'ரீ பொசிஷனிங்"
நீங்கள் சரியானபடி வாழ்வில் செட்டிலாகவில்லை என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்குமானால் மேற்கொண்டு படியூங்கள்.உங்களோடு படித்தவர்கள் உங்களை விட குறைவான மதிப்பெண் வாங்கியவர்கள் கல்லுரரரிக்கே வராதவர்கள் எல்லாம் சரியான வேலையில் தொழிலில் செட்டில் ஆகி கார் வீடு என்று சுகமாக இருக்கிறார்கள்.நீங்கள் மட்டும் இன்னமும் அலுவலகத்தில் கூட அடுத்தவன் கண்ணெதிரிலேயே உயர்வதைப் பார்த்துக் கொண்டு 'பாவம் நல்லவன்பா" என்று உங்களை மற்றவர்கள் உச் கொட்டி ரசிக்கும்படி உங்களது நிலைமை இருக்குமானல் மேற்கொண்டு படியூங்கள்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் கூகுள் இருந்ததா?
பத்தாண்டுகளுக்கு முன்னால் பேஸ்புக் இருந்ததா?
ஐந்தாண்டுகளுக்கு முன்னால் வாட்ஸ்அப் இருந்ததா?
இன்றும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.இவையெல்லாம் உங்களது கண்ணெதிரிலேயே வளர்ந்தவை.பல மில்லியன் டாலர்களை இவற்றை உருவாக்கி சந்தைப்படுத்தியவர்களுக்கு தந்தவை.சரி இப்போது மெயின் மேட்டருக்கு வருவோம்.
டிவி பார்ப்பீர்கள்தானே.கிரிக்கெட்டோ ராதிகா சீரியலோ புதியதலைமுறை செய்திகளோ பார்ப்பீர்கள்தானே.அதில் வரும் விளம்பரங்களை முதலில் பாருங்கள்.வர்த்தக உலகில் 'ரீ பொசிஷனிங்" என்றொரு வார்த்தை உண்டு.
அதாவது 'மறுசந்தைப்படுத்துதல்" இதற்கு என்ன பொருள் என்றால் புதிதாக எதையூம் சந்தைப்படுத்துவதில்லை.மாறாக ஏற்கனவே மார்க்கெட்டில் விற்பனையாகிக்கொண்டிருக்கிற ஒரு பொருளையே மறுபடி "புதுசு போல" சந்தைப்படுத்துவது.டயட் கோக் என்று சின்ன கேன்களில் வந்த அதே கோக்தான் இப்போது கோக் ஸீரோ என்று வந்திருக்கிறது.உதாரணங்கள் அதிகம் வேண்டாம்.நீங்களே அது போன்ற ரீபொசிஷனிங் விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள்.
அது போல உங்களையூம் நான் இப்போது ரீபொசிஷனிங் செய்யச் சொல்கிறேன்.இப்போது உங்களுக்கு கோபம் வரலாம்.விலைக்கு விற்கப்படும் பொருளும் நீங்களும் ஒன்றா என்று.
ஒரு கசப்பான உண்மை என்னவென்றால் நீங்களும் நானும் மற்ற மனிதர்களும் விற்கக் கூடிய பொருட்கள்தான்.எப்போது நீங்கள் பொருட்களை வாங்க ஆரம்பித்தீர்களோ எப்போது ஒரு குறிப்பிட்ட பிரான்ட் பொருளை ஆர்வமாக தொடர்ந்து வாங்க ஆரம்பித்தீர்களோ அப்போது நீங்கள் அந்த பொருளை வாங்குவதில்லை.அந்த பொருள்தான் உங்களை வாங்குகிறது.இது ஒரு ரிவர்ஸ் பையிங் போன்றது.இதுதான் உண்மை.
ஆக நீங்களே ஒரு கமாடிட்டிதான்.ஒரு விளைபொருள்தான் என்ற உண்மையை உணர்ந்து கொண்டால் இனி நீங்கள் உங்களை மறுபடி புதிதாக சந்தைப்படுத்த ஆரம்பித்து விடலாம்.நீங்கள் வேலை பார்த்து சம்பளம் வாங்குபவராக இருந்தால் உங்களது வேலையை அதாவது அறிவை சேவையை சம்பளம் என்ற விற்றுவரவிற்காக மாதாமாதம் விற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.அதை இன்னும் ஸ்மார்ட்டாக விற்று அதிக விற்றுவரவூ என்னும் அதிக சம்பளம் பதவி உயர்வூ போன்றவற்றை வாங்கலாம் அல்லவா அதற்காத்தான் இந்த ரீபொசிஷனிங்.
இதற்காக பெரிதும் மெனக்கெட வேண்;டாம்.
நிறுவனங்கள் தங்களது பொருட்களை மறுசந்தைப்படுத்த என்ன செய்கின்றனவோ அதையே பின்பற்றுங்கள்.
அவை என்ன செய்கின்றன.
புதிய பாக்கிங் -புதிய உடைகளுக்கு மாறுங்கள்.
கூடுதல் தரம் அல்லது சுவை-புதிதாக சுவாரஸ்யமாகப் பேசுங்கள்
கூடுதல் சலுகை-இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஆபீசில் வேலை பாருங்கள்.சும்மா ஒரு விடுமுறை நாளில் வீட்டில் போர் அடிக்கிறது அதனால் சினிமாவிற்கு போவதற்கு பதில் ஆபீஸிற்கு வந்து விட்டேன் என்று ஏதாவது ஒரு வேலை பாருங்கள்.அதனிடையே உங்களது மேலதிகாரிக்கு எதைப் பற்றியாவது யோசித்து ஒரு உருப்படியான குறிப்பு வைத்து விட்டு வாருங்கள்.
பார்க்க எப்போதும் பளிச்சென்று இருங்கள்.டெபிட் கார்டு பயன்படுத்தினாலும் உட்கார்ந்திருக்கும்போது பாக்கெட்டிலிருந்து ரூபாய் நோட்டை எடுத்து மென்மையாக எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.அதை மற்றவர்கள் நோட்டம் விடட்டும்.கடன் கேட்டு வந்து விடுவார்களே என்று நினைக்க வேண்டாம்.வெளியில் எங்கு சென்றாலும் வீட்டுக்கு அருகில் உள்ள முக்குக் கடையில் போய் பத்து ரூபாய்க்கு சில்லரை சாமான்கள் வாங்கினாலும் அதை கம்பீரமாகச் செய்யூங்கள்.இனி உங்களை யார் பார்த்தாலும் உங்களிடம் 'எதுவோ புதிதாக இருக்கிறது' என்பதை உணர வேண்டும்.அவர்கள் மனத்தளவில் உங்களது ஃபாலோயராக வேண்டும்.இதை மட்டும் செய்யூங்கள் போதும்.மற்றவை எல்லாம் தானாக வரும்- பணம் உட்பட.
ConversionConversion EmoticonEmoticon