சாலையில் செல்லும்போது சிக்னலில் நிற்கும்போதோ பயணிக்கும்போதோ
கவனித்திருக்கிறீர்களா?அங்கே எத்தனை விதமான வாகனங்கள் இருக்கின்றன என்று.ஆடிகார்கள் முதல் பிஎம்டபிள்யூ கார்கள் வரை நின்று கொண்டிருக்கும்.அதனிடையே டிவிஎஸ்50களும் ஸ்கூட்டிகளும் பல்சார்களும் நின்றிருக்கும்.அந்த வாகனங்களில் உள்ளவர்கள் சிக்னலில் காத்திருக்கும்போது எப்படி நடந்து கொள்கிறார்கள்.என்ன பேசுகிறார்கள் என்று கவனித்திருக்கிறீர்களா?Click here to get intraday Nifty option tips
சொகுசுக்கார்களில் அமர்ந்திருப்பவர்கள் எந்த எரிச்சலும் காட்டுவதில்லை.அவர்கள் சொகுசுக்கார்களின் உள்ளே குளுகுளு ஏசியில் இருப்பதனால் மட்டும் அமைதியாக இருப்பதில்லை.டிராஃபிக் நெரிசலில் காத்திருந்துதான் பயணம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்து அவர்கள் சற்று சீக்கிரமாக கிளம்பி வந்தவர்களாக இருப்பார்கள்.அதனால் போக்குவரத்து இடையூறை எதிர்பார்த்து பொறுமையாக இருப்பார்கள்.
ஆனால் அதே சமயத்தில் இந்த டிவிஎஸ்50காரர்களை கவனித்துப் பாருங்கள்.பெரிதாக அலுத்துக் கொள்வார்கள்.அக்கம் பக்கம் நிற்கும் கார்களையூம் பைக்குகளையூம் எரிச்சலாகப் பார்ப்பார்கள்.வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள்.டிராஃபிக்கால் தாமதமாகி குடியே முழுகிப் போய்விட்டதாக திட்டிக்கொண்டிருப்பார்கள்.
இவர்கள் வேகாத வெய்யிலில் டிராபிக் சிக்னலில் நிற்பதால் இது போல அலுத்துக் கொண்டும் எரிச்சலோடும்திட்டிக்கொண்டிருக்கவில்லை.
சொகுசுக்கார் ஆசாமிகளுக்கும் மோபட் ஆசாமிகளுக்கும் உள்ள மனநிலையே வேறு.அதைத்தான் மனோபாவம் என்ற ஆட்டிட்டியூட் என்போம்.
இடையூறுகள் வரும் என்று எதிர்பார்த்து நடந்து கொள்ள தெரிய வேண்டும்.யாரைப் பற்றியூம் குறை சொல்லிக் கொண்டு எரிச்சல்பட்டுக் கொண்டு அனத்திக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.இது ஒரு மனநிலை.ஒரு சமன்பட்ட மனநிலையால்தான் இது முடியூம்.அப்படி சமன்பட்ட மனநிலையில் இருப்பதால்தான் சொகுசுக்காரில் செல்பவர்களால் பணம் சம்பாதிக்க முடிகிறது.Click here to get intraday Nifty futures trading tips
ஒரு விஷயத்தை இன்னும் புரிதலோடு சொன்னால் நன்றாக இருக்கும்.
அவர்கள் சொகுசுக்காரில் செல்பவர்களாக பணக்காரர்களாக இருப்பதனால் அவர்களுக்கு சமன்பட்ட பாசிட்டிவ்வான மனநிலை வரவில்லை. அவர்கள் முதலில் சமன்பட்ட மனநிலையோடு இருந்தார்கள்.எதையூம் பாசிட்டிவ்வாக அணுகும் முறையோடும் இருந்தார்கள்.அதனால் அவர்கள் செய்யூம் தொழில் அல்லது பிசினசில் முழுக்கவனம் செலுத்த முடிந்தது.அப்படி முழுக்கவனம் செலுத்த முடிந்ததால் அவர்கள் பிசினஸ் லாபகரமாக நடந்தது.பிசினசில் முழுக்கவனம் செலுத்தியதன் பக்கவிளைவால்தான் பணம் அவர்களிடம் வந்து சேர ஆரம்பித்தது.Click here to get intraday Nifty trading tips
இதைத்தான் வடநாட்டில் உள்ள பெரும்பணக்காரர்களான மார்வாடிகள் செய்கிறார்கள்.முதலில் அவர்கள் நல்ல மனநிலையில் இருப்பார்கள்.இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்பட மாட்டார்கள்.இருப்பதையே செம்மையாக செய்ய முனைவார்கள்.அதனால் இருப்பதே பெரிதாக இன்னும் பெரிதாக வளர ஆரம்பிக்கும்.மேலும் அவர்கள் எப்போதுமே இனிப்போடும் அன்போடும் உறவூசனங்களின் வருகையோடும் நண்பர்களோடும் எப்போதும் ஒரு வித கொண்டாட்டமான மனநிலையோடும் இருப்பார்கள்.அதனால் அவர்களால் வெற்றி பெற முடிகிறது.
ஆனால் இங்கேயூள்ள திருவாளர் நடுத்தர ஆசாமிகள் எப்படி இருக்கிறார்கள்.எதிலும் அவநம்பிக்கை.எவன்மீதும் நம்பிக்கையில்லை.எவனைப்பார்த்தாலும் பொறாமை.எதிலும் பேராசை.எப்போதுமே குறுக்குவழியில் குபேரனாகி விட வேண்டுமென்ற எந்த செயல்திட்டமும் இல்லாத ஆஆஆஆஆஆசை என்று இருந்து கொண்டு எதிலும் வெற்றி பெற முடியாமல் தோற்றுப் போய் புறம் பேசிக்கொண்டு திரிய ஆரம்பித்து விடுகிறார்கள்.Click here to get intraday share trading tips
அப்படியானால் பணம் சம்பாதிப்பதற்கு வெறும் மனநிலை மட்டும் போதும் என்கிறீர்களா என்று கேட்கலாம்.
ஆம்.வெறும் மனநிலை மட்டும் போதும்.சமன்பட்ட பேராசையற்ற நியாயமான மனநிலை வேண்டும்.இது இருந்தால் எதையூம் ஜெயிக்கலாம்.எந்த தொழிலிலும் ஜொலிக்கலாம்.
அப்புறம் இன்னொன்றும் வேண்டும்.
அதென்ன?
எதிலும் குறை காணாதீர்கள்.எதிலாவது குறை காண முயன்றீர்களானால் முதல் குறையே உங்களிடமிருந்துதான் துவங்கும்.எதையூம் பாசிட்டிவ்வாக எடுத்துக் கொண்டு திரும்பத் திரும்ப முயற்சி செய்து கொண்டே இருங்கள்.
காசு வந்து கதவைத் தட்டும்.
ConversionConversion EmoticonEmoticon