நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் வணக்கம்.கடந்த தினம் எம்மை சந்திக்க வந்த நண்பர் ஒரு யந்திரத்தை என்னிடம் காண்பித்து இது குபேரர் யந்திரம் இதை எனது வியாபார தலத்தில் வைத்து பூசித்து வந்தால் வியபார விருத்தியும் நல்ல மேன்மையும் ஏற்படும் என்று எனது மனைவி கோவில் வளாகத்தில் வாங்கிவந்து உள்ளார்.இது சாத்தியமா?இவைகள் இதுபோல செயல்படுமா என்று கேள்வி எழுப்பினார்.இவரை போல நாமும் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் பலவிதமான யந்திரம்களை விற்பனை செய்வதை கண்டு உள்ளோம்.இவைகளை விற்பனை செய்ய அவர்கள் கூறும் பொய்களை நாம் கவனித்தும் உள்ளோம் நண்பர் சொல்வது போல இவைகளை வைத்து பூசித்து வந்தால் செயல்படாது.இவைகளுக்கு மந்திர உச்சாடனம்கள் தேவை உயிர்ப்பிக்கும் சக்திகள் தேவை.முதலில் யந்திரம் என்பது என்ன என்று நாம் சில விவரங்களை தெரிந்து கொள்ளவேண்டும்.
ஒரு மனையில் வீடு அல்லது மாளிகையை நாம் கட்ட முடிவு செய்த பொழுது நாம் முதலில் ஒரு பொறியாளரின் துணையோடு ஒரு வரைபடத்தை உண்டாக்கி கொள்வோம்.பிறகு அந்த வரைபடத்தின் நுணுக்கத்தோடு அந்த மாளிகையை கட்டி முடிபோம்.
நிறைவு பெற்ற பின் நாம் அதில் குடியேறுவோம் சிறுது காலம் கழித்து நாம் சில மாற்றம்களை கட்டிடத்தில் செய்ய நினைத்தால் அந்த வரைபடத்தை கவனித்து மாற்றம்களை செய்வோம்.காலத்தால் அந்த கட்டிடம் சிதைப்பட்டுவிட்டால் மற்று ஒரு பொறியாளரிடம் அந்த வரைபடத்தை காண்பித்து அவரின் துணையால் அதை மீண்டும் உயர்ந்திடுவோம்.
இது போல ஒரு தெய்வத்திற்கு கோவிலை அமைக்க அந்த தெய்வத்தின் அக்ஷரதையும் பரிவார தேவதைகளை குறிப்பிடும் அக்ஷரம்களையும் குறிப்பிட்டு அது எப்படி அமரவேண்டும் என்ற தகவலை ஒரு வரைபடமாக உண்டாக்கி நிறைவாக அந்த வரைபடத்தை மூலஸ்தானத்தில் உள்ள தெய்வத்தின் அடியில் பதித்து நிறைவு செய்து அதன் அக்ஷரத்தின் மூல மந்திர உச்சாடனத்தை தர்ப்பை புல்லில் உருவேற்றி கொடிமரத்தில் அமர்த்துவார்கள்.பிறகு மூன்றகால பூசைகள் என்று மூலஸ்தானத்தில் மந்திர உச்சாடனம் ஏற்படும் பொழுது தெய்வத்திற்கும் பரிவார தேவதைகளும் உயிர் சக்திகள் உண்டாகும் என்பது தான் உண்மை.
