திருமணங்களில் மணப்பெண்ணிற்கு சீர்வரிசை என்று பாத்திரம் பண்டம் சாமான் செட்டு என்று கொடுப்பது காலங்காலமாக இருந்து வருவது வழக்கம்.கட்டில் மெத்தை பீரோ டிவி ஃப்ரிட்ஜ் வாசிங் மெஷின் போன்றவை எல்லாம் இந்த சீர்வரிசையில் இடம் பெற்றது ஒரு இருபது ஆண்டு காலமாகத்தான்.ஆனால் சீர்வரிசை என்று அவர்கள் தரும் கண்ணாடி குங்குமச்சிமிழ் பித்தளையால் ஆன குடம் பன்னீர் செம்பு என்று வரிசையாக நீளும் பொருட்கள் எல்லமே தனித்தன்மை வாய்ந்தவை.ஒவ்வொன்றிற்றும் ஒரு மறைபொருளான அர்த்தம் இருக்கிறது.
கணவனோடு குடித்தனம் நடத்தச் செல்லும் அந்தப் பெண் சீரும் சிறப்புமாக அதாவது வளமாக வாழ வேண்டும் என்றவளில்தான் நீங்கள் புரிந்து வைத்திருப்பீர்கள்.ஆனால் உண்மை அர்த்தம் அதுவல்ல.அவள் வளமாகவூம் வாழ வேண்டும்.அத்துடன் அந்த வளம் தொடர்ந்து "வளர" வேண்டும் என்பதற்காகத்தான் அந்த பொருட்களை தருகிறார்கள்.
இது போல பணத்திலும் ஒரு சீர்வரிசைத்தனமான "பணவரிசை"யைத்தான் இப்போது பார்க்கப் போகிறீர்கள்.
பணத்தைப் பொறுத்தவரை இரண்டே வரிசைதான்.
ஒன்று ஏறுவரிசை.
இன்னொன்று இறங்குவரிசை.
ஏறுவரிசை என்றால் அங்கே பணம் "வளரும்" தன்மை கொண்டதாக இருக்கும்.அதாவது பணம் வளரும்.
இறங்குவரிசை என்றால் அங்கே பணம் "மெலியூம்" தன்மை கொண்டதாக இருக்கும்.அதாவது பணம் தேயூம்.
பணம் அதிகரிக்கும்.
பணம் குறைந்து போகும்.
இப்போது சொல்லுங்கள்.எது வேண்டும் உங்களுக்கு?
பணம் அதிரிக்க வேண்டும்தானே அனைவரும் விரும்புவார்கள்.நீங்களும் அது போலத்தானே விரும்புவீர்கள்.அதற்காகத்தான் பின்வரும் முறையை உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் போகிறேன்.
முதலில் இறங்கு வரிசை.
நீங்கள் யாருக்கு பணம் கொடுத்தாலும் அதனை இறங்கு வரிசையில் கொடுக்க வேண்டும்.அதாவது உங்களைப் பொறுத்தவரை உங்களை விட்டு வெளியே செல்லும் பணம் என்பது "பண இழப்பு".நீங்கள் கடையில் ஒரு பொருளை வாங்கினாலும் கூட அது உங்களைப் பொறுத்தவரை பண இழப்புதான்.
உதாரணமாக ஒரு செலவை மேற்கொள்கிறீர்கள்.அதன் மொத்த தொகை ரூ 240 ஆக இருந்தால் இங்கே 2 என்ற எண்ணை விட பெரிய எண் அடுத்ததாக வந்து அதன்பின் அதற்கும் குறைவான எண் வருகிறது.இது ஒரு ஏறி இறங்கும் நிலை.இது வேண்டாம்.இப்படி ஒரு தொகை வந்தால் உங்களைப் பொறுத்தவரை 4ஐ விட 2 அதிகமாக்க வேண்டும்.240வூடன் 60 ரூபாயைக் கூட்டினால் ரூ 300 ஆகிறது.இது இறங்கு முகம்தான் என்றாலும் இரண்டு புஜ்ஜியம் என்பது ஒரு தட்டையான நிலையைக் குறிக்கிறது.ஆக இத்துடன் ரூ 21ஐ சேர்த்து விட்டால் வரக்கூடிய தொகை ரூ 321 ஆகிறது.அதற்கான ரூ 240க்கு பொருட்கள் வாங்கி விட்டு அதனை தந்தவருக்கு ரூ 321ஐ கொடுத்தால் பைத்தியக்காரத்தனமாக இருக்கும்.தொடர்ந்து ஒரு நாளில் மேற்கொள்ளும் ஒவ்வொரு செலவிற்கும் இது போல கணக்கு பார்த்துக் கொண்டே இருந்தால் சிந்தித்து சிந்தித்து தலை தொங்கிப் பொகும்.அதனால் நீங்கள் வீட்டிற்கு வந்து மொத்தமாக அன்றைய தினம் எவ்வளவூ செலவாகிற்று என்று பாருங்கள்.உதாரணமாக
ரூ 955 என்று வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.இத்துடன் ஒரு பத்து ரூபாயை மட்டும் சேர்த்து விட்டால் இந்த தொகை ரூ 965 என்றாகி விடும்.
