பூசுரப் படலம் :- திருஅண்ணாமலையினுள்ளே சகல கோடி அண்டங்களும் அடங்கியுள்ளன. பரம்பொருளே திருஅண்ணாமலையாய் வீற்றிருப்பதால் அவ்விடத்திலேயே அனைத்து தெய்வீக ரகசியங்களின் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. வருகின்ற 27.7.2018 28.7.2018 அன்று ஏற்படும் சந்திர கிரஹணத்தின் போது சந்திர பகவான் தன்னுடைய கலைகளையும் சக்திகளையும் கேதுமூர்த்தியிடமும் – சூரிய பகவான் தன்னுடைய பாஸ்கர அக்னி அமிர்த சக்திகளை ராகுவிடத்திலும் அர்ப்பணம் செய்கின்றனர்.. எவ்வாறு? பூலோகத்திலுள்ள ஜீவசமாதிகள், தீர்த்தங்கள், மூலிகைகள், கோயில்கள் போன்ற புனிதப் பொருட்களின் மூலமாக சந்திர கிரஹணத்தின் போது திருஅண்ணாமலை ஒரு பூசுரப் படலம் உருவாகின்றது. புனிதமான மேகங்கள்,
அண்ணாமலையினுள் கோடிக்கணக்கான ஆபரணக் கற்கள் சுயம்புக் குண்டலங்களாய் அமிழ்ந்துள்ளன. இவற்றுள் தண்டல சுயம்புக்கல் என்பது இறைவனுடைய திருக்கண்களில் இரப்பைகளிலிருந்து (eyelids) தெளித்த அற்புதக் கற்களாகும். இது எவ்வாறு பிறந்தது தெரியுமா? சூரிய, சந்திரர்களே இறைவனுடைய திருக்கண்களாவர். அம்பிகையானவள் இறைவனுடைய கண்களை விளையாட்டாகப் பொத்திட, ஈஸ்வரியின் தெய்வீக ஸ்பரிசத்தால் பேரானந்தம் அடைந்த இறைவனின் கண்களின் இரப்பைகள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்த போது உருவானவையே தண்டலக் கற்கள். இவற்றின் எல்லையில்லாப் பிராகாசத்தில் உருவானவையே சந்திர காந்தக் கற்களாகும். (MOON STONE VARIETY). தெய்வீக சக்திகள் தண்டலக்கல் மூலமாக ராகு கிரஹத்திற்கும் சந்திரபகவானின் மௌளீஸ்வர சக்திகள் கேதுவையும் அடைகின்றன. குறிப்பிட்ட நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கின்ற கிரஹண நேரத்தின் போது மட்டுமே தண்டல சுயம்புக் கல் திருஅண்ணாமலையின் மேல் முகிழ்ந்து மேலே வரும். பூசுரப் படலமானது இவ்வொளியைச் சூழ்ந்து கொள்ளும், ஏனெனில் இதனுடைய ஒளி பிரவாஹத்தைக் காணும் சக்தி சாதாரண மனிதர்களிடம் இருப்பதில்லை. குருவருள் திரண்டோர்க்கு இக்காட்சி கிட்டுவதுண்டு. அல்லது இதனை உய்த்துணரும் தெய்வீக நிலையைப் பெறுவதுண்டு. சில சமயங்களில் தேவாதி தேவமூர்த்திகளும் சித்தர்களும் மகரிஷிகளும் மின்மினிப் பூச்சி வடிவம் கொண்டு திருஅண்ணாமலையை வலம் வந்து தண்டலக் கல்லின் அருளொளிப் பிரவாஹத்தைக் கிரிவலம் வருவோரின் தேகங்களில் ஊட்டுவதுண்டு. எனவே ஆடி பௌர்ணமியில் (28.7.2018) சந்திர கிரஹணம் ஏற்படும் இந்நாளில் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவோர்க்கு சூரிய, சந்திர, ராகு, கேது மூர்த்திகளின் அருள் ஒன்றாகக் கிட்டுவதோடு பலகோடி விண்மண்டலங்களுக்கு ஒளிக்கிரணங்களை அனுப்புகின்ற தண்டலக்கல்லின் அனுகிரஹத்தையும் பெற்றிடலாம். வயிற்று நோய்கள், கழுத்து நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.
சந்திர கிரஹண அருணாசல கிரிவல முறை
1. ஆண்கள் மேல்சட்டை அணியாது கிரிவலம் வர வேண்டும்.
2. பெண்கள் தங்கள் குடும்பப் பாரம்பரியத்திற்கு ஏற்ப கச்ச முறையில் (மடிசார்) ஆடையணிந்து இறைநாமம் ஓதியவாறே மந்திரமாய் மாறி, மந்திரமே மந்திர தேவதையாய்/ மந்திர தேவதையே கார்யசித்தி தந்து காட்சியளிக்கும்.
