மனம்தரும் பணம்-4
நம்மவர்களின் மனோபாவம் பெரும்பாலும் அய்யோபாவம் என்கிற லெவலில்தான் இருக்கிறது.பொதுவாகவே நம்மை முன்னேற விடாமல் காலைப்பிடித்து இழுப்பது வேறு யாருமல்ல.நமது 'மிடில் கிளாஸ்' புத்திதான் இப்படி கீழே பிடித்து இழுத்து விட்டு விடுகிறது. எது வாங்கச் சென்றாலும் "சீப்பா" எதுவூம் கிடைக்கிறதா என்று கண்களை அகலமாய் சுழற்றி தேடுவதுதான் முதல்வேலையாக இருக்கிறது.இன்னொரு இறுமாப்பு இவர்களிடம் என்னவென்றால் 'என்னண்ட யாரும் ஏமாத்த முடியாது.நன்னா விசாரிச்சுண்டுதான் எதையூம் வாங்குவேணாக்கும்' என்று விசாரிப்பதெல்லாம் டெக்னிக்கலாக எதையூம் அல்ல.தன்னைப் போல இன்னொரு மிடில்கிளாஸ் ஆசாமியிடம்தான் விசாரிப்பார்கள்.அவர் தன் பங்கிற்கு இன்னும் பயமுறுத்தி விடுவார்.
நன்னா பார்த்துக்கும்வோய்.த்ராட்ல விட்ரப் போறது என்றதும் ஆரம்பத்திலேயே அவநம்பிக்கை வந்து தொலைத்து விடும்.
இதையெல்லாம் எங்கே பார்க்கலாம் என்றால் ஷேர்மார்க்கெட்டில் டிரேடிங்கில் பார்க்கலாம்.ஒரு மிடில்கிளாஸ் புத்தியூடன் இருக்கிற நபர் நாமெல்லாம் பணம் சம்பாதிக்க முடியூமா என்ற அவநம்பிக்கையூடன்தான் சந்தைக்கு வருவார்.அல்லது பத்து ரூபாய் போட்டு பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்து விட வேண்டுமென்ற அல்ப கால்குலேஷனுடன் வருவார்.இரண்டுமே தவறு.
இவர்கள் தேர்ந்தெடுத்து வாங்குகிற பங்குகளின் விலையைப் பார்த்தால் படு சீப்பாக இருக்கும்.ரூ 500 அல்லது ரூ 1000க்கு மேல் டிரேடாகிற பங்குகளின் பக்கமே திரும்ப மாட்டார்கள்.காரணம் அவை "சீப்பான" பங்குகள் அல்ல.
ரூ 20 அல்லது போனால் போகிறது என்று ரூ 60 என்ற அளவில் டிரேடாகிற பங்குகளை வாங்குவதற்கு பறப்பார்கள்.ஏனெனில் இவை சீப்பான பங்குகள்.
இரண்டாயிரம் ரூபாய்க்கு ரூ 20 விலையூள்ள ஷேர்களை 100 எண்ணிக்கையில் வாங்கி விடலாம்.ஆனால் ரூ 1000 விலையூள்ள ஷேர்களை இரண்டாயிரம் ரூபாய்க்கு இரண்டுதான் வாங்க முடியூம் என்பதால்தான் இவர்கள் இப்படி நினைக்கிறார்கள்.
உண்மை என்னவென்றால் ரூ 1000 விலையூள்ள பங்கு விலை குறைந்தால் 200 ரூபாய் குறையூம்.ஆனால் மறுபடி விலையேறி ரூ 1500க்கு எளிதாகச் சென்று விடும்.அப்போது முதலீடு செய்த ரூ 2000 உடனே ரூ 3000 ஆக உயர்ந்து ரூபாய் ஆயிரத்தை லாபமாக தந்து விடுகிறது. ஆனால் ரூ 20க்கு வாங்கிய பங்கு விலை குறைந்தால் நான்கு ரூபாய்தான் குறையூம்.ஆனால் மறுபடி விலையேறுவதற்கு தகினத்தோம் போட்டபடி அந்த குறைந்த விலையிலேயே கிடக்கும்.அப்போது ரூ 2000 அதன்பின் 1600 ஆகவே பலமாதங்கள் இருக்கும்.
இன்னொன்று மிடில்கிளாஸ் ஆசாமிகளிடம் இருக்கும் வழக்கம்.எதையூமே இலவசமாக கிடைக்குமா என்று பார்ப்பார்கள்.ஃபேன், மிக்சி, கிரைண்டர் என்று வாங்கிப் பழகி விட்டு டிரேடிங் தொடர்பான ஆலோசனைகளும் புரோக்கர்கள் தரும் டிரேடிங் டிப்சையூம் இலவசமாக (free trial)கிடைக்குமா என்றே திரிவார்கள்.
பங்குச்சந்தையை கையேந்தி பவனாகப் பார்க்காமல் ஷேர்மார்க்கட்டை ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலாகப் பார்த்தால் அதிலிருந்து கிடைக்கிற லாபமும் அபரிதமாக இருக்கும். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.ஒரு மிடில்கிளாஸ் மனநிலையூடன் இருக்கிற நாம் ஒரு உடுப்பி ஹோட்டலில் ஜம்மென்று போய் உட்கார்ந்து எதிர்படுகிற பேரரிடம்"என்னப்பா இருக்கு"என்று பந்தாவாக கேட்க முடிகிறது.அதே ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் முதலில் நடுக்கமில்லாமல் உள்ளே நடக்கத்தான் முடியூமா?அங்கே போய் அந்த மங்கலான இருட்டில் அமர்ந்து எதிர்படுகிற பேரரைப் பார்த்தால் அவன் நம்மை விட அழகான காஸ்ட்லியான சூட்டில் இருப்பான்.கச்சிதமான ஆங்கிலத்தில் என்ன வேண்டுமென்பான்.
அதுபோல்தான் பங்குச்சந்தையூம்.பஞ்சபராரியாக நாம் இருந்தால் ஷேர்மார்க்கெட் காசு கொடுக்காது.ரிச்சான லுக்கில் நாம் இருந்தால் ஷேர்மார்க்கெட்டே நம்மிடம் பணிந்து போகும்.பணத்தையூம் கொண்டு வந்து கொட்டும்.எப்படி தானாக கொண்டு வந்து கொட்டும்.தானாக கொட்டாது.அதற்கேற்ப நாம் சரியான ப்ளுசிப் பங்குகளாக தேர்ந்தெடுத்து டிரேடிங் செய்து பணத்தை நாமாக எடுத்துக் கொள்வோம்.
ஆக பணம் வருவதோ வாழ்வில் உயர்வதோ நம் கையில் இல்லை.நம் மனதில்தான் இருக்கிறது.அதாவது நம் மனோபாவத்தில்தான்(attitude) இருக்கிறது.
பார்வையை மாற்றுங்கள்.பங்குச்சந்தைக்கு வாருங்கள்.யார் வந்தாலும் பணத்தை அள்ளித் தர பங்குச்சந்தை தயாராகவே காத்திருக்கிறது.
Prof.T.A.Vijey.,M.E.,(Ph.D)
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get 'top trading scrips'
ConversionConversion EmoticonEmoticon