மனம் தரும் பணம்-5
பற்றாக்குறைக்கும் பணத்திற்கும் நேரடியாக சம்பந்தம் இருப்பது போல நமது மனதிற்கும் பணத்திற்கும் நேடியாக தொடர்பு இருக்கிறது.நம்மில் பெரும்பாலோர் மிடில் கிளாஸிலும் மற்றவர்கள் பெரும்பணக்காரர்களாகவூம் இருப்பதற்கு காரணம் என்ன என்று கவனித்திருக்கிறீர்களா? ஒரு மாருதி ஆல்டோவோ அல்லது ஸான்ட்ரோ இயனானோ நீங்கள் லோன் போட்டு வாங்கியிருக்கலாம்.பெங்களுரிலோ சென்னையிலோ சிட்டிக்கு வெளியே மறுபடி லோன்போட்டு ஒரு 2பிஎச்கே அபார்ட்மன்ட் 900 சதுர அடிக்குள் வாங்கியிருக்கலாம்.இரண்டுக்கும் லோன் அடைப்பதற்கே விழி பிதுங்கிப்போய் நீங்களும், உங்களது மனைவியூம் ஆபீசில் உள்ள மனஅழுத்தத்தையெல்லாம் விழுங்கிக்கொண்டு உழைத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.
அதே நேரம் உங்கள் ஆபீசிலேயே ஒருவன் எண்பது லட்சரூபாய் காரில் வருவான்.ஆடி அல்லது பிஎம்டபிள்யூ.நகருக்குள்ளே 3000 சதுர அடி லக்ஸரி அபார்ட்மன்ட்டை அசால்ட்டாக வாங்கிப் போட்டிருப்பான்.மாதத்தில் பாதி நாட்கள் எஸ்டாபிளிஷ்மன்ட் ட்ராவல், க்ளையன்ட் மீட்டிங், டிஸ்கஷன் என்று வெளிநாட்டிற்கு பிசினஸ் கிளாஸில் பறந்து சென்று கொண்டிருப்பான்.
நாம் மட்டும் என்னதான் ஐடியில் வேலை பார்க்கிறௌம் என்று சொந்த ஊரில் மாங்கு மாங்கென்று உழைக்கும் நமது பள்ளிக்கூட நண்பனிடம் பந்தா காட்டிக்கொண்டாலும் உள்ளே புழுங்கிக்கொண்டு உழைத்துக் கொண்டிருப்போம்.
இதற்கு காரணம் என்ன தெரியூமா?
எண்பது லட்சரூபாய் கார் காரனுக்கு அதிர்ஷ்டமோ உங்களுக்கு ஸ்ரீதேவியின் அக்காள் கொடுத்த ஆசீர்வாதமோ கிடையாது.
மனம்தான் காரணம்.
தொட்டணைத்துரறும் மணற்கேணி என்பதை பள்ளிக்கூடத்தில் படித்திருப்பது நினைவில் இருக்கிறதா?
மணற்கேணி என்பதை 'பணற்கேணி' என்று மாற்றி வாசித்தப் பாருங்கள்.
எதுவூமே இறைக்க இறைக்கத்தான் ஊறும்.
இறைக்காமல் போட்டு வைத்தால் துரர் ஏறி மக்கிப்போய் விடும்.இது பணத்திற்கும் பொருந்தும்.
எப்படி தெரியூமா?
'கொடு கிடைக்கும்"(Give you will get) என்பதுதான் நான் அனுபவத்தில் கண்டு கொண்ட புதுமொழி.இதையே சற்று மாற்றிச் சொல்கிறேன்.
"கொடு உடனே கிடைக்கும்"
பணம் என்பதை அடுத்தவர்களுக்கு கொடுக்கப் பழகிக்கொள்ளுங்கள்.இலவசங்களுக்கு ஆசைப்படவே படாதீர்கள்.கேஸ் ஸ்டவ்வோ, மிக்சியோ, கிரைன்டரோ, டிவியோ இலவசமாகக் கிடைக்கிறதே என்று வரிந்து கட்டிக்கொண்டு போய் வாங்கிக் கொண்டு வந்து பரணில் போடாதீர்கள்.அவையெல்லாம் உண்மையிலேயே இல்லாதவர்களுக்காக அம்மா அவர்கள் தாயன்போடு கொடுப்பது.அதை நீங்களும் போய் வாங்காதீர்கள்.