3. கர்பிணிப் பெண்கள் கிரஹண நாட்களில் வெளி வருதலோ, கிரிவலம் வருதலோ கூடாது.
4. எவ்வளவோ நல்ல காரியங்களுக்காக நாம் கைக்கொண்ட விரதங்கள், பூஜைகள், பலனளிக்கவில்லையே என்று பலர் ஏங்குகின்றனர். சந்திர கிரஹண அண்ணாமலை கிரிவலமானது விரதங்கள் பூஜைகளின் பரிபூரண பலன்களைத் தரும். ஏனெனில் குறிப்பிட்ட கர்மவினை கழியும் வரை விரத பூஜா சக்திகள் விண்வெளியில் பட்டம் போல் நிற்கும். கர்மவினைகளைக் கழிக்கின்ற கவின்மிகு க்ஷேத்திரமே திருஅண்ணாமலை.
5. மந்திர சித்திகள் பெறுவதற்கு, குறிப்பாக சந்திர கிரஹணத்தன்று திருஅண்ணாமலை கிரிவலம் சிறந்தது. சூரிய, சந்திர மூர்த்திகள் சந்திர கிரஹணத்தில் ராகு அல்லது கேது கிரஹத்திற்கு தம் தபோ சக்தியை அளிக்கின்ற நேரமாக அமைவதால் அச்சந்திர கிரஹண காலமானது, சக்தி மிக்க ராகு அல்லது கேதுவின் ஆட்சியில் அமைகின்றது. முன்னரே கூறியுள்ளபடி ராகுகால பூஜைபோல், சந்திர கிரஹணத்தில் ராகுவும் கேதுவும் ஆட்சி செய்வதால் இத்தகைய பிரதம ராகு காலத்திலும், பிரதம கேது காலத்திலும் இயற்றுகின்ற பூஜைகளின் பலன்கள் பன்மடங்காகின்றன.
அடியார்: குருவே, சூரிய சந்திர கிரஹணத்தின் போது வெளியில் செல்லாமலிருப்பதே சிறப்புடையது என்பது உண்மையா?
குரு : இன்று சில புனிதப் பொருட்களை, அணிந்தோ, கைகளில் தாங்கியோ தெய்வத் தலங்களுக்குச் செல்லலாம். கிரஹணத்தில் எவ்வாறு மற்ற பூஜைகளின் பலன்கள் பன்மடங்காகிறதோ அதே போன்று சர்வேஸ்வரனாய் வீற்றிருக்கும் திருஅண்ணாமலையானை கிரிவலம் வருதல் ஓர் உத்தம பிரதட்சிண பூஜையாகும். ஆகவே இதன் பலன்களும் பல்கிப் பெருகும். கிரஹண நேரத்தில் வெளிவர விரும்பாதோர் கிரஹண நேரத்திற்கு முன்பே கிரிவலத்தைத் தொடங்கி கிரஹண நேரத்தின் போது கிரிவலப் பாதையில் ஏதேனும் ஒரு அஷ்டலிங்க சந்நதியில் குறிப்பாக சந்திர லிங்க அல்லது சூரிய சந்நிதியில் தியானம் யோகம், ஹோமம், தர்ப்பணம் , தான தருமங்களோடு “ஓம் நமச்சிவாய” என்றோ அல்லது
“நமசிவய
சிவாயநம
சிவயசிவ
சிவசிவ”
என்ற சித்புருஷர்களின் சிவதாரக மந்திரத்தை கிரஹண நேரமுழுவதும் ஓதியபின் கிரிவலத்தை தொடரலாம். அல்லது கிரஹணத்திற்கு முன்பே கிரிவலத்தை முடித்து, கோயிலிலோ, இல்லத்திலோ இப்பூஜைகளை மேற்கொண்டிடலாம்.. கிரஹண நேரம் முழுவதும் திருஅண்ணாமலை கிரிவலத்திலேயே லயித்திருத்தல் மிகவும் சிறப்புடையதாகும்.
சந்திர கிரஹண கிரிவல சிறப்பு – பிரண்டல கிரஹண பிரதட்சிணம்
1 சந்திர கிரஹணம் தொடங்குவதற்குச் சற்று முன் கிரிவலத்தைத் தொடங்கி கிரஹண நேர முழுவதையும் கிரிவலத்தில் கழித்து, கிரஹணம் முடிந்த பின்னர் கிரிவலத்தைப் பூர்த்தி செய்வதே பிரண்டல கிரஹண கிரிப்பிரதக்ஷணம் எனப்படுகிறது. இம்முறையில் கிரிவலம் வருவோர் தாயின் ஆசியைப் பெறுவர். தீய வழக்கங்களை உடையோரின் வாழ்க்கையில் நல்லதொரு திருப்பம் ஏற்படும். தடங்கிய திருமணம் கைகூடும். நல்ல உத்யோகம் கிட்டும்.
