"வரவா?செலவா? எது பெரிது?"
தினமும் காலையில் செய்தித்தாளை வாசிக்கிறீர்கள்.வாட்ஸ்அப்பிலோ முகப்புத்தகத்திலோ குட்மார்னிங் சொல்கிறீர்கள்.யாரோ அனுப்பும் தகவல்களை பரிமாறிக்கொள்கிறீர்கள்.அப்புறம் அலுவலக வேலைகளில் மூழ்கி விடுகிறீர்கள்.ஏதாவது ஃப்ளாஷ் செய்தி வந்து கொஞ்ச நேரம் பரபரப்பாக இருந்து விட்டு மறைந்து விடுகிறது.
சாயந்தரம் வீட்டுக்கு வந்தால் டிவி சீரியலோ மொபைலில் சோஷியல்நெட்வொர்க்கோ உங்களைப் பிடித்துக் கொள்கிறது.இதற்கிடையே ஒரு சின்ன அசைன்மன்ட் செய்துப் பார்த்திருந்தால் இந்நேரம் அதிர்ச்சியில் மாரடைப்பே உங்களுக்கு வந்திருக்கும்.
அதென்ன அசைன்மன்ட்.
கடந்த ஒரு வருடமாக நீங்கள் ஒவ்வொரு மாதமும் செலவூ செய்கிற மாதாந்தர குடும்ப பட்ஜட்டை எடுத்து மொத்த செலவூகளை மட்டும் கணக்கெடுத்துக் கொண்டே வந்திருந்தீர்களானால் மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கும்.
மாதாமாதம் செலவூகள் கூடிக்கொண்டே வந்திருக்கும்.ஆனால் வருமானம்?
அதே மாத சம்பளம்தான்.இன்க்ரிமென்ட் கூட வருடத்திற்கு ஒரு முறை ஏனோதானோ என்று வருவதையூம் நீங்கள் உணர்ந்திருக்கலாம்.
இப்போது எல்லோரும் சொல்லும் ஒரு வாசகத்தைக் கேளுங்கள்.இந்த வாசகத்தை காலம் காலமாக வீட்டிலுள்ள பெரியவர்களும் மற்றவர்களும் சொல்லிக்கொண்டே இருந்திருப்பார்கள்.அந்த வாசகம் இதுதான்.
'விரலுக்குத் தகுந்த வீக்கம்"
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே இந்த வாசகத்தை.குறிப்பாக மிடில்கிளாஸ் வீடுகளில் உள்ள அனுபவப்பட்ட பெரியவர்கள் இதனை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.கிரிடிடெட் கார்டு மனோபாவத்தில் திளைக்கும் நுகர்வூ நோய் கொண்ட இளையவர்களால் இந்த வாசகத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாமல் பெரியவர்களை வெறுப்போடு பார்ப்பார்கள்.
இதையே இன்னும் லைட்டாகச் சொல்லலாம்.
'வரவூக்குத் தகுந்த செலவூகள்தான் வேண்டும்"
அதாவது என்ன வருமானம் வருகிறதோ அதற்குள்தான் செலவூகளைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் நிஜத்தில் அப்படி செய்ய முடிகிறதா.சின்னத் துரண்டிலை வைத்து திமிங்கலத்தைப் பிடிப்பது போலல்லவா செலவூகளை சமாளிப்பது இருக்கிறது.
ஆக வரவூக்குத் தகுந்த செலவூகள் என்பது தோற்றுப் போன கான்சப்ட்.அப்படியானால் எது வெற்றிகரமான கான்சப்ட்.அதைத்தான் என் அனுபவத்தில் நான் கண்டுபிடித்த வெற்றிகரமான கான்சப்ட்டாக இதைக் கருதுகிறேன்.அதனை கீழே சொல்லியிருக்கிறேன் பாருங்கள்.அது உங்களுக்கும் பிடிக்கும்.
