Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
இப்படி சில மனிதர்கள் எப்போதுமே பங்குச்சந்தையில் இருப்பார்கள்.அவர்களை குறை கூறுவதற்காக இதனை எழுதவில்லை.ஏன் இந்த மாதிரி மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்.ஏன் இவர்கள் இப்படியே இருந்து பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்காமல் நஷ்டம் மேல் நஷ்டத்தை சந்தித்து வெளியே போய் விடுகிறார்கள் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் இதனை எழுதுகிறேன்.
இரண்டு வெவ்வேறு நபர்கள் அண்மையில் நம்மை தொடர்பு கொண்டார்கள்.ஒருவர் வயதானவர்.அவர் இதற்கு முன்னர் வேறு எங்கேயோ ஷேர்டிரேடிங் செய்து கிட்டத்தட்ட பத்து லட்சத்திற்கும் மேல் நஷ்டமடைந்து பணத்தை தொலைத்து விட்டாராம்.இப்போது நம்மை தொடர்பு கொண்டு 100 ரூபாய்க்கு உங்க புத்தகத்தை வாங்கியிருக்கேன்.என்னை உங்களோட வாட்ஸ்அப் குரூப்பில் சேர்த்துக் கொள்ளுங்களேன் என்றிருந்தார்.
அவரது மனநிலையைப் பாருங்கள்.
பத்து லட்ச ரூபாயை கொண்டு போய் எங்கே தப்பும் தவறுமாக ஷேர் டிரேடிங் செய்து தொலைப்பாராம்.ஆனால் அதே சமயம் வெறும் 100 ரூபாய்க்கு ஒரு புத்தகத்தை வாங்கி விட்டதால் வாட்ஸ்அப் குரூப்பில் சேர்த்துக் கொள்ள முடியூமா என்கிறார்கள்.அவரது எதிர்பார்ப்பு அடுத்து என்னவாக இருக்கும் என்றால் வாட்ஸ்அப்பில் இலவசமாக டிரேடிங் டிப்ஸ் தருவீர்களா? ஈக்விட்டியில் டிப்ஸ் கொடு.இன்ட்ராடே டிப்ஸ் கொடு.ஆஃப்ஷன் டிப்ஸ் கொடு.நிஃப்டியில் டிப்ஸ் கொடு.பாங்க்நிஃப்டியில் டிப்ஸ் கொடு.என்னமோ ஜாக்பாட் டபுள்மணி அது இதுன்னு சொல்றியே.அதுல எல்லாம் டிப்ஸ் கொடு என்று கேட்க ஆரம்பித்து விடுவார்.இதெல்லாம் 100 ரூபாய்க்கு புத்தகம் வாங்கிப் படித்ததற்கு.
பத்து லட்சம் வரைக்கும் தொலைத்திருப்பவர்கள் அந்த பத்து லட்சத்தை முதலில் மீட்க நஷ்டத்திலிருந்து பணத்தை மீடடுக் கொண்டு வரவூம் புதிதாக டிரேடிங்கில் பணம் சம்பாதிக்கவூம் ஒரு எக்ஸ்பர்ட்டிற்கு அதற்கென்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டணத்தை கொடுக்க இவருக்கு மனமில்லை.ஆனால் இலவசமாக டிப்ஸ் பெற நினைக்கிறார்.
இன்னொருவர்.சற்று இளம் வயதினர்.இவர் நமது யூடியூப் விடியோக்களால் கவரப்பட்டிருந்த அன்பர்.ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி அதனைப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.பொதுவாக ஃபோன்கால்களையூம் வாட்ஸ் மெசேஜ்களையூம் பார்ப்பதில்லை.காரணம் அந்த நேரத்தில் வேறு வேலைகளைய செய்யலாமே என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு வேiலைப்பளு இருக்கிறது.டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புங்கள் என்றதற்கு வாய்ஸ் மெசேஜை கேளுங்கள் என்று கட்டாயப்படுத்தினார்.அதன்பின் அந்த மெசேஜை மற்றவரைக் கேட்கச் செய்து அதன் சாராம்சம் என்ன என்று கேட்டறிந்தேன்.
