பணம் பற்றிய இந்த கட்டுரைத் தொடரில் சொல்லப்பட்டிருப்பவற்றை நீங்கள் வெறுமனே வாசித்துக் கொண்டிருக்காமல் அதை உங்களது நடைமுறை வாழ்வில் பயன்படுத்திப் பார்த்தால்தான் பலனளிக்கும்.என்றைக்கோ ஒரு முறை வாசித்து விட்டு அப்புறம் என்றைக்கோ ஒரு நாள் அதை நினைத்துப் பார்ப்பதில் பலனில்லை.எனது ஒருநாள் பணம் பற்றிய பயிற்சி வகுப்பிற்கு வருபவர்களிடமும் இதைத்தான் சொல்கிறேன்.பயிற்சி வகுப்பு முடிந்த அடுத்த நிமிடமே நீங்கள் கற்றுக் கொண்டதை பிராக்டீஸ் செய்ய ஆரம்பித்து விட வேண்டும்.
எப்போதுமே விடை தெரியாத அல்லது விடை தெரிந்து கொள்ள விரும்பாத கேள்வியாக இருப்பது அதெப்படி சிலருக்கு மட்டும் பணம் அதிக அளவில் கிடைக்கிறது.பலருக்கு அது கேள்விக்குறியாகவே இருந்து கொண்டிருக்கிறது என்பதுதான்.
நிஜம் என்னவென்றால் நீங்கள் எல்லோருமே சம அளவான வாய்ப்புடன் சம அளவான அறிவூடன் சம அளவான குடியூரிமையூடன்தான் வாழ்கிறீர்கள்.ஒருவர் சம்பாதிப்பதும் ஒருவர் சம்பாதிக்கத் துடிப்பதும் ஒருவர் சம்பாதிக்க முடியாமலேயே காலத்தை ஓட்டி விடுவதும் புறச் சூழ்நிலைகளால் அல்ல.முழுக்க முழுக்க அது நீங்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.இதற்கு முழுக்க முழுக்க நீங்கள் மட்டுமே பொறுப்பு.லஞ்ச ஊழல் மிகுந்த தேசத்தில் வாழ்கிறேன்.வறுமையான குடும்பத்தில் பிறந்து விட்டேன்.புரிந்து கொள்ளக்கூடிய பெற்றௌர் இல்லை.போட்டு பிறாண்டுகிற மனைவி குழந்தைகள்தான் இருக்கிறார்கள் என்பதெல்லாம் வெறும் மேலோட்டமான காரணங்களே.
அதெப்படி இங்கே வந்து வாழ்ந்துப் பார்த்தால்தான் தெரியூம்.சும்மா சுகமாக ஏசி அறையில் அமர்ந்து சுயமுன்னேற்ற கட்டுரைகள் எழுதுகிற உங்களுக்கு எப்படி எங்களது கஷ்டம் புரியூம் என்று கூட என்னை என் வகுப்புகளில் கேட்டிருக்கிறார்கள்.
உண்மைதான்.உங்களது வாழ்க்கையூம் அது தொடர்பான கஷ்டங்களும் சவால்களும் துரோகங்களும் துரத்தும் விதியூம் பற்றி எனக்கேதும் தெரியாதுதான்.ஆனால் எனது எண்ணம் எனது ஆசை எனது இலட்சியம் எல்லாமே உங்கள் மீதுதானே இருக்கிறது.உங்களது வாழ்க்கைக்குள் நான் வர முடியாது.உங்களது வாழ்க்கையை நான் வாழ்ந்து பார்க்கவூம் முடியாது.ஆனால் நீங்கள் முன்னேற வேண்டுமென்று நான் விரும்பலாம் அல்லவா.நீங்கள் மேலும் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று உங்களுக்கு ஒரு வழியைக் காண்பித்து உங்களை நான் வாழ்த்தலாம் அல்லவா.அதைத்தான் நான் செய்து வருகிறேன்.
சரி விஷயத்திற்கு வருவோம்.