கோவிலை புனரமைக்கும் வேளையில் அந்த வரைபடத்தை கண்டு எடுத்து அதில் உள்ள தகவலை அறிந்து செய்ய இந்த ஏற்பாடுகளை செய்து வைத்தனர்.இங்கே வரைபடம் என்பது மறைமுக மொழி கொண்ட யந்திரம்.பலவிதமான வடிவம்களையும் எழுத்து அடையாளம்காளையும் கொண்ட இந்த மொழியை படித்தவர்கள் மட்டுமே யந்திர தத்துவம்களை அறிவர் என்று நம் பகுத்தறிவு சொல்கிறது.ஆனால் நம் சித்தாந்தம் சொல்வதோ எவர் யந்திரத்தை உடலில் ஏற்படுத்துறானோ அவனே சித்து வேலைகளை செய்ய உகந்தவன் என்று யந்திரத்தை வேறு ஒரு கோணத்தில் சொல்கிறது.மந்திரம் கொண்ட வேதாந்த நூலோ யந்திரம் என்பது பரதேவதைகளை குறிப்பிடுவது இவைகள் எங்கு பூசிக்க படுகிறதோ அங்கு தேவைதைகளும் தெய்வம்களும் தோன்றும் என்று சொல்கிறது.
யந்திரத்தை உடலில் உண்டாக்குவதற்கோ மந்திரத்தில் தோற்றுவிப்பதற்கோ நம் கர்மாவும் காலகதியில் கோள்களும் ஒத்துபோகவேண்டும் என்றே சொல்லவேண்டும்.
சோதிட நூல்களில் கர்மத்தின் படி வழிநடத்தும் சனியும் மந்திரத்தை சொல்லும் பொழுது பலிதமாக்கி தரும் கேதுவும் தேவதைகளை அழைத்து நம்மிடத்தில் தெரிவிக்கும் ராகுவும் நமக்கு ஒத்துபோகவேண்டும் என்றும் போகத்தை தரும் ராகு பூமியை நோக்கியை சுருட்டி கிடைக்கும் தன்மையை பெற்றது எனலாம்.இது காமஸ்தானமான மூன்று ஏழு பதினொன்று இடம்களில் இல்லாமல் நீச்சம் உச்சம் பகை பெறாமல் புதனின் அல்லது குருவின் வீட்டில் இருப்பது ராகுவின் ஆசிகளை அள்ளித்தரும்என்று சோதிட நூல்கள் சொல்கிறது.
இரவில் பலம் பெறும் ராகு மனிதனின் சுவாசத்தில் அதாவது பிறப்பில் தொப்புள் நிலையில் இருந்து பருவ வயதில் மூக்கிற்கு ஏறி முகத்துடன் நின்று மனதை காமத்தில் நிறைந்து நிறைவு செய்கிறது என்றும் மூத்திர பையில் காற்றாக உள்ள ராகு வாசி யோகத்தினால்(சிவா)ஆதார சக்கரம்களில் பிரவேசிக்கும் பொழுது அந்த சக்கரத்திற்கு உண்டான சித்துக்கள் உடலில் உண்டாகிறது என்று சித்தாந்த சொல்கிறது.
ஒரு நாள் துணி வியாபாரம் செய்யும் நபர் உபாசகரை சந்திக்க வந்தார்.தனக்கு வியாபாரம் குறைவதுடன் நஷ்டமும் ஏற்படுகின்றது ஏதாவது பரிகாரம் சொல்லவேண்டும் என்று கேட்டபொழுது உபாசகர் அவரிடம் ஒரு எலுமிச்சை வாங்கிவரவும் என்று சொன்னார்.அவரும் வாங்கிய பழத்தை உபாசகரிடம் தந்து விட்டு அமைதியானார்.உபாசகர் கண்களை மூடி பழத்தை கைகளில் வைத்து அமர்ந்து உபாசனை நிலைக்கு சென்று விட்டு சிறிது நேரத்தில் கண்களை விழித்து என்னிடம் சற்று நேரம் வெளியே இருக்க சொன்னார்.சில நாழிகை கழித்து அந்த வியாபாரி சென்றதுடன் நான் உள்ளே சென்றேன்.உபாசகர் கோபமாக இருந்தது எனக்கு சங்கடமாக இருந்தது.அமைதியாக அமர்ந்து இருந்தேன் சிறிது நேரம் கழித்து அவரது மனைவி உபாசகரிடம் இது போல் உள்ள ஆட்களுக்கு சோதிடம் சொல்லவேண்டாம் தவிர்த்து விடுங்கள் என்றதும் நாம் என்ன காரணம் என்ற பார்வையில் கேட்டபொழுது உபாசகர் சொன்னார் தன்னோடு வியபாரத்தில் இருக்கும் பனி பெண்களிடம் தவறாக நடந்து பெண்களின் சாபத்தை பெற்று உள்ளார் மேலும் கடையில் ஸ்ரீசக்கர யந்திரத்தை பூசித்து வருவதுடன் இந்த தவறுகளை செய்தது சுக்ரனின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார் இவருக்கு பரிகாரம் செய்தால் அம்பாள் என்னை விட்டு சென்றுவிடுவாள் என்றார்.