இவர் ஒரு பங்கை ஆஃப்ஷனில் பார்த்திருக்கிறார்.அதனை ஒரு மலிவான விலைக்கு வாங்கவூம் செய்திருக்கிறார்.நாம் நம்முடைய விடியோக்களில் டபுள்மணி லாபத்தைப் பற்றி சொல்வதால் இதைத்தானே சொல்றார்.நாமே டபுள்மணி அடிச்சிரலாமே என்று அந்த பங்கை அவர் வாங்கியதற்கு மறுநாளிலிருந்து அது விலை குறைய ஆரம்பித்தும் என்னடா இப்படி ஆகிடுச்சே என்று அதனை ரூ 4500 என்ற நஷ்டத்தில் விற்று விட்டு வெளியேறியிருக்கிறார்.அதன்பின்தான் அங்கே பங்கு ஆட்டம் ஆடியிருக்கிறது.அந்த பங்கு அதன்பின்னர் குபுக்கென்று விலை ஏறத் தொடங்கி விட்டது.இவர் 9 ரூபாய்க்கு வாங்கியதை நஷ்டத்தில் விற்று விட்டால் அதன்பின்னர் அந்த பங்கு ரூ 30க்கு மேலே சென்று செம்ம உயரத்திற்கு போய் விட்டது.போனது போனதுதான்.இவரை குறை சொல்ல முடியாது.இது இவர் எடுத்த தனிப்பட்ட முடிவூ.
ஆனால் பொதுவாக முதலீட்டாளர்கள் டிரேடர்கள் ஒரு எக்ஸ்பர்ட்டிடம் கட்டணம் செலுத்தி டிப்ஸ் வாங்கவோ அல்லது ஒரு எக்ஸ்பர்ட்டிடம் டிரேடிங்கிற்கான பயிற்சியை எடுத்துக் கொள்ளவோ விரும்பாமல் அதற்கு செலவாகும் பணத்தை மிச்சம் பிடிக்கலமே என்ற எண்ணத்தில் அதை விட பல மடங்கு பணத்தை மார்க்கெட்டில் நஷ்டத்தில் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கட்டணம் செலுத்தி கற்றுக் கொள்ளவோ அல்லது கட்டணம் செலுத்தி டிப்ஸ் பெறவோ ஒரு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்தான் இருக்கும்.இதுவே சும்மா யாருக்கும் பணம் தர விரும்பாமல் மார்க்கெட்டில் தானாகவே டிரேடிங் செய்து கொள்ளலாம் என்று அவர்கள் கிளம்பினால் மார்க்கெட் என்பது ஒரு கடுமையான ஆசிரியன்.மார்க்கெட் சிறுகச் சிறுக ஒவ்வொரு டிரேடிங்கிலும் ஸ்டாப்லாஸ் ட்ரிக்கர் ஆவது நஷ்டம் ஆவது என்று ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மிகப்பெரிய பணத்தை லவட்டிக் கொண்டுதான் எதையூம் கற்றுக் கொடுக்கும்.
இது எப்படி என்றால் உடலுக்கு ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று வந்து கொண்டே இருக்கிறது என்று ஒரு ஸ்பெஷலிஸ்ட்டிடம் போனால் அவர் பல டெஸ்ட்களை எடுக்கச் சொல்வார்.எடுத்த எடுப்பில் ஸ்கேன் எடுக்கச் சொல்வார் என்றெல்லாம் பணம் எதற்கு அனாவசியமாக செலவாகனும் என்று மெடிக்கல் ஷாப்பில் மருந்து மாத்திரை வாங்கிப் போட்டுக் கொண்டு விட்டால் பின்னர் பிரச்சனை மெல்ல மெல்லப் பெரிதாகி பல லட்சங்களை கடன் வாங்கி கட்டிவிட்டு பிழைப்போமா மாட்டோமா என்று தவித்துக் கொண்டிருக்க நேரிடும்.
மார்க்கெட்டில் டிரேடிங்கிலும் இப்படித்தான் சிக்கனம் என்பது செலவூ செய்யாத பணத்தில் இல்லை.செலவூ செய்யாத பணம் என்பதை பல மடங்கு பணத்தை பாழக்காப் போடும் அஸ்திவாரம் என்பதை உணர்ந்து தங்களது பட்ஜட்டிற்கேற்ற ஒரு பயிற்சியையோ அல்லது டிப்ஸ் ப்ளானையோ தேர்ந்தெடுத்து செயல்பட்டால் நிதானமாக சிறுகச் சிறுக டிரேடிங்கை தொடர்ந்தால் ஒரு வருடம் அல்லது சில வருட காலத்தில் மிகப்பெரிய தொகையை யாராக இருந்தாலும் சம்பாதித்து விட முயற்சிக்க முடியூம்.
ஆனால்...
அந்த நல்ல மனிதர்கள் அதனைப் புரிந்து கொள்ள வேண்டுமே.
ConversionConversion EmoticonEmoticon