"நேர் நேர் துருவங்கள்..."
பணம் சம்பாதிப்பது.இன்னும் அதிகம் பணம் சம்பாதிப்பது.மேன்மேலும் பணம் சம்பாதித்துக் கொண்டே இருப்பது போன்ற விஷயங்கள் உலகிலுள்ள அனைவருக்கும் கை வரக் கூடிய விஷயமாக இருக்கிறதா என்று கேட்டால் நீங்களே இல்லை என்றுதான் சொல்வீர்கள்.
சிலர் மட்டும்தான் சாதாரண குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பால் பல வருடங்கள் அரும்பாடு பட்டு பணக்காரராகிறார்கள்.மற்றவர்கள் பிறக்கும்போதே பணக்காரர்களாகப் பிறக்கிறார்கள்.அவர்கள் பணத்துடனே வளர்கிறார்கள்.பணத்தை பார்க்கிறார்கள்.பணத்தை சுவாசிக்கிறார்கள்.மேன்மேலும் பணத்தை சம்பாதிக்கிறார்கள்.
இங்கே சிலர் என்று குறிப்பிட்ட அந்த சிலர் தங்களது அடிவயிற்றில் ஒரு பர்னிங் டிசையருடன் எப்போதும் ஒரு தொலைநோக்குப் பார்வையோடு ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள்.தொடர்ந்து தொடர்தோல்விகள் வந்தபோதும் விடாமல் எதையோ செய்து கொண்டே இருக்கிறார்கள்.அப்புறம் ஒரு நாள் வெற்றியடைந்து விடுகிறார்கள்.
அந்த ஒரு நாள் வரும் வெற்றி என்பது ஒரு நாளில் அதிர்ஷ்டம் போல வரும் வெற்றி அல்ல.பலநாள் முயற்சிகளுக்குப் பிறகு வந்த வெற்றி.கடின உழைப்புக்கு கிடைத்த பரிசுதான் அந்த வெற்றி என்று எப்படி வேண்டுமானாலும் கூறலாம்.
இப்போது ஒரு பணக்காரரையூம் ஒரு ஏழ்மை நிலையிலிருந்து பணக்காரர் ஆக விரும்பி போராடும் இன்னொருவரையூம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.பணக்காரர் ஒரு எஸ்கலேட்டரில் மேலே ஒரே நிமிடத்தில் போய் விட முடிகிறது.ஆனால் இந்த ஏழ்மையில் கிடக்கும் நபர் அப்படி எஸ்கலேட்டரில் மேலே உயர்ந்து விட முடியவில்லை.ஒவ்வொரு படியாகத்தான் அவரால் பணம் சம்பாதிப்பதில் ஏறி வர முடிகிறது.
நேற்று பேஸ்புக்கில் இதைத்தான் ஒரு பெண்மணி குறிப்பிட்டு வருந்தியிருந்தார்.வாழ்க்கையில் சிலருக்கு மட்டும்தான் எஸ்கலேட்டரில் மேலே போவது போன்ற முன்னேற்றம் கிடைக்கிறது.பலருக்கும் படிக்கட்டில் ஒவ்வொரு படியாக மேலே ஏறி வரத்தான் முடிகிறது என்று அந்த பெண்மணி குறிப்பிட்டிருந்தார்.
அந்த ஏழ்மையிலுள்ள நபருக்கும் ஒரு எஸ்கலேட்டர் கிடைத்திருந்தால்?
அதைப் பற்றித்தான் இப்போது சொல்லித் தர விரும்புகிறேன்.வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு எஸ்கலேட்டர் இருக்கத்தான் செய்கிறது.கடவூளும் இயற்கையூம் உங்களுக்குஅப்படித்தான் ஒரு அருமையான வாய்;ப்பைத் தந்திருக்கிறார்கள்.ஆனால் நீங்கள்தான் உங்கள் அருகிலேயே இருக்கிற எஸ்கலேட்டரை கவனிப்பதே இல்லை.
அதென்ன எஸ்கலேட்டர் அப்படி உங்கள் அருமையிலேயே இருக்கிறது.இதைப் புரிந்து கொள்ள இன்னொரு முறை ஒப்பீடு செய்ய வேண்டும்.
இந்த உலகில் அறிவியல் விதிகளின்படி நேர்-எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.ஆனால் "பண உலகில்" மட்டும் அப்படி இருப்பதில்லை.நேர்-நேர் துருவங்கள்தான் ஒன்றை ஒன்று பணஉலகில் ஈர்க்கிறது.எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்க வேண்டுமென்றால் ஒரு பணக்காரரும் ஒரு ஏழையூம் நண்பர்களாகியிருந்திருக்க வேண்டும்.அப்படி நடக்கிறதா உண்மையில்?அது போல எங்கும் நடப்பதில்லை.பணக்காரர்கள்தான் தங்களுக்குள் ஒன்று கூடி க்ளப் வைத்துக் கொள்கிறார்கள்.உல்லாசப் பயணம் போகிறார்கள்.தங்களை விட சிறிதளவூ வசதி குறைந்து விட்டாலும் அவர்களை அந்த பணக்காரர்கள் புறக்கணித்து விட ஆரம்பித்து விடுவார்கள்.
இதுதான் 'பணாதிசயம்' அதாவது பணக்காரர்களின் குணாதியசயம்.
என்ன சொல்ல வந்தேன்? பணக்காரர்கள் பணக்காரர்களைத்தான் விரும்புவார்கள்.ஏனென்றால் அது அவர்களின் தவறல்ல.பணம் பணத்தைத்தான் விரும்பும்.
அப்படியானால் நீங்களும் பணத்தை விரும்ப ஆரம்பித்தால்?
பதிலுக்கு பணமும் உங்களை விரும்ப ஆரம்பிக்கும்.தட்ஸ் இட்.அதுதான் உங்களுக்கான எஸ்கலேட்டர்.பணம் மீதான விருப்பமும் பணம் மீதான அதீத ஆர்வமும் பணம் மீதான அளவூக்கு அதிகமான அன்பும் பணம் மீதான மிரட்டலான காதலும் பதிலுக்கு உங்களை பணத்தின் அருகே கொண்டு சென்று விடும்.படிப்படியாக அல்ல.ஒரேயடியாக.அலேக்காக உங்களை துரக்கிக் கொண்டு போய் மிகுந்த பணத்தின் அருகே கொண்டு போய் வைத்து விடும்.
அதனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கையை ஆர்வத்தை உழைப்பை விட பணத்தின் மீதான உண்மையான விருப்பத்தை முதலில் உங்கள் மனதில் விதையூங்கள்.அதை தினமும் பணத்தின் மீதான ஆசை என்ற தண்ணீர் ஊற்றி வளர்த்து வாருங்கள்.வளர்வீர்கள் பெரிதாக.
வாழ்க பணமுடன்!
ConversionConversion EmoticonEmoticon