"பணமேக்கப்"
காலையில் எழுந்ததும் உங்களது முகத்தை கண்ணாடியில் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் முகம் மட்டுமல்ல உலக அழகியின் முகம் கூட காலையில் எழுந்ததும் பார்த்தால் சுமாராகத்தான் தெரியூம்.இந்த முகத்தை லேசாக ஒப்பனை செய்து அப்புறம் அதில் உங்களது ஆளுமை மனோபாவம் போன்றவைகளை இன்பில்ட் செய்தபின்தான் அதில் ஒரு பெருமையூம் கர்வமும் அழகும் வரும்.இது எல்லோருக்கும் பொருந்தும்.
நீங்கள் எந்த அலுவலகத்திற்குச் சென்றாலும் அங்கே ஒருத்தன் இருப்பான்.அல்லது ஒருத்தி இருப்பாள்.மேனேஜ்மன்ட்டிலும் அவனுக்கு நல்ல பெயர் இருக்கும்.மேலதிகாரியிடமும் நல்ல பேர் வாங்கியிருப்பான்.உடன் பணியாற்றுபவர்களும் அவனது அருகாமையையூம் அவனிடம் அரட்டையடிக்கவூம் விரும்பவார்கள்.லிஃப்ட்பாய் முதல் செக்யூரிட்டி மற்றும் ஸ்வீப்பர் வரை அவனை நம்ம ஆள் என்கிற பாசத்துடன் அணுகுபவர்களாக இருப்பார்கள்.
இதற்கு காரணம் மனிதாபிமானமோ அந்த ஆள் மற்றவர்கள் மீது காட்டும் கரிசனம் எம்பதி இத்யாதிகளோ அல்ல.அந்த ஆள் தன்னிடம் இல்லாதவற்றை இருப்பதாகக் காட்டிக் கொண்டிருக்கலாம்.அல்லது இருப்பதை இன்னும் அதிகமாக இருப்பதாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கலாம்.
என்ன இருக்குது இவன்கிட்டன்னு எல்லாம் இவன்கிட்ட போய் விழுதுங்க...இப்படி கூட அவனைப் பற்றி மற்றவர்கள் கிசுகிசுப்பாக பேசுவதை நீங்கள் கேட்டிருக்கலாம்.
இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் என்று சிலவற்றை நீங்கள் கேட்டிருக்கலாம்.இதெல்லாம் ஆம்பளைங்க சமாச்சாரம் என்று சில விளம்பரங்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.
இப்போது நான் சொல்வது 'இதெல்லாம் வெற்றியாளர்களின்" சமாச்சாரம்!
அது என்னவென்றால் இல்லாததை இருப்பதாகக் காட்டுவது.இருப்பதை இன்னும் பெரிதாகக் காட்டுவது.இருப்பதைப் பெரிதாகக் காட்டுவதோடு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவது.இதைத்தான் மீடியாக்களி;ல் வரும் விளம்பரங்கள் செய்கின்றன.இதைத்தான் நடையாய் நடக்கும் அரசியல்வாதிகளும் செய்கிறார்கள்.இதைத்தான் படத்தை எடுத்து விட்டு டிவிக்களில் புரொமோஷனுக்கு வந்து உட்காரும் சினிமா ஆட்களும் செய்கிறார்கள்.
இதெல்லாம் தேவைதானா?
அடக்கமாக அடக்க ஒடுக்கமாக இருந்தால் பத்தாதா என்று நீங்கள் கேட்கலாம்.இப்போதைய உலகம் எதிலும் வணிகப்பூர்வமாக இருக்கத் துரண்டுகிற உலகம்.நீங்கள் அடக்கமாக இருந்தால் உங்களைக் கொண்டுபோய் பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விட்டுப் போய் விடுவார்கள்.
இன்னும் சொல்லப்போனால் ஒப்பனை செய்யாத எந்த தேவதையூம் பிசாசு போலத்தான் இருக்கும்.
ஆக ஒப்பனையில் இருக்கிறது எல்லாமும்.
இப்போது மெயின் மேட்டருக்கு வரலாம்.
பணத்திற்கும் ஒப்பனை தேவையா?
தேவை.மிக மிக தேவை.
இதைத்தான் நிறுவனங்கள் தங்களது காலாண்டு முடிவூகளில் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் அதைத்தான் செய்து கொண்டிருந்தது.தன்னிடம் நிறைய லாபப்பணம் இருக்கிறது என்று அறிவித்துக் கொண்டே இருந்த வரைக்கும் சத்யம் கம்ப்யூட்டரை ஒரு ப்ளுசிப் கம்பெனி என்று மீடியாக்கள் தாங்கிப் பிடித்தார்கள்.தினம் அதைப் பற்றிப் பேசினார்கள்.அப்புறம் ஒப்பனை கலைந்து சரிந்தது வேறு விஷயம்.அது நமக்குத் தேவையில்லை.
ஒரு குஜராத்தியிடம் கேளுங்கள்.கையில் எவ்வளவூ பணம் இருக்கிறது என்று.பாக்கெட்டில் நுரறு ரூபாய்தான் வைத்திருப்பான்.இருபதாயிரம் இருக்கிறது என்று சொல்வான்.அந்த பணம் பற்றி பளிச் அவனது கண்களில் தெரியூம்.அதே நம்ம ஆட்களிடம் கேளுங்கள்.லைஃப் எப்படி போயிட்டிருக்கு என்று.லட்ச லட்சமாக பணம் இருந்தாலும் ஏதோ போவூது நிலைமை ஒண்ணும் சரியில்லை என்று பஞ்சப்பாட்டு பாடுபவனாக நம்ம ஆள் இருப்பான்.
மிகைப்படுத்திக் கூறுவதில் உங்களிடம் அதிகப் பணம் இருப்பதாக கேட்பவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ நீங்கள் முதலில் நம்ப ஆரம்பித்து விடுவீர்கள்.அப்புறம் பஞ்சப்பாட்டு பாடுவதை நிறுத்தி விடுவீர்கள்.தெம்பாக இருப்பீர்கள்.தைரியமாக இருப்பீர்கள்.துணிச்சலாக முடிவூ எடுப்பீர்கள்.அளந்து ரிஸ்க் எடுக்கக் கூட தயங்க மாட்டீர்கள்.
காரணம் உங்களிடம் "நிறைய பணம்" இருக்கிறது.
நிஜமாக அது போல நிறைய பணம் இல்லையே என்று நினைக்க வேண்டாம்.ஒப்பனை செய்யப்பட்டிருக்கும் பணம் அதாவது உங்களது "நிறைய பணம்" இன்னும் நிஜமான நிறைய பணத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்;த்து விடும்.
இது இயற்கையின் ஈர்ப்பு விதியின்படி உண்மையூம் கூட.
எனவே அதிகமாக இருப்பதாகச் சொல்லிப் பழகுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon