பங்குச்சந்தையில் ஸ்பெகுலேட்டிவ் முதலீடு பற்றி அவ்வப்போது நமது தளத்தில் எழுதி வந்துள்ளேன்.அதற்கான டிரேடிங் யூக்தியைப் பற்றியூம் அவ்வப்போது உங்களுக்கு தகவல் கொடுத்து வருகிறேன்.இப்போது ஒரு தந்திரம் செய்வோம்.
உதாரணமாக ஐம்பதாயிரம் ரூபாய் உங்களது பங்குச்சந்தை முதலீடு என்று வைத்துக் கொள்வோம்.இன்றைய கால கட்டத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் என்பது பெருநகரத்தில் வாழ்பவர்களின் ஒரு மாத சம்பளம்தான்.அதனால் இது மிக தொகை அல்ல.
இந்த ஐம்பதாயிரம் ரூபாயை மிக மிக பாதுகாப்பாக முதலீடு செய்யப் போகிறீர்கள்.அதற்காக தபால் அலுவலக சிறுசேமிப்பு.மியூச்சுவல் ஃபன்ட் போன்ற இனங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.பங்குச்சந்தையிலேயே மிகவூம் பாதுகாப்பாக முதலீடு செய்யப்போகிறீர்கள்.அதுவூம் வெறும் முதலீடு அல்ல.இந்த பணத்தைவைத்துத்தான் நீங்கள் டிரேடிங் செய்யப்போகிறீர்கள்.
திட்டம் இதுதான்.
முதலீடு ஐம்பதாயிரம் ரூபாய்.
இன்ட்ரா டே டிரேடிங்கோ அல்லது டெலிவரி டிரேடிங்கோ செய்து கொள்ளலாம்.ஆனால் ஸ்டாப்லாஸ் ட்ரிக்கர் ஆகக் கூடாது.வாங்கிய பங்கின் விலை இறங்கி விடக் கூடாது.அது போல கவனமாக ஒரு பங்கை வாங்க வேண்டும்.
இங்கும் ஒரு கட்டுப்பாடு உண்டு.
அந்த பங்கு நிஃப்டி50க்குள் உள்ள இன்டக்ஸ் பங்காகத்தான் இருக்க வேண்டும்.
வாங்கிய பங்கு 1 சதவீத லாபம் தரும்போது(நான் ப்ரோக்கரேஜை சேர்க்காமல் சொல்கிறேன்) விற்றுவிட வேண்டும்.
ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டிற்கு ஐநுhறு ரூபாய் லாபம்.
ஒரே ஒரு டிரேடிங்கில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஐநுhறு ரூபாய் லாபம்.
இப்போது திட்டத்தை விரிவாக விளக்குகிறேன்.
இது போல 20 முறை டிரேடிங் செய்து ஐநுhறு ஐநுhறு ரூபாய்களாக சம்பாதிக்க வேண்டும்.ஆக மொத்தம் பத்தாயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கும்.
இந்த 20 டிரேடிங்கை எத்தனை நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏதும் கிடையாது.ஒரே மாதத்திலும் செய்யலாம்.மூன்று மாதங்களிலும் செய்யலாம்.
அதாவது உழைத்து கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஐம்பதாயிரத்தினை கொண்டு நேர்மையாக ஒழுங்குடன் கூடிய டிரேடிங்கில் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும்.
இப்போது இந்த பத்தாயிரம் ரூபாய்தான் நமது துருப்புச்சீட்டு.
இந்த பத்தாயிரம் ரூபாய் போனால் என்ன வந்தால் என்ன என்ற எண்ணத்தில் மிக மிக ரிஸ்க்கான சில டிரேடிங்கில் ஈடுபடுத்திக் கொள்ளப்போகிறௌம்.
இது ஆப்ஷன் டிரேடிங்காக இருக்கலாம்.கமாடிட்டி டிரேடிங்கில்(பேஸ்மெட்டல் மினிலாட்) இன்ட்ரா டேயாக இருக்கலாம்.அல்லது ஈக்விட்டியில் பத்தாயிரம் ரூபாயின் மீது எக்ஸ்போஷர் வாங்கி இன்ட்ரா டே டிரேடிங்காகக் கூட இருக்கலாம்.
ஆனால் ரிஸ்க்கான டிரேடிங்காக இருக்க வேண்டும்.
அதாவது பத்தாயிரத்திற்கு ஒரே டிரேடிங்கில் ஐநுhறு ரூபாய் அதாவது 5 சதவீத லாபம் கிடைக்கிற மாதிரி டிரேடிங் செய்து சம்பாதிக்க வேண்டும்.
இதை செய்கிற அதே நேரத்தில் அஸ்திவாரம் போன்ற உங்களது அந்த ஐம்பதாயிரம் ரூபாயை துவக்கத்தில் சொன்ன மாதிரி ஸ்திரமான ஒழுக்கத்துடன் கூடிய 1 சதவீத டிரேடிங்கில் மெதுவாக ஈடுபடுத்தி இன்னொரு பக்கம் இன்னொரு பத்தாயிரம் ரூபாயை சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
அதில் கிடைக்கும் பத்தாயிரம் ரூபாயையூம் மேலே சொன்ன இதே போன்ற ரிஸ்க்கான டிரேடிங்கிகல் ஈடுபடுத்த வேண்டும்.
இது போல செய்தால் ஒரே ஒரு ஐம்பதாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு ஒரே ஆண்டில் எத்தனை பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும் என்பதையூம் அப்படி கிடைக்கின்ற பத்தாயிரம் ரூபாய்களை வைத்துக் கொண்டு எத்தனை 5 சதவீத லாபங்களாக பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்பதையூம் ஒரு வருட முடிவில் நிகர லாபமாக எத்தனை ரூபாய் கிடைக்கும் என்பதையூம் கணக்குப் போடுங்கள்.
ஒரு வருட முடிவில் அந்த ஐம்பதாயிரம் ரூபாய் போக மீதமுள்ள அத்தனை லாபப்பணத்தையூம் ரிஸ்க்கான ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங்கில் ஈடுபடுத்திக்கொண்டே போக வேண்டும்.
இது போல மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில் செய்து பாருஙூங்கள்.எவ்வளவூ பணம் சம்பாதிக்க முடியூம் என்று கணக்குப்போட்டுப் பார்த்தால் மலைப்பாக இருக்கும்.
அவர் கஷ்டப்பட்டு உழைத்தார்.இவர் கடினமாக உழைத்தார்.கண்ணெதிரே இவரெல்லாம் முன்னேறினார் என்று பலரையூம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா.அது போல நீங்களும் உயரலாம்.
இதுதான் பணமந்திரம்.அதில் நாம் எடுக்கும் ரிஸ்க்கான டிரேடிங்தான் பணத்தை பணமரமாக்கும் தந்திரம்.செய்து பாருங்கள்.ஆல் தி பெஸ்ட்.
Prof.T.A.Vijey.,M.E.,(Ph.D)
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to know wonderfull profit making stocks
ConversionConversion EmoticonEmoticon