ஆக 9ஐ விட 6 குறைவூ.6ஐ விட 5 குறைவூ.ஆக இறங்கு வரிசை வந்து விட்டது.நீங்கள் செய்த உண்மையான செலவூ ரூ 955தான்.கூடுதலாக கையில் உள்ள பத்து ரூபாயை ஒரு டப்பாவில் போட்டு வைத்து விடுங்கள்.இது போல தினமும் இறங்குவரிசைக்காக மெனக்கெடுவதில் உள்ள கூடுதல் தொகையை அந்த டப்பாவில் போட்டுக் கொண்டே வாருங்கள்.
இந்த டப்பாவின் பெயரை பாக்ஸ் ஏ என்று பெயரிட்டுக் கொள்ளுங்கள்.ஏனென்றால் பாக்ஸ் பி என்று இன்னொரு டப்பாவையூம் நீங்கள் தயார் செய்ய வேண்டியிருக்கிறது.
எப்படி இறங்கு வரிசையை தயார் செய்தோமோ அதே போல இப்போது ஏறுவரிசை.உங்களுக்கு யாராவது எதற்காவது பணத்தைக் கொடுக்கும்போதோ அல்லது ஏன் நீங்கள் சம்பளமாகவே ஒரு தொகையைப் பெறும்போதோ அல்லது யாரிடமாவது கொடுத்த கைமாத்து அதிர்ஷ்டவசமாக(இந்த காலத்தில் ரொம்ப கஷ்டம் ப்ரோ என்று வாங்கிட்டு காணாமல் போனவர்கள் திரும்பக் கொடுக்கிறார்களா என்ன!) திரும்பி வரும்போதோ அது கண்டிப்பாக ஏறுவரிசையில் இருக்க வேண்டும்.
உதாரணமாக உங்களுக்கு ஒரு தொகை ரூ 2500 என்று வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.இது ஏறுவரிசையில் வந்தாலும் கடைசி இரண்ட இலக்கங்கள் தட்டையாக இருக்கின்றன.இதனை ஏறுவரிசையாக மாற்ற இத்துடன் ரூ 67ஐ மட்டும் கைக்காசைப் போட்டு சேர்த்து விட்டால் இந்த தொகை ரூ 2567 என்று ஏறு வரிசைக்கு வந்து விடும்.இதிலும் ஒவ்வொரு தடவையூம் வெளியே இருக்கும்போது கணக்கு பார்த்து மாற்றிக் கொண்டிருக்க முடியாது.
அதனால் வீட்டிற்கு வந்த பணத்தைக் கொண்டு வந்தவூடன் கூடுதலாகப் போடப்படும்(இந்த உதாரணத்தில் ரூ 67 என்பது போல) பாக்ஸ் பி என்ற டப்பாவில் போட்டு விடுங்கள்.
ஒவ்வொரு மாதமும் பாக்ஸ் ஏ-யில் உள்ள பணத்தை அந்த மாத செலவிற்காக வைத்திருக்கும் (உதாரணமாக வீட்டு மளிகைசாமான்கள் வாங்குவதற்கு) பணத்துடன் சேர்த்து விடுங்கள்.அதே போல பாக்ஸ் பி-யில் உள்ள 'நல்ல பணத்தை' ஏதாவது முதலீடு செய்வதற்கோ சீட்டு கட்டுவதற்கோ எஸ்ஐபி போன்ற முதலீட்டிற்கோ அல்லது ஒன்று வேண்டாமென்றால் வங்கி சிறுசேமிப்புக் கணக்கில் போடுவதற்Nகுh வைத்துக் கொள்ளுங்கள்.
அப்புறம் இன்னொரு விஷயம்.உங்களது வங்கிக் கணக்கில் உள்ள இருப்புத் தொகையூம் இது போல ஏறுவரிசையில் இருந்தால் நல்லது.அதற்கேற்ப அதில் சிறிது பணத்தைப்போட்டு ஏறுவரிசையில் அவ்வப்போது மாற்றி வைத்து விடுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon