"இன்னும் கொஞ்ச துரரம்..."
சின்னக் குழந்தைகளை முன்பெல்லாம் தோளில் போட்டுக் கொண்டு தாலாட்டும் தாய்மார்கள் அந்த குழந்தை எதற்காகவாவது அடம் பிடித்து அழும்போது கொஞ்சிக் கொண்டும் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டும் இன்னும் கொஞ்ச நேரம்தான்டா..அப்பா வந்துடுவார்.என்ன வேணும் உனக்கு வாங்கிடலாம்.இன்னும் கொஞ்ச நேரம்தான் என்பார்.
ஏதாவது அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருக்கும்போது வீட்டிலுள்ளவர்களோ அல்லது மருத்துவமனையில் உள்ளவர்களோ சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
கொஞ்சம் வலியைப் பொறுத்துக்கங்க.இன்னும் கொஞ்ச நேரம்தான்.எல்லாம் சரியாகி விடும்.
நான் சின்ன வயதில் திருச்சியில் இருக்கும்போது நாங்கள் இருந்த கே.கே.நகர் பகுதியில் அப்போதெல்லாம் என்பிஏஜி என்ற ஒரே ஒரு பஸ்தான் வரும்.பஸ்ஸின் ரூட் எண் 76.அப்போதெல்லாம் 88 வரவில்லை.ஏன் அப்போது கே.கே.நகர் என்ற பெயரே கிடையாது.தென்புற நகர் என்ற பெயரைத்தான் அப்போதைய அரசு கருணாநிதி நகர் என்று மாற்றியது.
அங்கிருந்து டவூனுக்கு வந்து வந்து பள்ளிக்கு செல்ல அப்போது ஒரே ஒரு பஸ்தான் வரும்.அந்த பஸ் மாதத்தில் பாதி நாட்கள் பிரேக்டவூன் ஆகும்.அப்புறம் என்ன பொடி நடைதான்.இப்போது நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.காரில் பயணம் செய்தால் கூட அத்தனை கிலோமீட்டர்கள் பயணம் செய்வது அந்த பகுதியில் அலுப்பாக இருக்கிறது.ஆனால் அப்போது நாங்கள் நடந்திருக்கிறௌம்.அப்போது எம்ஜிஆர் அரசில் மந்திரியாக இருந்த ராகவானந்தம் அவர்களின் துணைவியாரும் எங்களுடன் நடந்து வருவார்.பள்ளிக்கூட ஆசிரியையாக அவர் இருந்தார்.
கால் நோக நாங்கள் நடந்து வரும்போது அவர் பலவிதமான சுவாரஸ்யமாக கதைகளைப்; பேசிக்கொண்டே வருவார்.
அப்போது அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை இதுதான்.
இன்னும் கொஞ்ச நேரம்தான்.
இன்னும் கொஞ்ச நேர நடையில் ஊர் வந்து விடும்.
இந்த 'இன்னும் கொஞ்ச நேரம்' என்பது அடிமனதில் ஆழப் பதிந்து விட்டது.
இப்போது நமது மெயின் மேட்டருக்கு வரலாம்.
ஒரு லட்சியத்திற்காக போராடும்போது -இங்கே ஒரு வார்த்தை.இந்த போராடுதல் என்பதை நான் ஏற்க விரும்பவில்லை.போராட்டத்தின் வாயிலாக எதையூம் அடைய முடியாது.போராடுவதற்கு பதிலாக முழு முனைப்புடன் முயற்சி செய்யலாம் என நினைக்கிறேன்.
அதாவது ஒரு லட்சியத்தை அடைய முனைப்புடன் முயற்சி செய்து கொண்டிருக்கும்போது அதை அடைய முடியாமல் போவதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கலாம்.
போதும் முயற்சி செய்தது.இதுவரை நிறைய தரம் முயற்சித்து விட்டோம்.போதும்.இனி இதெல்லாம் நமக்கு ஒத்து வராது என்று பாதியில் ஓடி விடத் தோன்றும்.
உதாரணமாக ஒரு சொகுசான அபார்ட்மன்ட் அல்லது வில்லா வாங்குவது.ஒரு பெரிய தொழிலதிபராவது.ஒரு விலை உயர்ந்த கார் வாங்குவது.ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பது என்று எது வேண்டுமானாலும் இருக்கட்டும்.
அதை அடைவதற்கு பல தடைகள் வரலாம்.பல பேர் புறம் பேசலாம்.பல பேர் ஆர்வத்தைக் குலைப்பது போல இடையூறுகள் செய்யலாம்.இப்படி காரணம் எது வேண்டுமானாலும் இருக்கட்டும்.
பொதுவாக ஒரு விஷயம் சொல்வார்கள்.
வெற்றி பெறுபவர்கள் உடனே எழுந்து போய் விடுவதில்லை.
உடனே எழுந்து போய் விடுபவர்கள் வெற்றி பெறுவதில்லை.
இன்னொன்றும் நான் சொல்கிறேன்.
ஒரு ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறீர்கள்.500 மீட்டர் ஓட வேண்டும்.கடைசி ஐம்பது மீட்டர் வரை உங்களுடன் போட்டியாக ஓடுபவர்கள் திடகாத்திரமாகவூம் நம்பிக்கையாகவூம் உங்களை அலட்சியமாகவூம் பார்த்தபடி ஓடுகிறார்கள் என்று தோன்றும்.அப்போது நமக்கெல்லாம் அதிர்ஷ்டம் இருக்குமா?ஜெயிக்க முடியூமா என்று தோன்றும்.பாதியில் விட்டு விட்டு ஓடி வந்து விடலாமா என்றும் தோன்றும்.உண்மை என்னவென்றால் உங்களுக்கான வெற்றி என்பது கடைசி ஐந்தாவது மீட்டரில் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.பல்லைக் கடித்துக் கொண்டு 'இன்னும் கொஞ்ச துரரம்' என்று நீங்கள் மட்டும் ஓடியிருந்தால் சினிமா கதாநாயகன் போல நீங்களும் ஜெயித்திருக்கலாம்.
ஆக பாதியில் விட்டு விடலாம் இந்த வேலையை.விட்டு விடலாம் இந்த கஷ்டத்துடன் போராடுவதை(போராட்டம் என்பதை முழு முனைப்போடு என்று திருத்தி வாசிக்கவூம்) விட்டு விடலாம் என்று எப்போதெல்லாம் அவநம்பிக்கை மனச்சோர்வூ தோல்வி பயம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம்-
'இன்னும் கொஞ்ச நேரம்தான்" என்பதை உள்ளுக்குள் ஆல் இஸ் வெல் என்பது போல சொல்லிக் கொள்ளுங்கள் போதும்.
ஒரு நாள் இல்லையென்றால் ஒரு நாள் ஜெயித்து விடலாம்.
ConversionConversion EmoticonEmoticon