யோகாசனம் பற்றி முன்னுரை தர வேண்டியதில்லை.அனைவரும் அறிவார்கள்.விதவிதமான யோக முறைகளை எல்லோரும் கடைபிடித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.
யோகா செய்தால் உடல்நிலை சீராகும்.நாட்பட்ட வியாதிகள் கட்டுக்குள் வரும்.கோபம் டென்ஷன் குறையூம்.நலமாக வாழலாம்.இதுதான் இதுவரை யோகா பற்றி நீங்கள் அறி;ந்து வைத்திருக்கிற விஷயம்.
இப்போது பணம் தரும் யோகா பற்றி சொல்லப் போகிறேன்.நான் சொல்லித் தரும் யோகா ஒரு கற்பக விருட்ஷம் போன்றது.பணம் மட்டுமல்ல.எது வேண்டுமோ அது அனைத்தையூம் தர வல்லது.ஆனால் இந்த யோகாவை செய்வதற்கு எவ்வித கட்டுப் பாடும் கிடையாது.நம்பிக்கையூம் சுயவிருப்பமும்தான் தேவை.சற்றே கடவூள் நம்பிக்கையூடன் சிறிது ஜோதிடத்தின் உதவியூடன் இந்த யோகாவை செய்தால் ரிசல்ட் எளிதில் வசப்படும்.
எதற்காக கடவூள் நம்பிக்கை.
அது ஒன்றுதான் நம் வாழ்வின் அல்டிமேட். மற்றதெல்லாம் வந்து போவது.நிலையாக இல்லாதது.கடவூளின் மேல் எவ்வளவூக்கெவ்வளவூ நீ;ங்கள் நம்பிக்கை வைக்கிறீர்களோ அத்தனை விரைவாக வேண்டுதல்கள் நிறைவேறும்.சரியாக வேண்டிக்கொள்ளவூம் கற்றுக் கொள்வீர்கள்.ஆக இந்த பணம் தரும் யோகாவின் முதல்படி கடவூளை நம்புவது.கடவூளையூம் உங்களது பார்ட்னராக ஆக்கிக் கொள்வது.
இரண்டாவது படி ஜோதிடம் மற்றும் ஜாதகம்.
ஜோதிடம் என்பது கடவூளுக்கு அடுத்தபடியானது.அதில் உள்ள சூட்சுமங்களை நாம் சரியாகப் பயன்படுத்தினால் எதையூம் எளிதில் அடைய முடியூம்.ஆனால் பல தொழில்முறை ஜோதிடர்களுக்கே இதையெல்லாம் ஆய்வூ செய்வதற்கு நேரம் கிடையாது.பங்குச்சந்தை குறித்த எனது வாடிக்கையாளர்களுக்காக நான் ஜோதிடத்தை பல்வேறு கோணத்தில் ஆய்வூ செய்து வைத்திருக்கிறேன்.அதனால்தான் நான் தருகிற சூட்சுமப்பரிகாரங்கள் பலன் தந்து கொண்டே இருக்கின்றன.
ஜாதகம் எதற்காக என்ற கேள்வி வரலாம்.
உங்களது ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக அளவில் சூட்சும வலுவூடன் இருக்கிறதோ அந்த கிரகத்தின் உதவியையூம் இந்த பணம் தரும் யோகாவில் பயன்படுத்திக் கொண்டு விரைவாக பணம் அதாவது கோடிக்கணக்கில் பணத்தை அடைய முயற்சிக்கலாம்.
சரி இப்போது பணம் தரும் யோகாவிற்கு வருவோம்.
சாதாரணமான யோகாசனம்தான்.
சாதாரணமான மூச்சுப் பயிற்சி போலத்தான் இதுவூம்.
ஒரு அறையில் அமர்ந்து கொள்ள வேண்டும்.சில குறிப்பிட்ட ஜாதகர்கள் இதனை வெட்டவெளியிலோ அல்லது மொட்டை மாடியிலோ அமர்ந்து செய்தால் பலன் கிடைக்காது.அதனை அவர்களது ஜாகதத்தைப் பார்த்துதான் முடிவூ செய்ய வேண்டும்.
நீங்கள் அமர்ந்திருக்கிற அறையில் உங்களது ஜாதத்திலுள்ள வலுவான கிரகத்தின் தன்மை கொண்ட சில விஷயங்களை (தானியம் நிறம் வஸ்திரம் மரப்பட்டை போன்றவை) வைத்திருக்க வேண்டும்.
இப்போது அமைதியாக அமர்ந்து கண்களை மூடிக்கொள்ளுங்கள்.இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டாம்.இதமாக கண்களை மூடிக்கொள்ளுங்கள்.
நீங்கள் தொழில் செய்பவராக பிசினஸ் செய்பவராக இருந்தால் உங்களது தொழில் ஸ்தாபனத்தின் புகைப்டத்தைக் கூட உங்களது முன்னால் வைத்துக் கொள்ளலாம்.
உங்களது நிறுவனத்தை மனக்கண்ணால் உற்றுப் பார்த்துக் கொண்டே இருங்கள்.அல்லது நிறைய பணம் கோடிக்கணக்கில் வேண்டுமென்றால் பணத்தை கட்டுக்கட்டாக இருப்பது போல கற்பனை செய்து அதனை மனக்கண்ணால் பார்த்துக் கொண்டே இருங்கள்.
அப்போது வேண்டாத சிந்தனைகள் நெகட்டிவ்வான எண்ணங்கள் எல்லாம் வந்து போகும்.அவற்றை விரட்ட நினைக்காதீர்கள்.மிக்சியில் ஜூஸ் போடும்போது சுற்றுகிற தண்ணீரில் கசடுகள் மேலே வந்து மிதப்பதைப் போலத்தான் இதுவூம்.நாளடைவில் இது உங்களை விட்டுப் போய்விடும்.இந்த நெகட்டிவ் எண்ணங்கள் தோல்வி பயம் போன்றவை இருப்பதால்தான் பணம் கோடிக்கணக்கான பணம் உங்களை வந்தடைவதில் தயக்கம் காட்டுகிறது.அதனால்தான் நீங்கள் மிடில் கிளாசிலேயே இன்னமும் இருக்கிறீர்கள்.
இயன்றால் உங்களது நிறுவனத்தின் பெயரை லேசாக வாய்விட்டுச் சொல்லாமல் மந்திரம் போல முணுமுணுக்கலாம்.
அல்லது ஒரு கோடி ரூபாய் வேண்டுமென்றால் 'வேண்டும் ஒரு கோடி ரூபாய்' என்றே சொல்லலாம். ஒரு பழைய படத்தில் கூட அலட்சியமாக இதைப் போன்ற ஒரு வசனம் வரும்.அதைக் கூட நீங்கள்; சொல்லலாம்.அந்த வசனம் இதுதான்:
'வற்றாத செல்வமே வாழ்க நீ வாழ்கவே'
இதனை காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகத்தான் செய்ய வேண்டும்.
அப்படி செய்ய முடியாதவர்கள் இரவில் கூட செய்யலாம்.
செய்து பாருங்கள்.
கோடிக்கணக்கான பணத்தை வசீகரம் பண்ணுபவராக நீங்கள் மாறுவதை நீங்களே காண்பீர்கள்.
ConversionConversion EmoticonEmoticon