நமக்கும் வெளிநாட்டினருக்கும் ஒரு வித்தியாசத்தை கவனித்திருக்கிறீர்களா? அங்கேயெல்லாம் திடீரென ஒருத்தன் பணக்காரன் ஆவான்.உதாரணமாக 'வாட்ஸ்அப்"
ஃபேஸ்புக் நிறுவனத்தில் 2009ல் வேலை கேட்டு போனவனை ரிஜக்ட் செய்து விட்டார்கள்.2014ல் அதே ஆசாமியை வேலையூம் கொடுத்து அவன் கம்பெனியை 19 பில்லியன் டாலர்களுக்கு பணம் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.
இது எதனால் நிகழ்கிறது?
பணம் என்பதை முதலில் கொடுக்க வேண்டும்.அப்படி கொடுத்தால் அது பல மடங்காக திரும்பி வரும்.வெளிநாட்டினர் எல்லாம் என்ன சம்பாதித்தாலும் அதில் ஒரு சிறுபகுதியை சாரிட்டி(charitable trust)அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாகக் கொடுத்து விடுவார்கள்.வாரன்பஃபட்டை உதாரணம் சொல்லலாம்.வாரன் மிகப்பெரும் பணக்காரர் ஆனதால் அவர் தனது செல்வத்தின் ஒரு பகுதியை சாரிட்டிகளுக்கு கொடுக்கவில்லை.அவர் அவ்வப்போது தானமாக சிறு சிறு தொகையை கொடுத்து வந்தாலேயே அவர் பெரும் செல்வந்தரானார்.
திருப்பதி வேங்கடவனுக்கு பிசினஸ்காரர்கள் கொண்டு போய் பணத்தை கரன்ஸிக்கட்டுகளாகக் கொட்டுகிறார்களே பணம் சம்பாதித்தவூடன் கொண்டு போய் எம்பெருமானுக்கு கொட்டுகிறார்கள் என்று அர்த்தமில்லை.அவர்கள் சும்மா சேவிப்பதில்லை.முதலில் பெருமாளுக்கு கொடுக்கிறார்கள்.கொடுத்த பணம் பற்பல மடங்காக திரும்பி வருகிறது.இதுதான் நிதர்சனம்.
ஆக உங்களது சொந்த ஊரில் உள்ள பாழடைந்த பள்ளிக்கூடத்தின் நுரலகத்திற்கு ஒரே ஒரு புத்தகம் வாங்கிக் கொடுத்துப் பாருங்கள்.உங்கள் பணம் பெருகும்.ஏதாவது கவனிப்பில்லாத பெருமாள் கோவிலுக்கு நித்யபூஜைகள் நடக்க திருவாராதனம் பண்ண ஏதாவது ஒரு சிறிய தொகையை அனுப்பி விட்டுப் பாருங்கள்.உங்கள் பணம் தானாக வளரும்.
இதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்றால் ரோட்டரியோ, லயன்ஸ் கிளப்போ ஏதாவது சமூகசேவை செய்கிறார்களா சிறியதாக ஒரு தொகை(அது பத்து பைசாவாக இருந்தாலும் பரவாயில்லை) கொடுத்துப் பாருங்கள்.முதலமைச்சரோ, பிரதமரோ அவர்களது நிவாரண நிதிக்கு ஒரு சிறு தொகையை செலுத்திப் பாருங்கள்.
பணம் வளரும்.
இதுவூம் வேண்டாமென்றால் உங்களது சொந்த உறவினர்களில் யாரேனும் எங்கேனும் படிப்பதற்கோ, சாப்பாட்டிற்கோ கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கலாம்.அவாளையெல்லாம் போய் பார்த்துண்டு வர்றதா என்ற ஈகோவை விட்டு விட்டு ஏதாவது சிறு தொகை கொடுத்துப் பாருங்கள்.விட்டுப் போன உறவூம் வளரும்.உங்களது பணமும் வளரும்.
எனவே முதலில் கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள்.பணம் தானாக பன்மடங்காக வளர்ந்து திரும்பி வரும்.
இது அனுபவ உண்மை.
செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.உங்களது பணம் எப்படி வளர்கிறதென்று.
Prof.T.A.Vijey.,M.E.,(Ph.D)
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to know stock market updates & stock tips
ConversionConversion EmoticonEmoticon