பணமுடக்கம் இன்னும் முழுவெற்றியடையாத நிலையில் அடுத்து கழுத்தை நெரிக்கும் பிரச்சனையாக தொழில்முனைவோர்களுக்கு இருக்கப்போகிற விஷயம்தான் பலமாதங்களாகப் பேசப்பட்டு வரும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை.நுகர்வோரைப் பொறுத்தவரை ஒரு பொருளுக்கு நாடு முழுக்க ஒரே வரி என்பதால் விலை குறையூம் என்ற எதிர்பார்ப்பு வேறுவிதமாக அமைந்து விடும்.இது எப்படி என்றால் ஒரு பொருளுக்கு ஒரே வித வரிதான்.ஆனால் அந்த வரிக்குள் உள்ளடுக்குகளாக பல குட்டிக் குட்டி வரிகள் உட்கார்ந்திருக்கும் சர்சார்ஜ் என்ற பெயரில்.கூடுதல் சார்ஜ் என்ற பெயரில்.இப்படி அமைவது தொழில்முனைவோரைப் பொறுத்தவரை குழப்பத்தை உருவாக்கி இதென்ன கலாட்டா என்று பயமுறுத்தும்.அதனால் குரு படத்தில் மணிரத்னம் காண்பித்திருப்பாரே.குறைவான உற்பத்தி நடப்பதாக தொழிற்சாலையில் கணக்கு காண்பித்து விட்டு அதிகமாக உற்பத்தி பண்ணி மோசடி செய்திருப்பதாக காண்பித்திருப்பாரல்லவா.இனி இதே பாணியில் வரிஏய்ப்பு செய்வதற்கு உற்பத்தியைக் குறைத்துக் காண்பித்து பதுக்கிய உற்பத்தியை க்ரே மார்க்கெட்டில் விற்று விட ஆரம்பிப்பார்கள்.கருப்புச்சந்தையை விட பெரிதாகவூம் வலிமையானதாகவூம் பழுப்புச்சந்தை உருவாகி வளரும்.அப்படி வளரும்போது கருப்புப்பணமும் வேகமாக வளரும்.
இது ஜிஎஸ்டியால் வரும் பக்க விளைவூ.அதாவது ஜிஎஸ்டி என்பது என்ன என்று சரியாகப் புரிந்து கொள்ளப்படாததால் வரும் பக்க விளைவூ.இன்னொரு பக்கம் வங்கிகளுக்கு மக்கள் இனி போக மாட்டார்கள்.தனியார் நிதி நிறுவனத்தில் இரு பத்தாண்டுகளுக்கு முன்னதாக அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தைப் போட்டு ஏமாந்தது போல இப்போது வங்கியின் சேமிப்புக் கணக்கில் பணம் போடச் சென்றால் இது என்ன பணம்.ஏது இவ்வளவூ பணம் என்று வங்கியில் உள்ளவர்கள் கேள்வி கேட்பதை சாதாரண மக்கள் விரும்பமாட்டார்கள்.பயப்படுவார்கள்.போட்ட பணத்தை ரேஷனில் அளப்பது போல அளந்துதான் திரும்ப எடுக்க முடியூம் என்பதும் அச்சத்தை ஏற்படுத்தி விடும்.ஏடிஎம்மிலும் பணம் கிடைக்காது.வங்கியில் போட்டு வைத்திருந்தாலும் அவசரத் தேவைக்கு பணம் கிடைக்காது.பத்து பைசா சேமிப்புக் கணக்கில் போட்டு வைத்திருந்தாலும் இன்கம்டாக்ஸ்காரன் வந்து எடுத்துக் கொண்டு போய் விடுவான் என்று தவறாக எண்ணிக் கொண்டு பயப்படுவார்கள்.ஆன்லைனில் பொருட்களை வாங்கலாம் என்றால் காசை எண்ணி எண்ணி யோசித்து செலவழிக்கும் பொதுஜனம் ஆன்லைன் பர்ச்சேஸிற்கு சர்வீஸ் சார்ஜ் எதற்கு தண்டம் அழ வேண்டும் என்று வீட்டுக்கு அருகே நம்பிக்கையானவர்களிடம் வாங்கிக் கொள்ளலாமே என்று முடிவெடுப்பார்கள்.குறிப்பாக தங்கநகைகளை இனி கடைகளில் வாங்க மாட்டார்கள் என்று இன்னொரு சேதி.
