அத்தனைக்கும் அவஸ்தைப்படு...
ஒரு ஊரில் ஒரு வேட்டைக்காரர் இருந்தார்.அவர் தன்னிடம் வேட்டையாடுவது எப்படி என்று கற்றுக்கொள்ள வருபவர்களுக்கு உதவலாமே என்று எந்த காட்டில் எந்த பகுதியில் விலங்குகள் இருக்கின்றன என்று எனக்கு தெரியூம்.அதை உங்களுக்கு தேவைப்படும்போது சொல்வேன் என்று சொல்லியிருக்கிறார்.
சிலர் அவரிடம் கேட்டு அதன்படி அங்குள்ள விலங்குகள் எவை என்று கேட்டு தெரிந்து கொண்டு வேட்டையாடியூள்ளனர்.இவர்களில் ஒரு நபர் இருக்கிறார்.அவருக்கு எதிலுமே அவநம்பிக்கையூம் அவசரமும் அதிகம்.ஊரில் எல்லாருமே ஏமாற்றுக்காரர்கள் யாரிடமும் ஏமாறாமல் விழிப்புணர்வூடன் இருக்க வேண்டும் என்ற முனைப்புடனேயே எப்போதும் காணப்படுவார்.
அவர் வேட்டைக்காரரிடம் சென்று கோபத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கேட்டிருக்கிறார்.
"எல்லாருக்கும் எங்கே விலங்குகள் இருக்கின்றன என்பதை சொல்கிறீர்கள்.எனக்கு மட்டும் சரியாக சொல்ல மாட்டேன் என்கிறீர்களே.இதுதானா உங்களது லட்சணம்."
வேட்டைக்காரர் புன்முறுவலுடன் கேட்டார்.
"எதை வேட்டையாடப்போகிறாய்"
"எது கிடைத்தாலும் வேட்டையாடுவேன்.உங்களுக்கு எதற்கு அதெல்லாம்.விலங்குகள் எந்த பகுதியில் இருக்கின்றன என்பதை மட்டும் சொல்லுங்கள்"என்று அவசரப்படுத்தினார்.
வேட்டைக்காரர் அந்த நபரின் கையிலிருந்த ஆயூதத்தைப் பார்த்தார்.அவர் வெறும் உண்டி வில்லை மட்டுமே வைத்திருந்தார்.அதை வைத்துக் கொண்டு காடை, கவதாரி, காட்டுக்கோழி போன்ற எதையாவது பெயருக்கு வேட்டையாடலாம்.இவருக்கு சொன்னால் புரியாதே என்று யோசித்தார்.
"ம்..சொல்லுங்கள்.எங்கே விலங்குகள் இருக்கின்றன"
"சொல்லிவிடுவேன்.அப்புறம் உம்ம சாமர்த்தியம்.உன்னன்ட இருக்கற ஆயூதத்தை வைச்சி நீயாத்தான் வேட்டையாடிக்கனும்"
"அது என் பிரச்சனை.எந்த பகுதியில இருக்குன்னு சொல்லுங்க"
"சரி.தெற்கால போய் கிழக்கால திரும்பி ரெட்டைப் புளியமரத்துகிட்ட போய் நில்லும்."
நன்றி கூட சொல்லாமல் விடுவிடுவென்று உண்டிவில்லுக்காரர் கிளம்பிப் போய் விட்டார்.
அப்புறம் ஆஆஆ என்ற சப்தம் மட்டுமே கேட்டது.
அந்த ரெட்டைப் புளியமரத்தின் அருகில்தான் சுணை இருக்கிறது.அங்கேதான் தண்ணீர் தாகத்துக்காக காட்டு யானைகளும், புலிகளும் வந்து உலவூகின்றன.அவற்றை வேட்டையாட உண்டிவில் பத்தாது.
வேட்டைக்காரரின் அருகிலிருந்த மற்றவர்கள் கேட்டனர்.
"என்ன இப்படி பண்ணிப்புட்டேள்.அங்க புலி, யானைன்னா இருக்கும்"
"அது எனக்கும் தெரியூம்.இப்படிதான் பலபேர் லோகத்துல இருக்கா.தன்னோட பலம் எவ்வளவூ.தன்னோட ஆயூதம் எதுன்னு தெரியாம களத்துல இறங்கினா சிக்கல்னு புரியாம யார்கிட்டேயாவது எதையாவது நச்சரிச்சிண்டே இருக்கா.சரி வாங்க நம்ம பயணத்தை தொடர்வோம்"என்றபடி நகர ஆரம்பித்தார்.
இப்படித்தான் எல்லா இடங்களிலும் நடக்கிறது.எனது ஒரு நாள் பங்குச்சந்தைப் பயிற்சிக்கு வருபவர்களிடம் பயிற்சியின் முடிவில் நான் சொல்வதுண்டு.பயிற்சிக்குப் பிறகு உங்களுக்கு சில பங்குகளை அவ்வப்போது பரிந்துரை செய்வேன்.அதை செய்வதற்கு உங்களது புரொஃபைல்(profile)வேண்டுமென்று.சிலர் இருக்கிறார்கள்.புரொஃபைல் அனுப்ப மாட்டார்கள்.அல்லது அவர்களால் அதிகபட்டசம் ஐம்பதாயிரத்திற்குள்தான் டிரேடிங் செய்ய பணம் இருக்கும்.ஆனால் தினம் பத்தாயிரம் பணம் பண்ண முடியூமா என்று அலைவர்.ஐம்பதாயிரத்தை ஆறே மாதத்தில் பத்து லட்சமாக்க முடியூமா என்றும் நினைப்பர்.
ஒன்றை இரண்டாக. இரண்டை பத்தாக எல்லாம் பங்குச்சந்தையில் ஆக்க முடியூம்தான்.அதற்கு முதலீடும், தைரியமும், ரிஸ்க் எடுக்கிற மனோபாவமும் தேவை.
ஆக நான் அடிக்கடி சொல்வதுண்டு.மனோபாவம்தான் முதலில் தேவை.இப்போது இன்னொன்றும் தெரிகிறது.மனோபாவத்தை மேலாண்மை(attitude management) செய்யவூம் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
எனவே மனோபாவத்தை மேலாண்மை செய்து அதை எப்போதுமே பாசிட்டிவ்வாகவூம், நல்லது நடக்குமென்ற நம்பிக்கையோடும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
இதே வேட்டைக்காரர் கதையை கடவூளுக்கும் அப்ளை செய்து பார்க்கலாம்.கோவிலுக்குப் போய் பகவானை சேவிக்கும்போது எனக்கு இதைக்கொடு அதைக்கொடு.கார் கொடு.பங்களா கொடு.பணம் கொடு என்றெல்லாம் கேட்டால் அதை அவன் கொடுத்து விட்டானானால் அதை நம்மால் நிர்வகிக்க முடியூமா என்று யோசிக்க வேண்டும்.பகவானும் இப்படித்தான்.நம்மை எதை நிர்வகிக்க முடியூமோ எதுவரை நிர்வகிக்க முடியூமோ அதுவரைதான் கொடுப்பான்.
அதனால் பகவானிடம் எதையூம் கேட்பதற்கு முன் அதை நம்மால் நிர்வகிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டு அப்புறம் கேளுங்கள்.
கேட்டது கிடைக்கும்.எங்கும்.எப்போதும்.
Prof.T.A.Vijey.,M.E,(Ph.D)
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get stock market updates & trends
ConversionConversion EmoticonEmoticon