இது போன்ற அறிவூரைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஒரு விஷயத்தில் வெற்றிபெற வேண்டுமானால் மிகவூம் கடுமையாக உழைக்க வேண்டும்.வேறு சிந்தனையே இருக்கக்கூடாது.எதை அடைய நினைக்கிறீர்களோ எந்நேரமும் அதைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்க வேண்டும்.
நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும்.
கடுமையாகப் போராட வேண்டும்.
உழைப்பு.கடுமையான உழைப்பு.இன்னும் கடுமையான உழைப்பு என்று இருக்க வேண்டும்.அப்படி செய்தால் எதை அடைய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ அது உங்களைத் தேடி வந்து விடும்.அதே சமயம் உங்களுக்கான சவப்பெட்டியூம் உங்களைத் தேடி சீக்கிரம் வந்து விடும்.
அப்புறம் வெற்றி பெற்று என்ன ஆகப் போகிறது.
அதனால்தான் இது போன்ற அறிவூரை பொழிப்புரைகளை விரும்புவதேயில்லை.பணம் சம்பாதிப்பதற்கும் இது போன்ற டெம்ப்ளேட் அறிவூரைகளை பலரும் சொல்லி வைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
சிக்கனமாக இருங்கள்.
செலவைக் குறையூங்கள்.
சேமித்து வையூங்கள்.
கடுமையாகப் பாடுபடுங்கள்.
முதல் மூன்று விஷயங்களோடு இதில் நான் ஒத்துப் போகிறேன்.அதுவூம் ஓரளவிற்குத்தான் ஒத்துப் போகிறேன்.ஏனென்றால் வாழ்க்கை என்பதே சந்தோஷமாக கொண்டாட்டமாக ஆனந்தமாக திருவிழாவாக இருக்க வேண்டுமென்று எண்ணுபவன்.அதனால் கழுத்தை நெறிப்பது போல செலவைக் குறைப்பது.கடுமையாக பட்ஜட் போட்டு பணத்தை சேமித்து வைக்கிறேன் என்ற பெயரில் பணத்தை சிறைப்படுத்துவது என்பதெல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது.
ஆனந்தமான வாழ்க்கையை நீங்கள் வாழத்தொடங்கும்போது அத்தனையூம் ஆனந்தமாக இருக்கப்போகிறது.செலவைக் குறைப்பானேன்.அதற்கு பதிலாக அதிகம் சம்பாதிக்க வருமானத்தை பெரிதாக்கிக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.இழுத்துப் பிடித்து சேமிப்பதற்கு பதில் வருமானத்தில் இத்தனை சதவீதம் சேமிப்பிற்கு என்று ஒதுக்கி விடுங்கள்.
இந்த கடுமையாகப் போராடுவது என்பதைப் பற்றித்தான் இப்போது சொல்ல வருகிறேன்.அதுவூம் பெரியப் பணக்காரர் ஆக வேண்டுமென்றௌ நிறைய பணம் வந்து கொண்டே இருக்க வேண்டுமென்றௌ நீங்கள் விரும்பினால்
எந்த நேரமும் அதைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்க வேண்டுமென்று நீங்கள் 'சிந்திக்க" ஆரம்பித்தால் அதனை உங்களது புத்தியூம் தர்க்கரீதியிலான மனதும் நிராகரிக்க ஆரம்பித்து விடும்.
ஆனால் இதனை எளிதாகச் செய்யலாம்.சிரமமில்லாமல் செய்யலாம்.அவசரமில்லாமல் செய்யலாம்.புரிதலோடு செய்யலாம்.ஆனந்தமாகவூம் செய்யலாம்.
அதெப்படி?
காலையில் சீக்கிரம் எழுந்தரிப்பதற்கு அலாரம் செட் செய்து வைத்து எழுத்தரிக்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு? ஒரு வாரம் காலையில் நான்கு மணிக்கோ அல்லது ஐந்து மணிக்கோ அலாரம் செட் செய்து வைத்து விட்டால் அடுத்த வாரத்திலிருந்து அலாரம் இல்லாமல் எழுந்தரிக்க முடியூமா என்று பாருங்கள்.
நிச்சயம் முடியூம்.
ஏனெனில் உங்கள் உடலில் உள்ள பயாலஜி கடிகாரத்திற்கு தெரியூம்.காலையில் உங்களை எழுப்பி விட வேண்டுமென்று.இதே உத்தியை இப்போது பணம் சம்பாதிப்பதற்கு பயன்படுத்துவோம்.
நாள் முழுக்க பணம் பற்றிய சிந்தனையில் இருக்க வேண்டாமென்று சொன்னேன் அல்லவா? ஒரு நாளைக்கு பத்து நிமிடம் மட்டும் பணம் பற்றிய சிந்தனைக்கு நேரத்தை ஒதுக்குங்கள்.அந்த நேரம் எப்போதும் மாறாமல் ஒரே நேரமாக இருக்கட்டும்.
உதாரணமாக நீங்கள் காலையில் அலுவலகம் செல்வதற்கு மெட்ரோ ரயிலில் செல்கிறீர்கள் என்றால் அந்த நேரத்தில் ஒரு பத்து நிமிடத்தை இதற்கு ஒதுக்கிக் கொண்டு விடலாம்.அந்த நேரத்தில் யாராவது பேச்சுக் கொடுத்தால் பேசாமல் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டாம்.பேசுங்கள்.சிரியூங்கள்.சப்தம் போடுங்கள்.ஆனால் உள்ளுக்குள் மட்டும் ஒரு சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கட்டும்.
அதென்ன சிந்தனை?
உதாரணமாக ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டுமென்பது உங்களது இலக்காக இருந்தால் -
"ஒரு கோடி ரூபாய் கிடைக்கப்போகிறது" என்றே மனதார உள்ளுக்குள் சொல்லிக் கொண்டிருங்கள்.
எந்த வேலையூம் செய்யாமல் எப்படி ஒரு கோடி ரூபாய் கிடைக்குமென்ற தர்க்கம் இப்போது வேண்டாம்.தானாகவே அப்படி ஒரு வேலையை செய்வதற்கான ஐடியா ஒரு ப்ளாஷாகி உங்களுக்கு ஒரு நாள் தோன்றக் கூட தோன்றும்.அலுவலகத்தில் திடீர் பதவி உயர்வோ வெளிநாட்டு டெபுடேஷனோ கிடைத்து அங்கே உங்களது திறமையைப் பற்றி அறியூம் வெள்ளைக்காரர்கள் உங்களை தங்கள் கம்பெனிக்கு இழுத்து தலைமைப் பொறுப்பில் கூட உங்களை அமர்த்தலாம்.
இதெல்லாம் நடக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம் என்று கேட்டால் இதெல்லாம் நடக்காது என்பதற்கும் என்ன உத்திரவாதம் என்றொரு கேள்வி இருக்கிறது.
எந்த மந்திரமும் வேண்டாம்.
எந்த கடின உழைப்பும் வேண்டாம்.
ஒரு நாளைக்கு சுமார் பத்து நிமிடங்கள் போதும்.
உங்களுக்குள் நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்.
எவ்வளவூ பணம் வேண்டுமென்று தீர்மாணியூங்கள்.
மற்றவற்றை உங்களது புத்தியூம் சிந்தனையூம் தீர்மாணித்து செயலில் உங்களை பத்திரமாக இறக்கி விடும்.
வாழ்த்துக்கள்!
ConversionConversion EmoticonEmoticon