பங்குச்சந்தையில் ப்ளுசிப் பங்குகளிலும் சில குறிப்பிட்ட ஸ்பெகுலேட்டிவ் பங்குகளிலும் எப்போது வேண்டுமானாலும் புத்திசாலித்தனமும் சட்டென்று முடிவெடுக்கும் திறனும் இருந்தால் சம்பாதித்துக் கொண்டே இருக்கலாம் என்பது உண்மைதான்.
ஜாக்பாட் அடிப்பது போல சம்பாதிக்க வேண்டுமென்றால் சந்தையின் போக்கில் செல்லும் பங்குகளில் டிரேடு செய்யாமல் சந்தைக்கு எதிராகவூம் ஏன் எதற்கென்றே தெரியாமல் திடீரென ஸ்பர்ட் எடுத்து ஓடும் பங்குகளில் டிரேடு செய்ய வேண்டும்.இவ்வகை பங்குகளை ஆபரேடட் ஸ்டாக்ஸ்(Operated stocks)என்று அழைப்போம்.இது ஒரு வகை சூதாட்டம்தான்.மாட்ச் ஃபிக்சிங் போல நிழலாக நடைபெறும் காரியம்.
சந்தையில் திடீரென புதையல் எடுப்பது போல டிரேடிங் செய்வதற்கென ஒரு முறை இருக்கிறது.அதுதான் பென்னி ஸ்டாக்குகளை வாங்கி வைத்துக் கொள்வது.அமெரிக்காவில் எல்லாம் பென்னி ஸ்டாக்குகளை மட்டுமே நம்பி வாங்கி வைத்து மில்லியனேர் ஆனவர்கள் இருக்கிறார்கள்.இதற்கென்றே அங்கே நிபுணர்களும் இருக்கிறார்கள்.
நம் சந்தையிலும் இது போன்ற பென்னி ஸ்டாக் டிரேடிங்கை வெகு சொற்பமான சிலர்தான் செய்து வருகிறார்கள்.அவர்கள் தான் எந்த பங்கை வாங்கியிருக்கிறௌம் என்று வெளியே சொல்லவூம் மாட்டார்கள்.அவர்கள் வாங்கியிருக்கும் பங்கு எது என யாருக்கும் தெரிந்து விடக்கூடாதே என்று புரோக்கர் அலுவலகங்களில் ஆர்டர் போடாமல் ஆன்லைன் அக்கவூன்ட் ஆரம்பித்து அதில் அவர்களே டிரேடிங் செய்து கொள்வார்கள்.குஜராத் போன்ற பகுதிகளில் இது போன்ற பென்னி ஸ்டாக் டிரேடிங் நிறைய நடக்கிறது.
தமிழ்நாட்டில் பென்னி ஸ்டாக் வாங்குபவர்கள் மிகவூம் குறைவூ.இதற்கு காரணம் நம்மவா மனோபாவம்தான்.காசு இருந்தால்தான் நாம் யாரையூமே மதிப்போம்.ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிரேடாகிக்கொண்டிருக்கும் முதல்நிலைப் பங்குகள் என்னிடம் இருக்கிறது என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்.இன்ஃபோசிஸ், எச்சிஎல் போன்ற பங்குகள் இருக்கிறது என்றால் பெருமையாக மதிப்பார்கள்.ஆனால் அதே ஊர் பேர் தெரியாத ஐந்து ரூபாய் இரண்டு ரூபாய்க்கு டிரேடாகிக் கொண்டிருக்கும் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறேன் என்று சொன்னால் அல்பமாக நினைப்பார்கள்.அதனால்தான் இங்கே பென்னி ஸ்டாக்குகளின் அருமையை யாரும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.
பென்னி ஸ்டாக்குகளில் முதலீடு செய்வதற்கு பெரிதாக பணம் தேவைப்படாது.அவ்வப்போது கிடைக்கும் பணத்தை சிறுகச் சிறுக 100 ரூபாய் 200 ரூபாய் என்று ரூபாய் இரண்டிற்கு ஒரு பங்கு என்று வாரந்தோறும் கூட இவ்வகை பங்குகளை வாங்கிக்கொண்டே இருக்கலாம்.