ஸ்ரீசக்ரம் சுக்ரன் பெண்கள் என்று உபாசகர் தொடர்ப்பு படுத்தி பேசியது எனக்கு புதிய செய்தியாகவும் அதை பற்றி தெரிந்து கொள்ள அவரிடம் ஸ்ரீசக்கரத்திற்கும் பெண்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டபொழுது அவர் சொன்னது"ஸ்ரீசக்ர யந்திரத்தை யவர் வைத்து நாமங்களை லட்சத்திற்கு மேல் கோடியை தாண்டி உச்சரித்து வருகிறார்களோ அவர்களுக்கு கன்னி பெண் ரூபமாக அன்னை காட்சி கொடுத்து ஆசிகள் கொடுப்பாள்"என்றும் இது போல எவர் கன்னி பெண்களை மதித்து அன்புடன் நடுத்துகிறார்களோ அவர்களுக்கு ஸ்ரீசக்கரத்தை வழிபட்ட பலன்கள் கொடுக்கப்பட்டு சுக்ரனின் ஆசிகள் நிறைவாக கிடைக்கும் என்றார்.
சோதிட நூலில் சுக்ரன் ஆட்சியாக உச்சமாக நீச்சமாக இல்லாமல் பிறப்பவர்களுக்கும் பூசைகளை நிறைவாக தினமும் செய்பவர்களுக்கும் சுக்ரனின் ஆசிகள் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்று படித்தது உண்டு.உபாசகர் சொன்னது சுக்ரனை பற்றிய சிந்தனையை தூண்டியது.தேவி உபாசனையில் லட்சுமி தேவி நிலையில் இருந்து சப்ததேவியர் காளிதேவி திரிபுரசுந்தரி முதல் புணேஸ்வரி வரை நாம் அழைக்க முடியும் இதற்க்கு அந்த தேவியர் பாலபாடமாக நமக்கு வைக்கும் பரீட்சை என்பது நிர்வாணமாக பருவ பெண்களை நமக்கு கனவிலோ அல்லது நேரிலோ தெரிவிப்பது தான் மிகவும் முக்கியமான சோதனை என்று உபாசகர் உபாஸனையை பற்றி நாம் கேட்கும் பொழுது சொல்வது உண்டு.காமத்தின் அதிபதி காமாட்சி இவள் சுக்ரனாக கோள்களில் அமர்ந்து ஆண்களின் உடலில் சுக்கிலமாக சுரந்து ஒரு உயிரை உண்டாக்கும் சக்திகளின் மூலமாக உள்ளார் என்றும் எவர் அன்னை காமாட்சியின் ஆசிகளை பெறுகிறார்களோ அவர்கள் காமத்தை வென்று சித்துக்களை செயல்படுத்தி தரும் சப்த கன்னியர் ஆசிகளை எளிதில் பெற்று சித்துக்களை செய்வர் என்று ஆசான் நூல்களில் பதித்து இருந்தது இன்று புரிந்து கொள்ள உதவியது.
ConversionConversion EmoticonEmoticon