அண்மையில் ஒரு ஜோதிடர் முகப்புத்தகத்தில் ஒரு பதிவூ போட்டிருந்தார்.புதன் கிரகம் வக்கிர நிலைமையில் இருப்பதால் பங்குச்சந்தை இறங்கு முகமாக இருக்குமென்று.அவரைப் பொறுத்தவரை இது சரிதான்.
இதையே ஒரு ஆரோக்கியமான விவாதமாக எடுத்துக் கொண்டால் முதலில் புதன் கிரகத்தின் தன்மை என்ன என்று பார்க்க வேண்டும்.புதன் கிரகம் என்பது வணிகம், பேச்சு சாதுர்யம், தகவல்தொடர்பு போன்றவற்றிற்கான கிரகம்.வைசிய கிரகம் என்பார்கள்.வியாபாரிகளுக்கான கிரகம்.
ஆனால் பங்குச்சந்தை செயல்படும் முறையானது சந்திரன் மற்றும் ராகுவின் தன்மையைப் பொறுத்து அமைகிறது.காரணம் என்னவென்றால் சந்திரன் தினம் தினம் ஒவ்வொரு மாதிரி இருக்கக் கூடிய நித்யமாறுதல் கொண்ட கிரகம்.ராகு என்பவன்தான் சூதாட்டத்திற்கான கிரகம்.
நான் ஏற்கனவே பலமுறை வலிறுத்திச் சொல்லியிருக்கும் விஷயம் இதுதான்.ஒரு வங்கியில் பிக்சிட் டிபாசிட்டில் பணத்தைப் போட்டு வைப்பதுதான் முதலீடு.ஒரு நிறுவனத்தின் ஷேரில் பணத்தைப் போடுவதென்றால் அந்த நிறுவூனம் ஐபிஓவில் அதாவது முதல்நிலைச் சந்தையில் பங்கு வெளியிடும்போது அதில் முதலீடு செய்து அப்படி முதலீடு செய்த பங்குகளை விற்கவே கூடாது.காலம் காலமாக சொத்து போல அப்படியே வைத்திருக்க வேண்டும்.
எப்போது நீங்கள் இரண்டாம் நிலை சந்தைக்கு வருகிறீர்களோ அதாவது பங்குகளை வாங்கி விற்கும் இடத்தில் பங்கேற்று பங்குகளை டிமேட் வழியாக விற்று வாங்குகிறீர்களோ அப்போது அது முதலீடு என்ற நிலையிலிருந்து சூதாட்டம் என்ற நிலைக்கு வந்து விடுகிறது.
இன்னும் புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமென்றால் முன்பு போல பங்குகள் பங்குப் பத்திரங்களாக அதாவது காகித பான்ட்டுகளாக கொடுக்கப்பட்டிருந்தால் அது முதலீடு.
இப்போது அந்த காகிதங்கள் அழிக்கப்பட்டு டிமேட்டாக (டிமேட் என்பதன் சரயான பொருள் dematerialise என்பதாகும்) வந்து விட்டதோ அப்போது அந்த பங்கு நிழலாக இருக்கிறது.நிழலாக எப்போது பங்குகள் மாறி விட்டதோ அப்போது அந்த பங்குகள் ராகுவின் பிடிக்கு வந்து விடுகிறது.
இதில் டெஃப்ட்(debt) மார்க்கெட் பங்குகள் கேதுவின் பிடியில் இருக்கின்றன என்பது இதற்கு சம்பந்தமில்லாத உபரித் தகவல்.
ஆக ராகு மற்றும் சந்திரன்தான் பங்குச்சந்தையின் போக்கை நிர்ணயிக்கிறதே தவிர 'வக்கிரமடைந்த புதன்" கிடையாது.
மேலும் இன்னொன்றை வேண்டுமானால் கவனிக்கலாம்.
பாங்க்ஆஃப்பரோடா படு மட்டமான காலாண்டு முடிவை தந்திருக்கிறது.பஞ்சாப் நேஷனல் வங்கியூம் மோசமான ரிசல்ட்டை தந்திருக்கிறது.தங்க நகைக்கடன் நிறுவனங்களான முத்துரட் மற்றும் மணப்புரம் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் அமைதியாக இருக்கின்றன.
இதற்கு காரணம் கடகத்தில் குரு வக்கிரமடைந்திருப்பதுதான்.இதை வேண்டுமானால் ஒரு காரணமாக சொல்லலாம்.வக்கிர குருவின் காரணமாக சந்தை இறங்கும் என்று.
ஆனால் என்னைப் பொறுத்தவரை வக்கிரமடைந்த கிரகம் என்பது போலீஸ் ஏசிபியான சத்யதேவ் அஜீத் போலியாக ஜெயிலுக்குப் போய் வில்லப் பசங்களுடன் சேர்ந்து டூமீல் விடுவது போன்றதுதான் ஒரு கிரகம் வக்கிரமடைவது என்பது.
ஒரு கிரகம் நல்ல நிலைமையில் தரும் பலனை விட வக்கிர நிலைமையில் வேறுவிதமாக பலன் கொடுக்க தயாராக இருக்கும்.நீங்கள்தான் அதனைப் புரிந்து கொண்டு பங்குச்சந்தையில் பணம் பண்ண வேண்டும்.
வக்கிர நிலைமை பங்குச்சந்தையில் பாதிப்புகளை எப்படி ஏற்படுத்தும் என்றால் ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் உச்சமடையூம்.ஒரே பங்கில் திடீர் ஷார்ட் செல்லிங் திடீர் லாங் என்று இரண்டு பக்கமும் பணம் புரள ஆரம்பிக்கும்.
பெரியண்ணன் அமெரிக்கா சுக்கிரனாகவூம் சின்னண்னன் சீனா செவ்வாயாகவூம் செயல்படுவதால் சுக்கிரன் மற்றும் செவ்வாயின் நிலையையூம் வைத்துதான் ஷேர் மார்க்கெட் இறங்குமா ஏறுமா என்று கணிக்க வேண்டும்.
இவை எனது 33 வருட பங்குச்சந்தை-ஜோதிட ஆராய்ச்சியின் கண்டுபிடித்து அனுபவத்தில் உணர்ந்து கொண்ட விஷயம்.
ஷேர் மார்க்கெட்டில் நீங்கள் கோடீஸ்வராக வேண்டுமெனில் உங்கள் சுயஜாதகம் எப்படிப்பட்ட பலவீனமான ஜாதகமாக இருந்தாலும் சில கிரகங்களுக்கான பரிகாரங்களை சரியாக ஸ்கெட்ச் செய்து போட்டு விட்டால் உங்களது டிரேடிங்கிலும் பணம் கொட்ட ஆரம்பித்து விடும்.
கோவில்களுக்குப் போகிறேன்.பரிகாரம் செய்கிறேன்.பணம் வரவில்லை என்றால் அதில் ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத இடர்பாடு இருக்கிறதென்று அர்த்தம்.இது கஷ்டங்களை அனுபவிப்பவர்;கள் ஒரு வருட காலத்திற்கு என்னுடன் தொடர்பில் இருந்து முதலில் ஒரு பரிகாரத்தையூம் அதன்பின் அவ்வப்போது சில தொடர்-பரிகாரங்களையூம் செய்து வந்தால் எப்பேர்ப்பட்ட கிரகமும் மனமிறங்கி உங்களுக்கு பணத்தை போதுமென்ற அளவிற்கு கொடுக்க ஆரம்பித்து விடும்.
அதற்கு நீங்கள் எப்போதும் என்னுடன் தொடர்பில் இருப்பது அவசியம்.
ConversionConversion EmoticonEmoticon