ஒரு தடவை ஆன்லைனில் பத்து ரூபா பரிமாற்றம் செய்தாலும் அப்போது அமவூன்ட் டிக்ளைன்டு என்று ரிஜக்ட் ஆகி விட்டால் தெனாலிராமன் வளர்ந்த பூனை போல பயந்து அலறி இனி பிஓஎஸ் மெஷின் எல்லாம் வேண்டாம்பா.உள்ளுர்லயே லோக்கல்லயே நாலு இடம் விசாரிச்சு அலைஞ்சு திரிஞ்சு வாங்கிக்கலாம் என்று முடிவெடுப்பாரகள்.உள்ளுர் சந்தை வளரும்.உள்ளுர் சந்தையில் உள்ள வியாபாரிகளும் தங்களது விற்றுவரவை வங்கியில் போட்டால் வியாபாரத்துக்கு தேவைக்கு பணம் எடுக்க முடியாது.இன்கம்டாக்ஸ்காரன் திடீர்னு வந்து எடுத்துட்டுப் போயிட்டா என்ன செய்யறது.திடீர்னு வங்கியில உள்ள பணம் செல்லாதுன்னு கவர்மன்ட்டுல சொல்லிட்டா என்ன பண்றது என்று சாக்குப்பையின் அடியிலேயே பணத்தை வைத்துக் கொள்ள ஆரம்பிப்பார்கள்.
இதன் பயனாக இனி வங்கிகளுக்கு மக்களிடமிருந்து பணம் வரவே வராது.வங்கிகளிடம் கடன் வாங்கவூம் அஞ்சுவார்கள்.வங்கிகள் எங்கே தேடுவேன்.இனி வாடிக்கையாளர்களை எங்கே தேடுவேன் என்று அலைந்து நசிந்து நாசமாகப் போவார்கள்.
கருப்புச்சந்தையூம் பழுப்புச்சந்தையூம் இரட்டைக்குழந்தைகளாக போஷாக்கோடு வளரும்.அப்படி வளரும்போது நாட்டில் உண்மையான பொருளாதாரம் செத்துப் போய் இணைப்பொருளாதாரம்(parallel economy) மட்டுமே இருக்கும்.அந்த நிலை வரும் போது 1992ல் ஏற்பட்ட உலகமயமாக்கலில் விளைவாக நாட்டின் உள்ளே வந்து கடைபரப்பிய தொழில்களைத் துவங்கிய பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது வர்த்தகங்களை காலி செய்து கொண்டு மூட்டை முடிச்சோடு வேறு நாடுகளுக்குச் சென்று விடுவார்கள்.
அப்போது ஹாய் மேன்..வாட்ஸ் யார்..என்று கிரெடிட்கார்டு டெபிட் கார்டுடன் பன்னாட்டு நிறுவனங்களிலும் ஐடி நிறுவனங்களிலும் கொழுத்த சம்பளம் வாங்கி பிட்ஸா பர்கர் தின்று 100ரூபாய்க்கு ஜூஸ் குடித்து மல்டிப்ளக்ஸ்களில் இரண்டாயிரம் ரூபாய்க்கு சினிமா பார்த்து சுகவாசியாக வலம் வந்த அரைகால் சட்டையணிந்த நடுவயதுக்கு வந்து விட்ட இளைஞர்கள் தேனாம்பேட்டை சிக்னலில் பிச்சையெடுத்துக் கொண்டிருப்பார்கள்.
ConversionConversion EmoticonEmoticon