இன்று ஒரு அன்பர் வகையாக என்னிடம் சிக்கிக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.பொதுவாக தமிழிலும் ஆங்கிலத்திலும் எனக்குப் பிடிக்காத வார்த்தை 'ஸ்மால் இன்வஸ்டர்".
இதற்கு நான் சொல்லும் ஒரே காரணம் ஏதோ ஒரு சூழ்நிலையில் நீங்கள் மிடில் கிளாசில் வசித்துக் கொண்டிருக்கலாம்.ஏதோ ஒரு காரணத்தால் அதிகம் பணம் சேமிக்க முடியாத நிலை இருந்திருக்கலாம்.எப்போதும் அப்படியேவா இருக்கப் போகிறீர்கள்.
இல்லை என்பதை உங்களது போலியான மனது நம்ப மறுக்கிறது என்பதுதான் உண்மை.
ரகோத்தமன் எப்போதுமே சொல்வார்.நீ பாட்டுக்கு சிறுமுதலீட்டாளர்களுக்கு உதவூகிறேன் பேர்வழி என்று அவர்களை கிட்டே சேர்க்காதே.அவர்களால் உனக்கு தொல்லைதான் ஏற்படும் என்பார்.
இன்று கூட பேஸ்புக்கில் பழநிச்செல்வம் என்றொரு அன்பர் ஒரு கமன்ட் போட்டிருந்தார்.
நமது தளத்திலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டு நன்றாக சென்று கொண்டிருக்கும் 'தினம் ஒரு டிரேடிங் டிப்ஸ்" டிரேடிங் குழு பற்றிய நமது பதிவில் இதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம் ரூ 9555 என்று குறிப்பிட்டிருந்ததை வாசித்து தவறாகப் புரிந்து கொண்டு டிப்ஸ் கட்டணம் ரு நாளைக்கு ரூ 500 வருகிறது என்று குறிப்பிட்டு கமன்ட் போட்டிருக்கிறார்.
இந்த கமன்ட்டை அவசரமாக வாசிக்கும் மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்களே என்று கூட இவர் கவலைப்படவில்லை.அப்படியே தன் தவறை உணர்ந்தாலும் ஒரே வார்த்தையில் ஸாரி என்பார்.ஆனால் அதற்குள் எத்தனை பேர் அந்த பதிவைப் பார்த்து தவறாகப் புரிந்து கொண்டார்களோ தெரியாது.
இப்போது இது குறித்து ஒரு விளக்கம் கொடுத்து விடலாம் என நினைக்கிறேன்.
ஒரு வருடத்திற்கான நுழைவூக்கட்டணம் ரூ 9555 ஆகிறது.
ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் வருகிறது.
ஒரு மாதத்திற்கு 20 நாட்கள் வருகிறது.விடுமுறை நாட்களை தவிர்த்து விட்டோம்.
ஆக ரூ 9555ஐ 12 மற்றும் 20ஆல் வகுத்துப் பார்த்தால் ஒரு நாளைக்கான கட்டணம் தெரிந்து விடும்.
ஒரு நாளைக்கான கட்டணம் ரூ 39.81 அதாவது ரூபாய் நாற்பது என்று வைத்துக் கொள்வோம்.ஆனால் இதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஒரு நாளைக்கு ரூ 500 கட்டணம் என்று மிகவூம் தவறாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
அப்புறம் எப்படி சிறுமுதலீட்டாளர்கள் என்கிற ஸ்மால் இன்வஸ்டர்கள் முன்னேறுவார்கள்.ரகோத்தமனிடம் சொல்லியிருந்தால் சிரித்திருப்பார்.
இன்னொரு நபர் செல்பேசியில் தான் ஒரு ஸ்மால் இன்வஸ்டர் என்றும் தன்னால் நிறைய செலவூ செய்ய முடியாது என்றும் குறைவாகத்தான் முதலீடு செய்ய முடியூம் என்று பிரஸ்தாபித்தார்.
புரிந்தது.
இன்னொரு 'ஸ்மால் மனுஷன்"
எங்காவது நீங்கள் உங்களை ஒரு ஸ்மால் மனுஷன் என்று அறிமுகப்படுத்திக் கொள்வீர்களா?ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடச்சென்றாலோ சினிமா தியேட்டருக்குச் சென்றாலோ உங்களை ஒரு ஸ்மால் மனுஷன் என்று சொல்லிக் கொள்வீர்களா?
