"பத்துப் பத்தாக"
பத்து (10) என்ற எண்ணிற்கும் பணத்திற்கும் எப்போதுமே ஒரு தொடர்பு இருந்து வருகிறது.இது தற்செயலானதா அல்லது நியூமராலஜி போன்ற வஸ்துக்கள் ஏதும் இதில் உள்ளடங்கியிருக்கிறதா என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.பழமொழியைக் கூட தெரிந்தோ தெரியாமலோ "பணம் 'பத்தும்' செய்யூம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.பணம் பதினொன்றும் செய்யூம் என்று சொல்லவில்லை.தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிற ரூபாய் நோட்டு விவகாரம் கூட பத்து ரூபாய் நோட்டில் காந்தி படம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றித்தான் இருக்கிறது.
சரி பணத்திற்கும் இந்த பத்து என்ற எண்ணிற்கும் உள்ள தொடர்பை சுலபமாக புரிந்து கொள்ளலாம்.உங்களது வாழ்வில் ஒவ்வொரு பத்து வருடத்திற்கும் உங்களது அந்தஸ்து பணரீதியாக மாற்றத்திற்குள்ளாகியிருப்பதை உங்களது வாழ்வை நீங்கள் ரீவைன்ட் செய்து பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.
நான் கூட முன்பொரு முறை இது போன்று எழுதிய கட்டுரையில் நீங்க் எப்போதெல்லாம் செலவூ செய்கிறீர்களோ அதில் ஒரு பத்து சதவீதத்தை தனியே எடுத்து சேமித்து வைக்கச் சொல்லியிருந்தேன்.அதை நீங்கள் செய்து வருகிறீர்களா என்று தெரியாது.செய்யாவிட்டால் இது போல செய்து பாருங்கள்.
தினம் தினம் உங்களிடம் உள்ள பணத்தில் பத்து சதவீதத்தை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.உங்களது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை சொல்லவில்லை.வீட்டில் உங்களது பர்ஸிலும் சட்டைப் பையிலுமாக உள்ள பணத்தில் பத்து சதவீதத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அதனை தனியாக ஒரு பெட்டியில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் ஒரு முறை இந்த பெட்டியை திறந்து பாருங்கள்.அதில் உள்ள பணத்தை எடுத்து உங்களது வங்கி சேமிப்புக் கணக்கிற்கு மாற்றி விடுங்கள்.இது போல பத்து நாட்களுக்கு ஒரு முறை செய்து கொண்டே வHருங்கள்.மாதம் ஒரு முறை உங்களது சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தை வேறு ஏதாவது முதலீடு அல்லது சைடுபிசினஸில் போட்டு வைக்க முடியூமா என்று பாருங்கள்.இதை பைத்தியக்காரத்தனம் என்று நினைத்தால் உங்களுக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையைச் சொல்கிறேன்.
பதினைந்து வருடங்களுக்கு முன்பாக நான் இதைத்தான் செய்து வந்தேன்.பத்து நாட்களுக்கு ஒரு முறை எனது சேமிப்பை எடுத்து வங்கிக் கணக்கிற்கு மாற்றி அதன்பின் மாதம் ஒரு முறை இதற்கென்றே உள்ள வங்கிக் கணக்கிலிருந்து அந்த பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்திருக்கிறேன்.அப்போது ரூ 16 மற்றும் ரூ 20 என்ற விலைகளில் வாங்கிய என்ஃபீல்டு புல்லட் மோட்டார்பைக் நிறுவனமான எய்ஷர் மோட்டார்ஸ் ஷேரில் சில மாதங்களுக்கு முந்தைய மதிப்பு ரூ 19000 ஆக உயர்ந்திருந்தது.
இது போன்ற பணப்பெருக்கம் எல்லாமே பத்துப் பத்தாக சேமித்த பணத்திலிருந்து கிடைத்ததுதான்.சற்று யோசியூங்கள்.இன்னும் பத்து வருடங்கள் கழித்து நீங்கள் எங்கே என்னவாக இருப்பீர்கள்.அப்போது பணவீக்கம் விலைவாசி என்னவாக இருக்கும்.உங்களால் அப்போதைய செலவூகளை சமாளிக்க முடியூமா?
சமாளிக்க முடியூம்.அதை விட அதிகமாகவே பணவளத்துடன் இருப்பீர்கள் என்றே வைத்துக் கொள்ளலாம்.ஆனால் ஏன் ஒரு சுமாரான வாழ்க்கையை தொடர்ந்து நீங்கள் வாழ வேண்டும்.ஒரு சூப்பர் லக்ஸரி வாழ்க்கையை ஏன் நீங்கள் வாழக் கூடாது.அப்படி ஒரு அல்டிமேட் லக்ஸரி சொகுசு வாழ்க்கையை வாழ்வதற்கு நீங்கள் ஒரு தொழிலதிபராகவோ சினிமா நடிகராகவோ அரசியல்வாதியாகவோ இருக்க வேண்டியதில்லை. பத்துப் பத்தாக எடுத்து வைக்கிற உங்களது சின்னஞ்சிறிய பணமே உங்களை அது போன்ற கோடீஸ்வர வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க வைத்து விடும்.
இதை ஏன் நான் திரும்பத் திரும்ப வலியூறுத்திச் சொல்கிறேன் என்றால் ஒரு கசப்பான உண்மை என்னவென்றால் ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்களது மரணத்தை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.நான் உங்களை பயமுறுத்தவில்லை.உண்மை இதுதான்.அதனால் முடிந்தவரை விரைவில் உங்களது சொகுவாழ்க்கைக்குள் உங்களை இணைத்துக் கொள்ள சின்னச்சின்னதாக பத்துப் பத்தாக முயற்சி செய்யூங்கள்.
என்னைப் போலவே சரியான பணவளம் தரும் பங்குகளை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் நீங்கள் எப்போதும் என்னுடன் தொடர்பில் இருங்கள்.என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்.பங்குச்சந்தையில்தான் நீங்கள் முன்னேற வேண்டுமென்பதில்லை.உங்களது தற்போதைய உத்யோகத்திலும் நீங்கள் தற்போது செய்து வரும் தொழிலிலும் கூட முன்னேறலாம்.அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.ஆனால் எப்போதும் இந்த பத்துப் பத்தாக சேமிக்கும் பணப்பழக்கத்தை மறவாதீர்கள்.வாழ்த்துக்கள்!
வாழ்க பணமுடன்!
ConversionConversion EmoticonEmoticon