'செலவூக்கு தகுந்த வரவூ"
தோசையைத் திருப்பிப் போட்ட மாதிரிதான்.வரவூக்குத் தகுந்த செலவூ என்பதை செலவூக்குத் தகுந்த வரவூ என்று திருப்பிப் போட்டிருக்கிறேன்.ஆனால் இதனை உள்ளார்ந்து கவனித்துப் பார்த்தால் உங்களையே புரட்டிப்போட்டு விடுகிற மாதிரி சில விஷயங்களை இங்கே கவனிக்க வேண்டிய அம்சங்கள் உள்ளன.
அதென்ன அப்படி புதுமையாக.
உங்களது செலவூகள் என்பது குடும்பத்தினர் ஒவ்வொருவருவரின் தேவையை முன்னிட்டு பல்வேறு விதத்தில் பல்வேறு திசையில் அமைகிறது.ஆனால் உங்களது வருமானம் மட்டும் ஒரே விதமான வேலையிலிருந்தோ ஒரே விதமான பிசினசில் இருந்தோதான் வருகிறது.
ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட வருமானத்திற்கு நீங்கள் முயற்சிக்கவில்லை?
ஒன்றுக்கு மேற்பட்ட வருமானமா?இந்த ஒரு வேலையிலேயே பென்டு கழன்று விடுகிறது.அப்படா என்று அடித்துப் போட்ட மாதிரி துரக்கம் வந்து விடுகிறது என்று உங்கள் மனம் சொல்வதெல்லாம் சும்மா புருடா.பொய்ச்சமாதானம்.உங்களை உங்கள் மனம் ஏய்க்கிறது என்பதுதான் உண்மை.உங்களது முழுத்திறனையூம் காசாக்க விடாமல் உங்கள் மனமும் உங்களது சோம்பேறித்தனமும் கை கோர்த்துக் கொண்டு உங்களை அப்படியே மிடில்கிளாஸ் என்னும் சிறையில் அடைத்து வைத்திருக்கிறது.
ஒரு சின்ன விஷயம் பாருங்கள்.
திரைப்பட கதாநாயகர்கள் ஒரு படத்தில் சும்மா நடித்துக் கொடுத்தால் போதாதா?அவர்கள் கதைப்படி நடிக்க வேண்டும்.நடித்தற்கு டப்பிங் பேச வேண்டும்.நடிப்புடன் பாடி ஆட வேண்டும்.நகைச்சுவைக் காட்சியிலும் பங்கேற்க வேண்டும்.சண்டைக்காட்சியிலும் உடலை(டூப் நடிகர்கள் இருந்தாலும் கயிற்றில் கட்டி இழுத்தால் தொங்கத்தானே வேண்டும்) வருத்திக் கொள்ள வேண்டும்.இப்போதெல்லாம் ப்ரமோ என்ற பெயரி;ல் டிவிக்களிலும் வந்து உட்கார்ந்து படத்தைப் பற்றி பேச வேண்டும்.நடித்துக் கொடுத்ததுடன் வேலை முடிந்தது என்று இல்லாமல் டிவிட்டரில் படத்தைப் பற்றி அப்டேட் கொடுத்து முட்டுக் கொடுக்க வேண்டும்.
இத்தனை உப வேலைகளை செய்வதால்தான் அவர்களுக்கு அத்தனை பெரிய சம்பளம்.வருமானம்.
நீங்கள் ஒரே ஒரு சின்ன வேலையை செய்து கொண்டு அதில் வெட்டி முறிப்பதாக உங்களை உங்கள் மனம் பொய்யாக நம்ப வைத்துக் கொண்டிருக்கிறதே அதிலிருந்து முதலில் விடுபடுங்கள்.
விடுபட்டு?
ஒன்றிற்கு மேற்பட்ட வேலையை செய்ய முடியூமா என்று பாருங்கள்.உங்கள் அலுவலகத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு உங்களை அங்கே 'தவிர்க்க முடியாத' நபராக ஆக முடியூமா என்று பாருங்கள்.
பணம் தானே வரும்.
ConversionConversion EmoticonEmoticon