"புலன்களுக்கு அப்பால் பாருங்கள்"
சாதாரணமாக நீங்கள் கண்களால் பார்ப்பதை விட உங்களது புலன்களுக்கு அப்பால் பாருங்கள் என்று சொல்லி விடுவது எளிது.ஆனால் அப்படி பார்க்க முடியூமா? புலன்களுக்கு அப்பால் பார்ப்பது என்றால் என்ன? இதற்கு ஏதாவது யோகா தியானம் ஆன்மிகம் போன்ற வஸ்துக்கள் தேவையா என்ற கேள்வி எழும்பும்.
பொதுவாக முன்பெல்லாம் ஆன்மிகவாதிகள் ஒன்றைச் சொல்வார்கள்.எதை நீங்கள் கண்களால் பார்க்கிறீர்களோ.அதெல்லாம் நிஜமில்லை.அவை அத்தனையூம் மாயா.எது உங்களது கண்களுக்குத் தெரியவில்லையோ அதெல்லாம்தான் நிஜம்.மாயா மாயா.சாயா சாயா!
இப்படி சொல்லிக் கொண்டிருந்தால் வண்டி ஓடாது என்று அப்புறம் வேறு எதையெல்லாமே உள்ளே கொண்டு வந்து விட்டார்கள்.நமது சிந்தனை ஆன்கமிகவாதிகள் பற்றியதல்ல.புலன்களுக்கு அப்பால் அப்படி என்ன இருக்கிறது.அதை ஏன் பார்க்க வேண்டும்.எப்படிப் பார்க்க வேண்டும்.
இதை சுலபமாகச் சொல்லிப் புரியவைத்து விடுகிறேன் பாருங்கள்.
நீங்கள் சம்பளம் வாங்குபவராக இருக்கலாம்.சொந்தத் தொழில் செய்பவராகவோ பெரும் வணிகம் செய்பவராகவோ இருக்கலாம்.அடுத்த மாதம் உங்களுக்கு சம்பளமாகவோ அல்லது தொழில் மற்றும் வணிகம் செய்பவர்களுக்கு சராசரியாக ஒரு பெருந்தொகையோ மாதாமாதம் வருபது போல வரக்கூடும்.இப்போது நீங்கள் அந்த தொகையைப் பெறுவதற்கு காலண்டரில் இருபது தேதிகள் கிழிபடவேண்டுமென்று வைத்துக் கொள்வோம்.இப்போது அந்த அடுத்த மாத பணம் உங்களிடம் இல்லை.ஆனால் அந்த அடுத்த மாதப் பணம் எங்கே இப்போது இருக்கிறது.
என்று யோசித்துப் பாருங்கள்.
நீங்கள் சம்பளம் பெறுபவராக இருந்தால் உங்களது அந்த 'அடுத்த மாதப் பணம்" உங்களது நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலோ வங்கியின் வைப்புக்கணக்கிலோ அல்லது அந்த நிறுவூனத்திற்கு வரக்கூடிய விற்றுவரவாக வேறெங்கோ வேறு எந்த நிறுவனத்திடமோ அல்லது வேறு யார் யாரிடமோ இப்போது இருக்கலாம்.
கற்பனை செய்து பாருங்கள்.
உங்களது 'அடுத்த மாதப் பணம்' எங்கெங்கோ யார் யாரிமோ இருக்கிறது.அந்த பணம் அடுத்த மாதம் வந்து உங்களை அடைய வேண்டும்.அது நீங்கள் சம்பளம் பெறுபவராக இருந்தால் தானாக எந்த முயற்சியூம் செய்யாமல் வந்து சேர்ந்து விடும்.வணிகம் சுயதொழில் செய்பவர்கள்தான் அந்த பணம் வந்து சேர்வதற்காக மெனக்கெட வேண்டும்.
சரி எவ்வளவூ தொகையை இந்த மாதம் வாங்கினீர்களோ அந்த தொகை சென்ற மாதம் இதே போல எங்கெங்கோ இருந்தது.அதனை நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள்.அதே போல ஒரு தொகையைத்தான் அதாவது இந்த மாதம் பெற்றுக் கொண்ட தொகைக்கு சமமான அதே தொகையைத்தான் அடுத்த மாதமும் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கறீர்கள்.நீங்கள் எதிர்பார்க்காவிட்டாலும் உங்களது உள் மனது அதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.உங்களை அறியாமலேயே ஒரு ப்ரோக்ராம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் போல உங்களை கேட்காமல் உங்களது மனம் அது பாட்டுக்கு அடுத்த மாத தொகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும்.
