"போதாது"
நமது பெரியோர்களும் ஆன்மீக சான்றௌர்களும் நீங்கள் எவ்வித மனஉளைச்சலும் அவதிகளும் இல்லாமல் இந்த வாழ்க்கையை சுகமாக நிம்மதியாக மனதிருப்தியூடன் வாழ வேண்டுமென்றுதான் பலவிதமான அறிவூரைகளும் கோட்பாடுகளும் அமைத்துக் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அவற்றில் சிலவற்றை நீங்களே கூட தெரிந்து வைத்திருப்பீர்கள்.
1.அடக்கமாக இருப்பது.
2.பேராசையற்று இருப்பது.
3.இருப்பதை வைத்துக் கொண்டு வாழ்வது
4.பறப்பதற்கு ஆசைப்படாமலிருப்பது.
5.சிக்கனமாக இருப்பது.
இப்படி ஒரு பட்டியல் போட்டால் போட்டுக் கொண்டே போகலாம்.அவர்கள் நமக்கு பெரும் சொத்தாகக் கொடுத்து வைத்து விட்டுப் போயிருப்பதில் மிக முதன்மையானது "போதுமென்ற மனமே பொன் செய்யூம் மருந்து" என்பதுதான்.
இதில் நான் பெரிதும் மாறுபடுகிறேன்.
உணவைப் பொறுத்தவரை "போதுமென்ற மனம்" என்கிற கான்சப்ட் சரியானது.ஆனால் பணம் சம்பாதிப்பதைப் பொறுத்தவரை வசதியாக வாழ்வதைப் பொறுத்தவரை?
போதுமென்றிருந்தால் சரியாக வருமா?
உங்களுக்கு ஒரு வேலை கிடைத்தாகி விட்டது.திருமணமாகி விட்டது.குழந்தைகள் பிறந்து விட்டார்கள்.ஒரு ஸ்கூட்டரோ பைக்கோ இருக்கிறது.வாடகை வீடுதான்.ஆனாலும் இனிமையாக இருக்கிறது.பிறரிடம் கையேந்தாமல் வரவூக்குள் குடும்பம் கட்டு செட்டாகப் போய்க்கொண்டிருக்கிறது.
ஆனால் நாளைக்கு?அதன்பின் வரும் வருடங்களுக்கு?
இப்படியே வாழ்க்கை போய்க்கொண்டிருந்தால் சரியாகத்தான் இருக்கும்.போதுமென்ற மனமே பொன்செய்யூம் மருந்து என்று பொத்தினாற்போல உட்கார்ந்து கொண்டு இருக்கிற வேலையைப் பார்த்துக் கொண்டிருந்து விடலாம்.
ஆனால் தேவைகள் குறைவானதாக இருந்தால் கூட அதை அடைவதற்கான பணம் போதுமான அளவில் இருக்கிறதா?
இதைத்தான் எனது முந்தைய அத்தியாயத்தில் தெரிவித்திருந்தேன்.இப்போதே நீங்கள் சுதாரித்துக் கொள்ளாவிடில் ஷாப்பிங் மால்களுக்கு சென்று அங்கேயூள்ள விலையூயர்ந்த பொருட்களை வாங்க முடியாமல் 'விண்டோ ஷாப்பிங்" செய்வதைப் போல வசதியாக அடுத்தவர்கள் வாழ்வதை எதிர்காலத்தில் நீங்கள் வெறும் வேடிக்கை மட்டுமே பார்க்கக்கூடிய 'விண்டோ லிவிங்" வந்து விடும் என்று.
இதனை வாசித்த அன்பர்கள் எங்களது கண்களைத் திறந்து விட்டிருக்கிறீர்கள் என்று சொல்லி நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
என்ன சொல்ல வந்தேன்?
நமது முன்னோர்கள் எழுதி வைத்ததெல்லாம் சரிதான்.ஆனால் அவர்கள் காலத்தில் பொருளாதார தாராளமயமாக்கல் இல்லை.டாலர்களோ மற்ற நாட்டு கரன்சிகளோ நமது கரன்சியை அழுத்தி மிதித்துக் கொண்டிருக்கவில்லை.குரூடாயிலோ சைனாவின் நிதிச்சரிவோ நம் முன்னோர்களை அப்போது பாதித்திருக்கவில்லை.பாதித்திருந்தால் நிச்சயம் போதுமென்ற மனம் என்பதற்கு பதிலாக அவர்களுமே "மாற்றி யோசி'த்திருந்திருப்பார்கள்.
சென்ற வருடம் வாங்கிய விலையிலா இந்த வருடம் துவரம்பருப்பு விற்கிறது.சென்ற வருடம் ஆன தொகைக்ககாகவா இந்த வருடமும் மாத மளிகைசாமான் செலவூ ஆகிறது
கணக்குப் போட்டுப் பாருங்கள்.
எப்படிப் பார்த்தாலும் 20 முதல் 40 சதவீத விலைஉயர்வூ எல்லாவற்றிலும் இருந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் தலை சுற்றும்.இதைப் பற்றியெல்லாம் நீங்கள் சிந்தித்து விடக்கூடாதென்றுதான் டிவி சீரியல்களும் சூப்பர் சிங்கர்களும் மானும் ஆட மயிலும் ஆட என்று உங்களைக் கட்டிப்போடுகிறது.
ஒரு விஷயத்தை உள்ளார்ந்து யோசித்தால் டிவியின் சானல்களை மாற்ற நீங்கள் ரிமோட்டை எடுக்கவில்லை.டிவிதான் உங்களை தன்னுடனே வைத்துக் கொள்ள ரிமோட்டை எடுக்கிறது.
ஆக அடுத்தடுத்து வருகிற ஆண்டுகளில் உங்களது ஒரே சீராக ஏறும்.ஆனால் உங்களது தேவைகளுக்கான செலவூகள் என்பது ஒரே சீராக ஏறாது.
எப்படி சமாளிக்கப்போகிறீர்கள் இதையெல்லம் என்பது பற்றி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.முதலில் உங்களது மனோபாவத்தை மாற்றுங்கள்.
எதை உடனே மாற்ற வேண்டும் தெரியூமா?
நம் முன்னோர்கள் சொன்ன அந்த மந்திர வாக்கியத்தைத்தான் சற்று மாற்ற வேண்டும்.
அதாவது-
'அது உருண்டை அல்லவே அல்ல...'ச்சே! அந்த ஏர்டெல் பெண்ணை வெளியே தள்ளுங்கள்.
"போதாது என்ற மனமே பொன் செய்யூம் மருந்து"
இதுதான் இனி உங்களது மந்திர வாக்கியமாக இருக்க வேண்டும்.எங்கே ஒரு தரம் சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள்.
"போதாது என்ற மனமே பொன் செய்யூம் மருந்து"
இந்த மனோபாவம் மட்டும் வந்து விட்டால் அப்புறம் தானே வழி பிறக்கும் பணம் சம்பாதிக்க.மேன்மேலும் பணம் சம்பாதிக்க.
ConversionConversion EmoticonEmoticon