அவர் சென்னையில் எந்த இடத்திலிருந்து பேசுகிறார் என்பதைக் கேட்டு தெரிந்து கொண்டேன்.அவர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகில் ஒரு கடை இருக்கும்.அதன் அருகில் ஒருவர் தினமும் பருத்திப்பால் விற்றுக் கொண்டிருப்பார்.
அவரிடம் அந்த பருத்திப்பால் வண்டியின் அருகே செல்லச் சொன்னேன்.அங்கே கீழே கிடந்திருக்கும் அருந்தி முடித்த காலியான பேப்பர் கப்களை உத்தேசமாக எண்ணச் சொன்னேன்.அருந்துவதற்காக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பேப்பர் கப்களையூம் எண்ணிக் கொள்ளச் சொன்னேன்.ஒரு ஐடியாவூக்காகத்தான் இதை அவரிடம் சொன்னேன்.அவர் லேசாகக் கோபப்பட்டார்.என்னிடம் போய் பருத்திப்பால் வண்டியில் பேப்பர் கப் எண்ணச் சொல்கிறாயே என்ற எரிச்சல் அவர் குரலில் இருந்தது.
ஒரு பெரிய கப் பருத்திப் பாலின் விலை பத்து ரூபாய்.
ஒரு நாளைக்கு அங்கே அந்த பருத்திப்பால் வியாபாரி இருநுரறு கப் பருத்திப் பால் விற்கிறார்.
பாதிக்குப் பாதி லாபம்.
ஒரு கப் விற்றால் ஐந்து ரூபாய் நிகர லாபம்.
கடை வாடகை கிடையாது.மின்சார பில் கிடையாது.விற்பனை வரி கிடையாது.
ஆக ஒரு நாளைய லாபமாக 200 கப்களுக்கு அவர் சம்பாதிக்கும் தொகை ரூபாய் ஆயிரம் ரூபாய்.சராசரியாக ஒரு மாதத்திற்கு ஒரு தெருமுனை பருத்திப்பால் வியாபாரி சம்பாதிப்பது முப்பதாயிரம் ரூபாய்.
ஆனால் நம்மிடம் செல்பேசியில் தன்னை ஒரு ஸ்மால் இன்வஸ்டர் என்று பேசிய அந்த அன்பர் ஒரு மாத சம்பளமாக வாங்குவது ஐம்பதாயிரம் ரூபாய்.இதில் ஆடம்பர செலவூகள் தவிர்க்க முடியாத செலவூகள் என்ற பெயரில் செய்யூம் தேவையற்ற செலவூகள் தினமும் அருந்தும் காபி டீ சிகரட் வாரத்தின் இரண்டு நாட்கள் சாப்பிடும் ஹோட்டல் சாப்பாடு எல்லாம் போக அவரிடம் மிச்சமாக இருப்பது இருபதாயிரம் ரூபாய்தான்.
இதையூம் அவரிடம் கணக்குப் போட்டுக் காண்பித்ததும் அவர் குரல் பம்ம ஆரம்பித்தது.இப்போது உலகத்தில் சம்பாதிக்கிற அத்தனை பேரும் எரிச்சலாகத்தான் தெரிவார்கள்.
ஆனால் ஒரு பருத்திப்பால் வியாபாரியே மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்.அந்த வியாபாரி தன்னை கம்பீரமாக அன்பானவராக முன்நிறுத்திக் கொள்கிறார்.ஒருபோதும் அவர் ஸ்மால் இன்வஸ்டர் என்று நம்ம அன்பர்கள் சொல்வது போல பஞ்சப்பாட்டு பாடுவது கிடையாது.உற்சாகமாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.அவருக்கு அடுத்தடுத்து முன்னேற்றம் காத்திருக்கிறது.
ஆனால் தன்னை குறைவாக மதிப்பிட்டுக் கொள்ளும் 'ஸ்மால் மனுஷ'ங்களுக்கு?
அதை ஏன் நான் சொல்வானேன்.
பதில் உங்களுக்கே தெரிந்திருக்கும்.
ConversionConversion EmoticonEmoticon