அதனால்தான் ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரியான தொகையையே நீங்கள் பெறுகிறீர்கள்.தொடர்ந்து அதே தொகையைத்தான் பெறுகிறீர்கள்.வருடத்திற்கு ஒரு முறை வரும் இன்க்ரிமன்ட் தொகை கூட சென்ற வருடம் பெற்றது போன்ற ஒரு தொகையைத்தான் நீங்கள் இந்த வருடமும் இன்க்ரிமன்ட்டாக எதிர்பார்த்திருக்கிறீர்கள்.அதனால்தான் அதே தொகையை பெற்றிருக்கிறீர்கள்.
இப்போது புரிந்திருக்குமென நினைக்கிறேன்.இனி மெயின் மேட்டருக்கு வருவோம்.
உங்களுக்கு அதிக சம்பளம் வேண்டுமென்று உங்களது மேலதிகாரியைக் கேட்காதீர்கள்.உங்களது தொழிலில் அதிக வருமானம் வேண்டுமென்று உங்களது வாடிக்கையாளர்களிடம் கேட்காதீர்கள்.உங்களது வணிகத்தில் அதிக வருமானம் வேண்டுமென்று உங்களது மார்க்கெட்டிங் பணியாளர்களை வறுத்தெடுக்காதீர்கள்.
பின் யாரிடம் கேட்பது இதையெல்லாம்.
உங்களது மனதிடம் கேளுங்கள்.உங்களது மனம் என்ற சூப்பர் டூப்பர் கம்ப்யூட்டரிடம் கேளுங்கள்.அது உடனே பதிவூ செய்து கொள்ளும்.இப்படி வெறுமே கேட்டு விட்டால் வேலை நடந்து விடுமா.உடனே அடுத்த மாதம் அதிகத் தொகை வந்து விடுமா?
வராது.
பின் எதற்காகக் கேட்க வேண்டும்?
கேளுங்களேன்.கேட்டுத்தான் பாருங்களேன்.நீங்கள் உங்கள் மனதிடம் கேட்டு விட்டால் போதும்.அதை உங்களது மனம் உங்களது பேச்சில் ஆளுமையில் உடல்மொழியில் பிரதிபலிக்கும்.அதனால் உங்களைப் பார்க்கிற உங்களது நிறுவனத்தின் மேனேஜ்மன்ட் கூட இவருக்கு குறைவாக சம்பளம் கொடுத்து வருகிறௌமோ.வேறெங்காவது இவர் போய்விடுவாரோ.இவரை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்க்ள.அப்படி அவர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டால் அதை அவர்களது 'மனம்' குறித்து வைத்துக் கொண்டு உங்களை அவர்கள் பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு நினைவூபடுத்தும்.
உங்களது பணத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ள முடியாது.வேலை பார்த்தாலும் தொழில் செய்தாலும் வணிகம் செய்தாலும் உங்களுக்கான பணத்தை மற்றவர்கள்தான் கொண்டு வந்து தர வேண்டும்.அதற்கு ஒரு பிரதியூபகாரமாக நீங்கள் ஒரு சேவையையோ வேலையையோ செய்து தருகிறீர்கள்.ஆக உங்களுக்கு பணம் தரக்கூடியவர்கள் நன்றாக இருந்தால்தான் நீங்கள் நன்றாக இருக்க முடியூம்.அதனால்தான் நான் எப்போதும் எதைச் சொன்னாலும் எழுதினாலும் 'வாழ்க பணமுடன்" என்று மற்றவர்களை வாழ்த்துவேன்.அண்மையில் நமக்கு ஒரு பிரச்சனையை ஏற்படுத்திய அன்பர்களைக் கூட இன்னமும் 'வாழ்க பணமுடன்" என்றுதான் வாழ்த்திக் கொண்டிருக்கிறேன்.
நீங்களும் மற்றவர்களை வாழ்க பணமுடன் என்று வாழ்த்திப் பாருங்கள்.அத்துடன் அடுத்த மாத பணம் இன்னும் சற்று கூடுதலாக வரவேண்டுமென்று உங்களது மனதிடம் கேட்டுக் கொண்டே இருங்கள்.
கேட்டது நிச்சயம் கிடைக்கும்.
ஏனென்றால் கேட்டால் கொடுப்பதற்கும் கொடுத்தால் வாங்கிக் கொள்வதற்கும் நீங்கள் மட்டுமல்ல கடவூளும் இயற்கையூம் கூட இந்த 'கேட்டால் கொடுப்பதற்கு" பழக்கி விடப்பட்டிருக்கிறார்கள்.இந்த உலகமும் ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் இயங்கி வருகிறது.
எனவே நம்புங்கள்.கேளுங்கள்.வாழுங்கள்.
வாழ்க பணமுடன்!
ConversionConversion EmoticonEmoticon