ஆனால் குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு இந்த பங்குகள் அசுர வளர்ச்சியடைந்து ஐநுரறு ரூபாய் வரைக்கும் கூட போகும்.
அதாவது ரூ 2 மதிப்புடைய ஒரு பங்கு சில ஆண்டுகளில் ரூ ஐநுரறு மதிப்பிற்கு உயருகிறது.அதாவது 2 ரூபாய் 500 ரூபாய் என்றாகி விடுகிறது.இதுவே ஒரு லட்ச ரூபாய்க்கு இந்த பங்குகளை வாங்கி வைத்திருந்தால் 50000 பங்குகள் கிடைத்திருக்கும்.அவை ஒவ்வொன்றும் ரூ 500 ஆகும்போது போர்ட்ஃபோலியோவின் மதிப்பு 25 லட்சமாகி விடுகிறது.
ஒரு லட்சம் இருபத்தைந்து லட்சமாகி விடுகிறது.
இதுதான் பென்னி ஸ்டாக்குகளில் சூட்சுமம்.ஆனால் சரியான பென்னி ஸ்டாக்குகளை வாங்க வேண்டும்.சிக்கலில் மாட்டிக்கொள்ளக் கூடாது.நீண்ட காலம் பங்குவர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு இது புரியூம்.இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு இதே போல ஒரு பென்னி ஸ்டாக் இருந்தது.அதன் பெயர் கோல்டு ஸ்டார் ஸ்டீல்ஸ் அன்ட் அலாய்ஸ். இதன் நிறுவனர் பிரபாகர்ராவ்.இவர் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அவர்களின் மகன்.இந்த பங்கு திடீரென ஏறும்போல போக்கு காட்டியது.அப்போது அந்த பங்கின் விலை ரூ 20 ஆக இருந்தது.அப்போது கம்ப்யூட்டர் வைத்து டிரேடிங் செய்யூம் வேலையெல்லாம் கிடையாது.பிசிக்கல் சர்ட்டிபிகேட்தான்.டிமேட் எல்லாம் கிடையாது.பங்கை சந்தையில் கூவி கூவி விற்பார்கள்.பங்கு வாங்கினால் டெலிவரி வருவதற்கு பத்து நாட்கள் ஆகும்.ஒரே வாரத்தில் ரூ 20 ஆக இருந்த பங்கு ஒரு ரூபாய்க்கு வந்து அப்புறம் காணாமலே போனது.எத்தனையோ பேர் இந்த நிறுவனத்தால் நஷ்டமாகி விட்டார்கள்.
பென்னி ஸ்டாக்கை அலசி ஆராய்ந்து நல்ல பங்கை தேர்ந்தெடுக்க எங்களைப் போன்ற நிபுணர்களின் உதவி கட்டாயம் தேவை.விலை மலிவாக கிடைப்பதெல்லாம் பென்னி ஸ்டாக் அல்ல.
ரூ 19 மதிப்புள்ள சில பங்குகள் சில வருடங்களில் ரூ 1000 வரைக்கும் கூட சென்றிருக்கிறது.அதையூம் பார்த்திருக்கிறௌம்.
அதனால் சரியான பங்கை தேர்வூ செய்து பென்னி ஸ்டாக்கை வாங்கி சேர்த்துக் கொண்டே வந்தீர்களானால் சில வருடங்களில் அது திருமலை வேங்கடவனின் கடாட்சம் போல மளமளவென பணத்தை கொட்டிக் கொடுத்து விடும்.
அதனால் பென்னி ஸ்டாக்குகளில் முதலீடு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Prof.T.A.Vijey.,M.E.,(Ph.D)
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to know the "top performing shares"
ConversionConversion EmoticonEmoticon