2. சந்திர கிரஹணம் தொடங்குவதற்கு முன்பே கிரிவலத்தைத் தொடங்கி கிரஹண நேரம் முடிவதற்குள் கிரிவலத்தை முடித்தலை அர்த்த மூல கிரஹண பிரதக்ஷ்ணம் என சித்தர்கள் அருள்கின்றனர். இதன்படி திருஅருணாசலத்தை வலம் மேற்கொள்வோர். தந்தையின் ஆசியைப் பெற்று கடும் நோய்களிலிருந்து குணமடைந்து நல்ல உடல் ஆரோக்யத்தைப் பெறுவர். குழந்தைகள் உடல் நிலைதேறும்.
3. கிரஹணம் தொடங்கிய பின்னர் கிரிவலத்தைத் தொடங்கி கிரஹணம் முடிந்தபின்னர் கிரிவலத்தை நிறைவு செய்வதை பூத கிரஹண பிரதக்ஷ்ணம் என இயம்புகின்றனர். பெரியோர் இம்முறையில் கிரிவலத்தைக் கடைபிடிப்போருக்கு பல காலங்களாகத் தடை பட்டிருந்த நற்காரியங்களுக்குத் தடை நீங்கி நல்ல முடிவு கிட்டும். நிலம், அலுவலகம், உத்யோக உயர்வு போன்றவற்றில் இருக்கும் சிக்கல்கள் நீங்கி இறையருளால் நன்மை நடக்கும். மேலே குறிப்பிட்டுள்ள எம்முறையில் கிரிவலம் வந்திடினும் கிரிவலத்தின் போது தேவையற்ற வீண் பேச்சிற்கும் மற்ற சிந்தனைகளுக்கும் இடமளித்திடாமல் முடிந்தவரை இறைச்சிந்தனையில் மனதை லயித்து இறைநாமத்தை ஓதிடல் சாலச்சிறந்தது. ஏனெனில் இன்று பல விதமான பூச்சிகளின் வடிவில் வலம் வரும் மஹான்களும், சித்தர்களும், யோகியரும் ஜப சக்திகளைப் பிரதிபலித்து அனுகிரஹங்களாக அனைவரின் மீதும் வர்ஷிக்கின்றனர். ஆகவே சந்திர கிரஹணத்தின் போது அருணை கிரிவலம் கிடைத்தற்கரிய ஒரு பெரும் பாக்கியம் என்பதை அனைவரும் உய்த்து உணர்வீர்களாக!
சந்திர கிரஹணத்திற்கான மந்திரம் : சந்திர கிரஹணத்தின் போது, கீழ்க்கண்ட மந்திரத்தைப் பனை ஓலைகளில் எழுதி நெற்றியில் பட்டம் போல் கட்டியிருத்தல் சிறப்புடையதாகும். பனை ஓலையில் உள்ள “தாளத்வீபம்” என்ற தெய்வீக சக்தியுடைய ரேகைகள் அமிர்தசக்தியை ஈர்த்து நெற்றியில் கபால நரம்புகளுக்கு அளிக்கின்றன. காகிதத்திலேனும் எழுதி வைத்துக் கொண்டு துதித்திடுக! கடுமையான நோய்கள் தணியவும், பிறருடைய நோய் நிவாரணத்திற்கும் சங்கல்பம் செய்து கிரஹண நேரத்தில் நெற்றிப் பட்டையுடன் பூஜை, ஹோமம், தான, தர்மங்களுடன் கிரிவலம் வந்து சந்திர கிரஹண முடிவில் தர்ப்பணம் செய்வது சிறப்புடையதாகும். சந்திர கிரஹணத்தின் போது ஜபிக்க வேண்டிய மந்திரம் :-
ஸ்ரீவசிஷ்டேஸ்வரர்
திட்டை தஞ்சாவூர்
குபேர ஈசோக்நந் த்விந்தூப ராகோத்த வ்யததாம் மம||
சந்திரகாந்தக் கல் மஹிமை : தஞ்சாவூர் – திருக்கருகாவூர் அருகே தென்குடித் திட்டையில் உள்ள ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் சிவாலயத்தில் பிரமாந்திரத்தில் சந்திரகாந்தக் கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. திருஅண்ணாமலையில் பலகோடி யுகங்களுக்கு முன் சந்திர கிரஹண நேரத்தில் ஒளிமிகுந்த தண்டல சுயம்புக் கல்லை தரிசிக்கும் பேறு பெற்று ஸ்ரீவசிஷ்ட மஹரிஷியும், ஹேரம்ப மஹரிஷியும் தண்டலக் கல்லின் பிரகாசத்தின் ஓர் அணுவை கிரஹித்துத் தென்குடித் திட்டைக் கோயிலின் பிரமாந்தரத்தில் பிரதிஷ்டை செய்தனர். சுமார் அரைமணிக்கு ஒரு முறை சந்திர காந்தக் கல்லின் அமிர்தத் துளி மூலவரின் லிங்கத் திருமேனியில் விழும். தற்போது இது சூட்சுமமாகவும் நிகழ்வதுண்டு. சந்திர கிரஹணத்தின் போது திட்டை ஸ்ரீவசிஷ்டேஸ்வரருக்கு கறந்த பசும் பால், வெள்ளை நிற மாதுள முத்துக்களாலும் அபிஷேக, அலங்காரங்கள் செய்து ஏழைகட்கு வெண்ணிற உணவு, ஆடைகளைத் தானமளித்து வர மனநோய்கள் குறையும். கபால நோய்கள் குணமாகும். மனவேறுபாடுகளில் பிரிந்த தம்பதியினர், உறவுமுறைகள் ஒன்று சேர்வர். இன்று இங்கு ஜெபம் செய்வது சிறந்த ஏகாந்த மனோநிலையைப்பெறும்.
