"பணவிருப்பு"
இந்த உலகில் மதத்தின் அடிப்படையில் சாதிகளின் அடிப்படையில் அந்தஸ்தின் அடிப்படையில் எத்தனையோ பிரிவூகள் இருந்தாலம் பணஉலகைப் பொறுத்தவரை இரண்டே இரண்டு பிரிவூகள்தான் உண்டு.
ஒன்று:அதிக அளவில் பணத்தை அடைந்தவர்கள்.
இன்னொன்று: அவற்றை அடையாதிருப்பவர்கள்.இவர்களை ஏழைகள் என்ற வார்த்தையால் குறிப்பிடுவதை நான் விரும்புவதில்லை.ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்பது பற்றி பிறகொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.
இப்போது அதிக அளவில் ஏராளமான அளவில் பணத்தை அடைந்திருப்பவர்களும் இதே உலகில்தான் இருக்கிறார்கள்.அப்படி இல்லாதவர்களும் இதே உலகில்தான் இருக்கிறார்கள்.இரண்டு விதமானவர்களுக்கும் ஒரே உடல்தான்.ஒரே உயிர்தான்.தேர்தல் வந்தால் ஒரே வோட்டுதான்.ஆனால் எங்கே வித்திசாயம் வருகிறது என்று பார்த்தால் சிந்தனையில் செயலாற்றுவதில் நம்பிக்கை கொள்வதில் நம்பிக்கை கொள்ளாதிருப்பதில் வேறுபாடு வருகிறது.
இவை தாண்டி வேறெதும் இருக்கிறதா என்று பார்த்தால் 'உணர்வூகள்' என்றொரு விஷயத்தைச் சொல்லாம்.இன்னும் சற்று அருகாமையில் போய் க்ளோசப் ஷாட்டில் பார்த்தால் 'வெறுப்பு' என்ற ஒரு உணர்வூ மெலிதாக இரண்டு பிரிவினர்களிடமும் மறைந்திருப்பதைக் காணலாம்.
இந்த வெறுப்பு சாதாரணமானதாக இருந்தால் பரவாயில்லை.ஆனால் இந்த வெறுப்புதான் ஒருவரை பெரும் பணம் சம்பாதிக்க விடாமல் செய்கிறது.அதனால்தான் இதனை மிக முக்கியமாக கவனிக்க வேண்டுமென்று சொல்ல வருகிறேன்.
அதென்ன வெறுப்பு?
பணமற்றவர்களுக்கு பணக்காரர்கள் மீது வரும் வெறுப்பு.அவர்களது படோடாபமான வாழ்க்கை மீது வரும் வெறுப்பு.அவர்கள் வைத்திருக்கும் சொகுசுக்கார்கள் மீதான வெறுப்பு என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
பணக்காரர்கள் மீது ஏன் வெறுப்பு வருகிறது?
அவனிடம் இருக்கிறது.நம்மிடம் இல்லையே என்ற தாழ்வூ மனப்பான்மை பொறாமையாக மாறுகிறது.பின்னர் இந்த பொறாமை வெறுப்பாக மாறுகிறது.
பணக்காரர்கள் என்பவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள்.சொகுசாக வாழ்கிறார்கள் என்பதை மட்டும் பார்க்காமல் அவர்கள் எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் உழைக்கிறார்கள் என்று பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும்.அவர்களும் உழைத்துதான் சம்பாதிக்கிறார்கள்.சில வேளைகளில் வரிஏய்ப்பு செய்கிறார்கள்.கருப்புப்பணத்தை வைத்திருக்கிறார்கள் என்று வருகிற சேதிகளை எல்லாம் விட்டு விடுங்கள்.சுயமுயற்சியாக தன் சொந்தக்காலில் நிற்கிற ஒரு மனிதர் ஒரு நிறுவனத்தைத் துவங்கியோ ஒரு தொழிலில் ஈடுபட்டோ பெரும் பணம் சேர்க்கிறார் அல்லவா அது போன்ற ஆட்களைப் பற்றி மட்டும் நாம் கவனித்தால் போதும்.
ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.
ஒருவரிடம் பணம் வந்து சேர்கிறது என்றால் 'அவரிடம் என்னவோ இருக்கிறது' என்றுதான் அர்த்தம்.அது எப்படி என்பதை மட்டும் பாருங்கள்.பொறாமைப் பட வேண்டாம்.
பணக்காரர்கள் மீது லேசாக வரும் பொறாமை வெகு சீக்கிரத்தில் அவர்கள் மீதான வெறுப்பாக மாறி விடும்.அதன்பின் பணம் உள்ள இடங்கள் எல்லாவற்றையூமே நீங்கள் வெறுப்பாகப் பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள்.ஒரு சொகுசு அபார்ட்மன்ட்.சொகுசுக்கார்.விமானப் பயணம்.உல்லாச சுற்றுலா போன்றவற்றை எல்லாம் நீங்கள் வெறுப்பாகப் பார்க்க ஆரம்பித்தால் அவை எப்படி பதிலுக்கு உங்களை விரும்பத் தொடங்கும்.
இப்படி யோசித்துப் பாருங்கள்.
பெண்கள் மீதான வெறுப்பில் உள்ள ஒரு மனிதன் எந்தப் பெண்களைப் பார்த்தாலும் வெறுப்பாகத்தான் பார்ப்பான்.அப்படி வெறுப்பாக பெண்களைப் பார்க்கிற ஒருத்தனை எந்தப் பெண் அன்பாகப் பார்ப்பாள்.
அதே போல்தான் பண உலகிலும் நடக்கிறது.
பணக்காரர்களை நீங்கள் வெறுப்பாகப் பார்த்தால் அது அவர்களிடம் உள்ள பணத்தை வெறுப்பாகப் பார்ப்பதாக அர்த்தம்.அவர்களிடம் உள்ள பணத்தை வெறுப்பாகப் பார்ப்பது என்பது பொதுவாக எல்லாரிடத்திலும் உள்ள பணத்தை நீங்கள் வெறுப்பாகப் பார்ப்பதாக அர்த்தம்.அப்படி எல்லா இடத்திலும் உள்ள பணத்தை நீங்கள் வெறுப்பாக பார்ப்பதாக பொருள் கொண்டால் உங்கள் வீட்டில் உள்ள பணத்தை ஏன் உங்கள் சட்டைப்பையில் உள்ள பணத்தைக் கூட நீங்கள் வெறுப்பதாக ஆகி விடும்.
இதன் தொடர் விளைவாக உங்களிடம் உள்ள பணம் உங்களை விட்டு விலக ஆரம்பித்து விடும்.அதன் விளைவாக இன்னும் குறுகிய ஏழ்மை நிலை கொண்ட வாழ்க்கை மீது நீங்கள் தள்ளப்பட்டு விடக் கூடும்.
எனவே பணத்தை அதாவது பணக்காரர்களை வெறுக்காதீர்கள்.அவர்கள் உங்களை மதிக்க மாட்டார்கள்.உங்களை ஒரு பொருட்டாகவே எண்ண மாட்டார்கள்.காரணம் நீங்கள் எப்படி அவர்களை பொறாமை காரணமாக வெறுக்கிறீர்களோ அதே போல அவர்கள் உங்களை 'உங்களது ஆட்டிட்டியூட்' அதாவது மனோபாவம் சீப்பானது என்றே நினைத்துக் கொண்டிருக்கலாம்.அது தவறு என்று அவர்களுக்குப் புரிய வைக்க பணக்காரர்களை அன்போடு பாருங்கள்.அந்த அன்பான பார்வை எண்ணம் அவர்களிடம் உள்ள பணத்திற்கு உங்களது 'பணவிருப்பத்தை" புரிய வைத்து விடும்.அப்புறம் உங்களிடம் உள்ள பணமும் உங்களைப் புரிந்து கொண்டு உங்களிடம் இன்னும் அதிக பணத்தை காந்தம் போல இழுத்துக் கொண்டு வர ஆரம்பித்து விடும்.
ConversionConversion EmoticonEmoticon