார்ட்ல பாருங்க க்ளீனா தெரியூது.மேல போயிருவான்.."என்று யாராவது சொன்னால் ராகவனுக்கு அவசரமாக 1க்கு வந்து விடும்.எழுந்து டாய்லெட் போய் விடுவார்.
நம்ம சங்கரன் மெதுவாக ஜதி சொல்லிபடி உட்கார்ந்திருப்பார்.
"ஏன்வோய் எல்லாரும் ஷேர்மார்க்கெட்னா பயப்படறா" என்பார்.
"பின்னே இப்படி கத்தி பயமுறுத்தினா என்ன சார் பண்றது.சின்னப் பசங்க விளையாடறாப்ல பண்ணறிங்க.பக்கு இருக்கு"என்பார் நடுவில் உட்கார்ந்திருக்கும் நபர்.பத்திரிகை நிருபர்.ஆனால் பாதி நேரமும் இங்கேதான் இருப்பார்.
"ஃபியர் பேக்டர்னா(Fear factor) என்ன தெரியூமா"என்பார் சங்கரன்.
"என்னது பீரா. சார் அடிப்பீங்களா.மாமிக்கு தெரியூமா"என்பார் கடைசி வரிசை சார்லஸ் தேவசகாயம் ஆர்வமாக.
"ஃபியர்ப்பா.ஃபியர்னா பயம்.அது பண்ற வேலை இருக்கே.என்ன சுகமா இருக்கும் தெரியூமா"என்று சொல்லிக் கொண்டிருக்கும் சங்கரன் திடீரென குமுதாவைப் பார்த்த பாலகுமாரன் மாதிரி விசிலடிப்பார்.
"என்ன சார்..விழுது சார்.விழுது..டிவியைப் பாருங்க.எங்கேயோ புட்டுக்கிச்சி.பானிக் செல்லிங்(panic selling)காம்.சடசடன்னு மார்க்கெட் விழுது பாருங்க.போடுரா இப்ப ஆர்டரை.."என்று எடுரா வண்டியை என்று தமிழ்சினிமா பட வில்லன் மாதிரி நாலைந்து பங்குகளின் பெயர்களை சொல்லி அதில் புட் (put option) வாங்கச் சொல்வார்.அத்துடன் டெரிவேட்டிவ்வில் நிஃப்டி மற்றும் பாங்க் நிஃப்டியை ஷார்ட் அடிக்கச் சொல்வார்.
அவர் சொன்ன மாதிரியே சந்தை "பானிக் செல்லிங்கில்"(panic selling)சடசடவென விழுந்து கொண்டிருக்க இங்கே லாங் போனவர்களும் விழுந்து கொண்படிருப்பார்கள்.சிலர் ஸ்டாப்லாஸில் அடிபட்டுக்கிடப்பார்கள்.நம்ம சங்கரன் மட்டும் செமத்தியான லாபத்துடன் நிமிர்ந்து உட்கார்வார்.
"இப்ப புரியூதாவோய்"
"என்ன சார"; என்பார்கள் எல்லோரும். ஒரு பங்கின் விலை ஏறும்போது மெதுவாகத்தான் ஏறும்ஒவ்வொரு படியாக இல்லையென்றால் நாலைந்து படியாக குதித்துக் குதித்து ஏறுவதப் போல.ஆனால் ஒரு பங்கின் விலை விழுந்தால் மாடியிலிருந்து குதித்த மாதிரி ஜிவ்வூனு விழ ஆரம்பிக்கும்.அதனால தினம் டிரேடிங் பண்றதுங்க சின்ட்ரோமை கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு எப்ப எல்லாம் சந்தையில பயத்துல எல்லாரும் விக்க ஆரம்பிக்கறாங்களோ அதை பயன்படுத்தி நாம் காசு பார்க்கனும்.மாசத்துல நாலு நாள் டிரேடிங் பண்ணாலும் நச்சுனு பண்ணனும்.இப்ப ஃபியர் பேக்டர்னா என்னன்னு புரியூதா கண்ணுகளா...என்று ஜதி சொல்லியபடி எழுந்து நடக்க ஆரம்பித்து மறைந்து விடுவார்.
தினம் தினம் வந்து உட்கார்ந்து டிரேடிங் பண்ணும் மற்ற பெரிசுகள் பேயறைந்த மாதிரி பே என்று உட்கார்ந்திருப்பார்கள்.
அடுத்தவர் பயம் நமக்கு லாபம்.
இதுதான் ஃபியர் பேக்டர்(Fear factor). இந்த ஃபார்முலா இன்றைக்கும் பலிக்கிறது.செய்து பாருங்கள் இது போன்ற வாய்ப்பு வரும்போதெல்லாம்.
ConversionConversion EmoticonEmoticon