தர்பையோடு கிரிவலம் வருக! – 27.7.2018 28.7.2018 – சந்திர கிரஹண கிரிவலம்
திருஅண்ணாமலையையோ ஏனைய தெய்வீக மலைகளையோ (குன்றக்குடி, பழனி, பர்வதமலை சந்திர கிரஹணத்தன்று கிரிவலம் வருகையில் நெற்றிப்பட்டம் கட்டியோ கையில் தர்ப்பைப் புல்லைத் தாங்கியோ கிரிவலம் வந்திடில் மிகவும் விசேஷமானதாகும். ஏனெனில் தர்பையானது எவ்வித கிரஹண ரேகைகளையும் தாங்கி நம் உடலுக்கு ஏற்றவாறு அவற்றைத் தரும் சக்தியுடையது. நெற்றிப் பட்டம் என்பது ஒரு பனை ஓலையில் சந்திர கிரஹண மந்திரத்திற்கான மந்திரத்தை மேலே பார்க்க எழுத்தாணி, பேனா, பென்சிலால் ,எழுதி நெற்றியில் பட்டைபோல் கட்டி அதில் தர்பைப் புல்லைச் செருகுவதாகும்.
எனவே வரும் 27.7.2018 28.7.2018 அன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வருகையில், கையில் ஒரு தர்பைப் புல்லையாவது தாங்கி வருதல் புனிதமானதாகும். வசியுள்ளோரும் கிராமத்தவர்களும் கட்டுகட்டாகத் தர்பையைக் கொண்டுவந்து கிரஹண நேரத்தில் கிரிவலம் வருவோர்க்குத் தானமாக அளித்தல் ஸ்வர்ண (தங்க) தானத்திற்கு ஈடான பலன்களை தரும்.திருஅண்ணாமலையில்) இயன்ற வரையில், கிரிவலம் வருவோர்க்கு ஒரு தர்பைப் புல்லையாவது இன்று தாருங்கள் இயன்றவர்கள், கிரிவலம் வருவோர்க்கு அளிப்பதற்காக, தர்ப்பைப் புல் கட்டுகளை அளித்திடலாம். தர்பையை மட்டுமன்றி ரோஹிணி, கொஞ்சுருட்டி, அஞ்சலாடை போன்ற மூலிகைகளையும் தாங்கி இன்று கிரிவலம் வந்திடலாம். அறிந்தோ அறியாமலோ இன்று ஏதேனும் ஒரு நல்மூலிகையைத் தாங்கி கிரிவலம் வருவோர்க்கு அதனதற்குரித்தான பலன்கள் கிட்டும். அமிர்த சக்திகளைத் தரும் கிரிவலம்! சூரிய, சந்திர, ராகு, கேது கிரஹ அனுகிரஹங்களைத் தரும் கிரிவலம்! எத்தகைய கடுமையான நோய்களுக்கும் நிவாரணம் தந்து நீடித்த ஆயுளையும் சுமங்கலித்வத்தையும் தரவல்ல கிரிவலம்! (கிரிவலத்தை முடித்த பின் தர்பையை நீருள்ள நல்கிணற்றிலோ அல்லது கோயில் குளத்திலோ சேர்த்து விட்டுத் தர்ப்பணம் செய்து நீராடுதல் நலம்.)
ConversionConversion EmoticonEmoticon