பங்குச்சந்தையில் இந்த அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.இன்ட்ரா டே டிரேடிங்கில் அதுவூம் சார்ட் பார்த்து டிரேடிங் செய்கிற பலரும் கேன்டில்ஸ்டிக் பார்த்து ஏமாந்ததை கதை கதையாகச் சொல்வார்கள்.சார்ட்பேட்டர்ன்கள் தற்போதைய சந்தைச் சூழலுக்குப் பயன் தராது.இதைப் பற்றி பிறகு தனியே எழுதுகிறௌம்.
இப்போது சொல்ல வந்தது இதைத்தான்.
ஒரு பொசிஷன் எடுத்திருப்பீர்கள்.நிஃப்டியோ ஆஃப்ஷனோ ஈக்விட்டியோ வாங்கி விற்க வேண்டும் என்று லாங் எடுத்து காத்திருக்கையில் சில நிமிடங்களிலேயே அது விலை இறங்கிக் கொண்டே ஸ்டாப்லாஸ் வரை கூட சில சமயம் வருவது போல இருக்கும்.அப்போது உள்ளே ஒரு குரல் கேட்கும் அதுதான் பேய்!
பொசிஷனை கட் செய்து வெளியே வந்திரு என்று அந்த குரல் சொல்லும்.சரி தொலையூது என்று நஷ்டத்தில் விற்றுவூடனே அது மறுபடி ஏற ஆரம்பித்து விடும்.ஏற ஆரம்பிப்பது மட்டுமல்லாமல் டார்கெட்டையூம் அடைந்து விட்டு பழிப்பு காட்டும்.
சரி வேறொரு பங்கை வாங்கலாம் என்று ஆர்டர் ஒரு குரல் கேட்கும்.உள்ளுணர்வூ சொல்கிறதே என்று வேறொரு குறிப்பிட்ட பங்கை வாங்கினால் அது வாங்கி அடுத்த நிமிடத்திலிருந்து இறங்கிக் கொண்டே போகும்.முதலில் வாங்கிய பங்கு போலவே இதுவூம் கீழே இறங்கி விட்டு நீங்கள் அவசரப்பட்டு விற்ற பிறகு மேலே போய்விடப்போகிறதே என்று வைத்திருந்து பார்த்தால் அது கடப்பாரை நீச்சல் அடிப்பது போல ஜிவ்வென்று கீழே இறங்கிப் போய் ஸ்டாப்லாஸையூம் கடந்து விழுந்து கொண்டிருக்கும் போது உள்ளேயிருந்து "பேய்" சொல்லும்.
விற்காதே.லாஸ் புக் பண்ணாதே.
நாளைக்கு மேலே போயிருவான்.இந்த செக்டாருக்கு நியூஸ் இருக்கு.நாளைக்கு யூரோப் யூஎஸ் மார்க்கெட்டெல்லாம் மேல போயிருமாம்.
டேஷ்டேஷ் சேனல்ல நியூஸ் போட்டிருக்கார்.அதையேதான் டிவியில தலை காலியான மனிதரும் நாற்காலியை தேய்த்தபடி அசைந்து கொண்டே சொல்லிக் கொண்டிருக்கிறார்.நாளைக்கு நிச்சயம் ஏறும் பார்.வேண்டுமானால் இன்னொரு லாட் வாங்கி வைத்துக் கொள்.
இப்படி "பேய்" சொன்னதைக் கேட்டு மறுநாள் காத்திருந்தால் அந்த பங்கு ஓப்பனிலேயே ஊற்றிக் கொள்ளும்.
இந்த அனுபவம் தந்த வெறுப்பில் மறுநாள் எந்தப் பங்கை பார்த்தாலும் இனி நேர்மையாக லாங் செல்வது தவறு.
எடுரா வண்டியை என்பது போல அடிரா ஷார்ட்டை என்று கண்ட பங்கையூம் மறுநாள் ஷார்ட் அடித்துத் தள்ள சரியாக பத்தரை மணிக்கு ஏதாவது செய்தியோ ஆர்பிஐ அறிவிப்போ வந்து சந்தையே ஜிவ்வென்று மேலே கிளம்ப ஷார்ட் அடித்து வைத்த அத்தனை பங்குகளும் நஷ்டத்தில் இருக்க தலை கால் புரியாமல் தவிக்கும்போது உள்ளுக்குள் இருக்கும் "பேய்" சற்றே புன்னகைத்து-
"நடையை மாத்து" என்று உசுப்பேற்றி விட நிஃப்டியில் அன்றைக்குப் பார்த்து லாங் எடுக்க திடுக் திடுக் என்று சந்தை சரிய ஹையர் லெவல் செல்லிங் என்று மீடியாக்கள் சந்திக்க டிவி சேனல் மனிதர் முழுமண்டையை தடவியபடியே நிஃப்டியை ஷார்ட் அடிக்க லெவல் தருவார்.அதற்கு முதல்நாள்தான் லாங் போகலாம் என்று சொல்லியிருந்திருப்பார்.
நீங்கள்ள உடனே நெர்வஸாகி மற்ற நண்பர்களையூம் தெரிந்தவர்களையூம் கேட்க அத்தனை பேரும் தொத்தல் வண்டியை வைத்துள்ளவர்கள் தன்னுடைய வண்டிதான் செம மைலேஜ் தருகிறது என்பது போல பீலா விடுவார்களே அது போல நாங்க எல்லாம் அப்பவே லாபத்தை புக் பண்ணிட்டாம் ப்ரோ...என்று உங்களை திகைக்க விட உள்ளுக்குள் "பேய்" இன்னும் உசுப்பி விட ஆரம்பிக்கும்.
அவர்களுக்கு நீ மட்டும் என்ன சளைத்தவனா.
அடுத்த மாச கான்ட்ராக்ட்டில் இருபது லாட் எதிர்திசையில் எடுத்து வை.இப்போது இறங்கும் மார்க்கெட் அடுத்த மாசம் எகிறும் என்று ஆசை வார்த்தை காண்பிக்கும் "பேய்" சொல்வதைக் கேட்டு மயங்கி மொத்த பணத்தையூம் சந்தையில் விட்டு விட்டு விழிப்பீர்கள்.
இங்கே "பேய்" என்பது பக்குவப்படாத உங்களது மனசாட்சிதான்.
பொதுவாக மனசாட்சி என்பது நல்லதைத்தான் சொல்லும்.நல்லதைதான் காட்டும் என்பது பொதுவாழ்க்கைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் வேண்டுமானால் சரிப்பட்டு வரும்.ஏன் பிசினஸிற்கு கூட சரிப்பட்டு வரும்.
ஆனால் ஷேர் டிரேங்கில் உள்ளுணர்வூ சொல்வது தப்பாகத்தான் போகும்.
காரணம் நீங்கள் ஷேர் டிரேடிங் பற்றி எதுவூம் படித்திருக்கவோ நுட்பங்களை கற்றுக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
அதுவே நீங்கள் ஷேர் டிரேடிங் நுணுக்கங்களை கற்றுக் கொண்டவரா இருந்தால் உங்கள் உள்ளே-
பேய் இருக்காது.
அதற்கு பதிலாக அங்கே இருப்பது-
அதிர்ஷ்டதேவதையாக இருக்கும்.அது மட்டுமல்லாமல் அது சொல்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கும்.
ConversionConversion EmoticonEmoticon