அதெப்படி சுலபமாக பணம் சம்பாதிக்க முடியூம் என்று கேட்கிற அனைவருக்கும் ஒரு கேள்வி.சுலபமாக பணம் சம்பாதிப்பதைப் பற்றி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.பணம் சம்பாதிக்க வேண்டும்.மேலும் மேலும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அழுத்தமாக ஆசைப்படலாம் அல்லவா.
திரிஷா இல்லையென்றால் திவ்யா என்பதற்கு பதிலாக திவ்யா இல்லையென்றால் திவ்யா இல்லையென்றால் திரிஷா என்றிருக்க வேண்டும்.
பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் அதனை ஒரு தவமாக ஒரு வரமாக ஒரு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்று பலரும் சொல்வார்கள்.நான் கூட சிலமுறை சொல்லியிருக்கிறேன்.இப்போது வேறொன்றைச் சொல்கிறேன் கேளுங்கள்.
பணம் சம்பாதிப்பதை ஒரு அநிச்சைச் செயலாகச் செய்ய வேண்டும்.பணம் சம்பாதிப்பது என்து ஒரு தன்னுணர்வில்லாத செயலாக இருக்க வேண்டும்.
Money making should be a habitual thing.இதை எப்படி செய்வது என்று கேட்கலாம்.
எந்த ஒரு செயலையூம் நேரடியாகச் செய்வதை விட மறைமுகமாகச் செய்யலாம்.மறைமுகமாக என்றால் நேரடியாக பணம் என்று கேட்பதை விட எதையாவது அதற்கு பதிலாக முதலில் கொடுத்து விடலாம்.
இங்கே உங்களால் கொடுக்க முடிவது என்பது ஒரு வேலை அல்லது ஒரு சேவை அல்லது ஒரு வணிகம் தொழில் இவற்றிலிருந்து நீங்கள் கொடுக்கக் கூடிய ஒரு பொருள் அல்லது சேவை.எந்த பொருளை நீங்கள் தயாரித்துக் கொடுத்தாலும் அதில் ஒரு சேவை அதாவது சர்வீஸ்தான் செய்கிறீர்கள்.
பணம் சம்பாதிப்பது ஒரு அநிச்சையான செயலாக வேண்டுமென்றால் நீங்கள் சேவை செய்வதை அதாவது ஒரு வேலை செய்வதை ஒரு லயிப்புடன் செய்ய வேண்டும்.
ஈடுபாட்டுடன்தானே செய்கிறௌம் என்பீர்கள்.
லயித்து செய்வது என்பது ஈடுபாட்டுன் செய்வதற்கும் மேலே ஒரு படி போய் செய்வது.இந்த லயிப்பு என்பது எங்கே வருகிறதோ அங்கே மனமும் உடலும் ஒன்றாகி விடும்.இந்த ஒன்றிணைப்பு உங்களது சேவையை அதாவது வேலையை செம்மைப்படுத்தி விடும்.யாராலும் உங்களை காப்பிடியக்க முடியாது.அப்படியே உங்களை யாரேனும் காப்பியடித்து உங்களது பொருட்களை உங்களது கான்சப்ட்டை டூப்ளிகேட் செய்தால் அவர்களே அறியாமல் உங்களுக்கு குரங்குத்தனமான விளம்பரம்(monkey spread) செய்ய ஆரம்பிக்கிறார்கள் என்று அர்த்தம்.
எனவே வேலையோ தொழிலோ வணிகமோ சர்வீஸோ எதைச் செய்தாலும் லயித்து செய்தால் அப்புறம் அதுவே உங்களது பணம் சம்பாதிப்பது மேன்மேலும் பணம் சம்பாதிப்பது என்பதை ஒரு அநிச்சை செயலாக்கி விடும்.அதன்பின் பணம் தானே வர ஆரம்பிக்கும்.வெள்ளமென உங்களை நோக்கி.நீங்களே தடுத்தாலும் நிற்காமல் உங்களது பணப்பையையூம் உங்களது வங்கிக் கணக்கையூம் நிறைக்க ஆரம்பிக்கும்.
எனவே எதையூம் லயித்துச் செய்யூங்கள்.உங்களது வேலையில் முற்றிலும் மறைந்து காணாமல் போய் விடுங்கள்.Because money making should be habitual.
ConversionConversion EmoticonEmoticon